என் மலர்
உத்தரப் பிரதேசம்
- அவரை தேடிக்கொண்டு பெண்ணின் கணவனும் அந்த கிராமத்துக்குள் வந்துள்ளார்.
- பெண்ணின் கட்டை அவிழ்த்து விடுவதற்கு முன் அவரிடம் சிலர் அத்துமீறியதாவும் கூறபடுகிறது.
உத்தரப் பிரதேசத்தில் திருட வந்ததாக கூறி மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணையும் அவரது கணவனையும் மரத்தில் கட்டி வைத்து அடித்து பழுக்க காய்ச்சிய கம்பியால் சூடு போட்ட கொடூரம் நிகழ்ந்துள்ளது. உ.பியில் தியோரியா [Deoria] மாவட்டத்தில் சுரவுலி [Surouli] பகுதியில் உள்ள கிராமத்தில் கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி மன நலம் பாதிக்கபட்ட நடுத்தர வயது பெண் உலவியுள்ளார்.
சுரவுலியில் மற்றொரு பகுதியை சேர்ந்த அந்த பெண் வழிதவறி அங்கு வந்ததாக தெரிகிறது. எனவே அவரை தேடிக்கொண்டு பெண்ணின் கணவனும் அந்த கிராமத்துக்குள் வந்துள்ளார். இவர்கள் இருவரையும் திருட வந்தவர்கள் என சந்தேகித்த கிராம மக்கள் இருவரையும் மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.
மேலும் பழுக்கக் காய்ச்சிய கம்பியால் அந்த பெண்ணின் கால்களில் சூடு வைத்து அதன்பின் அவர்களை அங்கிருந்து விரட்டியுள்ளனர். பெண்ணின் கட்டை அவிழ்த்து விடுவதற்கு முன் அவரிடம் சிலர் அத்துமீறியதாவும் தெரிகிறது. அவர்களை கிராமத்தினர் அடித்து சூடுவைத்து சித்ரவதை செய்யும் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் இதுதொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
- நீதிபதி அபிஷேக் திரிபாதி தன்னை தொடர்ச்சியாக அவரது அறைக்கு அழைத்து திட்டியும் மிரட்டியும் வந்தார்
- ரெயில்வே டிராக்கில் அழுதுகொண்டே அமர்ந்திருந்ததும் அவரை சக போலீசார் சென்று சமாதானப்படுத்தி அங்கிருந்து மீட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் நீதிபதி திட்டியதால் காவல் துணை ஆணையர் [சப் இன்ஸ்பெக்டர்] ரெயில்வே டிராக்கில் அமர்ந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வெளியான வீடியோவில், உ.பி அலிகார் பகுதி காவல் துணை ஆணையர் ரெயில்வே டிராக்கில் அழுதுகொண்டே அமர்ந்திருந்ததும் அவரை சக போலீசார் சென்று சமாதானப்படுத்தி அங்கிருந்து மீட்டதும் பதிவாகியுள்ளது.
மேலும் நீதிபதி அபிஷேக் திரிபாதி தன்னை தொடர்ச்சியாக அவரது அறைக்கு அழைத்து திட்டியும் மிரட்டியும் வந்தார் என்று சக போலீசிடம் அந்த சப் இன்ஸ்பெக்டர் கூறி அழுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
அந்த சப் இன்ஸ்பெக்டரின் பெயர் சச்சின் குமார் என்பதும் சமீபத்தில் பைக் திருட்டு தொடர்பாக அவர் 5 பேரை கைது செய்ததற்கு ஏன் அப்பாவிகளைக் கைது செய்தாய் என கூறி நீதிபதி திட்டியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த சப் இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்ய முடிவெடுத்து ரெயில்வே டிராக்கில் சென்று அமர்ந்துள்ளார்.
- இட்டாவாவில் ஆக்ரா- வாரணாசி வந்தே பாரத் விரைவு ரெயிலுக்கான தொடக்க விழா நடைபெற்றது.
- வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உத்தர பிரதேச மாநிலம் இட்டாவாவில் நடைபெற்ற வந்தே பாரத் விரைவு ரெயிலுக்கான தொடக்க விழாவின் போது பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவர் கடும் நெரிசல் காரணமாக தண்டவாளத்தில் விழுந்த சம்பவம் நடைபெற்று உள்ளது.
