search icon
என் மலர்tooltip icon

    நியூசிலாந்து

    • கடந்த ஜனவரி மாதம் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ஜெசிந்தா ஆர்டெர்ன் திடீரென்று அறிவித்தார்.
    • சிறந்த சேவைக்காக இந்த கவுரவ விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நியூசிலாந்து நாட்டின் முன்னாள் பெண் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன். 2017-ம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற அவர் உலக வரலாற்றில் பிரதமர் பதவியை வகித்த இளம் வயது பெண் என்ற பெருமையை பெற்றார். கடந்த ஜனவரி மாதம் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ஜெசிந்தா ஆர்டெர்ன் திடீரென்று அறிவித்தார். இது நியூசிலாந்து மக்கள் மற்றும் உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்தது.

    இந்நிலையில் ஜெசிந்தா ஆர்டெர்னுக்கு நியூசிலாந்தின் 2-வது மிக உயர்ந்த விருதான டேம் கிராண்ட் கம்பானியன் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் மற்றும் கிறிஸ்ட்சர்ச் பயங்கரவாத தாக்குதலின் போது அவர் நாட்டுக்கு ஆற்றிய சிறந்த சேவைக்காக இந்த கவுரவ விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறும்போது, 'இந்த விருதை ஏற்றுக்கொள்வது பற்றி நான் இரண்டு மனதாக இருந்தேன். கடந்த 5 ஆண்டுகளில் ஒரு தேசமாக நாம் கடந்து வந்த பல விஷயங்கள் ஒரு தனிநபரைவிட நம் அனைவரையும் பற்றியதாகும். இது எனது குடும்பத்தினருக்கும், சக ஊழியர்களுக்கும் எனது வாழ்க்கையின் மிகவும் சவாலான மற்றும் பலனளிக்கும் பாத்திரத்தை ஏற்க என்னை ஆதரித்த மக்களுக்கும் நன்றி செலுத்தும் விதமாக இருக்கும்' என்றார்.

    • வெலிங்டனில் 4 மாடிகள் கொண்ட ஹாஸ்டல் செயல்பட்டு வருகிறது.
    • இந்த ஹாஸ்டலில் இன்று திடீரென தீ பற்றியது.

    வெலிங்டன்:

    நியூசிலாந்து தலைநகரம் வெலிங்டனில் 4 மாடிகள் கொண்ட ஹாஸ்டல் அமைந்துள்ளது. இந்த ஹாஸ்டலில் இன்று திடீரென தீ பற்றியது.

    இந்த தீ விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது. மேலும் பலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை உயரலாம் என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.

    பிரதம மந்திரி கிறிஸ் ஹாப்கின்ஸ் தீ விபத்தில் பலியானோருக்கு இரங்கல் தெரிவித்தார். தகவலறிந்து வந்த போலீசார் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஹாஸ்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 பேர் பலியானது அப்பகுதியில் சோகட்தை ஏற்படுத்தியுள்ளது.

    • நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2ஆகப் பதிவாகி உள்ளது.
    • நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    கெர்மடெக்:

    நியூசிலாந்தின் கெர்மடெக் தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2ஆகப் பதிவாகி உள்ளது. பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலநடுக்கத்தால் உயிர் இழப்போ, பொருட்சேதமோ எதுவும் ஏற்படவில்லை. இருந்த போதிலும் நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    • முதலில் ஆடிய இலங்கை 196 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய நியூசிலாந்தும் 196 ரன்கள் எடுக்க போட்டி டை ஆனது.

    ஆக்லாந்து:

    இலங்கை அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கிலும் வெற்றி பெற்றது நியூசிலாந்து.

    இதையடுத்து, இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 196 ரன்கள் எடுத்தது. அசலங்கா 67 ரன்னில் அவுட்டானார். குசல் பெரேரா அரை சதமடித்து 53 ரன்னில் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதையடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களம் இறங்கியது. மார்க் சாம்பன் 33 ரன்னும், டாம் லதாம் 27 ரன்னும் எடுத்தனர். அதிரடியாக ஆடிய டேரில் மிட்செல் அரை சதம் அடித்து அசத்து 66 ரன்கள் விளாசினார்.

