என் மலர்tooltip icon

    உத்தரப் பிரதேசம்

    • டைகர் ராபி அங்கிருந்து செக்கியூரிட்டிகளால் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
    • முதுகிலும் அடிவயிற்றிலும் அவர்கள் அடித்ததாகவும் பால்கனியில் ஏறி தப்பித்ததாகவும் டைகர் ராபி தெரிவித்தார்

    இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கான்பூர் மைதானத்தில் இன்றைய தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

    போட்டியின்போது பார்வையாளராக வந்திருந்த வங்கதேச அணியின் தீவிர ரசிகராக அறியப்படும் டைகர் ராபி என்பவரை இந்திய அணி ரசிகர்கள் தாக்கியுள்ளதாகத் தெரிகிறது. இதனால் படுகாயமடைந்துள்ள டைகர் ராபி அங்கிருந்து செக்கியூரிட்டிகளால் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

    தனது முதுகிலும் அடிவயிற்றிலும் அவர்கள் அடித்ததாகவும் அவர்களிடம் இருந்து தப்பிக்க பால்கனியில் ஏறிக்கொண்டதாகவும் தன்னால் மூச்சுவிட முடியவில்லை என்றும் ராபி கடுமையான வலியில் பேச முடியாமல் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. ஆனால் இந்திய அணி ரசிகர்கள் ராபியை தாக்கினர் என்பதை மைதானத்தில் காவலுக்கு நின்ற உள்ளூர் போலீஸ் மறுத்துள்ளது. 

    • சிறுவனை பலிகொடுத்தால் தங்களின் பள்ளியின் பிஸ்னஸ் வளர்ச்சி அடையும் என்றும் புகழ் கிடைக்கும் நம்பியுள்ளனர்.
    • பள்ளியின் இயக்குநர், பிரின்சிபல் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட ஐவர் பிளாக் மேஜிக் உள்ளிட்ட மூட நம்பிக்கை சடங்குகளில் தீவிரமாக நம்பிக்கை கொண்டவர்கள் ஆவர்

    தங்கள் பள்ளியின் வளர்ச்சி மற்றும் புகழுக்காக  2 ஆம் வகுப்பு மாணவனை நிர்வாகமே நரபலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. DL பப்ளிக் ஸ்கூல் என்ற தனியார் பள்ளியின் இயக்குநர், பிரின்சிபல் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட ஐவர் பிளாக் மேஜிக் உள்ளிட்ட மூட நம்பிக்கை சடங்குகளில் தீவிரமாக நம்பிக்கை கொண்டவர்கள் என்று கூறப்படுகிறது. சிறுவனை நரபலிகொடுத்தால் தங்களின் பள்ளியின் பிஸ்னஸ் வளர்ச்சி அடையும் என்றும் புகழ் கிடைக்கும்  நம்பியுள்ளனர்.

     

    எனவே பள்ளியின் விடுதியில் தங்கி பயின்று வந்த 11 வயதாகும்  இரண்டாம் வகுப்பு மாணவனை கடவுளுக்கு நரபலிகொடுக்கத் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே ஒரு முறை அதற்கு முயன்று தோற்ற நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பலி கொடுக்க தேர்ந்தெடுத்த சிறுவனை ஐவரும் சேர்ந்து கொலை செய்துள்ளனர். சிறுவனின் உடலை பள்ளி இயக்குநர் தனது காரில் மறைத்து வைத்துள்ளார். கடந்த திங்கள்கிழமை முதல் சிறுவனை காணவில்லை என பாடம் எடுக்கும் ஆசியரியர் தேடிய நிலையில் விவகாரம் போலீசுக்கு சென்றுள்ளது.

    போலீசார் நடத்திய சோதனையில் பள்ளி இயக்குநரின் காரில் கழுத்தில் காயங்களுடன் சிறுவனின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு விசாரணை நடத்தியதில் சிறுவன் பலி கொடுக்கப்பட்ட உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து பள்ளி இயக்குநர் உள்ளிட்ட ஐவரும் கைது செய்யப்பட்டனர்.

