என் மலர்
உத்தரப் பிரதேசம்
- உ.பி.யில் ஓநாய்கள் தாக்குதலில் கடந்த 2 மாதங்களில் 8 குழந்தைகள் உள்பட 9 பேர் பலியாகினர்.
- உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஓநாய்களை சுட்டுபிடிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உத்தர பிரதேசம் மாநிலம் பக்ராயிச் மாவட்டம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள கிராமங்களில் ஓநாய்கள் புகுந்து மனித வேட்டையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. ஓநாய்கள் தாக்குதலில் கடந்த 2 மாதங்களில் 8 குழந்தைகள் உள்பட 9 பேர் பலியாகினர். 36 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஓநாய்களை கூண்டு வைத்து பிடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஓநாய்களை சுட்டுபிடிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
துப்பாக்கி சுடுதலில் நிபுணத்துவம் பெற்ற 9 குழுக்கள் வனத்துறை சார்பில் களம் இறக்கப்பட்டுள்ளன. மயக்க மருத்து கொடுத்து ஓநாய்களை சுட்டு பிடிக்க முன்னுரிமை அளிக்கப்படும். அது பயனளிக்காதநிலையில் அவற்றை சுட்டு கொல்ல அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உத்தரப்பிரதேச அரசை விட ஓநாய்கள் அதி புத்திசாலிகளாக இருப்பதால் அவற்றை பிடிப்பது எளிதான காரியமில்லை அம்மாநில பெண் அமைச்சர் பேபி ராணி மவுரியா பேசியுள்ள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பேசிய அவர், "பல குழுக்கள் அமைக்கப்பட்டு ஓநாய்கள் தேடப்பட்டு வருகின்றன. நாங்கள் அவற்றைப் பிடித்து விடுவோம். ஆனால் ஓநாய்கள் அரசாங்கத்தை விட, புத்திசாலித்தனமாக இருப்பதால் பிடிப்பதற்கு நேரம் எடுக்கிறது. வனத்துறை அமைச்சர் தனிப்பட்ட முறையில் தேடுதலை மேற்பார்வையிட்டு வருகிறார்"என்று தெரிவித்துள்ளார்.
- விபத்து குறித்து தகவல் அறிந்த உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல்.
- நிவாரணப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் மினி டிரக் மீது பேருந்து மோதிய ஏற்படுத்திய விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். 16 பேர் காயமடைந்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்ற இடத்தில் நெடுஞ்சாலை 93ல் இன்று பேருந்து ஒன்று மினி லாரி மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.
பயணிகள் ஹத்ராஸில் இருந்து ஆக்ரா நோக்கி சென்று கொண்டிருந்தபோது, சேவாலா கிராமத்திற்கு திரும்பிக் கொண்டிருந்த மினி லாரி மீது மோதியது.
இந்த கோர விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும், நிவாரணப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
விபத்தை தொடர்ந்து மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மாவட்ட மருத்துவமனைக்கு விரைந்தனர்.
இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) நிபுன் அகர்வால் கூறுகையில், "ஆக்ரா- அலிகார் தேசிய நெடுஞ்சாலையில் வேனை முந்திச் செல்ல முயன்றபோது பேருந்து மோதியதில் விபத்து ஏற்பட்டது" என்றார்.
காயமடைந்தவர்களில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- தனியார் மருத்துவமனையில் ஆகும் செலவை சமாளிக்க முடியாததால் அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்து ஆம்புலன்ஸ் ஒன்றில் மனைவி அழைத்துச் சென்றுள்ளார்.
- அவர்களுக்கு பெண் ஒத்துழைக்க மறுத்ததால் கணவனின் ஆச்சிஜன் சப்போர்ட் - ஐ அவர்கள் துண்டித்து மூவரையும் ஆம்புலன்சில் இருந்து வெளியே தள்ளி விட்டுள்ளனர்.
உயிருக்குப் போராடும் கணவனுடன் ஆம்புலன்சில் வந்த மனைவிக்கு ஆபுலன்ஸ் ஓட்டுநரும் உதவியாளரும் பாலியல் தொல்லை அளித்து கணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் கடந்த ஆகஸ்ட் 29 அன்று உயிர்கொல்லி நோயால் பாதிக்கப்பட்ட தனது கணவனுக்கு வைத்தியம் அளிக்க தனியார் மருத்துவமனையில் ஆகும் செலவை சமாளிக்க முடியாததால் அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்து தனியார் ஆம்புலன்ஸ் ஒன்றில் மனைவி அழைத்துச் சென்றுள்ளார். கணவனின் சகோதரனும் அவர்களுடன் சென்றுள்ளார்.
