என் மலர்
உத்தரப் பிரதேசம்
- பிரதமர் மோடி இன்று மீரட்- லக்னோ இடையிலான புதிய வந்தே பாரத் ரெயிலை தொடங்கி வைத்தார்.
- எங்களிடம் வாக்குவாதம் செய்த அவர்கள் எங்களை பிடித்துத் தள்ளினர் என்று தெரிவித்தார்.
பிரதமர் மோடியால் இன்று தொடங்கி வைக்கப்பட்ட மீரட்- லக்னோ இடையிலான புதிய வந்தே பாரத் ரெயிலில் பயணித்த பெண்கள், தங்களிடம் பாஜகவை சேர்ந்த நபர்கள் தகாத முறையில் நடந்துகொண்டதாக குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்களுக்கு நேர்ந்தது குறித்து பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாங்கள் ரெயிலில் உள்ளே மற்றொரு கேபினுக்கு சென்றுகொண்டிருந்தபோது, எங்களை வழிமறித்த சில பாஜகவினர், அந்த கேபின் பாஜகவினருக்காக ரிசர்வ் செய்யப்பட்டது என்றும் அதற்குள் வர முடியாது என்றும் கூறினர்.
எனவே நாங்கள் திரும்பிச் செல்ல முயற்சித்தோம், ஆனால் எங்களை செல்லவிடாமல் மரித்த அவர்கள் ஏன் ரெயிலுக்குள் நடந்துகொண்டிருக்கிறீர்கள் எனக் கூறி எங்களிடம் வாக்குவாதம் செய்த அவர்கள் எங்களை பிடித்துத் தள்ளினர் என்று தெரிவித்தார். தாங்களும் பாஜகவுக்கு ஆதரவானவர்கள்தான் என்று தெரிவித்த அந்த பெண் ரெயிலை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியை விளம்பரப்படுத்த இன்ப்ளூயன்ஸார்களான எங்களுக்கு பாஜக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
ஆனால் இதுபோன்ற செயல்களினால் மொத்த கட்சிக்கும் களங்கம் ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூா்-நாகா்கோவில், மதுரை-பெங்களூரு கண்டோன்மென்ட் மற்றும் மீரட்-லக்னோ ஆகிய 3 வழித் தடங்களில் 'வந்தே பாரத்' ரெயில்களை பிரதமா் மோடி டெல்லியில் இருந்து இன்று (சனிக்கிழமை) காணொலி மூலம் இன்று தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.
- 'சமாஜ்வாதி கட்சியினர் சிகப்புத் தொப்பி அணிகின்றனர். ஆனால் அவர்களின் செயல்கள் அனைத்தும் கருப்பாக உள்ளது'
- 'குறைத்தபட்சம் எங்களின் தலையில் முடி உள்ளது, நாங்கள் தொப்பி அணிகிறோம்'
உத்தரப் பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்தநாத் தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் உள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி அதிக இடங்களில் பெற்ற வெற்றி அம்மாநில அரசியலிலும் பாஜகவுக்குள்ளும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் கான்பூர் நகரில் கடந்த வியாழன் அன்று நடந்த கூட்டத்தில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்தநாத் பேசுகையில், சமாஜ்வாதி கட்சியினர் சிகப்புத் தொப்பி அணிகின்றனர். ஆனால் அவர்களின் செயல்கள் அனைத்தும் கருப்பாக உள்ளது என்று குற்றம் சாட்டியிருந்தார்.