    மேலும் இது குறித்து பள்ளியில் ஆசிரியர்கள் உள்ளிட்ட வேறு யாரும் முன்னரே தெரிந்து வைத்திருந்தனரா என்றும் விசாரித்து வருகின்றனர். அடிப்படை உரிமையான கல்வி லாபம் கொழிக்கும் வியாபாரமாக மாறி வருவதன் உச்சமே இந்த கொலை என சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

     

    • நாடு முழுவதும் வேலை இடங்களில் உள்ள அசாதாரண பணிச்சூழலை குறிப்பிட்டு அகிலேஷ் யாதவ் வருந்தினார்
    • பாஜக தலைவர்கள் மக்களை மன ரீதியாக தைரியமிழக்க செய்யும் கருத்துக்களைக் கூறி வருகின்றனர்.

    பணியிட அழுத்தத்தால் கடந்த வாரம் புனேவில் எர்னஸ்ட் அண்ட் எங் நிறுவனத்தில் சிஏ வேலை பார்த்து வந்த கேரளாவை சேர்ந்த 26 வயது இளம்பெண் அன்னா செபாஸ்டின் தற்கொலை செய்து உயிரிழந்தார். தொடர்ந்து நேற்றைய தினம் லக்னோவில் தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்த 45 வயது பெண் ஊழியர் பாத்திமா வேலைசெய்து கொண்டிருந்தபோதே நாற்காலியிலிருந்து சரிந்து விழுந்து உயிரிழந்தார்.

    இதற்கிடையில் அன்னாவின் மரணம் குறித்து பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவது பற்றி பேசாமல். பணிச்சுமையைச் சமாளிக்கக் கடவுள் நம்பிக்கை வேண்டும் என்று ஒரு தலை பட்சமாகப் பேசியதாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

     

    இந்த விவகாரம் அரசியல் ரீதியாகவும் கவனம் பெற்று வரும் நிலையில் தொடரும் பணிச்சுமை மரணங்கள் குறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவரும் மக்களவை எம்.பியான அகிலேஷ் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் வேலை இடங்களில் உள்ள அசாதாரண பணிச்சூழலை குறிப்பிட்ட  அகிலேஷ் யாதவ், பாஜகவின் தோல்வியடைந்த பொருளாதார கொள்கைகளால் நிறுவனங்கள் தங்களின் தொழிலைக் காப்பாற்றிக்கொள்ள ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்து அவர்களை அதிக நேரம் வேலை செய்ய நிர்ப்பந்திக்கின்றன.

     

     இதுபோன்ற திடீர் மரணங்களுக்கு பாஜக அரசு தான் பொறுப்பு. இந்த மரணங்கள் குறித்து பாஜக தலைவர்கள் மக்களை மன ரீதியாக தைரியமிழக்க செய்யும் கருத்துக்களைக் கூறி வருகின்றனர். இதுபோன்ற மரணங்களைத் தடுக்க உடனடி நடவடிக்கை தேவை என்று வலியுறுத்தியுள்ளார். 

    • வேலையில் இருக்கும்போதே நாற்காலியிலிருந்து சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
    • மிகுந்த அழுத்தத்தில் இருந்ததாக அவரது சக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

    பணியிடத்தில் சூழலால் ஏற்படும் அழுத்தங்களால் ஏற்படும் மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் அளவுக்கு அதிகமான பணிச்சுமையால் கேரளாவைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் அன்னா செபாஸ்டின் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் தற்போது லக்னோவில் தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்த பெண் பணிச்சுமையால் உயிரிழந்துள்ளார்.

    உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இயங்கிய தனியார் வங்கியில் பணியாற்றி வந்த சதப் பாத்திமா என்ற 45 வயது பெண்மணி நேற்றைய தினம் வேலையில் இருக்கும்போதே நாற்காலியிலிருந்து சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார். அதிக பணிச்சுமையினால் பாத்திமா மிகுந்த அழுத்தத்தில் இருந்ததாக அவரது சக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

    பாத்திமாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே இதுகுறித்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியும் என்று காவல் உதவி ஆணையர் ரதராமன் சிங் தெரிவித்துள்ளார். 

    • குழந்தைகள் பாம்பை பார்த்ததும் அலறி அடித்து ஓடியுள்ளார்.
    • குழந்தைகளின் அலறலை கேட்ட வளர்ப்பு நாய் ஜென்னி உடனடியாக அங்கு ஓடிவந்தது.

    உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள சிவ கணேஷ் காலனியில் உள்ள ஒரு வீட்டின் தோட்டத்திற்குள் ராஜ நாகம் ஒன்று நுழைந்துள்ளது. அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் பாம்பை பார்த்ததும் அலறி அடித்து ஓடியுள்ளார்.

