search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து தேர்தலை சந்திக்க தயாரா?- எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்டாலின் சவால்

    விபத்தினால் தலைவர் ஆனேன் என்று சொல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்திக்க தயாரா? என்று மு.க.ஸ்டாலின் சாவால் விடுத்துள்ளார்.
    விக்கிரவாண்டி :

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    கலைஞர், ஜெயலலிதா இருந்தவரை தமிழகத்தில் ‘நீட்’ தேர்வை கொண்டு வர முடியவில்லை. ஆனால் எடப்பாடி ஆட்சியில் மத்திய அரசு சுலபமாக ‘நீட்’ தேர்வை கொண்டு வந்து, திணித்து விட்டது. இதனால் 8 பேர் தற்கொலை செய்துள்ளனர்.

    இங்கு பிரசாரம் செய்த எடப்பாடி பழனிசாமி அப்பட்டமான பொய் பேசி இருக்கிறார். போலி சாமியார்கள் தான் இ‌‌ஷ்டத்துக்கு பேசுவார்கள். அதுபோன்று தான் அவர் பேசி சென்றுள்ளார்.

    முதலமைச்சர் பழனிசாமி

    நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். தயவு செய்து நினைத்து பாருங்கள். அப்படியா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெயலலிதாவுக்கு தான் மக்கள் ஓட்டு போட்டனர். ஜெயலலிதா இறந்த பின்னர் ஓ.பன்னீர்செல்வம் வந்தார். பின்னர் என்ன பார்த்து சிரித்ததாலேயே அவருக்கு பதவி போனது. அதன்பின் சசிகலாவால் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் ஆனார். அதனாலே அவர் என்னை பார்த்து சிரிக்காமலே இருக்கிறார்.

    இவ்வாறு வந்துவிட்டு, ஸ்டாலின் என்ன மக்களால் வந்தாரா, விபத்தின் காரணமாக தலைவராகிவிட்டார் என்று அப்பட்டமான பொய் பேசி வருகிறார். இப்போது நான் ரெடி, நீங்கள்(எடப்பாடி பழனிசாமி) முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்திக்க மக்களிடம் வந்து நில்லுங்கள். உங்களால் தேர்தலில் ஜெயித்து வர முடியுமா?. நான் ரெடி.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×