இந்நிலையில் ஆம்புலன்சை பாதி வழியிலேயே நிறுத்திவிட்டு டிரைவரும் உதவியாளரும் அந்த பெண்ணை பாலியல் ரீதியாக சீண்டியுள்ளனர். அவர்களுக்கு பெண் ஒத்துழைக்க மறுத்ததால் கணவனின் ஆச்சிஜன் சப்போர்ட் - ஐ அவர்கள் துண்டித்து மூவரையும் ஆம்புலன்சில் இருந்து வெளியே தள்ளி விட்டுள்ளனர். ஆக்சிஜன் சப்போர்ட் இல்லாமல் பெண்ணின் கணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தற்போது அந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ள நிலையில் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்நிலையில் தலைமறைவாக இருந்த உதவியாளர் ரிஷஇப் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஆம்புலன்ஸ் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
- ஓநாய்கள் தாக்குதலில் கடந்த 2 மாதங்களில் 8 குழந்தைகள் உள்பட 9 பேர் பலியாகினர்.
- துப்பாக்கி சுடுதலில் நிபுணத்துவம் பெற்ற 9 குழுக்கள் வனத்துறை சார்பில் களம் இறக்கப்பட்டுள்ளன.
லக்னோ:
உத்தர பிரதேசம் மாநிலம் பக்ராயிச் மாவட்டம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள கிராமங்களில் ஓநாய்கள் புகுந்து மனித வேட்டையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. ஓநாய்கள் தாக்குதலில் கடந்த 2 மாதங்களில் 8 குழந்தைகள் உள்பட 9 பேர் பலியாகினர். 36 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஓநாய்களை கூண்டு வைத்து பிடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஓநாய்களை சுட்டுபிடிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
துப்பாக்கி சுடுதலில் நிபுணத்துவம் பெற்ற 9 குழுக்கள் வனத்துறை சார்பில் களம் இறக்கப்பட்டுள்ளன. மயக்க மருத்து கொடுத்து ஓநாய்களை சுட்டு பிடிக்க முன்னுரிமை அளிக்கப்படும். அது பயனளிக்காதநிலையில் அவற்றை சுட்டு கொல்ல அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
- அஸ்வினி குமார் என்ற இளைஞருக்கு வாட்சப்பில் வேலைவாய்ப்பு குறித்து ஒரு செய்தி வந்துள்ளது.
- தந்தையின் ஆதார் அட்டை உள்ளிட்ட பல ஆவணங்களையும் யாரென்றே தெரியாத நபருக்கு அவர் அனுப்பியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகரைச் சேர்ந்த வேலையில்லாத இளைஞர் ஒருவர் சுமார் ரூ. 250 கோடி மதிப்புள்ள ஜிஎஸ்டி இ-வே பில்லிங் பரிவர்த்தனைகள் தொடர்பான பெரும் மோசடியில் சிக்கியுள்ளார்.
ஜிஎஸ்டி அதிகாரிகள் அந்த இளைஞரின் வீட்டுக்குச் சென்று அவரது பெயரை பயன்படுத்தி ரூ.250 கோடிக்கு மோசடி நடந்துள்ளதை அவரிடம் தெரிவித்த பின்பு தான் அவருக்கே அந்த விஷயம் தெரிய வந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அஸ்வினி குமார் என்ற இளைஞருக்கு வாட்சப்பில் வேலைவாய்ப்பு குறித்து ஒரு செய்தி வந்துள்ளது. வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தனது வீட்டு மின் கட்டணம், தந்தையின் ஆதார் அட்டை உள்ளிட்ட கேட்கப்பட்ட அனைத்து ஆவணங்களையும் யாரென்றே தெரியாத நபருக்கு அவர் அனுப்பியுள்ளார்.
