search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் பிரதமர்"

    • "இத்தாலிய என்சைக்ளோபீடியா" 2023 வருடத்திற்கான சொல் என ஃபெமிசைட்-ஐ பட்டியலிட்டது
    • கொலை வழக்குகளில் இத்தாலிய நீதிமன்றங்கள் ஆண்களுக்கு குறைவான தண்டனையையே வழங்குகின்றன

    2023ல் இத்தாலி நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், தங்கள் கணவர், ஆண் நண்பர், அல்லது தங்களை நன்கு அறிந்து பழகி வரும் அல்லது பழகி பிரிந்த ஆண் ஆகியோரால் கொல்லப்பட்டுள்ளனர்.

    இத்தகைய கொலைகளுக்கு "ஃபெமிசைட்" (femicide) என பெயரிடப்பட்டுள்ளது.

    "இத்தாலிய என்சைக்ளோபீடியா" (Italian encyclopedia) 2023 வருடத்திற்கான சொல் என ஃபெமிசைட்-ஐ பட்டியலிட்டது குறிப்பிடத்தக்கது.

    இத்தாலியின் பிரதமர் "ஜியோர்ஜியா மெலனி" (Giorgia Meloni) ஒரு பெண் எனும் நிலையில், ஃபெமிசைட் குற்றங்களை அவர் கண்டும் காணாமல் இருக்கிறாரா என பெண்ணுரிமைவாதிகள் கேள்வி எழுப்புகின்றனர்.


    இத்தகைய பல கொலை வழக்குகளில் இத்தாலிய நீதிமன்றங்களும் ஆண்களுக்கு குறைவான தண்டனையையே வழங்குகிறது.

    பாலின சமத்துவத்தில் ஐரோப்பிய நாடுகளில் இத்தாலி மிகவும் பின் தங்கியுள்ளது. குறிப்பாக, ஆணுக்கு சமமான ஊதியம் வழங்கப்படாததால், அந்நாட்டில் பெண்கள் ஆண்களை சார்ந்திருக்கும் நிலையில் உள்ளனர்.

    ஐரோப்பாவில், 70களில் நடைபெற்ற பெண்ணுரிமை இயக்க போராட்டங்களில் முன்னிலை வகித்த நாடு இத்தாலி.

    ஆனால், அதற்கு பிந்தைய தசாப்தங்களில் அங்கு எவ்வாறு பெண்களுக்கு சமூக பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியது என சமூக அறிவியல் நிபுணர்கள் வியப்புடன் கேள்வி எழுப்புகின்றனர்.

    தற்போதைய பிரதமரான ஜியோர்ஜியா மெலனி பெண்ணுரிமை அமைப்புகளின் சித்தாந்தங்களில் இருந்து விலகி இருப்பதை இதற்கு முக்கிய காரணமாக அவர்கள் கூறுகின்றனர்.

    ரோமானிய நாகரீக காலகட்டத்தில் இருந்தே பல நூற்றாண்டுகளாக பெண்கள் மீது ஆண்கள் தாக்குதல் நடத்துவது இத்தாலி சமூகத்தில் நடைமுறை வாழ்க்கையில் குற்றமாக கருதப்படாத நிலை அங்கு நிலவுவது இதற்கு மற்றொரு காரணம்.

    • கடந்த ஜனவரி மாதம் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ஜெசிந்தா ஆர்டெர்ன் திடீரென்று அறிவித்தார்.
    • சிறந்த சேவைக்காக இந்த கவுரவ விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நியூசிலாந்து நாட்டின் முன்னாள் பெண் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன். 2017-ம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற அவர் உலக வரலாற்றில் பிரதமர் பதவியை வகித்த இளம் வயது பெண் என்ற பெருமையை பெற்றார். கடந்த ஜனவரி மாதம் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ஜெசிந்தா ஆர்டெர்ன் திடீரென்று அறிவித்தார். இது நியூசிலாந்து மக்கள் மற்றும் உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்தது.

    இந்நிலையில் ஜெசிந்தா ஆர்டெர்னுக்கு நியூசிலாந்தின் 2-வது மிக உயர்ந்த விருதான டேம் கிராண்ட் கம்பானியன் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் மற்றும் கிறிஸ்ட்சர்ச் பயங்கரவாத தாக்குதலின் போது அவர் நாட்டுக்கு ஆற்றிய சிறந்த சேவைக்காக இந்த கவுரவ விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறும்போது, 'இந்த விருதை ஏற்றுக்கொள்வது பற்றி நான் இரண்டு மனதாக இருந்தேன். கடந்த 5 ஆண்டுகளில் ஒரு தேசமாக நாம் கடந்து வந்த பல விஷயங்கள் ஒரு தனிநபரைவிட நம் அனைவரையும் பற்றியதாகும். இது எனது குடும்பத்தினருக்கும், சக ஊழியர்களுக்கும் எனது வாழ்க்கையின் மிகவும் சவாலான மற்றும் பலனளிக்கும் பாத்திரத்தை ஏற்க என்னை ஆதரித்த மக்களுக்கும் நன்றி செலுத்தும் விதமாக இருக்கும்' என்றார்.

    ×