search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "school fees"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பதிவு வைரலாகி 7.5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 7,800 லைக்குகளையும் பெற்ற நிலையில் பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டனர்.
    • கல்வி மிகவும் விலை உயர்ந்துவிட்டது என ஒரு பயனர் குறிப்பிட்டார்.

    பிளே ஸ்கூல் படிக்கும் தனது மகனுக்கு கட்டணமாக ரூ.4.3 லட்சம் செலுத்தியதாக பட்டய கணக்காளர் ஒருவர் வலைதளத்தில் பதிவிட்ட பதிவு எக்ஸ் தளத்தில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

    டெல்லியை சேர்ந்த ஆகாஷ் குமார் என்பவர் பட்டள கணக்காளராகவும், முழு நேர பங்கு சந்தை வர்த்தகராகவும் உள்ளார். இவர் எக்ஸ் தளத்தில் தனது மகனின் பள்ளி கட்டணத்தின் ஸ்கிரீன் ஷாட்டை பகிர்ந்து, எனது ஒட்டுமொத்த கல்வி செலவை விட எனது மகனின் 'பிளே ஸ்கூல்' கட்டணம் அதிகமாக உள்ளது என பதிவிட்டிருந்தார். அதில், ஆண்டு கல்வி கட்டணமாக ரூ.10 ஆயிரம், வருடாந்திர கட்டணமாக ரூ.25 ஆயிரம், நான்கு பருவங்களுக்கும் சேர்த்து ரூ.98,750 என தனித்தனியாக குறிப்பிட்டு மொத்தமாக ரூ.4.30 லட்சம் என கட்டணம் உள்ளது.

    அவரின் இந்த பதிவு வைரலாகி 7.5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 7,800 லைக்குகளையும் பெற்ற நிலையில் பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டனர். கல்வி மிகவும் விலை உயர்ந்துவிட்டது என ஒரு பயனர் குறிப்பிட்டார். இதே போல பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட ஆகாஷ்குமாரின் பதிவு இணையத்தில் பள்ளி கட்டணம் தொடர்பாக விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.



    • அடுத்து பள்ளி ரெஸ்ட்ரூம் அல்லது மூச்சு விடுவதற்கு பணம் வசூலிக்குமா?
    • பணம் சம்பாதிப்பதற்காகவே பள்ளி பைத்தியமாகிவிட்டது என விமர்சனம்

    சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள தனியார் தொடக்க பள்ளி ஒன்று, மாணவர்கள் மதிய உணவிற்குப் பிறகு தூங்குவதற்கு கட்டணம் வசூலிக்க முடிவு செய்தது. இதுகுறித்து பெற்றோர்களுக்கு பள்ளி சார்பில் தகவல் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது.

    அதில் குழந்தைகள் பள்ளி மேஜையில் (டெஸ்க்) தலை வைத்து தூங்குவதற்கு இந்திய பண மதிப்பல் 2,275 ரூபாய் செலுத்த வேண்டும். அதேவேளையில் வகுப்பறை தரையில் தூங்குதவற்கு 4,049 ரூபாய் செலுத்த வேண்டும். மிகவும் வசதியாக பெட்டில் (மெத்தை) தூங்க வேண்டுமென்றால் 7,856 ரூபாய் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.

    இந்த தகவலை அறிந்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், இதுகுறித்த செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி, விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பள்ளியில் தூங்க விருப்பம் இல்லாத மாணவர்கள் வீட்டிற்கு செல்லலாம் என அறிவித்துள்ள பள்ளி நிர்வாகம், மாணவர்கள் தூங்கும்போது, ஆசிரியர்கள் அவர்களை பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதால் பணம் வசூலிப்பதை நியாயப்படுத்தியுள்ளது.

    "இது நகைச்சுவையா? பணம் சம்பாதிப்பதற்காகவே பள்ளி பைத்தியமாகிவிட்டது" என ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    இன்னொருவர், "மாணவர்கள் தங்கள் மேஜைகளில் தூங்குவதற்கு ஏன் பணம் செலுத்த வேண்டும் என்பதை நான் மட்டும் புரிந்து கொள்ளவில்லையா?" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    மற்றொருவர், "இது கேலிக்கூத்தானது. அடுத்து பள்ளி ரெஸ்ட்ரூம் அல்லது மூச்சு விடுவதற்கு பணம் வசூலிக்குமா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

    பஞ்சாப் மாநிலத்தில் கல்விக் கட்டணம் கட்டாத மாணவனின் பெற்றோருக்கு நினைவூட்டும் வகையில், மாணவனின் கையில் முத்திரை குத்தி அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    லூதியானா:

    பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள எஸ்டிஎன் எனும் தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வரும் மாணவன் ஹர்ஸ்தீப் சிங். இவனது கல்விக் கட்டணம் செலுத்தப்படாததால், பள்ளி நிர்வாகம் தொடர்ந்து பெற்றோருக்கு நினைவுபடுத்தி உள்ளது. ஆனால் பெற்றோரால் உரிய நேரத்தில் கல்விக் கட்டணத்தை செலுத்த முடியவில்லை.

    இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஹர்ஸ்தீப் சிங், தேர்வு எழுத சென்றபோதும் கல்விக் கட்டணத்தை கட்டும்படி கூறியுள்ளார். அத்துடன், பெற்றோருக்கு மீண்டும் நினைவுபடுத்தும் வகையில், மாணவனின் கையில் ரப்பர் ஸ்டாம்ப் மூலம் முத்திரை குத்தி உள்ளார். அதில், தயவு செய்து கல்விக் கட்டணத்தை செலுத்துங்கள் என எழுதப்பட்டிருந்தது. ஆசிரியரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

    பலமுறை கூறியும் கல்விக் கட்டணத்தை செலுத்தாததால் பெற்றோருக்கு மீண்டும் நினைவு படுத்தும் வகையில் இவ்வாறு செய்ததாகவும் அந்த ஆசிரியர் கூறியுள்ளார்.


    பள்ளி நிர்வாகம் மீது மாணவனின் தந்தை கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். பரீட்சை ஹாலில் எதுவும் கொண்டு செல்லாத தன் மகன் கையில் ரப்பர் ஸ்டாம்ப் அடித்தது சரியல்ல என்று அவர் கூறினார். ஆனால், மாணவன் தந்தையை பள்ளி ஆசிரியர்கள் குறை கூறினர்.

    இதுபற்றி பள்ளி முதல்வர் கூறுகையில், “கல்வி கட்டணத்தை செலுத்தும்படி பலமுறை மாணவனின் டைரியில் ஆசிரியர் எழுதி அனுப்பி உள்ளார். ஆனால் மாணவன் அதை பெற்றோரிடம் காட்டவில்லை. இப்போது மாணவன் கேட்டுக்கொண்டதால்தான் ரப்பர் ஸ்டாம்ப் அடித்து அனுப்பியிருக்கிறார். வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் காட்டிவிட்டு, கையை கழுவி ரப்பர் ஸ்டாம்பை அழித்துவிடும்படி கூறி உள்ளார். ஆனால், அவனது பெற்றோர் பிரச்சனையை திசைதிருப்பிவிட்டனர்” என்றார்.

    இது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். பஞ்சாப் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், பள்ளி முதல்வரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உள்ளது.
    மத்திய டெல்லியில் கல்வி கட்டணம் செலுத்தாததால் 16 யூ.கே.ஜி. மாணவர்கள் பாதாள அறையில் அடைத்து வைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    புதுடெல்லி:

    மத்திய டெல்லியில் கவுகாசி என்ற இடத்தில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது.

    இங்கு யூ.கே.ஜி. படிக்கும் மாணவிகள் பலர் ஜூன் மாதத்துக்கான கல்வி கட்டணம் செலுத்தவில்லை. இதனால் கோபம் அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் கட்டணம் செலுத்தாத 16 மாணவிகளை மற்ற மாணவிகளிடம் இருந்து தனியாக பிரித்தனர்.

    பின்னர் அவர்களை பள்ளியில் உள்ள பாதாள அறையில் அடைத்து வைத்தனர். சுமார் 5 மணி நேரம் அந்த அறையிலேயே அவர்கள் அடைத்து வைக்கப்பட்டனர். அவர்களுக்கு சாப்பாடு, தண்ணீர் எதுவும் வழங்கப்படவில்லை.

    பாதாள அறையில் அடைத்து வைத்திருந்ததால் பீதியில் அந்த மாணவிகள் அழுதபடி இருந்தனர். மாலையில் குழந்தைகளை அழைத்து செல்வதற்காக அவர்களுடைய பெற்றோர்கள் பள்ளிக்கு வந்தனர்.

    அப்போது வழக்கமாக இருக்கும் இடத்தில் தங்களது குழந்தைகளை காணவில்லை. இதுபற்றி பள்ளி நிர்வாகத்திடம் விசாரித்த போது, கல்வி கட்டணம் செலுத்தாததால் பாதாள அறையில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    உடனே பெற்றோர்கள் அங்கு ஓடி சென்றார்கள். குழந்தைகள் பரிதவிப்பான நிலையில் இருந்ததை பார்த்ததும் கண் கலங்கினார்கள். பள்ளி நிர்வாகத்தினரிடம் சென்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    குழந்தைகள் பாதாள அறையில் அடைக்கப்பட்டு இருந்ததை சிலர் செல்போனில் படம் பிடித்து டி.வி.க்களுக்கு அனுப்பினார்கள். உடனே அது உள்ளூர் டி.வி.க்களில் ஒளிபரப்பப்பட்டது.

    அந்த காட்சிகளை பார்த்த பலரும் ஆத்திரத்தில் பள்ளிக்கு திரண்டு வந்தனர். இதனால் பள்ளியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. போலீசாரும் அங்கு விரைந்து வந்தார்கள்.

    பள்ளி நிர்வாகத்தினர் மீது சட்ட விரோதமாக அடைத்து வைத்தல், குழந்தைகளை கொடுமைப்படுத்துதல் ஆகிய சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    அடைத்து வைக்கப்பட்ட மாணவிகளில் சிலர் ஏற்கனவே கல்வி கட்டணத்தை செலுத்தி இருந்தார்கள். ஆனால், தவறுதலாக அதிலும் சில குழந்தைகளை பாதாள அறையில் அடைத்து வைத்திருந்தனர்.
    ×