என் மலர்
உத்தரப் பிரதேசம்
- பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
- இடி-மின்னலுடன் கனமழை பெய்யும் என்றும், இன்று முழுவதும் பலத்த மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
மாநிலங்களில் பெய்த பலத்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மழை காரணமாக சுரங்கப் பாதைகள் மூடப்பட்டன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
மேலும், காதலர்களின் நினைவுச்சின்னமாக கருதப்படும் தாஜ்மஹாலில் உள்ள ஷாஜகானின் கல்லறை நீரால் சூழப்பட்டுள்ளது. ஆக்ராவில் கடந்த 48 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த தொடர் மழையால் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
இந்த நிலையில் டெல்லிக்கு இன்று ஆரஞ்ச் எச்சரிக்கையை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. இடி-மின்னலுடன் கனமழை பெய்யும் என்றும், இன்று முழுவதும் பலத்த மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களிலும் மழை பெய்து வருகிறது. உத்தரபிரதேசத்தின் மொராதா பாத்தில் கனமழை, காற்றின் காரணமாக கரும்பு மற்றும் நெல் பயிர்கள் அழிந்தன. உத்தரகாண்ட் மாநிலம் தனக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் கனமழை காரணமாக மலையில் இருந்து கற்கள், மணல் விழுந்தது. இதனால் அந்த நெடுஞ்சாலை மூடப்பட்டது.
- பொதுமக்கள் சிலர் கடை உரிமையாளரையும், அங்கு வேலை பார்ப்பவர்களையும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
- கடையில் இருந்த சுமார் ஒரு லிட்டர் சிறுநீரையும் பறிமுதல் செய்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் காசியாத் இந்திரபுரி பகுதியில் வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட ஜூஸில் சிறுநீர் கலந்து வழங்கப்பட்டது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த வியாழக்கிழமை அன்று வாடிக்கையாளர் ஒருவருக்கு ஜூஸ் வழங்கப்பட்டுள்ளது. அதன் சுவை வேறுவிதமாக இருந்ததால் வாடிக்கையாளர் விசாரித்துள்ளார். அப்போதுதான், ஜூஸில் சிறுநீர் கலந்து கொடுக்கப்பட்டது தெரியவந்தது. இதனை அறிந்த அங்கிருந்த பொதுமக்கள் சிலர் கடை உரிமையாளரையும், அங்கு வேலை பார்ப்பவர்களையும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கடை உரிமையாளர் மற்றும் ஊழியர் இருவரையும் கைது செய்தனர். மேலும் கடையில் இருந்த சுமார் ஒரு லிட்டர் சிறுநீரையும் பறிமுதல் செய்தனர்.
UP:
In Ghaziabad, urine was being mixed in juice and given to customers. Police arrested the
shop owners, About one liter of urine was recovered from the shop. The public beat up
href="https://t.co/2MYxLqAWYY">pic.twitter.com/2MYxLqAWYY
— Ghar Ke Kalesh(@gharkekalesh) September 14, 2024
- உ.பி.யின் ரேபரேலி தொகுதியில் மே 13-ம் தேதி ராகுல் காந்தி பிரசாரம் செய்தார்.
- அங்கு பிரிஜேந்திர நகரில் உள்ள ஒரு சலூனுக்கு சென்று அவர் முடிவெட்டிக் கொண்டார்.
லக்னோ:
பாராளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராகுல் காந்தி வெற்றி பெற்றார். இந்தத் தொகுதியில் கடந்த மே 13-ம் தேதி பிரசாரம் செய்த ராகுல் காந்தி, அங்குள்ள பிரிஜேந்திர நகரில் உள்ள ஒரு சலூனுக்கு சென்று முடிவெட்டிக் கொண்டார்.
அப்போது தனக்கு முடிவெட்டிய அந்தக் கடை உரிமையாளர் மிதுனிடம் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த வீடியோ பதிவு கவனம் பெற்றது.
இந்நிலையில், தனக்கு முடி வெட்டிய மிதுனுக்கு 2 நாற்காலிகள், ஒரு ஷாம்பூ மேஜை, இன்வெர்ட்டர் போன்றவற்றை ராகுல் காந்தி பரிசாக அனுப்பி வைத்துள்ளார்.
ராகுல் காந்திக்கு முடி வெட்டி 3 மாதத்துக்குப் பிறகு இந்தப் பரிசை அவர் அனுப்பி வைத்திருப்பது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.
இதுதொடர்பாக, மிதுன் கூறுகையில், மூன்று மாதத்துக்கு பிறகு பரிசு அனுப்பி வைத்துள்ள ராகுல் காந்திக்கு நன்றி என தெரிவித்தார்.