வேலைக்கு விண்ணப்பிக்க ரூ.1,750 பணத்தையும் அவர் அனுப்பியுள்ளார். ஆனால் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. அவரது தகவல்களை தவறாக பயன்படுத்தி ஒரு வங்கிக் கணக்கை உருவாக்கி ஒரு நிறுவனத்தை தொடங்கி சுமார் ரூ.250 கோடி இ-வே பில்லிங் மோசடி நடந்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்து சட்ட நடவடிக்கை எடுக்க ஜிஎஸ்டி துறை உள்ளூர் அதிகாரிகளுடன் ஒத்துழைத்து வருவதாக எஸ்.பி. ஆதித்யா பன்சால் தெரிவித்துள்ளார்.
- அராஜகம் மற்றும் குண்டர்கள் அட்டூழியம் சமாஜ்வாடி கட்சியின் டி.என்.ஏ.-வில் வேரூன்றியுள்ளது- ஆதித்யநாத்
- அந்த வார்தைக்கு முழு அர்த்தம் என்ன? என்பதை அறிந்திருக்க வேண்டும்- அகிலேஷ் யாதவ்.
உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று பேசும்போது "அராஜகம் மற்றும் குண்டர்கள் அட்டூழியம் சமாஜ்வாடி கட்சியின் டி.என்.ஏ.-வில் வேரூன்றியுள்ளது. இது சமூக கட்டமைப்பு கிழித்தெறிந்து, மக்களுக்கு இடையூறுகளை விளைவிக்கும் அடையாளமாக உருவாக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு அகிலேஷ் யாதவ் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
நீங்கள் குற்றச்சாட்டை கூறுவதற்கு முன், அந்த வார்தைக்கு முழு அர்த்தம் என்ன? என்பதை தெரிந்திருக்க வேண்டும். DNA = Deoxyribonucleic Acid. இது பற்றி உங்களுக்கு தெரிந்தாலும், உங்களால் பேச முடியாது. எம்.பி., எம்.எல்.ஏ.,க்களை கோடிக்கணக்கில் பணம் கொடுத்து சேர்ப்பவர்கள், எவ்வளவு குறைவாக பேசுகிறார்களோ, அவ்வளவு மரியாதையும் அதிகம்.
இவ்வாறு அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
- பக்கத்துக்கு வீட்டுக்காரனை போலீசில் மாட்டிவிட தனது மனநிலை சரியில்லாத 5 வயது மகனை ஆற்றில் தள்ளி தந்தை கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
- தனது மகன் கௌரவை கொன்று அந்த பழியை விவேக் மீது போடுவதே தந்தை சஞ்சீவின் பழிக்குப் பழி திட்டம்
உ.பியில் பக்கத்துக்கு வீட்டுக்காரனை போலீசில் மாட்டிவிட தனது மனநிலை சரியில்லாத 5 வயது மகனை ஆற்றில் தள்ளி தந்தை கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் சாஜகானிபூரில் வசித்து வரும் சஞ்சீவ் என்ற நபர் தனது மகன் கௌரவை பக்கத்து வீட்டில் வசித்து வருபவர்களாக விவேக் உட்பட 8 பேர் சேர்ந்து கடத்தி விட்டதாகப் புகார் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து விசாரித்த போலீஸ் புகார் அளித்த தந்தை சஞ்சீவ்தான் தனது மகனைக் கொன்றதாகக் கண்டுபிடித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சஞ்சீவின் மகன் கௌரவுடன் விவேக்கின் மகன் ஆயுஷ் சண்டை பிடித்ததாக தெரிகிறது. இதுகுறித்து ஆயுஷின் அம்மாவிடம் கூற சென்ற கௌரவின் தாயை [சஞ்சீவின் மனைவியை] விவேக்கின் மனைவி அடித்துள்ளார். தனது மனைவிக்கு நேர்ந்த அவமானத்தால் கோபத்திலிருந்த சஞ்சீவ் விவேக்கை பழிவாங்க திட்டம் தீட்டியுள்ளார்.
தனது மகன் கௌரவை கொன்று அந்த பழியை விவேக் மீது போடுவதே தந்தை சஞ்சீவின் பழிக்குப் பழி திட்டம். அதனபடி மன நிலை சரியில்லாத தனது 5 வயது மகன் கௌரவை மருந்து வாங்க அழைத்துச்செல்வதாக ஸ்கூட்டரில் ஆற்றோரம் அழைத்துச் சென்று அங்கிருந்து மகனை ஆற்றுக்குள் தூக்கி வீசியுள்ளார் தந்தை சஞ்சீவ்.

