என் மலர்tooltip icon

    உத்தரப் பிரதேசம்

    • ஸ்கூட்டரில் இருந்து தவறி பாலத்திலிருந்து கீழே விழுந்த பெண் பாலத்தின் தூணில் உள்ள பகுதியில் விழுந்தார்
    • தூணில் இருந்து டிராலி மூலம் பெண் மீட்கப்படும் வீடியோ வைரலாகி வருகிறது.

    பாலத்தில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த பெண் மீது வாகனம் மோதியதில் அவர் கீழே தூண் மீது விழுந்து உயிர் தப்பிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. உத்தரப் பிரதேச தலைநகர் நொய்டாவில் இன்று மதியம் செக்டார் 25 பகுதியில் உள்ள பாலத்தின் மீது தனது இரு சக்கர வாகனமான ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்த பெண் மீது அடையாளம் காணப்படாத வாகனம் ஒன்று மோதியுள்ளது.

    இதனால் ஸ்கூட்டரில் இருந்து தவறி பாலத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட பெண் பாலத்தின் தூணில் உள்ள பகுதியில் விழுந்ததால் உயிர்தப்பியுள்ளார். அங்கு அவர் சிக்கித் தவித்த நிலையில் சம்பவ இடத்துக்குப் போலீசும் ஆம்புலன்சும் விரைந்தது. இதனைத்தொடர்ந்து தூணிலிருந்து அப்பெண் காயங்களின்றி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.  தூணில் இருந்து டிராலி மூலம் பெண் மீட்கப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ரூ.1800 கோடி செலவில் மத்தியில் ஆளும் பாஜக அரசின் முன்னெடுப்பினால் ராமர் கோவில் கட்டப்பட்டது
    • கும்பாபிஷேகத்தில் நாட்டில் உள்ள திரைத்துறை, அரசியல் மற்றும் வியாபார பெரும் புள்ளிகள் திரளாக கலந்துகொண்டனர்.

    திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் விநியோகிக்கப்படும் உலகப் புகழ் பெற்ற பிரசாதமான லட்டு மாட்டிறைச்சி கொழுப்பு மற்றும் பன்றி கொழுப்பு கலந்த நெய்யினால் தயாரிக்கப்படுகிறது என்ற சர்ச்சை பூதாகரமாக வெடித்துள்ளது. இந்த சர்ச்சை அரசியல் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    ஆந்திர பிரதேசத்தில் கடந்த 5 ஆண்டுகளாக நடந்த ஜெகன் மோகன் ஆட்சியில் இந்த முறைகேடு நடந்ததாக தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டி வருகிறார். இந்நிலையில் அயோத்தி ராமர் கோவில் பிரான பிரதிஷ்டை கும்பாபிஷேகத்தின்போது கலந்துகொண்ட விருந்தினர்களுக்கு 300 கிலோ அளவிலான 1 லட்சம் திருப்பதி லட்டுக்கள் விநியோகிக்கப்பட்டதாக கோவிலின் தலைமை அர்ச்சகர் தெரிவித்துள்ளார்.

    உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ரூ.1800 கோடி செலவில் மத்தியில் ஆளும் பாஜக அரசின் முன்னெடுப்பினால் கட்டப்பட்ட ராமர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஜனவரி மாதம் நடந்தது. பிரமாண்டமாக நடந்த இந்த விழாவில் நாட்டில் உள்ள திரைத்துறை, அரசியல் மற்றும் வியாபார பெரும் புள்ளிகள் திரளாக கலந்துகொண்டனர்.

     

    இந்த விழாவில் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் இருந்து வரவழைக்கப்பட்ட 300 கிலோ லட்டுகளை விருந்தினர்களுக்கு விநியோகித்தோம் என்று அயோத்தி ராமர் கோவில் தலைமை பூசாரி ஆசார்ய சத்யேந்திர தாஸ் தெரிவித்துள்ளார். மேலும் திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டிருந்தால் அது மன்னிக்க முடியாத குற்றம். இதில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • தாஜ்மஹாலில் நீர் கசிவு ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • தாஜ்மஹால் ஒழுங்காக பராமரிக்கப்படவில்லை என்று நெட்டிசன்கள் விமர்சனம்

    உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள உலக அதிசயமான தாஜ்மஹாலை பார்ப்பதற்கு உலகம் முழுவதிலும் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் ஆண்டுதோறும் வருகை தருகின்றனர்.