இட்டாவாவில் ஆக்ரா- வாரணாசி வந்தே பாரத் விரைவு ரெயிலுக்கான தொடக்க விழா நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட கடும் நெரிசல் காரணமாக பா.ஜ.க. எம்.எல்.ஏ. சரிதா படோரியா தண்டவாளத்தில் விழுந்தார். அப்போது அங்கு கூடியிருந்த பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் விரைவாக செயல்பட்டு படோரியாவை தண்டவாளத்தில் இருந்து மீட்டனர்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Watch
thisEarlier in the evening at around 6:15 pm, Sarita Bhadauriya the MLA from
Sadar Etawah fell on rail track during flag off ceremony of Agra Cantt-Banaras Vande
Bharat express at Etawah Junction. 1/2
href="https://t.co/PXAqXX3e7Q">pic.twitter.com/PXAqXX3e7Q
— Arvind Chauhanhref="https://twitter.com/Arv_Ind_Chauhan/status/1835701870561513624?ref_src=twsrc
- சுந்தர் என்ற நபருக்கு 2 ஆண்டுகள் முன்பு மீனா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.
- திருமணத்தின் போது வரதட்சணையாக ரூ.3 லட்சம் பணம், பைக் ஆகியவை தர வேண்டும் என்று மணமகன் வீட்டார் கேட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா பகுதியில் வரதட்சணை தராததால் மீனா என்ற இப்பெண்ணை, அவரது கணவர் கொடூரமாக அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பைகேடா கிராமத்தைச் சேர்ந்த சுந்தர் என்ற நபருக்கு 2 ஆண்டுகள் முன்பு மீனா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது வரதட்சணையாக ரூ.3 லட்சம் பணம், அப்பாச்சி பைக் ஆகியவை தர வேண்டும் என்று மணமகன் வீட்டார் கேட்டுள்ளனர். ஆனால் மீனாவின் குடும்பத்தினரால் இந்த வரதட்சணையை கொடுக்க முடியவில்லை.
வரதட்சணை தொடர்பாக கணவன் தொடர்ந்து சண்டையிட்டு வந்ததால் கோவத்தில் மீனா அப்பா வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் மாமனார் வீட்டிற்கு அடிக்கடி வந்த சுந்தர் மனைவியை சமாதானப்படுத்த முயன்றுள்ளார். இறுதியாக மீனா சமாதானம் ஆனதால் நேற்று இரவு தனது வீட்டிற்கு மனைவியை அவர் அழைத்து வந்துள்ளார். வந்த இடத்தில் மீண்டும் வரதட்சணை தொடர்பாக மனைவியிடம் சுந்தர் சண்டையிட்டுள்ளார்.
அப்போது ஆத்திரத்தில் மனைவியின் தலையை கட்டையால் தாக்கி கழுத்தை நெரித்து சுந்தர் கொலை செய்துள்ளார். இதனையடுத்து சுந்தர் அங்கிருந்து ஓடிப்போய் தலைமறைவாகியுள்ளார்.
இதனையடுத்து, குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சுந்தரை தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையில், மீனாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
- கணவர் ஒரு மாதத்திற்கு ஒரு முறை அல்லது 2 முறை மட்டுமே குளிக்கிறார்.
- கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து மனைவி தனது பெற்றோர் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த பெண் ஒருவர் திருமணம் ஆகி 40 நாட்களே ஆன நிலையில் தனது கணவரின் வித்தியாசமான குளியல் பழக்கத்தால் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
ஆக்ராவை சேர்ந்த பெண் கூறுகையில், அவரது கணவர் ஒரு மாதத்திற்கு ஒரு முறை அல்லது 2 முறை மட்டுமே குளிக்கிறார். இதனால் அவர் மீது பொறுத்துக்கொள்ள முடியாத உடல் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அரதிருமணமாகி நாற்பது நாட்களுக்கு பிறகு திருமணத்திலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளார்.
