என் மலர்

  செய்திகள்

  ஆட்டோ டிரைவர் அடித்து கொலை: வாலிபர் தப்பி ஓட்டம்
  X

  ஆட்டோ டிரைவர் அடித்து கொலை: வாலிபர் தப்பி ஓட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெரம்பூர், மேம்பாலம் அருகே வளர்த்த நாயை கொஞ்சியதால் ஆத்திரமடைந்து ஆட்டோ டிரைவரை அடித்துக் கொன்ற வாலிபர் தலைமறைவானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  வில்லிவாக்கம்:

  பெரம்பூர், மேம்பாலம் அருகே உள்ள ராஜீவ் காந்தி நகரில் வசித்து வந்தவர் விஜய் (வயது 35). ஆட்டோ டிரைவர்.

  இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் வெள்ளையன். இவர் நாய் வளர்த்து வந்தார். அந்த நாய்க்கு விஜய்யும் அடிக்கடி உணவு அளித்து பாசத்தோடு இருந்தார்.

  இதனால் நாய்க்கு உணவு கொடுப்பது தொடர்பாக விஜய்க்கும், வெள்ளையனுக்கும் தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று இரவும் வழக்கம் போல் விஜய், நாய்க்கு உணவு அளித்து கொஞ்சினார்.

  இதனை கண்டு ஆத்திரம் அடைந்த வெள்ளையன் அவரிடம் மோதலில் ஈடுபட்டார். அப்போது இரும்பு கம்பியால் விஜய்யை சரமாரியாக தாக்கினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். உடனே வெள்ளையன் தப்பி ஓடி விட்டார்.

  உயிருக்கு போராடிய விஜய்யை மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை விஜய் பரிதாபமாக இறந்தார்.

  இது குறித்து ஐ.சி.எப். போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வெள்ளையனை தேடி வருகிறார்கள்.
  Next Story
  ×