    ஆக்ராவில் நமையில் பெய்த கனமழையால் தாஜ்மஹாலில் நீர் கசிவு ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் தாஜ்மகாலின் மேற்கூரையில் செடி வளர்ந்திருக்கும் புகைப்படத்தை சுற்றுலா பயனை ஒருவர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார்.

    இதனையடுத்து, உலக அதிசயமான தாஜ்மஹால் ஒழுங்காக பராமரிக்கப்படவில்லை என்று நெட்டிசன்கள் விமர்சனம் செய்தனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்த தொல்லியல்துறை கண்காணிப்பாளர் ராஜ்குமார் படேல், "கடந்த ஆகஸ்ட் மாதமே தூணில் வளர்ந்திருந்த செடிகள் அகற்றப்பட்டது. இந்த செடி 15 நாட்களுக்கு முன்பு உருவாகியுள்ளது. இது விரைவில் நீக்கப்படும்" என்று தெரிவித்தார்.

    • மதுராவில் சரக்கு ரெயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டு விபத்தில் சிக்கின.
    • இதனால் டெல்லி நோக்கிச் செல்லும் ரெயில் சேவை பாதிப்பு அடைந்துள்ளது.

    லக்னோ:

    உத்தர பிரதேசம் மாநிலம் மதுராவில் உள்ள பிருந்தாவன் ரோடு என்ற இடத்தில் சரக்கு ரெயிலின் 15 பெட்டிகள் தடம் புரண்டு விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதையடுத்து, டெல்லி நோக்கிச் செல்லும் ரெயில் சேவை பாதிப்பு அடைந்துள்ளது. மேலும் அப்பகுதி வழியாக செல்லும் 15 ரெயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

    தகவல் அறிந்து ரெயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல், நேற்று மாலை பீகாரின் நாராயண்பூரில் சரக்கு ரெயிலின் 4 பெட்டிகள் தடம்புரண்டு விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.


    • அவரை தேடிக்கொண்டு பெண்ணின் கணவனும் அந்த கிராமத்துக்குள் வந்துள்ளார்.
    • பெண்ணின் கட்டை அவிழ்த்து விடுவதற்கு முன் அவரிடம் சிலர் அத்துமீறியதாவும் கூறபடுகிறது.

    உத்தரப் பிரதேசத்தில் திருட வந்ததாக கூறி மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணையும் அவரது கணவனையும் மரத்தில் கட்டி வைத்து அடித்து பழுக்க காய்ச்சிய கம்பியால் சூடு போட்ட கொடூரம் நிகழ்ந்துள்ளது. உ.பியில் தியோரியா [Deoria] மாவட்டத்தில் சுரவுலி [Surouli] பகுதியில் உள்ள கிராமத்தில் கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி மன நலம் பாதிக்கபட்ட நடுத்தர வயது பெண் உலவியுள்ளார்.

    சுரவுலியில் மற்றொரு பகுதியை சேர்ந்த அந்த பெண் வழிதவறி அங்கு வந்ததாக தெரிகிறது. எனவே அவரை தேடிக்கொண்டு பெண்ணின் கணவனும் அந்த கிராமத்துக்குள் வந்துள்ளார். இவர்கள் இருவரையும் திருட வந்தவர்கள் என சந்தேகித்த கிராம மக்கள் இருவரையும் மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.