அந்த பெண்ணின் கணவரான ராஜேஷ் புனிதமான கங்கை நதியில் (கங்காஜல்) வரும் தண்ணீரை வாரத்திற்கு ஒருமுறை தெளித்துக் கொள்கிறார். திருமணமாகி மனைவியின் வற்புறுத்தலால் 40 நாட்களில் 6 முறை குளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்ணின் குடும்பத்தினர் வரதட்சணை துன்புறுத்தல் புகாரை போலீசில் பதிவுசெய்து விவாகரத்து கோரி உள்ளனர்.
இதற்கிடையில் கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து மனைவி தனது பெற்றோர் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
இறுதியில் கணவர் மனந்திருந்தி, அவரது தனிப்பட்ட சுகாதாரத்தை மேம்படுத்த ஒப்புக்கொண்டார்.
இருப்பினும், அந்த பெண் கணவருடன் இனி வாழ விரும்பவில்லை என்று கூறியதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து தம்பதியினர் ஆலோசனை மையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
- உத்தரப்பிரதேசத்தில் பழுதாகி நின்ற பராமரிப்பு ரெயிலை ரெயில்வே ஊழியர்கள் சிறிது தூரத்திற்கு தள்ளிச் செனறனர்.
- உத்தரப்பிரதேசத்தில் இதுபோன்ற நிகழ்வு நடப்பது ஒன்றும் முதன்முறையல்ல.
பிரேக் டவுன் ஆகிவிட்ட பேருந்தை பயணிகள் பலரும் தள்ளி செல்லும் காட்சியை பலர் பார்த்திருப்பார்கள். ஆனால் பழுதாகி நின்ற ரெயிலை யாரவது தள்ளிச் செல்வதை பார்த்திருக்கிறீர்களா? அப்படிப்பட்ட சம்பவம் ஒன்று உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்நோர் பகுதியில் பழுதாகி நின்ற பராமரிப்பு ரெயிலை ரெயில்வே ஊழியர்கள் சிறிது தூரத்திற்கு தள்ளிச் சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் இதுபோன்ற நிகழ்வு நடப்பது ஒன்றும் முதன்முறையல்ல. இந்தாண்டு மார்ச் மாதம் அமேதி மாவட்டத்தில் ரெயில்வே ஊழியர்களுக்கான ரெயில் சென்றுகொண்டிருக்கும்போது நடுவழியிலேயே பழுதாகி நின்றதால் தண்டவாளத்தின் மெயின் லைனில் இருந்து லூப் லைனுக்கு ரெயிலை ஊழியர்கள் தள்ளிச் சென்றுள்ளனர்.
- காங்கிரசை சேர்ந்த இளம் பெண் பிரமுகரை அப்பகுதியில் வசித்து வந்த சாப்ரோன் ராஜேஷ் [Saffron Rajesh] மிரட்டியுள்ளான்
- சாப்ரோன் ராஜேஷின் கைகளை ஆதரவாளர்கள் பிடித்துக்கொள்ள பெண் பிரமுகர் அவரை சரமாரியாக தாக்கினார்
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் சமூக வலைத்தளத்தில் தனக்கு தொடர்ந்து பலாத்கார மிரட்டல் விடுத்த நபரை காங்கிரஸ் உள்ளூர் பெண் பிரமுகர் தனது ஆதரவாளர்களுடன் சென்று தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. வாரணாசியில் லால்பூர் பந்தேபூர் பகுதியை சேர்ந்த காங்கிரசை சேர்ந்த இளம் பெண் பிரமுகரை அப்பகுதியில் வசித்து வந்த சாப்ரோன் ராஜேஷ் சிங் [Saffron Rajesh Singh] என்ற நடுத்தர வயது நபர் சமூக வலைதளத்தில் தாகாத முறையில் பதிவிட்டு வந்ததுடன் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்குவதாக மிரட்டியுள்ளார்.
இதனால் கோபத்தில் இருந்த அந்த பெண் பிரமுகர் தனது ஆதரவாளர்களுடன் சாப்ரோன் ராஜேஷின் வீட்டுக்கே சென்று அவரது மனைவி மற்றும் மகன் முன்னிலையில் தாக்கியுள்ளார். சாப்ரோன் ராஜேஷின் கைகளை ஆதரவாளர்கள் பிடித்துக்கொள்ள பெண் பிரமுகர் அவரை சரமாரியாக தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர்களிடம் இருந்து தப்பித்து சாப்ரோன் ராஜேஷின் தனது வீட்டுக்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டு தப்பித்துளான்.