    குழந்தைகளின் அலறலை கேட்ட பிட்புல் வகையை சேர்ந்த வளர்ப்பு நாய் ஜென்னி உடனடியாக அங்கு ஓடிவந்து ராஜநாகத்தை கடித்து கொன்றது.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

    • வயதான தாயை தோட்டத்துக்குள் தூக்கிச் சென்று அந்த நபர் பலாத்காரம் செய்துள்ளார்.
    • தப்பியோடிய அவரை உடன் பிறந்த சகோதரர்கள் தேடிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    உத்தரப் பிரதேசத்தில் தாயை 48 வயது மகன் பலாத்காரம் செய்த வழக்கில் தீர்ப்பு வெளியாகி உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் [Bulandshahr] மாவட்டத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி 16 அன்று நடந்த பலாத்கார சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. 48 வயது நபர் ஒருவர் தனது மனைவி இறந்த பிறகு தனது தாயை மனைவியாக இருக்க வற்புறுத்தி வந்துள்ளார்.

    சம்பவத்தன்று வயதான தாயை தோட்டத்துக்குள் தூக்கிச் சென்று அந்த நபர் பலாத்காரம் செய்துள்ளார். தப்பியோடிய அவரை உடன் பிறந்த சகோதரர்கள் தேடிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    பாதிக்கப்பட்ட தாயின் வாக்குமூலத்தை அடுத்து சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.இந்நிலையில் நேற்றைய தினம் நடந்த இறுதி விசாரணையில் குற்றம் உறுதி செய்யப்பட்டு அந்த நபருக்கு ஆயுள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.51,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    • சைக்கிளில் சென்ற முதியவர் மீது நுரை ஸ்பிரே அடித்து யூடியூபர் வினய் யாதவ் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டார்.
    • சமூக வலைத்தளங்களில் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து கண்டனம் தெரிவித்தனர்.

    உத்தரப் பிரதேசம் மாநிலம் ஜான்சி பகுதியில், சைக்கிளில் சென்ற முதியவர் மீது நுரை ஸ்பிரே அடித்து கிண்டலடிக்கும் விதமாக யூடியூபர் வினய் யாதவ் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

    இதனையடுத்து சமூக வலைத்தளங்களில் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து முதியவரை பொதுவெளியில் துன்புறுத்திய யூடியூபர் வினய் யாதவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இதனையடுத்து யூடியூபர் வினய் யாதவை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பின்பு வினய் யாதவ் கால் வலியோடு மெதுவாக நடக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    யூடியூபர் வினய் யாதவின் ஆக்சனுக்கு இதுதான் சரியான ரியாக்சன் என்று இந்த வீடியோவை பகிர்ந்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

    • அந்த நபர் வேறு கிராமத்தை சேர்ந்தவர் என போலீசார் தெரிவித்தனர்.
    • சிறுமி தனது வீட்டிற்கு ஓடிச்சென்று பெற்றோரிடம் நடந்த சம்பவம் குறித்து கூறி உள்ளார்.

    உத்தரபிரதேச மாநிலத்தில் 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நபரின் முயற்சியை குரங்குகள் கூட்டம் சரியான நேரத்தில் வந்து தடுத்துள்ளது.

    உத்தரபிரதேச மாநிலம் பாக்பத்தில் உள்ள தௌலா கிராமத்தில் கடந்த வெள்ளியன்று இந்த சம்பவம் நடந்துள்ளது. போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட குற்றவாளி இப்போது தப்பி ஓடிவிட்டார், மேலும் அவரைப் பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது, சம்பவ இடத்திற்கு வந்த குரங்குகள் அவரை தாக்கியது. குரங்கின் தாக்குதலுக்கு பயந்து அவர் சிறுமியை விட்டுவிட்டு ஓடினார் என்று தெரிவித்தனர்.

    அவர் வேறு கிராமத்தை சேர்ந்தவர் என போலீசார் தெரிவித்தனர். சிறுமி தனது வீட்டிற்கு வெளியே விளையாடுவதைக் கண்டதும், தன்னுடன் வரும்படி அவர் சிறுமியை வற்புறுத்தி அழைத்து சென்றுள்ளார்.