- ஹெலிகாப்டர் பார்ட் பார்ட்டாக டிரக்கில் திருடிச் செல்லப்பட்டதாக ரவீந்திர் சிங் என்ற பைலட் போலீசில் புகார் அளித்திருந்தார்
- பாஜக அரசு குறிப்பிட்ட சமூகங்களை குறி வைத்து என்கவுண்டர் செய்து வருவதாக குற்றம் சாட்டினார்
உத்தரப் பிரதேசத்தில் ஹெலிகாப்டரே திருடுபோன சம்பவம் அம்மாநில அரசியலில் கவனம் பெற்றுள்ளது. கடந்த மே மாதம் தங்களது SAR ஏவியேஷன் நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் பார்ட் பார்ட்டாக டிரக்கில் திருடிச் செல்லப்பட்டதாக ரவீந்திர் சிங் என்ற பைலட் போலீசில் புகார் அளித்திருந்தார். தன்னை தாக்கிவிட்டு மர்ம நபர்கள் ஹெலிகாப்டரை திருடியதாக ரவீந்தர் தனது புகாரில் தெரிவித்திருந்தார்.
ஹெலிகாப்டரே திருடுபோனதாக புகார் அளிக்கப்பட்டது இணையத்திலும் பேசுபொருளான நிலையில் இந்த விவகாரம் குறித்து உத்தரப் பிரதேசத்தின் பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சித் தலைவரும் மக்களவை எம்.பியுமான அகிலேஷ் யாதவ் பாஜக அரசை விமர்சித்திருந்தார். இந்த விவகாரம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்த அவர், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
'உத்தரப் பிரதேசத்தில் இதுவரை கொலை, திருட்டு, மோசடி,பலாத்காரம் உள்ளிட்டவை மூலம் குற்றவாளிகள் பாஜக அரசின் சட்டம் ஒழுங்கை தான் பார்ட் பார்ட்டாக ஆக பிரித்துக்கொண்டிருந்தனர். ஆனால் தற்போது ஹெலிகாப்டரையும் பார்ட் பார்ட்டாக பிரித்து திருடிச் சென்றுள்ளனர். இது விமான நிலைய பாதுகாப்பை கேள்விக்குறி ஆகியுள்ளது என்று விமர்சித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த உ.பி போலீஸ், திருடுபோன ஹெலிகாப்டர், விமான நிலையத்தில் வைத்து திருடு போகவில்லை எனவும் SAR ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து மற்றொரு நிறுவனம் அந்த ஹெலிகாப்டரை வாங்கி டிரக்கில் கொண்டு செல்லும்போது திருடு போனதாக புகார் வந்துள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
முன்னதாக உ.பியில் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய நபர் ஒருவர் சமீபத்தில் போலீஸ் என்கவுன்டரில் கொலை செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்த அகிலேஷ் யாதவ், பாஜக அரசு குறிப்பிட்ட சமூகங்களை குறி வைத்து என்கவுண்டர் செய்து வருவதாக குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த பெண் குறித்து போலீசார் அப்பகுதி பொதுமக்களிடம் விசாரித்து வருகிறார்கள்.
- குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள குஜைனி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தலையில்லாத பெண்ணின் உடல் நிர்வாண நிலையில் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பெண்ணின் உடலை கைப்பற்றினர்.
அப்பெண்ணை கற்பழித்து தலையை துண்டித்து கொன்றுவிட்டு நிர்வாண நிலையில் உடலை சாலையில் வீசி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். கொலை செய்யப்பட்ட அந்த பெண் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் நெடுஞ்சாலையின் மறுபுறத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில், உடல் கிடந்த இடம் அருகே ஒரு பெண் நடந்து செல்வது பதிவாகி இருந்தது. அவர் சாம்பல் நிற கால்சட்டை அணிந்திருந்தார்.
அதேவேளையில் பெண் உடல் அருகே சாம்பல் நிற ஆடையின் துண்டுகள் இருந்தன. இதுகுறித்து போலீசார் கூறும்போது, உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லை. ஆனால் சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ள கேமராவில் பெண் ஒருவர் தனியாக நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
அந்த பெண் அணிந்திருந்த உடைகள், நெடுஞ்சாலையில் பெண் உடல் அருகே கைப்பற்றப்பட்ட துணி மற்றும் செருப்புகளுடன் ஒத்துப்போகின்றன என்றனர். கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த பெண் குறித்து போலீசார் அப்பகுதி பொதுமக்களிடம் விசாரித்து வருகிறார்கள். குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து. சமாஜ்வாடி கட்சி தலைவரும், எம்.பியுமான அகிலேஷ் யாதவ், இந்த சம்பவத்தில் உடனடியாக, முன்மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
- சூதாட்டத்திற்கு அடிமையான கணவர் தனது மனைவியை அடமானம் வைத்து சூதாடியுள்ளார்.