    மேலும் பழுக்கக் காய்ச்சிய கம்பியால் அந்த பெண்ணின் கால்களில் சூடு வைத்து அதன்பின் அவர்களை அங்கிருந்து விரட்டியுள்ளனர். பெண்ணின் கட்டை அவிழ்த்து விடுவதற்கு முன் அவரிடம் சிலர் அத்துமீறியதாவும் தெரிகிறது. அவர்களை கிராமத்தினர் அடித்து சூடுவைத்து சித்ரவதை செய்யும் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் இதுதொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    • நீதிபதி அபிஷேக் திரிபாதி தன்னை தொடர்ச்சியாக அவரது அறைக்கு அழைத்து திட்டியும் மிரட்டியும் வந்தார்
    • ரெயில்வே டிராக்கில் அழுதுகொண்டே அமர்ந்திருந்ததும் அவரை சக போலீசார் சென்று சமாதானப்படுத்தி அங்கிருந்து மீட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

    உத்தரப் பிரதேசத்தில் நீதிபதி திட்டியதால் காவல் துணை ஆணையர் [சப் இன்ஸ்பெக்டர்] ரெயில்வே டிராக்கில் அமர்ந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வெளியான வீடியோவில், உ.பி அலிகார் பகுதி காவல் துணை ஆணையர் ரெயில்வே டிராக்கில் அழுதுகொண்டே அமர்ந்திருந்ததும் அவரை சக போலீசார் சென்று சமாதானப்படுத்தி அங்கிருந்து மீட்டதும் பதிவாகியுள்ளது.

    மேலும் நீதிபதி அபிஷேக் திரிபாதி தன்னை தொடர்ச்சியாக அவரது அறைக்கு அழைத்து திட்டியும் மிரட்டியும் வந்தார் என்று சக போலீசிடம் அந்த சப் இன்ஸ்பெக்டர் கூறி அழுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

    அந்த சப் இன்ஸ்பெக்டரின் பெயர் சச்சின் குமார் என்பதும் சமீபத்தில் பைக் திருட்டு தொடர்பாக அவர் 5 பேரை கைது செய்ததற்கு ஏன் அப்பாவிகளைக் கைது செய்தாய் என கூறி நீதிபதி திட்டியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த சப் இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்ய முடிவெடுத்து ரெயில்வே டிராக்கில் சென்று அமர்ந்துள்ளார்.

    • இட்டாவாவில் ஆக்ரா- வாரணாசி வந்தே பாரத் விரைவு ரெயிலுக்கான தொடக்க விழா நடைபெற்றது.
    • வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    உத்தர பிரதேச மாநிலம் இட்டாவாவில் நடைபெற்ற வந்தே பாரத் விரைவு ரெயிலுக்கான தொடக்க விழாவின் போது பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவர் கடும் நெரிசல் காரணமாக தண்டவாளத்தில் விழுந்த சம்பவம் நடைபெற்று உள்ளது.

    இட்டாவாவில் ஆக்ரா- வாரணாசி வந்தே பாரத் விரைவு ரெயிலுக்கான தொடக்க விழா நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட கடும் நெரிசல் காரணமாக பா.ஜ.க. எம்.எல்.ஏ. சரிதா படோரியா தண்டவாளத்தில் விழுந்தார். அப்போது அங்கு கூடியிருந்த பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் விரைவாக செயல்பட்டு படோரியாவை தண்டவாளத்தில் இருந்து மீட்டனர்.

    இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • சுந்தர் என்ற நபருக்கு 2 ஆண்டுகள் முன்பு மீனா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.
    • திருமணத்தின் போது வரதட்சணையாக ரூ.3 லட்சம் பணம், பைக் ஆகியவை தர வேண்டும் என்று மணமகன் வீட்டார் கேட்டுள்ளனர்.

    உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா பகுதியில் வரதட்சணை தராததால் மீனா என்ற இப்பெண்ணை, அவரது கணவர் கொடூரமாக அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    பைகேடா கிராமத்தைச் சேர்ந்த சுந்தர் என்ற நபருக்கு 2 ஆண்டுகள் முன்பு மீனா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது வரதட்சணையாக ரூ.3 லட்சம் பணம், அப்பாச்சி பைக் ஆகியவை தர வேண்டும் என்று மணமகன் வீட்டார் கேட்டுள்ளனர். ஆனால் மீனாவின் குடும்பத்தினரால் இந்த வரதட்சணையை கொடுக்க முடியவில்லை.