    இறுதியில், நியூசிலாந்து அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 196 ரன்கள் எடுத்தது. இதனால் ஆட்டம் சமனில் முடிந்தது.

    வெற்றியாளரை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய நியூசிலாந்து 2 விக்கெட்டுக்கு 8 ரன் மட்டுமே எடுத்தது.

    இதையடுத்து 6 பந்தில் 9 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இலங்கை 3 பந்தில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 11 ரன்கள் எடுத்து சூப்பர் ஓவரில் இலங்கை வெற்றி பெற்றது. அசலங்கா ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

    இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் இலங்கை அணி முன்னிலை வகிக்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காதல் தோல்வியில் சிக்கி அவதிப்படும் இளம் தலைமுறையினரை மீட்க நியூசிலாந்து அரசு புதிய முயற்சி ஒன்றை கையில் எடுத்துள்ளது.
    • காதல் தோல்வி அடைந்தவர்கள் தங்களின் உணர்வுகளை ஆரோக்கியமாக மாற்ற பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    காதலில் தோல்வி அடைபவர்கள் சோகம், மன வருத்தம், தாழ்வு மனப்பான்மை, தனிமை போன்றவற்றால் அவர்களின் மன வேதனை அதிகரித்து விடுகிறது.

    இதனால் சில நேரங்களில் இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நடக்கின்றன. ஏழை, நடுத்தர நாடுகள் மட்டுமின்றி, வளர்ந்த நாடுகளில் ஒன்றான நியூசிலாந்திலும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதால் அதனை தடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக, காதல் தோல்வியில் சிக்கி அவதிப்படும் இளம் தலைமுறையினரை மீட்க நியூசிலாந்து அரசு புதிய முயற்சி ஒன்றை கையில் எடுத்துள்ளது. அதன்படி 'லவ் பெட்டர்' என்ற பிரசாரத்தை அரசு தொடங்கி உள்ளது.

    இந்த முயற்சியானது காதல் தோல்வியால் குடும்பங்களில் ஏற்படும் வன்முறையை தடுப்பதே இதன் முக்கிய நோக்கம் என்று அரசு தெரிவித்துள்ளது. இதற்காக 3 ஆண்டுகளில் சுமார் 4 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 33 கோடி ரூபாய்) ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

    இந்த பிரசாரத்தில் பலரும் தங்களது காதல் தோல்வியின் நிஜ அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது காதல் தோல்வி அடைந்தவர்கள் தங்களின் உணர்வுகளை ஆரோக்கியமாக மாற்ற பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பிரசாரத்தை தொடங்கி வைத்த நியூசிலாந்து நாட்டின் சமூக மேம்பாட்டு இணை அமைச்சர் பிரியங்கா ராதாகிருஷ்ணன் கூறுகையில், தனக்கோ அல்லது பிறருக்கோ தீங்கு விளைவிக்காமல் ஒரு வழி இருப்பதை இளைஞர்கள் அறிந்து கொள்ளவும், அவர்களின் காயங்களை சமாளிக்கவும் அரசு விரும்புகிறது என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நியூசிலாந்தின் கெர்மடெக் தீவு பகுதிகளில் இன்று அதிகாலை 3.44 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • கடந்த வியாழன் அன்று நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    உலகின் இரண்டு முக்கிய டெக்டோனிக் தட்டுகளான பசிபிக் தட்டு மற்றும் ஆஸ்திரேலிய தட்டு ஆகியவற்றின் எல்லையில் நியூசிலாந்து அமைந்துள்ளது. இதனால் நியூசிலாந்து அடிக்கடி நிலநடுக்கங்களுக்கு ஆளாகிறது. ஒவ்வொரு ஆண்டும் நியூசிலாந்தில் ஆயிரக்கணக்கான நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.

    இந்த நிலையில், நியூசிலாந்தின் கெர்மடெக் தீவு பகுதிகளில் இன்று அதிகாலை 3.44 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவானது.

    இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. கடந்த வியாழக்கிழமை, நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    அது ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவாகி இருந்தது. இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • கெர்மடெக் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
    • நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகி உள்ளது.

    கெர்மடெக்:

    நியூசிலாந்து நாட்டில் அடிக்கடி நில நடுக்கம் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது.

    இன்று அதிகாலை அந்த நாட்டில் உள்ள கெர்மடெக் தீவுகளில் திடீரென சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கு அடியில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் உலுக்கியது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 புள்ளியாக பதிவானதாக நில நடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது.

    நில நடுக்கம் ஏற்பட்ட கெர்மடெக் தீவுகளை சுற்றி 300 கிலோ மீட்டர் தூரத்தில் பொதுமக்கள் யாரும் வசிக்கவில்லை. இதனால் உயிர் இழப்போ, பொருட்சேதமோ எதுவும் ஏற்படவில்லை. இருந்த போதிலும் நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    பாகிஸ்தான் நாட்டிலும் இன்று நில அதிர்வு உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவாகி உள்ளது.

    • பிப்ரவரி மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரராக ஹாரி புரூக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    • ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே கார்ட்னர் 2வதுமுறையாக சீறந்த வீராங்கனை விருது பெற்றார்.

    துபாய்:

    இங்கிலாந்து இளம் வீரர் ஹாரி புரூக் பிப்ரவரி மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரராக0 தேர்வு செய்யப்பட்டார்.

    இந்திய ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளின் சுழற்பந்து வீச்சாளர் குடாகேஷ் மோட்டி ஆகியோரின் கடுமையான போட்டியை முறியடித்து, வளர்ந்து வரும் இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஹாரி புரூக் விருதுக்கான வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    கடந்த ஆண்டு செப்டம்பரில் டெஸ்டில் அறிமுகமான போதிலும், இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் ஏற்கனவே இங்கிலாந்தின் புதிய ஆபத்தான மனிதராக உருவெடுத்து வருகிறார், மேலும் டிசம்பரில் ஐசிசி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வென்ற பிறகு, அவரது வேகம் இன்னும் அதிகரித்துள்ளது. பிப்ரவரியில் அவர் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்டார். குறிப்பாக வெலிங்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் 24 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்கள் உள்பட ஒரு இன்னிங்ஸில் 186 ரன்களை விளாசியிருந்தார். மொத்தம் நடந்த இரண்டு டெஸ்டில் அவர் 329 ரன்கள் எடுத்தார்.

    இதேபோல், ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே கார்ட்னர் 2வதுமுறையாக சிறந்த வீராங்கனை விருது பெற்றார்.

    • இலங்கை அணி 2வது இன்னிங்சில் 302 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
    • 4-ம் நாள் முடிவில் நியூசிலாந்து ஒரு விக்கெட்டுக்கு 28 ரன்கள் எடுத்துள்ளது.

    கிறிஸ்ட்சர்ச்:

    நியூசிலாந்து, இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    முதலில் ஆடிய இலங்கை முதல் இன்னிங்சில் 355 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. குசால் மெண்டிஸ் 87 ரன்னும், கேப்டன் திமுத் கருணரத்னே 50 ரன்னுடனும், ஏஞ்சலோ மேத்யூஸ் 47 ரன்னும் எடுத்தனர்.

    நியூசிலாந்து சார்பில் டிம் சவுத்தி 5 விக்கெட்டும், மேட் ஹென்றி 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 373 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டேரில் மிட்செல் 102 ரன்னும், மேட் ஹென்றி 72 ரன்னும், டாம் லாதம் 67 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

    இலங்கை சார்பில் அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட்டும், லஹிரு குமாரா 3 விக்கெட்டும், ரஜிதா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    18 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் ஏஞ்சலோ மேத்யூஸ் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 115 ரன்னில் அவுட்டானார். சண்டிமால் 42 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், இலங்கை இரண்டாவது இன்னிங்சில் 302 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. தனஞ்செய டி சில்வா 47 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    நியூசிலாந்து சார்பில் டிக்னெர் 4 விக்கெட்டும், மேட் ஹென்றி 3 விக்கெட்டும், டிம் சவுத்தி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 285 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி 2வது இன்னிங்சை ஆடியது. நான்காம் நாள் முடிவில் நியூசிலாந்து ஒரு விக்கெட்டுக்கு 28 ரன்கள் எடுத்துள்ளது.