- தனது மனைவியை அவரின் நண்பர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்த அவரது கணவர் அனுமதித்துள்ளார்.
மகாபாரத புராணத்தில் பாண்டவர்களின் மூத்தவரான தருமன் சூதாட்டத்தில் தனது மனைவி திரவுபதியை அடமானம் வைத்து தோல்வியடைவார். பின்னர் துச்சாதனன் திரவுபதியின் சேலையை உருவ கிருஷ்ணர் சேலை கொடுப்பார்.
இந்த புராண கதை தற்போது உத்தரபிரதேசத்தில் நிஜ கதையாக நடந்துள்ளது. ராம்பூர் நகரில் சூதாட்டத்திற்கு அடிமையான கணவர் தனது மனைவியை அடமானம் வைத்து சூதாடிய கொடூர நிகழ்வு நடைபெற்றுள்ளது.
சூதாட்டத்தில் தோல்வி அடைந்ததால் தனது மனைவியை அவரின் நண்பர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்த அவரது கணவர் அனுமதித்துள்ளார்.
இந்த கொடுமையை தடுத்த போராடிய மனைவியின் விரலை உடைத்து கணவன் சித்ரவதை செய்துள்ளார்.
இது தொடர்பாக மனைவி புகார் கொடுத்ததை அடுத்து வழக்குப் பதிந்துள்ள போலீசார் தப்பியோடிய கணவரையும் அவரது நண்பர்களையும் தேடி வருகின்றனர்.
மதுப்பழக்கம் மற்றும் சூதாட்டத்திற்கு அடிமையான கணவர் இதுவரை 7 ஏக்கர் நிலம், நகைகள் என அனைத்தையும் சூதாட்டத்தில் இழந்துள்ளதாக மனைவி வேதனை தெரிவித்துள்ளார்.
- உத்தரப் பிரதேசத்தின் லக்ஹிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள உமாரியா கிராமத்தின் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.
- தண்டவாளத்தில் நின்றுகொண்டு சோசியல் மீடியாவில் பதிவிடுவதற்காக ரீலிஸ் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர்.
உத்தரப் பிரதேசத்தில் ரயில்வே தண்டவாளத்தில் ரீல்ஸ் வீடியோ எடுத்துக்கொண்டிருந்த கணவன் மனைவி மற்றும் அவர்களது 3 வயது மகன் ரெயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் லக்ஹிம்பூர் கேரி [Lakhimpur Kheri] மாவட்டத்தில் உள்ள உமாரியா[Umariya] கிராமத்தின் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.
அருகே உள்ள சீதாபூர் மாவட்டத்தின் லஹர்பூர் பகுதியைச் சேர்ந்த முகமது அகமது (26 வயது), அவரது மனைவி நஜ்னீன் (24 வயது) இன்று காலை 11 மணி அளவில் அவர்களது 3 வயது மகன் அப்துல்லாவுடன் உமாரியா கிராமத்தின் அருகே உள்ள ரெயில் தண்டவாளத்தில் நின்றுகொண்டு சோசியல் மீடியாவில் பதிவிடுவதற்காக ரீலிஸ் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர்.
அப்போது தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த ரெயில் அவர்கள் மீது மோதியதால் சம்பவ இடத்திலேயே மூவரும் உயிரிழந்தனர். அவர்களது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறனர்.
- 2017 ஆம் ஆண்டு முதல் இந்த மைதானத்தில் பல சர்வதேச போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடியுள்ளது.
- நொய்டா மைதானத்தில் மழைநீரை அகற்ற நவீன வசதிகள் இல்லை.
நேற்று நொய்டா கிரிக்கெட் மைதானத்தில் நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நடைபெறவிருந்தது. ஆனால் மழையால் முதல் நாள் ஆட்டம், ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், மைதானத்தில் தேங்கியிருந்த மழைநீரால் 2-ம் நாள் ஆட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இன்று ஈரமாக இருந்த மைதானத்தை உலர வைக்க பணியாளர்கள் மின்விசிறியை பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நொய்டா மைதானத்தில் மழைநீரை அகற்ற நவீன வசதிகள் இல்லை, பணியாளர்களுக்கு போதிய பயிற்சியில்லை என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இந்த மைதானத்தில் பெண்களுக்கு கழிவறை கூட இல்லை என போட்டியை காணச் சென்றவர்களும் புகார் கூறியுள்ளனர்.