கொலையை செய்து முடித்தபின் வரும் வழியில் விவேக் உள்ளிட்ட தனது பக்கத்துக்கு வீட்டாரின் பெயர்களை கத்தியபடியே வந்துள்ளார். சஞ்சீவின் நடவடிக்கைகளைப் பார்த்து சந்தேகம் அடைந்த போலீஸ் அவரிடம் அழுத்தம் கொடுத்து விசாரித்ததில் தனது குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
- பெண்கள் ஆணைய துணைத் தலைவர் பதவி ஒரு வருட கால பதவியாகும்.
- இல்லையெனில் உ.பி. அரசு முடிவு எடுக்கும் வரை பதவியில் நீடிக்க முடியும்.
உத்தர பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. உ.பி.யில் பாஜக-வுக்கும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சிக்கும் இடையில்தான் போட்டி நிலவி வருகிறது. இரு கட்சி தலைவர்களும் பரஸ்பர கருத்து விமர்சனங்களவை முன்வைப்பது உண்டு. இதனால் அரசியலில் எலியும் பூனையுமாக திகழ்ந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தின் மாநில பெண்கள் ஆணையத்தின் துணைத் தலைவராக அகிலேஷ் யாதவின் சகோதரர் மனைவி அபர்னா யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநில கவர்னர் ஆனந்திபென் பட்டேல், பபிதா சவுகானை தலைவராகவும், அபர்னா யாதவ் மற்றும் சாரு சவுத்ரி ஆகியோரை துணைத் தலைவராகவும் நியமித்து உத்தரவிட்டுள்ளார். இவர்களுடைய பதவிக்காலம் ஒரு வருடம் அல்லது உ.பி. அரசு முடிவு எடுக்கும்வரை ஆகும்.
சமாஜ்வாடி கட்சியை நிறுவிய மறைந்த முலாயம் சிங் யாதவின் இளைய மருமகள் அபர்னா யாதவ் ஆவார். இவர் பிரதீக் யாதவ் மனவைி ஆவார். அகிலேஷ் யாதவின் வளர்ப்பு சசோதரர் பிரதீக் யாதவ் ஆவார்.
அபர்னா யாதவ் 2017-ம் ஆண்டு நடைபெற்ற உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாடி கட்சி சார்பில் லக்கோன் கான்ட் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின்னர் 2022-ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார்.
- மொராதாபாத்தில் பட்டப்பகலில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
- அவரது நடத்தையில் அப்பகுதி மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் தனது காதலியை சந்திக்க இளைஞர் ஒருவர் பர்தா அணிந்து வந்த வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மொராதாபாத்தில் பட்டப்பகலில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த நபர் சந்த் புரா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் தனது காதலியை சந்திக்க பர்தா அணிந்து வந்துள்ளார். அவரது நடத்தையில் அப்பகுதி மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஒரு சிலர் அவரை திருடன் என்றும் மற்றவர்கள் அவரை குழந்தை கடத்தல்காரராக இருக்கலாம் என்றும் நினைத்து, பர்தாவை கழற்ற சொல்கின்றனர்.
பர்தா அணிந்து பெண் வேடத்தில் ஆண் ஒருவர் இருப்பதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் அவரிடம் இருந்து துப்பாக்கி சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த கும்பல் அந்த இளைஞரிடம் ஆதார் அட்டையை காட்டுமாறு கூறி தாக்குகின்றனர். போலீசார் வரும் வரை சிறைபிடித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரிடம் இளைஞரை ஒப்படைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அனிகா ரஸ்தோகி, ராம் மனோகர் லோஹியா தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார்.
- அனிகா மயக்க நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள விடுதி அறையில் அனிகா ரஸ்தோகி (19) மாணவி கடந்த சனிக்கிழமை இரவு இறந்து கிடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
அனிகா ரஸ்தோகி, ராம் மனோகர் லோஹியா தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். அனிகா தனது அறையின் தரையில் கிடந்தார். மேலும் மயக்க நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
சனிக்கிழமை இரவு 10 மணியளவில் மாரடைப்பு காரணமாக அனிகா உயிரிழந்ததாக ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி.ஏ., எல்.எல்.பி. 3-ம் ஆண்டு மாணவியான அனிகா ரஸ்தோகி, மகாராஷ்டிர கேடரின் 1998 பேட்ச் இந்திய போலீஸ் சர்வீஸ் (IPS) அதிகாரியான சஞ்சய் ரஸ்தோகியின் மகள் ஆவார்.
