search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "students locks up basement"

    மத்திய டெல்லியில் கல்வி கட்டணம் செலுத்தாததால் 16 யூ.கே.ஜி. மாணவர்கள் பாதாள அறையில் அடைத்து வைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    புதுடெல்லி:

    மத்திய டெல்லியில் கவுகாசி என்ற இடத்தில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது.

    இங்கு யூ.கே.ஜி. படிக்கும் மாணவிகள் பலர் ஜூன் மாதத்துக்கான கல்வி கட்டணம் செலுத்தவில்லை. இதனால் கோபம் அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் கட்டணம் செலுத்தாத 16 மாணவிகளை மற்ற மாணவிகளிடம் இருந்து தனியாக பிரித்தனர்.

    பின்னர் அவர்களை பள்ளியில் உள்ள பாதாள அறையில் அடைத்து வைத்தனர். சுமார் 5 மணி நேரம் அந்த அறையிலேயே அவர்கள் அடைத்து வைக்கப்பட்டனர். அவர்களுக்கு சாப்பாடு, தண்ணீர் எதுவும் வழங்கப்படவில்லை.

    பாதாள அறையில் அடைத்து வைத்திருந்ததால் பீதியில் அந்த மாணவிகள் அழுதபடி இருந்தனர். மாலையில் குழந்தைகளை அழைத்து செல்வதற்காக அவர்களுடைய பெற்றோர்கள் பள்ளிக்கு வந்தனர்.

    அப்போது வழக்கமாக இருக்கும் இடத்தில் தங்களது குழந்தைகளை காணவில்லை. இதுபற்றி பள்ளி நிர்வாகத்திடம் விசாரித்த போது, கல்வி கட்டணம் செலுத்தாததால் பாதாள அறையில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    உடனே பெற்றோர்கள் அங்கு ஓடி சென்றார்கள். குழந்தைகள் பரிதவிப்பான நிலையில் இருந்ததை பார்த்ததும் கண் கலங்கினார்கள். பள்ளி நிர்வாகத்தினரிடம் சென்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    குழந்தைகள் பாதாள அறையில் அடைக்கப்பட்டு இருந்ததை சிலர் செல்போனில் படம் பிடித்து டி.வி.க்களுக்கு அனுப்பினார்கள். உடனே அது உள்ளூர் டி.வி.க்களில் ஒளிபரப்பப்பட்டது.

    அந்த காட்சிகளை பார்த்த பலரும் ஆத்திரத்தில் பள்ளிக்கு திரண்டு வந்தனர். இதனால் பள்ளியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. போலீசாரும் அங்கு விரைந்து வந்தார்கள்.

    பள்ளி நிர்வாகத்தினர் மீது சட்ட விரோதமாக அடைத்து வைத்தல், குழந்தைகளை கொடுமைப்படுத்துதல் ஆகிய சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    அடைத்து வைக்கப்பட்ட மாணவிகளில் சிலர் ஏற்கனவே கல்வி கட்டணத்தை செலுத்தி இருந்தார்கள். ஆனால், தவறுதலாக அதிலும் சில குழந்தைகளை பாதாள அறையில் அடைத்து வைத்திருந்தனர்.
    ×