2017 ஆம் ஆண்டு முதல் இந்த மைதானத்தில் பல சர்வதேச போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- குழந்தை திருடன் எனக் கூறி அவ்னிஷ் குமார் என்பவரை கிராம மக்கள் துரத்தியுள்ளனர்.
- அவ்னிஷ் குமார் 100 அடி உயரத்தில் இருந்து குதித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில் தன்னை துரத்திய கிராம மக்களின் அடியில் இருந்து தப்பிக்க பாலத்தில் ஏறிய அவ்னிஷ் குமார்(31) என்பவர் 100 அடி உயரத்தில் இருந்து குதித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
குழந்தை திருடன் எனக் கூறி கிராம மக்கள் அவரை துரத்தியதால், பாலத்தில் ஏறி சுமார் 8 மணி நேரமாக அங்கும் இங்குமாக ஓடி போக்கு காட்டி வந்துள்ளார். அவரை மீட்பதற்காக போலீசார் பாலத்தில் ஏறியதும் அங்கிருந்து குதித்துள்ளார்.
உடனே அவரை போலீசார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
- லக்னோ கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்வு.
- உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள டிரான்ஸ்போர்ட் நகர் என்ற பகுதியில் குடோனாக பயன்பட்டு வந்த 3 மாடி கட்டிடம் ஒன்று நேற்று [சனிக்கிழமை] மாலை 5 மணியளவில் இடிந்துள்ளது. கட்டிடம் இடிந்து விழுந்ததில் அதன் அருகே நிறுத்தப்பட்டிருந்த லாரியும் நொறுங்கியது.
இந்த விபத்தில் நேற்று 5 பேர் உயிரிழந்த நிலையில் இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் 28 பேர் காயமடைந்துள்ளனர்.
மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், லக்னோ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்ததுடன், நிவாரணமும் அறிவித்துள்ளார்.
அதன்படி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- கட்டடம் இடிந்த விபத்தில் இதுவரை 28 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
- மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள டிரான்ஸ்போர்ட் நகர் என்ற பகுதியில் குடோனாக பயன்பட்டு வந்த 3 மாடி கட்டிடம் ஒன்று நேற்று [சனிக்கிழமை] மாலை 5 மணியளவில் இடிந்துள்ளது. கட்டிடம் இடிந்து விழுந்ததில் அதன் அருகே நிறுத்தப்பட்டிருந்த லாரியும் நொறுங்கியது.
இந்த விபத்தில் நேற்று 5 பேர் உயிரிழந்த நிலையில் இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் 28 பேர் காயமடைந்துள்ளனர்.
மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இடித்து விழுந்த இந்த மூன்று மாடி கட்டடம் 4 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட நிலையில் இதில் மோட்டார் வாகன ஒர்க் ஷப்பாகவும், மருத்துகள் சேமிக்கும் குடோனாகவும் இயங்கி வந்துள்ளது. மேலும் சமீபத்தில் இங்கு மேற்கொண்டு கட்டுமானப் பணிகளும் நடந்துள்ளதாகத் தெரிகிறது.
- இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 24 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
- குடோனாக பயன்பட்டு வந்த 3 மாடி கட்டிடம் ஒன்று இன்று [சனிக்கிழமை] மாலை 5 மணியளவில் இடிந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் மூன்று மாடி கட்டடம் இடித்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 24 பேர் படுகாயமடைந்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள டிரான்ஸ்போர்ட் நகர் என்ற பகுதியில் குடோனாக பயன்பட்டு வந்த 3 மாடி கட்டிடம் ஒன்று இன்று [சனிக்கிழமை] மாலை 5 மணியளவில் இடிந்துள்ளது.
இதில் பலர் உள்ளே சிக்கிய நிலையில் தகவல் அறிந்து விரைந்த மீட்புப்படையினர் அவர்களை வெளியில் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 24 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் பலர் உள்ளே சிக்கியுள்ளதால் மீட்புப் பணிகள் தொடர்ந்து வருகிறது. உ.பி முதல்வர் யோகி ஆதித்தனாத், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளவர்களுடன் தொடர்பில் உள்ளனர். இடித்து விழுந்த இந்த மூன்று மாடி கட்டடம் 4 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட நிலையில் இதில் மோட்டார் வாகன ஒர்க் ஷப்பாகவும், மருத்துகள் சேமிக்கும் குடோனாகவும் இயங்கி வந்துள்ளது. மேலும் சமீபத்தில் இங்கு மேற்கொண்டு கட்டுமானப் பணிகளும் நடந்துள்ளதாகத் தெரிகிறது.