    இறுதி நாளான இன்று நியூசிலாந்து வெற்றி பெற 257 ரன்கள் தேவை என்பதாலும், இலங்கை வெற்றி பெற 9 விக்கெட்டுகள் தேவை என்பதாலும் கிறிஸ்ட்சர்ச் டெஸ்ட் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

    • நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 373 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
    • மூன்றாம் நாள் முடிவில் இலங்கை 65 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    கிறிஸ்ட்சர்ச்:

    நியூசிலாந்து, இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    முதலில் ஆடிய இலங்கை முதல் இன்னிங்சில் 355 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. குசால் மெண்டிஸ் 87 ரன்னும், கேப்டன் திமுத் கருணரத்னே 50 ரன்னுடனும், ஏஞ்சலோ மேத்யூஸ் 47 ரன்னும் எடுத்தனர்.

    நியூசிலாந்து சார்பில் டிம் சவுத்தி 5 விக்கெட்டும், மேட் ஹென்றி 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 373 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பொறுப்புடன் ஆடிய டேரில் மிட்செல் 102 ரன்னும், மேட் ஹென்றி 72 ரன்னும், டாம் லாதம் 67 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

    இலங்கை சார்பில் அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட்டும், லஹிரு குமாரா 3 விக்கெட்டும், ரஜிதா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    18 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. மூன்றாம் நாள் முடிவில் இலங்கை அணி 3 விக்கெட்டுக்கு 83 ரன்கள் எடுத்துள்ளது. ஏஞ்சலோ மேத்யூஸ் 20 ரன்னுடனும், பிரபாத் ஜெயசூர்யா 2 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இதன்மூலம் இலங்கை அணி 65 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    • 2ம் நாள் முடிவில் நியூசிலாந்து 5 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்துள்ளது.
    • தொடக்க ஆட்டக்காரர் டாம் லாதம் அரை சதம் கடந்து அசத்தினார்.

    கிறிஸ்ட்சர்ச்:

    நியூசிலாந்து, இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 355 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. குசால் மெண்டிஸ் 87 ரன்னும், கேப்டன் திமுத் கருணரத்னே 50 ரன்னுடனும், ஏஞ்சலோ மேத்யூஸ் 47 ரன்னும் எடுத்தனர்.

    நியூசிலாந்து சார்பில் டிம் சவுத்தி 5 விக்கெட்டும், மேட் ஹென்றி 4 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடர்ந்து விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் டாம் லாதம் அரை சதமடித்தார். அவர் 67 ரன்னில் அவுட்டானார். டேவன் கான்வே 30 ரன்னில் வீழ்ந்தார்.

    இறுதியில், இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து 5 விக்கெட்டுக்கு 165 ர்ன்கள் எடுத்துள்ளது. டேரில் மிட்செல் 40 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இலங்கை சார்பில் லஹிரு குமாரா, அசிதா பெர்னாண்டோ தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    • இலங்கை அணி முதல் இன்னிங்சில் 355 ரன்களை குவித்தது.
    • நியூசிலாந்து சார்பில் சவுத்தி 5 விக்கெட்டும், மேட் ஹென்றி 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    கிறிஸ்ட்சர்ச்:

    நியூசிலாந்து, இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 355 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. குசால் மெண்டிஸ் 87 ரன்னும், கேப்டன் திமுத் கருணரத்னே 50 ரன்னுடனும், ஏஞ்சலோ மேத்யூஸ் 47 ரன்னும் எடுத்தனர்.

    நியூசிலாந்து சார்பில் டிம் சவுத்தி 5 விக்கெட்டும், மேட் ஹென்றி 4 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.

    ×