இதற்குப் பதிலடி கொடுத்துள்ள சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், சிகப்பு என்பது உணர்வுகளின் நிறம். கடவுள் துர்கையின் நிறம். ஆனால் தற்போது அவர்கள் [பாஜக] நமது தொப்பியைக் கிண்டலடித்து வருகின்றனர். எங்களது தொப்பியைக் கிண்டலடிப்பதற்கு முன் அவர்களுக்கே முதலில் தொப்பி தேவைப்படுகிறது. எங்களின் செயல்கள் நல்லவிதமாக உள்ளன. குறைத்தபட்சம் எங்களின் தலையில் முடி உள்ளது, நாங்கள் தொப்பி அணிகிறோம். முடி இல்லாதவர்கள்தான் முதலில் தொப்பி அணிய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் உ.பி முதல்வர் யோகி ஆதித்தநாத்தை அகிலேஷ்யாதவ் மறைமுகமாகச் சாடியுள்ளார்.

- பரபரப்பான சாலையில் வாகனங்களுக்கு பயப்படாமல் அவர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்.
- லாரி இடித்ததில் அந்த நபர் நாற்காலியில் இருந்து கீழே சாலையில் விழுகிறார்.
உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கரில் சாலையின் நடுவே, அதுவும் அங்குள்ள ஒரு போலீஸ் சாவடிக்கு முன்னால் ஒரு நபர் நாற்காலியில் அமர்ந்து இருக்கிறார்.
அந்த நபர் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக அங்கு அமர்ந்து போராட்டம் நடத்துகிறாரா அல்லது ரவுடித்தனத்தை வெளிப்படுத்தும் வகையில் அமர்ந்திருந்தாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இருப்பினும், பரபரப்பான சாலையில் வாகனங்களுக்கு பயப்படாமல் அவர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். பரபரப்பான சாலையில் அவரை கடந்த இருபுறமும் வாகனங்கள் தொடர்ந்து செல்கிறது. அப்போது அந்த வழியாக சென்ற லாரி ஒன்று அவரை இடித்து செல்லும் சம்பவம் அங்குள்ள கேமராவில் பதிவாகியுள்ளது.
ரன்விஜய் சிங் என்ற பத்திரிகையாளர் இந்த சம்பவத்தை எக்ஸ் தளத்தில் பதிவு செய்து வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
உ.பி.யில் ஒரு நபர் போலீஸ் சாவடி முன் நடுரோட்டில் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். சாலையின் நடுவில் அமர்ந்திருந்த அவரை ஒரு லாரி நெருங்கி வருகிறது. லாரி அவரை இடித்ததை காட்டுகிறது.
லாரி இடித்ததில் அந்த நபர் நாற்காலியில் இருந்து கீழே சாலையில் விழுகிறார். லாரி அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் தொடர்ந்து செல்கிறது.
லாரி அவரை மோதினாலும், கீழே விழுந்த அந்த நபர் தனது நிலையில் இருந்து ஒரு அங்குலம் கூட நகரவில்லை.
தொடர்ந்து சாலையில் எப்படி விழுந்தோரோ அப்படியே அமர்ந்து இருக்கிறார். மேலும் அவரது நாற்காலி உடைந்தது. வாகனங்கள் மோதி விடும் என்ற அச்சமின்றி சாலையில் தொடர்ந்து அவர் அமர்ந்திருக்கிறார். மீண்டும் தொடர்ந்து வாகனங்கள் அவரை கடந்து இருபுறமும் செல்கிறது.
போலீஸ் சாவடியின் வாசலில் ஒருவர் நின்றதாகவும், ஆனால், அவர் இந்த சம்பவம் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.
- சமோசா கடை நடத்தி விற்பனை செய்து வந்தார்.
- மருந்துகளை பார்த்ததால் மருத்துவம் படிக்க ஆர்வம் ஏற்பட்டது.
நொய்டா:
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்தவர் சன்னிகுமார் (வயது 18). 12-ம் வகுப்பு படித்து வந்த இவர் பள்ளி நேரம் முடிந்ததும் சமோசா கடை நடத்தி விற்பனை செய்து வந்தார்.
டாக்டருக்கு படிக்க ஆசைப்பட்ட சன்னிகுமார் நீட் தேர்வு எழுதினார். அவர் 664 மதிப்பெண் எடுத்துள்ளார். தனது சமோசா கடையில் 5 மணி நேரம் வேலை செய்து கொண்டே அவர் இந்த மதிப்பெண் எடுத்துள்ளார்.
