search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    இந்தி திணிப்பை எதிர்த்து திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு - மு.க.ஸ்டாலின்

    தமிழகத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து தி.மு.க. நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது என மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.
    சென்னை:

    கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சந்தித்தார்.
    அப்போது, தற்போதைய அரசியல் சூழல் குறித்து இருவரும் விவாதித்தனர். இந்த சந்திப்பின்போது, டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

    ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியே வந்த மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    இந்தி திணிப்புக்கு எதிராக செப்டம்பர் 20-ல் நடைபெற இருந்த தி.மு.க.வின் கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. 

    இந்தி திணிப்பை என்றுமே நாங்கள் எதிர்ப்போம். இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் குறித்து ஆளுநரிடம் விளக்கம் தெரிவித்தோம். மத்திய அரசு எந்த வகையிலும் இந்தியை திணிக்காது என ஆளுநர் உறுதியளித்துள்ளார். அவரது விளக்கத்தை ஏற்று போராட்டத்தை ஒத்திவைத்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×