என் மலர்

  செய்திகள்

  நயினார் கோவில் அருகே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விபத்தில் பலி
  X

  நயினார் கோவில் அருகே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விபத்தில் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மணல் லாரி மோதிய விபத்தில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பரிதாபமாக இறந்தார்.

  ராமநாதபுரம்:

  ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள கே.கே.வலசை கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 50). இவர் நயினார் கோவில் போலீஸ் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.

  இன்று மதியம் அவர் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் போலீஸ் நிலையத்துக்கு புறப்பட்டார்.

  நயினார் கோவில் அருகே சென்று கொண்டு இருந்த போது அந்த வழியாக வேகமாக வந்த மணல் லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட செல்வராஜ் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

  விபத்து குறித்து நயினார் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் தவளைக்குளத்தை சேர்ந்த சதீஷ்குமார் (40)என்பவரை கைது செய்தனர்.

  விபத்தில் பலியான சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ்க்கு கலைச் செல்வி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

  Next Story
  ×