என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "New Zealand Earthquake"

    • கெர்மடெக் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
    • நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகி உள்ளது.

    கெர்மடெக்:

    நியூசிலாந்து நாட்டில் அடிக்கடி நில நடுக்கம் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது.

    இன்று அதிகாலை அந்த நாட்டில் உள்ள கெர்மடெக் தீவுகளில் திடீரென சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கு அடியில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் உலுக்கியது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 புள்ளியாக பதிவானதாக நில நடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது.

    நில நடுக்கம் ஏற்பட்ட கெர்மடெக் தீவுகளை சுற்றி 300 கிலோ மீட்டர் தூரத்தில் பொதுமக்கள் யாரும் வசிக்கவில்லை. இதனால் உயிர் இழப்போ, பொருட்சேதமோ எதுவும் ஏற்படவில்லை. இருந்த போதிலும் நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    பாகிஸ்தான் நாட்டிலும் இன்று நில அதிர்வு உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவாகி உள்ளது.

    நியூசிலாந்தில் இன்று 6.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக பாராளுமன்ற கட்டிடம் குலுங்கியது. இதனால் சபை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது. #Earthquake #NewZealandEarthquake
    வெலிங்டன்:

    நியூசிலாந்தில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. டாமரூனியில் இருந்து தென்மேற்கில் சுமார் 25 கிமீ தொலைவில் பூமிக்கடியில் 165 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகியிருந்தது.

    தலைநகர் வெலிங்டன் முழுவதும் நிலநடுக்கம் உணரப்பட்டது. சுமார் 30 வினாடிகள் அதிர்வு இருந்தது. கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர். இதேபோல் வடக்கு தீவு, தெற்கு தீவு என நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டது.

    நிலநடுக்கத்தால் காயமோ, உயிரிழப்போ ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.



    வெலிங்டனில் உள்ள பாராளுமன்றக் கட்டிடமும் குலுங்கியது. இதனால் அவை நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. பின்னர் நிலநடுக்கத்தினால் காயமோ, பெரிய அளவில் இழப்புகளோ ஏற்படவில்லை என தகவல் வெளியானதும் அவை மீண்டும் தொடங்கியது.  #Earthquake #NewZealandEarthquake

    ×