    வரதட்சணை தொடர்பாக கணவன் தொடர்ந்து சண்டையிட்டு வந்ததால் கோவத்தில் மீனா அப்பா வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் மாமனார் வீட்டிற்கு அடிக்கடி வந்த சுந்தர் மனைவியை சமாதானப்படுத்த முயன்றுள்ளார். இறுதியாக மீனா சமாதானம் ஆனதால் நேற்று இரவு தனது வீட்டிற்கு மனைவியை அவர் அழைத்து வந்துள்ளார். வந்த இடத்தில் மீண்டும் வரதட்சணை தொடர்பாக மனைவியிடம் சுந்தர் சண்டையிட்டுள்ளார்.

    அப்போது ஆத்திரத்தில் மனைவியின் தலையை கட்டையால் தாக்கி கழுத்தை நெரித்து சுந்தர் கொலை செய்துள்ளார். இதனையடுத்து சுந்தர் அங்கிருந்து ஓடிப்போய் தலைமறைவாகியுள்ளார்.

    இதனையடுத்து, குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சுந்தரை தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையில், மீனாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    • கணவர் ஒரு மாதத்திற்கு ஒரு முறை அல்லது 2 முறை மட்டுமே குளிக்கிறார்.
    • கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து மனைவி தனது பெற்றோர் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

    உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த பெண் ஒருவர் திருமணம் ஆகி 40 நாட்களே ஆன நிலையில் தனது கணவரின் வித்தியாசமான குளியல் பழக்கத்தால் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

    ஆக்ராவை சேர்ந்த பெண் கூறுகையில், அவரது கணவர் ஒரு மாதத்திற்கு ஒரு முறை அல்லது 2 முறை மட்டுமே குளிக்கிறார். இதனால் அவர் மீது பொறுத்துக்கொள்ள முடியாத உடல் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அரதிருமணமாகி நாற்பது நாட்களுக்கு பிறகு திருமணத்திலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளார்.

    அந்த பெண்ணின் கணவரான ராஜேஷ் புனிதமான கங்கை நதியில் (கங்காஜல்) வரும் தண்ணீரை வாரத்திற்கு ஒருமுறை தெளித்துக் கொள்கிறார். திருமணமாகி மனைவியின் வற்புறுத்தலால் 40 நாட்களில் 6 முறை குளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பெண்ணின் குடும்பத்தினர் வரதட்சணை துன்புறுத்தல் புகாரை போலீசில் பதிவுசெய்து விவாகரத்து கோரி உள்ளனர்.

    இதற்கிடையில் கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து மனைவி தனது பெற்றோர் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

    இறுதியில் கணவர் மனந்திருந்தி, அவரது தனிப்பட்ட சுகாதாரத்தை மேம்படுத்த ஒப்புக்கொண்டார்.

    இருப்பினும், அந்த பெண் கணவருடன் இனி வாழ விரும்பவில்லை என்று கூறியதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து தம்பதியினர் ஆலோசனை மையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

    • உத்தரப்பிரதேசத்தில் பழுதாகி நின்ற பராமரிப்பு ரெயிலை ரெயில்வே ஊழியர்கள் சிறிது தூரத்திற்கு தள்ளிச் செனறனர்.
    • உத்தரப்பிரதேசத்தில் இதுபோன்ற நிகழ்வு நடப்பது ஒன்றும் முதன்முறையல்ல.

    பிரேக் டவுன் ஆகிவிட்ட பேருந்தை பயணிகள் பலரும் தள்ளி செல்லும் காட்சியை பலர் பார்த்திருப்பார்கள். ஆனால் பழுதாகி நின்ற ரெயிலை யாரவது தள்ளிச் செல்வதை பார்த்திருக்கிறீர்களா? அப்படிப்பட்ட சம்பவம் ஒன்று உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது.

    உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்நோர் பகுதியில் பழுதாகி நின்ற பராமரிப்பு ரெயிலை ரெயில்வே ஊழியர்கள் சிறிது தூரத்திற்கு தள்ளிச் சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

    உத்தரப்பிரதேசத்தில் இதுபோன்ற நிகழ்வு நடப்பது ஒன்றும் முதன்முறையல்ல. இந்தாண்டு மார்ச் மாதம் அமேதி மாவட்டத்தில் ரெயில்வே ஊழியர்களுக்கான ரெயில் சென்றுகொண்டிருக்கும்போது நடுவழியிலேயே பழுதாகி நின்றதால் தண்டவாளத்தின் மெயின் லைனில் இருந்து லூப் லைனுக்கு ரெயிலை ஊழியர்கள் தள்ளிச் சென்றுள்ளனர்.

    • காங்கிரசை சேர்ந்த இளம் பெண் பிரமுகரை அப்பகுதியில் வசித்து வந்த சாப்ரோன் ராஜேஷ் [Saffron Rajesh] மிரட்டியுள்ளான்
    • சாப்ரோன் ராஜேஷின் கைகளை ஆதரவாளர்கள் பிடித்துக்கொள்ள பெண் பிரமுகர் அவரை சரமாரியாக தாக்கினார்

    உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் சமூக வலைத்தளத்தில் தனக்கு தொடர்ந்து பலாத்கார மிரட்டல் விடுத்த நபரை காங்கிரஸ் உள்ளூர் பெண் பிரமுகர் தனது ஆதரவாளர்களுடன் சென்று தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. வாரணாசியில் லால்பூர் பந்தேபூர் பகுதியை சேர்ந்த காங்கிரசை சேர்ந்த இளம் பெண் பிரமுகரை அப்பகுதியில் வசித்து வந்த சாப்ரோன் ராஜேஷ் சிங் [Saffron Rajesh Singh] என்ற நடுத்தர வயது நபர் சமூக வலைதளத்தில்  தாகாத முறையில் பதிவிட்டு வந்ததுடன் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்குவதாக மிரட்டியுள்ளார்.

    இதனால் கோபத்தில் இருந்த அந்த பெண் பிரமுகர் தனது ஆதரவாளர்களுடன் சாப்ரோன் ராஜேஷின் வீட்டுக்கே சென்று அவரது மனைவி மற்றும் மகன் முன்னிலையில் தாக்கியுள்ளார். சாப்ரோன் ராஜேஷின் கைகளை ஆதரவாளர்கள் பிடித்துக்கொள்ள பெண் பிரமுகர் அவரை சரமாரியாக தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர்களிடம் இருந்து தப்பித்து சாப்ரோன் ராஜேஷின்  தனது வீட்டுக்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டு தப்பித்துளான்.

    இதனைகோடர்ந்து போலீசில் புகார் அளிக்க சென்ற பெண் பிரமுகர் ஊடகத்தினரிடம் பேசுகையில், சாப்ரோன் ராஜேஷ் கடந்த 4 வருடங்களாக சமூக வலைதளத்தில் தன்னை பற்றி தாகத முறையில் பேசி பலாத்காரம் செய்து கர்ப்பமாக்குவதாக மிரட்டி வந்தான் என்று தெரிவித்துள்ளார்.

    • இன்ஸ்டா ரீல்ஸ்க்காக உயிரிழந்ததுபோல் நடித்து லைக்ஸ்களை குவிக்க முயன்ற இளைஞர் போலீசில் வசமாக சிக்கினார்.
    • உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமிற்கு உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ பதிவிட்டு லைக்ஸ்களை குவிக்க போராடும் பலரில் ரெயில்களில் சிக்கியோ, பள்ளத்தாக்கில் விழுந்தோ உயிரிழக்கும் சம்பவங்களும் நாம் நிறைய பார்த்திருப்போம்.

    ஆனால், இன்ஸ்டா ரீல்ஸ்க்காக உயிரிழந்ததுபோல் நடித்து லைக்ஸ்களை குவிக்க முயன்ற இளைஞர் போலீசில் வசமாக சிக்கியுள்ளார்.

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த முகேஷ் குமார் என்ற இளைஞர் இன்ஸ்டாகிராம் ரீல்ஸூக்காக சாலையில் பிணமாக படுத்து வீடியோ எடுத்துள்ளார்.

    இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரியவந்ததை அடுத்து, முகேஷ் குமாரை கைது செய்துள்ளனர்.

    ×