இதனைகோடர்ந்து போலீசில் புகார் அளிக்க சென்ற பெண் பிரமுகர் ஊடகத்தினரிடம் பேசுகையில், சாப்ரோன் ராஜேஷ் கடந்த 4 வருடங்களாக சமூக வலைதளத்தில் தன்னை பற்றி தாகத முறையில் பேசி பலாத்காரம் செய்து கர்ப்பமாக்குவதாக மிரட்டி வந்தான் என்று தெரிவித்துள்ளார்.
- இன்ஸ்டா ரீல்ஸ்க்காக உயிரிழந்ததுபோல் நடித்து லைக்ஸ்களை குவிக்க முயன்ற இளைஞர் போலீசில் வசமாக சிக்கினார்.
- உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமிற்கு உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ பதிவிட்டு லைக்ஸ்களை குவிக்க போராடும் பலரில் ரெயில்களில் சிக்கியோ, பள்ளத்தாக்கில் விழுந்தோ உயிரிழக்கும் சம்பவங்களும் நாம் நிறைய பார்த்திருப்போம்.
ஆனால், இன்ஸ்டா ரீல்ஸ்க்காக உயிரிழந்ததுபோல் நடித்து லைக்ஸ்களை குவிக்க முயன்ற இளைஞர் போலீசில் வசமாக சிக்கியுள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த முகேஷ் குமார் என்ற இளைஞர் இன்ஸ்டாகிராம் ரீல்ஸூக்காக சாலையில் பிணமாக படுத்து வீடியோ எடுத்துள்ளார்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரியவந்ததை அடுத்து, முகேஷ் குமாரை கைது செய்துள்ளனர்.
- ஜாகிர் நகர் பகுதியில் உள்ள 3 மாடி வீடு நேற்றைய தினம் மாலை 5.15 அளவில் குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்துள்ளது.
- 24 எருமை மாடுகளும் உள்ளே சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில் நேற்றைய தினம் மூன்று மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒன்றரை வயது குழந்தை உட்பட 10 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மீரட்டில் உள்ள ஜாகிர் நகர் பகுதியில் உள்ள 3 மாடி வீடு நேற்றைய தினம் மாலை 5.15 அளவில் குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்துள்ளது.
இதில் 15 உள்ளேயே சிக்கிக்கொண்ட நிலையில் ஜேசிபி உள்ளிட்டிட இயந்திரங்கள் கொண்டு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. 15 பேறும் மீட்கப்பட்ட நிலையில் அதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சாஜித் (40), அவரின் மகள் சானியா(15), மகன் சாகிப்(11), ஒன்றரை வயதான சிம்ரா, 7 வயதான ரீசா, 63 வயதான நாபோ, 20 வயதான பர்கானா, 18 வயது பெண் ஆலிசா, 6 வயது சிறுமி ஆலியா ஆகியோர் உயிரிழந்தவர்களில் அடங்குவர். படுகாயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த கட்டடத்தின் உரிமையாளர் அங்கேயே மாட்டுத் தொழுவமும் வைத்திருந்த நிலையில் 24 எருமை மாடுகளும் உள்ளே சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார். மேலும் உள்ளே யாரேனும் சிக்கியுள்ளாரா என்பதை உறுதிப்படுத்த மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- 9 வயது சிறுமி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- சிறுமி இறந்த தகவல் கிடைத்ததும் கடந்த வெள்ளிக்கிழமை பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் 3ஆம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமி பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மான்ட்ஃபோர்ட் பள்ளியில், 3ஆம் வகுப்பு படிக்கும் மான்வி சிங் என்ற 9 வயது சிறுமி பள்ளியின் விளையாட்டு மைதானத்தில், தனது சக மாணவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்த சிறுமியை ஆசிரியர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் காவல்துறையினர் கவனத்திற்கு சென்றும், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சிறுமியின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்
சிறுமி இறந்த தகவல் கிடைத்ததும் கடந்த வெள்ளிக்கிழமை பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
- கள ஆய்வின்போது, மசூதி வளாகத்தில் உள்ள ஒரு தொட்டிக்குள் சிவலிங்கம் இருப்பதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
- மசூதி பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தத் தடை விதிக்க கோரி இந்து அமைப்புகள் அளித்த மனுவை நேற்றைய தினம் வாரணாசி கோர்டு தள்ளுபடி செய்தது.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோவில் அருகே ஞானவாபி மசூதி இருக்கிறது. அங்கிருந்த கோவிலை இடித்துவிட்டு முகலாய மன்னர்களால் மசூதி கட்டப்பட்டதாகக் சமீப காலமாக இந்து அமைப்புகள் கூறிவருகின்றன. மசூதியில் இந்துக்கள் வழிபாடு நடந்த தொடரப்பட்ட வழக்கை விசாரித்து மசூதிக்குள் கள ஆய்வு நடத்த இந்திய தொல்லியல் ஆய்வுத் துறைக்கு வாரணாசி கோர்ட்டு உத்தரவிட்டது.