அவர் நீட் தேர்வு குறிப்புகளை பேப்பரில் எழுதி வைத்து அதனை சுவரில் ஓட்டிவைத்து படித்து வந்தார். நீட் தேர்வுக்காக அவர் இரவு முழுவதும் கண்விழித்து படித்துள்ளார்.
இதனால் அவரது கண்களில் வலி ஏற்பட்டுள்ளது. அதனையும் பொருட்படுத்தாமல் சன்னிகுமார் திறம்பட படித்து இந்த மதிப்பெண் பெற்றுள்ளார்.
மருந்துகளை பார்த்ததால் எனக்கு மருத்துவம் படிக்க ஆர்வம் ஏற்பட்டது. மக்களை நோய்களில் இருந்து காக்க வேண்டும் என்று டாக்டருக்கு படிக்க ஆசைப்பட்டேன். சமோசா விற்பது எனது எதிர்காலத்தை பாதிக்காது தொடர்ந்து இந்த தொழிலை செய்து கொண்டே டாக்டருக்கு படிப்பேன் என்று கூறியுள்ளார்.
சன்னிகுமாரின் வாழ்க்கை போராட்டத்தை கவனித்து வந்த அலேக் பாண்டே என்பவர் மருத்துவ கல்லூரி கட்டணமான ரூ.6 லட்சம் நிதியை அவருக்கு வழங்கியுள்ளார்.
- யூட்யூப்-ல் உ.பி. அரசுக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டால் 4 முதல் 8 லட்சம் வரை வழங்கப்படும்.
- அரசுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உ.பி. அரசு அறிவிப்பு.
உத்தரபிரதேச பாஜக அரசின் திட்டங்கள், சாதனைகள் குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர்களுக்கு மாதம் 8 லட்சம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மாநில தகவல் தொலைத்தொடர்பு துறையாழ் தயாரிக்கப்பட்ட உத்தரபிரதேச டிஜிட்டல் மீடியா பாலிசி 2024க்கு உ.பி. மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த புதிய கொள்கையின்படி எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் உ.பி. அரசுக்கு ஆதரவாக வீடியோ, போஸ்ட். ட்வீட், ரீல்ஸ் பதிவிடுபவர்களுக்கு அவர்களின் பாலோயர்கள் அடிப்படையில் 4 வகைகளாகப் பிரிக்கப்பட்டு ரூ.5 லட்சம், 4 லட்சம், 3 லட்சம் மற்றும் 2 லட்சம் வழங்கப்படும்.
யூட்யூப்-ல் வீடியோ, ஷார்ட்ஸ் பதிவிடுபவர்களுக்கு அவர்களின் சப்ஸ்க்ரைபர்கள் அடிப்படையில் 4 வகைகளாகப் பிரிக்கப்பட்டு ரூ.8 லட்சம், 7 லட்சம், 6 லட்சம் மற்றும் 4 லட்சம் வழங்கப்படும்.
உத்தர பிரதேசம் மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்களும் இத்திட்டத்தின் மூலம் பயனடைய முடியும்
மேலும் சமூக வலைத்தளங்களில் அரசுக்கு எதிராக, ஆட்சேபனைக்குரிய செய்திகளை வெளியிடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உ.பி. அரசு அறிவித்துள்ளது.
- இதுவரை 3 ஓநாய்களை பிடித்துள்ள வனத்துறையினர் அவைகளை லக்னோ உயிரியல் பூங்காவிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
- 20 ஆண்டுகளுக்கு பிறகு ஓநாய்கள் இந்த பகுதிக்கு திரும்பி உள்ளன.
