search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொன்.ராதாகிருஷ்ணன்
    X
    பொன்.ராதாகிருஷ்ணன்

    அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவிற்கு வருவது வரவேற்கத்தக்கது- பொன்.ராதாகிருஷ்ணன்

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியாவிற்கு வருவது வரவேற்கத்தகுந்த வி‌ஷயமாகும் என்று முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

    ஓசூர்:

    முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஓசூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ‘‘அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவிற்கு வருவது வரவேற்கத்தகுந்த வி‌ஷயமாகும். இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. தமிழக பா.ஜனதா. தலைவர் நியமனம் தொடர்பாக, அகில இந்திய தலைமை விரைவில் வழிகாட்டும். அதில் எந்த பிரச்சினையும் இல்லை. தமிழக அரசின் வேளாண்மை மண்டலம் குறித்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது, இது பாராட்ட வேண்டிய ஒன்றாகும்.

    பெங்களூருவில் அமுல்யா என்ற பெண் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான பொதுக்கூட்டத்தில், ‘‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’’ என்று கோ‌ஷமிட்டது, மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில் நடந்துள்ளது .அவர்கள் அனைவரும் பாகிஸ்தானுக்கு போக வேண்டியவர்கள். நாடு முழுவதும் இஸ்லாமியர்கள், தேசியக்கொடிகளை ஏந்தி போராட்டம் நடத்திவரும் நிலையில், இதனை அவர்கள் எப்படி ஏற்றுக்கொள்கிறார்கள்? இதனை, ஏற்றுக்கொள்ள முடியாது.

    இதுபோன்று, ஆயிரமாயிரம் பேர் நாட்டில் இருக்கிறார்கள், அவர்களுக்கு தி.மு.க.தான் தலைமையேற்று வருகிறது. அந்த பெண், கோ‌ஷம்போட வேண்டும் என்ற எண்ணத்தில் எதிர்ப்பு கோ‌ஷம் போடவில்லை, உள்ளத்தில் உறைந்து கிடந்த எதிர்ப்புதான் வெளிப்பட்டுள்ளது’’.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×