    பழைய கட்டிடத்திற்கு சிறுமியை அழைத்து சென்றுள்ளார். அந்த நபரின் பலாத்கார முயற்சியின்போது அந்த இடத்திற்கு கூட்டமாக வந்த குரங்குகள் தாக்குதல் நடத்தியது. குரங்குகளின் தாக்குதலுக்கு பயந்து அந்த நபர் சிறுமியை விட்டுவிட்டு ஓடி உள்ளார்.

    இதையடுத்து சிறுமி தனது வீட்டிற்கு ஓடிச்சென்று பெற்றோரிடம் நடந்த சம்பவம் குறித்து கூறி உள்ளார். இதைத்தொடர்ந்து அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளித்தனர்.

    சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது, எதிர்ப்பு தெரிவித்தால் சிறுமியின் குடும்பத்தினரை கொன்று விடுவதாக அந்த நபர் மிரட்டியதாகவும் சிறுமியின் பெற்றோர் கூறி உள்ளனர்.

    அந்த கிராமத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் குற்றவாளி, சிறுமியை தன்னுடன் அழைத்துச் செல்வது பதிவாகியுள்ளது. இந்த காட்சிகளை வைத்து குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    • போலீஸ் தேடி வந்ததால் சிறுவை ஒவ்வொரு நாளும் வெவ்வேறு இடங்களுக்கு கொள்ளையர்கள் இடம்மாற்றியுள்ளனர்.
    • தனது கடத்தல் வழக்கின் விசாரணைகளை நீதிமன்றத்தில் சென்று பார்த்து வந்த ஹர்ஸ் ராஜ் அதனால் கவரப்பட்டார்

    பிப்ரவரி 10, 2007 :

    உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள கேர்கர் [Kheragarh] நகரில் ஹர்ஸ் ராஜ் என்ற 7 வயது சிறுவன் தந்தை மற்றும் உறவினர் முன்னிலையிலேயே துப்பாக்கி முனையில் கொள்ளையர்களால் காரில் கடத்திச் செல்லப்படுகிறான். ஆக்ராவில் இருந்து சம்பல் பகுதிக்கு சிறுவனை கடத்திச் சென்ற கொள்ளயர்கள் அவனது பெற்றோர்களிடம் ரூ.55 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். போலீஸ் தேடி வந்ததால் சிறுவை ஒவ்வொரு நாளும் வெவ்வேறு இடங்களுக்கு கொள்ளையர்கள் இடம்மாற்றியுள்ளனர்.

    சுமார் ஒரு மாத காலத்துக்குள், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் என சிறுவனை அழைத்துக்கொண்டு கொள்ளையர்கள் சுற்றியுள்ளனர். கடைசியாக மே 2007 அன்று மத்தியப் பிரதேசத்தில் உள்ள சிவபுரி மாவட்டத்தில் பதுங்கியிருந்த கொள்ளையர்களை போலீசார் துப்பு துலக்கி கண்டறிந்து சிறுவனை மீட்டுப் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த கடத்தலில் தொடர்புடைய 14 பேரை அதற்கடுத்த ஒரு வருடத்துக்குள்ளாகவே போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் அவர்கள் மீது கடந்த 14 வருடமாக வழக்கு நடந்து வந்துள்ளது.

    செப்டம்பர் 17, 2024 :

    கடத்தப்பட்ட அந்த சிறுவன் ஹர்ஸ் ராஜ் தற்போது 24 வயது இளைஞன். அதுமட்டுமின்றி பட்டம் பெற்ற வழக்கறிஞர். தனது கடத்தல் வழக்கில் இறுதி விசாரணையில் நீதிமன்றத்தில் தன் சார்பாக ஆஜரான ஹர்ஸ் ராஜ் இறுதி வாதத்தை முன்வைத்துள்ளார். நீதிபதியின் அனுமதி பெற்று சரியாக 55 நிமிடங்களில் தனது இறுதி வாதத்தை ஹன்ராஜ் சொல்லி முடித்துள்ளார். இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி குற்றம்சாட்டப்பட்ட 14 பேரில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

     

    14 பேரில் இருவர் வழக்கு நடக்கும்போதே இடையில் உயிரிழந்துள்ளனர். மேலும் நால்வர் தகுந்த ஆதரங்கில்லாமல் விடுவிக்கப்பட்டிருந்தனர். கடந்த 2015 முதல் தனது கடத்தல் வழக்கின் விசாரணைகளை நீதிமன்றத்தில் சென்று பார்த்து வந்த ஹர்ஸ் ராஜ் அதனால் கவரப்பட்டுக் கடந்த 2022 இல் ஆக்ரா சட்டக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்று தனது கடத்தல் வழக்கை வாதாடி வந்த அரசாங்க வக்கீலுக்கு உதவியாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

     

    • கேஸ் சிலிண்டர் இருப்பதைக் கவனித்த ஓட்டுநர், உடனடியாக பிரேக் போட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
    • உத்தரபிரதேசத்தில் இதுபோன்ற சம்பவம் நடப்பது ஒன்றும் புதிதல்ல.

    உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் இருந்து பிரயாக்ராஜ் நோக்கி லூப் லைன் வழியாக சரக்கு ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தில் 5 கிலோ எடையுள்ள கேஸ் சிலிண்டர் இருப்பதைக் கவனித்த ஓட்டுநர், உடனடியாக பிரேக் போட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    உத்தரபிரதேசத்தில் இதுபோன்ற சம்பவம் நடப்பது ஒன்றும் புதிதல்ல.

    செப்டம்பர் 9ம் தேதி கான்பூர்-காஸ்கஞ்ச் வழித்தடத்தில் பயணித்த காளிந்தி எக்ஸ்பிரஸ் தண்டவாளத்தில் இருந்து கேஸ் சிலிண்டருடன் மோதியது. இதைத் தொடர்ந்து பலத்த வெடிப்புச் சத்தம் கேட்டதால், ரெயிலின் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தினார்.

    இதனையடுத்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது தண்டவாளம் அருகே எல்பிஜி சிலிண்டர், பெட்ரோல் பாட்டில் மற்றும் தீப்பெட்டி ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.

    • கடந்த செப்டம்பர் 17 பிரதமர் மோடியின் பிறந்தநாளை பாஜகவினர் விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தனர்
    • வீடியோ லீக் ஆகியுள்ள நிலையில் இணையத்தில் பாஜக மேயர் கேலி செய்யப்பட்டு வருகிறார்

    கடந்த செப்டம்பர் 17 பிரதமர் மோடியின் பிறந்தநாளை பாஜகவினர் விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தனர். அந்த வகையில் உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பாஜக அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்ட்டிருந்தது.

    ரத்த தான நிகழ்வில் பங்கேற்ற பாஜக மேயர் வினோத் அகர்வால் ரத்த தானம் கொடுப்பதுபோல் படுக்கையில் படுத்து கேமராவுக்கு போஸ் கொடுத்துவிட்டு ரத்தம் கொடுக்காமலேயே அங்கிருந்து வெளியேறிய வீடியோ லீக் ஆகியுள்ள நிலையில் இணையாயத்தில்  பாஜக மேயர் கேலி செய்யப்பட்டு வருகிறார்.

    கேமராவுக்கு போஸ் கொடுத்த பின்னர் அதற்கு மேல் எதுவும் செய்ய வேண்டாம் என்று டாக்ட்ரிடம் சைகை காட்டிவிட்டு சிரித்தபடி படுக்கையில் இருந்து எழுந்து பாஜக மேயர் வெளியேறுவது வீடியோவில் பதிவாகியுள்ளது.

    • ஜாமீன் வாங்கிக்கொண்டு ரிங்கு சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளான்
    • தனது தாய் மற்றும் சகோதரனின் கண்முன்னையே சிறுமி குண்டடிபட்டு உயிரிழந்தாள்.

    சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் ஜாமீனில் வெளியே வந்து அந்த சிறுமியை சுட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் வசித்து வந்த ரிங்கு[Rinku] என்ற நபர் அப்பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக போக்ஸோ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.

    இந்நிலையில் ஜாமீன் வாங்கிக்கொண்டு ரிங்கு சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளான். கடந்த செப்டம்பர் 18 ஆம் தேதி அன்று இரவு சம்பல் பகுதியில் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி தனது தாய் மற்றும் சகோதரனுடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது தனது நண்பனுடன் அவர்களை வழிமறித்த ரிங்கு சிறுமியை துப்பாக்கியால் சுட்டுள்ளான். தனது தாய் மற்றும் சகோதரனின் கண்முன்னையே சிறுமி குண்டடிபட்டு உயிரிழந்தாள். இதனையடுத்து தலைமறைவாகிய ரிங்குவை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×