உத்தர பிரதேசத்தின் இந்தோ-நேபாள எல்லை மாவட்டமான பஹ்ரைச்சில் உள்ள மஹாசி தொகுதியின் 30 கிராமங்களில் ஓநாய்கள் கூட்டத்தால் 6 குழந்தைகள் உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 26 பேர் காயமடைந்தனர். இந்த ஓநாய்களை பிடிக்க வனத்துறையினர் 9 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளனர்.
ஓநாய்கள் அடிக்கடி தாக்குதல் நடத்துவதால், இப்பகுதியில் ஒரு மாதத்திற்கும் மேலாக தூக்கமின்றி தவிக்கும் கிராம மக்கள் பீதியில் உள்ளனர். அவர்கள் இரவு நேரங்களில் காவல் காத்து தங்களை பாதுகாத்துக் கொள்கிறார்கள்.
இதுவரை 3 ஓநாய்களை பிடித்துள்ள வனத்துறையினர் அவைகளை லக்னோ உயிரியல் பூங்காவிற்கு அனுப்பி வைத்துள்ளனர். வனத்துறையினர், தெர்மல் ட்ரோன்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்களுடன் ஓநாய்களை தேடிவருகின்றனர்.
இது தொடர்பாக பஹ்ரைச் மாவட்டத்தின் வனத்துறை அதிகாரி அஜீத் பிரதாப் சிங் கூறுகையில், "ஜூலை 17 அன்று ஓநாய் தாக்கி உயிரிழப்பு ஏற்பட்டதாக முதல் சம்பவம் பதிவாகியுள்ளது.
தெர்மல் ட்ரோன்களின் உதவியுடன் ஓநாய்களின் கூட்டத்தை பிடிக்க அதிகாரிகள் கடுமையாக முயற்சி செய்து வருகின்றனர். 6 கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஓநாய்கள் வழித்தடங்களில் 4 பொறிகள் வைத்துள்ளோம்" என்று கூறினார்.
வன அதிகாரிகளின் மதிப்பீட்டில், மனிதர்களை மட்டுமே தாக்கும் 5-6 ஓநாய்கள் இப்பகுதியில் உள்ளன.
20 ஆண்டுகளுக்கு பிறகு ஓநாய்கள் இந்த பகுதிக்கு திரும்பி உள்ளன. 2004-ம் ஆண்டில், ஓநாய்களின் வெவ்வேறு தாக்குதல்களில் சுமார் 32 குழந்தைகள் கொல்லப்பட்டனர். 2020-ம் ஆண்டிலும் ஓநாய் தாக்குதல்கள் பற்றிய தகவல்கள் வந்துள்ளன.
குழந்தைகளுடன் குடும்பமாக திறந்த வெளியில் தூங்க வேண்டாம் என அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு வனத்துறை அறிவுறுத்தி உள்ளது.
- ஏற்கனவே பார்க்கிங் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ள நிலையில் நேற்றுமுன்தினம் அது மோதலாக மாறியுள்ளது.
- சம்பவம் தொடர்பாக இருதரப்பினரை சேர்ந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் பார்க்கிங் தொடர்பாக 2 குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நொய்டாவின் செக்டார் 72-ல் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கிடையே ஏற்கனவே பார்க்கிங் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ள நிலையில் நேற்றுமுன்தினம் அது மோதலாக மாறியுள்ளது. கிரிக்கெட் பேட் மற்றும், தடியுடன் ஆண்கள், பெண்கள் என இருதரப்பினரும் சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தகராறில் ஒரு வாகனம் சேதமானது.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இச்சம்பவம் தொடர்பாக செக்டார் 113 காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் இருதரப்பினரை சேர்ந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
- நிஹால்கர் ரெயில் நிலையத்தின் பெயர் மகாராஜா பிஜிலி பாசி ரெயில் நிலையம் என்றும் மாற்றப்பட்டுள்ளது.
- ஸ்மிருதி இரானியின் கோரிக்கையை அடுத்து ரெயில் நிலையங்கள் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோ கோட்டத்தில் உள்ள 8 ரெயில் நிலையங்களின் பெயர்கள் துறவிகள் (Saints) மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்களால் மறுபெயரிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் நேற்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்தனர்.
