search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவி சண்முகம் - முக ஸ்டாலின்
    X
    சிவி சண்முகம் - முக ஸ்டாலின்

    இயற்கை எரிவாயு திட்டத்திற்கு அனுமதி கொடுத்தது யார்? சட்டசபையில் அதிமுக-திமுக காரசார விவாதம்

    தமிழகத்தில் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு அனுமதி கொடுத்தது தொடர்பாக சட்டசபையில் இன்று அதிமுக, திமுக இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.
    சென்னை:

    ஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று திமுக சார்பில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, கனிம வளத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுகையில், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட இயற்கைக்கு எதிரான எந்த திட்டத்துக்கும் எந்த காலத்திலும் தமிழக அரசு அனுமதி வழங்காது என்றும், மத்திய அரசு அனுமதித்தாலும் மாநில அரசின் ஒப்புதலைப் பெற்றாக வேண்டும் என்றும் கூறினார்.

    ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் கேட்டும் தற்போது வரை அரசு வழங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு திமுக ஆட்சியில் கொடுத்த அனுமதி, அதிமுக ஆட்சியில் ரத்து செய்யப்பட்டதாகவும், இந்த விஷயத்தில் திமுக மக்களை தூண்டிவிட்டு போராட்டம் நடத்துவதாகவும், அமைச்சர் குற்றம்சாட்டினார்.

    தமிழக சட்டசபை


    இந்த குற்றச்சாட்டை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மறுத்தார். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த திமுக ஆட்சியின்போது அனுமதி தரவில்லை என்றும், ஆய்வுக்கு மட்டுமே அனுமதி அளித்ததாகவும் கூறினார்.

    திமுக ஆட்சியில் ஆய்வுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டதாகவும், அதிமுக மீண்டும் மீண்டும் பொய் பிரசாரம் செய்வதாகவும் டிஆர்பி ராஜா பேசினார்.

    இந்த காரசார விவாதம் காரணமாக சட்டசபையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×