சஞ்சய் ரஸ்தோகி தற்போது தேசிய புலனாய்வு அமைப்பில் (என்ஐஏ) இன்ஸ்பெக்டர் ஜெனரலாக பணியாற்றி வருகிறார்.
அனிகாவின் உடலில் உடைகள் அப்படியே இருந்ததாகவும், உடலில் காயங்கள் எதுவும் தெரியவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர். விடுதி அறை உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்ததாகவும், சந்தேகப்படும்படியான எதுவும் உள்ளே காணப்படவில்லை என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சிறுமி 5 மாதம் கர்ப்பமாக உள்ளது தாய்க்கு தெரியவந்த நிலையில் இந்த கொடூரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
- சிறுமியின் வாயில் துணியை அடைத்து வன்கொடுமை செய்த பங்கஜ், இதை வெளியே சொன்னால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியுள்ளான்.
உத்தரப் பிரதேசத்தில் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து அரசுப் பள்ளி பியூன் கர்ப்பமாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் பரூகாபாத் Farrukhabad பகுதியைச் சேர்ந்த சிறுமி 5 மாதம் கர்ப்பமாக உள்ளது தாய்க்கு தெரியவந்த நிலையில் இந்த கொடூரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சிறுமி வசித்து வந்த கிராமத்தில் சில மாதங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் இயற்கை உபாதைக்காக ஒதுங்கியபோது, உள்ளூர் கவுன்சில் அரசுப் பள்ளியில் பியூனாக வேலை பார்த்து வந்த பங்கஜ், அமித் என்ற மற்றொரு நபருடன் இணைந்து சிறுமியைக் கடத்தி ஆளில்லாத வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
சிறுமியின் வாயில் துணியை அடைத்து வன்கொடுமை செய்த பங்கஜ், இதை வெளியே சொன்னால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியுள்ளான். இந்த விவகாரம் தற்போது தெரியவந்த நிலையில் சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து பங்கஜ் மற்றும் அமித் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- உறவினர்கள் நண்பர்கள் முன்னிலையில் என்னை அவமானப்படுத்தியும் வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து உடைக்கவும் செய்கிறா
- சேர்ந்து இருப்பது என்பது திருமண உறவில் முக்கியமான ஒன்று, மனைவி அதை மறுப்பது, மணவாழ்க்கைக்கு எதிரானது
மனைவி தன்னை தனி அறையில் தூங்க சொன்னதால் மன அழுத்தத்திலிருந்த கணவனுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் விவாகரத்து வழங்கியுள்ளது. தனது இரண்டாவது மனைவியிடம் இருந்து தனக்கு விவாகரத்து வழங்குமாறு லக்னோ குடும்ப நீதிமன்றத்தை நாடினார். அங்கு தீர்வு கிடைக்காத நிலையில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
அவரது மனுவில், திருமணமான 4- 5 மாதங்களுக்கு தன்னுடன் இணக்கமாக இருந்த மனைவி அதன்பின் தன்னை மிரட்டி மன ரீதியாக துன்புறுத்துகிறார், உறவினர்கள் நண்பர்கள் முன்னிலையில் என்னை அவமானப்படுத்தியும் வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து உடைக்கவும் செய்கிறார், எல்லாவற்றிற்கும் மேலாக தன்னை தனியறையில் தூங்க வற்புறுத்துகிறார் என்று கணவர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் தனது அறைக்குள் நுழைந்தால் தான் தற்கொலை செய்துகொள்வேன் என்றும் அதற்கு எனது குடும்பம் தான் காரணம் என்று எழுதி வைப்பேன் என்றும் மனைவி மிரட்டுவதாவும் அவர் அந்த மனுவில் தெரிவித்தார்.

இந்த மனுவை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சுபாஷ் வித்யார்த்தி, சேர்ந்து இருப்பது என்பது திருமண உறவில் முக்கியமான ஒன்று என்றும், மனைவி அதை மறுப்பது, மணவாழ்க்கைக்கு எதிரானது என்றும் இதனால் கணவன் உடல் ரீதியாகவும், மன ரீதியாவும் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.