அதன்படி, காசிம்பூர் ஹால்ட் ரெயில் நிலையம் இனி ஜெய்ஸ் சிட்டி ரெயில் நிலையம் என்றும், நிஹால்கர் ரெயில் நிலையத்தின் பெயர் மகாராஜா பிஜிலி பாசி ரெயில் நிலையம் என்றும் மாற்றப்பட்டுள்ளது.
இதற்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கண்டனம் தெரிவித்து, ரெயில் நிலையங்களின் பெயர்களை மாற்றுவதற்கு பதிலாக ரெயில் நிலையங்களின் நிலையை மேம்படுத்துவதிலும், ரெயில் விபத்துகளை தடுப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
முன்னதாக, அமேதியின் கலாச்சார அடையாளத்தையும் பாரம்பரியத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று அமேதியின் முன்னாள் எம்.பி. ஸ்மிருதி இரானியின் கோரிக்கையை அடுத்து இந்த ரெயில் நிலையங்கள் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- காரில் ஹெல்மெட் அணிய வேண்டும் என சட்டம் இருக்கிறதா? என பத்திரிகையாளர் கேள்வி
- அபராதம் கட்டவில்லையென்றால் நீதிமன்றம் செல்ல நேரிடும் எனக் கூறியுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலத்தில் காரில் சென்ற துஷார் சக்ஸேனா என்ற பத்திரிகையாளர் ஹெல்மெட் அணியவில்லை எனக் கூறி நொய்டா போலீசார் ரூ.1000 அபராதம் விதித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராம்பூர் ராம்பூர் நகரில் வசி வசிக்கும் துஷார் சக்ஸேனா வசித்து வருகிறார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெள்ளை நிற ஹூண்டாய் காரை அவர் வாங்கினார்.
அங்கிருந்து 200 கி.மீ தொலைவில் உள்ள கவுதம புத்தா நகரில் அவர் கார் ஓட்டும்போது ஹெல்மெட் அணியாததற்காக 1000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று அவரது செல்போனுக்கு 9 மாதங்களுக்கு முன்பு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.
தவறுதலாக மெசேஜ் வந்துள்ளது என்று அவர் முதலில் நினைத்துள்ளார். ஆனாலும் அபராதம் செலுத்தக் கூறி அவருக்கு தொடர்ந்து குறுஞ்செய்திகள் வந்துள்ளன.
இது குறித்து போலீசாரிடம் அவர் கேட்டபோது, அபராதம் கட்டவில்லையென்றால் நீதிமன்றம் செல்ல நேரிடும் எனக் கூறியுள்ளனர்.
இதுவரை கவுதம புத்தா நகருக்கு காரில் சென்றதே இல்லை எனக் தெரிவித்த துஷார், காரில் ஹெல்மெட் அணிய வேண்டும் என சட்டம் இருக்கிறதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
2017 ஆம் ஆண்டு ராஜஸ்தானின் இதேபோன்று ஒரு வழக்கு பதிவாகியுள்ளது. மாருதி ஆம்னி காரை ஒட்டிய நபருக்கு ஹெல்மெட் அணியாததற்காக போலீசார் அபராதம் விதித்தனர். இதனையடுத்து அந்த நபர் ஹெல்மெட் அணிந்து கார் ஓட்ட தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சிறுவனின் இருப்பிடத்தை அறிந்து கொண்ட போலீசார் அவனை மீட்டுள்ளனர்.
- தன்னை யாரோ கடத்தி விட்டதாக சிறுவன் நாடகம் ஆடியது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பதேபூரில் 17 வயது சிறுவனை காணவில்லை என்று அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து சிறுவனை போலீசார் மீட்டுள்ளனர்.