கள ஆய்வின்போது, மசூதி வளாகத்தில் உள்ள ஒரு தொட்டிக்குள் சிவலிங்கம் இருப்பதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் ஞானவாபி மசூதி வளாகத்தில் தரையின்கீழ் தளத்தில் உள்ள சீல் வைக்கப்பட்ட பகுதிக்குள் சென்று இந்துக்கள் வழிபட வாரணாசி மாவட்ட கோர்ட்டு அனுமதி வழங்கியிருந்தது. இதை எதிர்த்து மசூதி தரப்பில் உச்ணெதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் மசூதி பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தத் தடை விதிக்க கோரி இந்து அமைப்புகள் அளித்த மனுவையும் நேற்றைய தினம் வாரணாசி கோர்டு தள்ளுபடி செய்தது. மனு தள்ளுபடி செய்யப்பட்டதைக் கண்டிக்கும் விதமாக பாஜகவை சேர்ந்த அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
கோரக்பூரில் நடத்த கருத்தரங்கு ஒன்றில் சிவனின் வடிவமான விஷ்வநாதர் தோன்றிய முன் கதையை கூறிய அவர், ஞானவாபி என்பதே கடவுள் விஸ்வநாதர்தான், ஆனால் துரதிஷ்டவசமாக அதை மக்கள் மசூதி என்று அழைக்கின்றனர். இஸ்லாமியர்கள் இந்த வரலாற்று தவறை திருத்திக்கொள்ள வேண்டும். ஞானவாபியின் சுவர்கள் உரத்து கதறுகின்றன. ஞானவாபிக்குள் ஜோதிலிங்கமும் கடவுளர்களின் சிலைகளும் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
- உத்தரப் பிரதேச மாநிலத்தில் லக்னோ-கான்பூர் இடையே செல்லும் ஹம்சபார் எக்ஸ்பிரஸ் [Humsafar Express] விரைவு ரெயிலில் இந்த சம்பவம் நடந்துள்ளது
- தனது பெர்த் -இல் வந்து அமரும்படி அழைத்து பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார்.
ஓடும் ரெயிலில் 11 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய ரெயில்வே ஊழியர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்னோ-கான்பூர் இடையே செல்லும் ஹம்சபார் எக்ஸ்பிரஸ் [Humsafar Express] விரைவு ரெயிலில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது.
தனது குடும்பத்துடன் பயணித்துக்கொண்டிருந்த 11 வயது சிறுமி தனியாக இருப்பதைப் பார்த்த பிரசாந்த் குமார் [34 வயது] என்ற ரெயில்வே ஒப்பந்த ஊழியர் தனது பெர்த் -இல் வந்து அமரும்படி அழைத்து பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார்.
தனது தாய் வந்தவுடன் அந்த சிறுமி நடந்ததைக் கூறவே, சிறுமியின் குடும்பத்தினரும், அந்த பெட்டியில் பயணித்த சக பயணிகளும் இணைந்து பிரசாந்த் குமாரை சுமார் ஒன்றரை மணி நேரமாக சரமாரியாகத் தாக்கினர். பின் கான்பூர் சென்ட்ரல் ஸ்டேஷனில் அவர் ரெயில்வே போலீசில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்கான மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.






