search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்.எஸ்.பாரதி
    X
    ஆர்.எஸ்.பாரதி

    பொன்.ராதாகிருஷ்ணன் போடும் கணக்கு- ஆர்.எஸ்.பாரதி பாய்ச்சல்

    முரசொலி நில விவகாரத்தில் திமுக பற்றி பேசினால் அரசியல் இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வரலாம் என பொன்.ராதாகிருஷ்ணன் கணக்கு போடுவதாக ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார்.
    சென்னை:

    திமுகவின் முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலமா? அந்த இடம் தொடர்பான மூலப்பத்திரம் எங்கே? என்பது தொடர்பான சர்ச்சை தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த நிலம் தொடர்பான ஆவணங்களை உரிய நேரத்தில் வெளியிடுவதாக திமுக தலைமை கூறி உள்ளது. எனினும் இது தொடர்பான கருத்து மோதல்கள் முடிந்தபாடில்லை.

    முன்னாள் மத்திய அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் பெரம்பலூரில் நிருபர்களை சந்தித்தபோது, முரசொலி நில சர்ச்சையை எழுப்பினார். 

    ‘முரசொலி நிலம் பஞ்சமி நிலமாக இருந்தால் அதனை உடனே அரசிடம் ஒப்படைக்க வேண்டும். அந்த நிலம் ரூ.5 கோடி மதிப்பு. அந்த நிலத்தை தமிழக அரசிடம் திருப்பி கொடுக்கும் பட்சத்தில் தி.மு.க.விற்கு ரூ.5 கோடி இழப்பு என்றால் அந்த பணத்தை நான் அல்லது பா.ஜ.க. தர தயார்’ என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.

    பொன். ராதாகிருஷ்ணன்

    இதற்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார். முடிந்தால் பஞ்சமி நிலம் குறித்த ஆதாரத்தை வெளியிடுங்கள் என பொன்.ராதாகிருஷ்ணனுக்கு சவால் விட்டுள்ளார் ஆர்.எஸ்.பாரதி. 

    வீணாக திமுக பற்றி பிதற்றினால் அரசியல் இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வரலாம் என பொன்.ராதாகிருஷ்ணன் கணக்கு போட்டு, திமுகவை வீண் வம்புக்கு இழுக்க வேண்டாம் என்றும் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
    Next Story
    ×