இதனையடுத்து போலீசாரின் விசாரணையில், சிறுவனை யாரும் கடத்தவில்லை என்று, தன்னை யாரோ கடத்தி விட்டதாக சிறுவன் நாடகம் ஆடியதும் தெரிய வந்துள்ளது.
இன்ஸ்டாகிராமில் அதே ஊரை சேர்ந்த ஒரு பெண்ணுடன் இந்த சிறுவன் மெசேஜ் அனுப்பி தொடர்ச்சியாக பேசி வந்துள்ளார். இதனை தெரிந்து கொண்ட பெண்ணின் குடும்பம் சிறுவனின் குடும்பத்திடம் இதை பற்றி தெரிவித்துள்ளனர்.
இதனால் பயப்பட்ட சிறுவன் இந்த கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளான். அவரது தந்தைக்கு செல்போனில் அழைத்து உங்கள் மகனை கடத்தியுள்ளோம். உங்கள் மகனை விடுவிக்க ரூ.10 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் மிரட்டியுள்ளான். பின்னர் தனது செல்போனை சிறுவன் சுவிட்ச் ஆப் செய்துள்ளான்.
சிறுது நேரம் கழித்து தனது போனை சிறுவன் சுவிட்ச் ஆன் செய்த போது சிறுவனின் இருப்பிடத்தை அறிந்து கொண்ட போலீசார் அவனை மீட்டுள்ளனர்.
- 3 பேரின் உடல்களையும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக தேடினர்.
- இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள புனித தலங்களை பார்வையிட பீகார் மாநிலத்தை சேர்ந்த 3 நண்பர்கள் ஆகஸ்ட் 24 அன்று சென்றுள்ளனர்.
அப்போது கங்கை நதியின் அருகே செல்பி எடுக்க முயன்றபோது, சோனா சிங் (19) என்ற மருத்துவ மாணவி ஆற்றில் தவறி விழுந்துள்ளார். உடனே அவரை காப்பாற்ற அவரது நண்பர்களான ரிஷி, வைபவ் சிங் ஆகியோரும் ஆற்றில் குதித்துள்ளனர். ஆனால் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு மூவரும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து, 3 பேரின் உடல்களையும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக தேடினர். அப்போது வைபவ் சிங் என்ற இளைஞரின் உடலை அவர்கள் மீட்டனர். மற்ற 2 பேரில் உடல்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர். இந்தியாவில் ஆபத்தான இடங்களில் செல்பி, ரீல்ஸ் எடுக்கும் போது தொடர்ச்சியாக பலர் உயிரிழந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- அரசியலமைப்புச் சட்டம் நாட்டின் அனைத்து குடிமக்களுக்கானது.
- அது ஏழை மக்கள், தொழிலாளர்களால் பாதுகாக்கப்படுகிறது என்றார்.
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
இந்தியா முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியது அவசியம்.
இந்தியாவில் 90 சதவீத மக்கள் நிர்வாக அமைப்பை விட்டு விலகி வெளியே உள்ளனர்.
அவர்களுக்காக இந்த கணக்கெடுப்பு நடத்துவது அவசியம்.
90 சதவீத மக்களுக்கு திறனும், கல்வி அறிவும் இருந்தும் நிர்வாக அமைப்புடன் அவர்களுக்கு தொடர்பு இல்லை.
இதனால் தான் சாதிவாரி கணக்கெடுப்பை கோரிக்கையை முன்வைத்துள்ளோம்.
சாதிவாரி கணக்கெடுப்பு என்பது காங்கிரசுக்கு ஒரு கொள்கை கட்டமைப்பு மற்றும் வழிகாட்டி.
அரசியலமைப்புச் சட்டம் நாட்டின் 10 சதவீத மக்களுக்கானது அல்ல, அது அனைத்து குடிமக்களுக்கானது.
அரசியலமைப்பு ஏழை மக்கள், தொழிலாளர்கள், பழங்குடியினர் ஆகியோரால் பாதுகாக்கப்படுகிறது என தெரிவித்தார்.






