search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுக தலைமை அலுவலகம்
    X
    அதிமுக தலைமை அலுவலகம்

    தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக 6-ம் தேதி அதிமுக ஆலோசனை

    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவது பற்றி வரும் 6ம் தேதி அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது.
    சென்னை:

    அ.தி.மு.க. தலைமை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் முதலமைச்சரான பழனிசாமி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் மற்றும் தமிழக துணை முதலமைச்சரான ஓ. பன்னீர்செல்வம், ஆகியோர் தலைமையில் வரும் 6ம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். இதில், தமிழக உள்ளாட்சி தேர்தலை நடத்துவது பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    Next Story
    ×