என் மலர்tooltip icon

    உத்தரப் பிரதேசம்

    • குழந்தைகள் பாம்பை பார்த்ததும் அலறி அடித்து ஓடியுள்ளார்.
    • குழந்தைகளின் அலறலை கேட்ட வளர்ப்பு நாய் ஜென்னி உடனடியாக அங்கு ஓடிவந்தது.

    உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள சிவ கணேஷ் காலனியில் உள்ள ஒரு வீட்டின் தோட்டத்திற்குள் ராஜ நாகம் ஒன்று நுழைந்துள்ளது. அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் பாம்பை பார்த்ததும் அலறி அடித்து ஓடியுள்ளார்.

    குழந்தைகளின் அலறலை கேட்ட பிட்புல் வகையை சேர்ந்த வளர்ப்பு நாய் ஜென்னி உடனடியாக அங்கு ஓடிவந்து ராஜநாகத்தை கடித்து கொன்றது.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

    • வயதான தாயை தோட்டத்துக்குள் தூக்கிச் சென்று அந்த நபர் பலாத்காரம் செய்துள்ளார்.
    • தப்பியோடிய அவரை உடன் பிறந்த சகோதரர்கள் தேடிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    உத்தரப் பிரதேசத்தில் தாயை 48 வயது மகன் பலாத்காரம் செய்த வழக்கில் தீர்ப்பு வெளியாகி உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் [Bulandshahr] மாவட்டத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி 16 அன்று நடந்த பலாத்கார சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. 48 வயது நபர் ஒருவர் தனது மனைவி இறந்த பிறகு தனது தாயை மனைவியாக இருக்க வற்புறுத்தி வந்துள்ளார்.

    சம்பவத்தன்று வயதான தாயை தோட்டத்துக்குள் தூக்கிச் சென்று அந்த நபர் பலாத்காரம் செய்துள்ளார். தப்பியோடிய அவரை உடன் பிறந்த சகோதரர்கள் தேடிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    பாதிக்கப்பட்ட தாயின் வாக்குமூலத்தை அடுத்து சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.இந்நிலையில் நேற்றைய தினம் நடந்த இறுதி விசாரணையில் குற்றம் உறுதி செய்யப்பட்டு அந்த நபருக்கு ஆயுள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.51,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    • சைக்கிளில் சென்ற முதியவர் மீது நுரை ஸ்பிரே அடித்து யூடியூபர் வினய் யாதவ் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டார்.
    • சமூக வலைத்தளங்களில் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து கண்டனம் தெரிவித்தனர்.

    உத்தரப் பிரதேசம் மாநிலம் ஜான்சி பகுதியில், சைக்கிளில் சென்ற முதியவர் மீது நுரை ஸ்பிரே அடித்து கிண்டலடிக்கும் விதமாக யூடியூபர் வினய் யாதவ் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

    இதனையடுத்து சமூக வலைத்தளங்களில் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து முதியவரை பொதுவெளியில் துன்புறுத்திய யூடியூபர் வினய் யாதவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இதனையடுத்து யூடியூபர் வினய் யாதவை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பின்பு வினய் யாதவ் கால் வலியோடு மெதுவாக நடக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    யூடியூபர் வினய் யாதவின் ஆக்சனுக்கு இதுதான் சரியான ரியாக்சன் என்று இந்த வீடியோவை பகிர்ந்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

    • அந்த நபர் வேறு கிராமத்தை சேர்ந்தவர் என போலீசார் தெரிவித்தனர்.
    • சிறுமி தனது வீட்டிற்கு ஓடிச்சென்று பெற்றோரிடம் நடந்த சம்பவம் குறித்து கூறி உள்ளார்.

    உத்தரபிரதேச மாநிலத்தில் 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நபரின் முயற்சியை குரங்குகள் கூட்டம் சரியான நேரத்தில் வந்து தடுத்துள்ளது.

    உத்தரபிரதேச மாநிலம் பாக்பத்தில் உள்ள தௌலா கிராமத்தில் கடந்த வெள்ளியன்று இந்த சம்பவம் நடந்துள்ளது. போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட குற்றவாளி இப்போது தப்பி ஓடிவிட்டார், மேலும் அவரைப் பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது, சம்பவ இடத்திற்கு வந்த குரங்குகள் அவரை தாக்கியது. குரங்கின் தாக்குதலுக்கு பயந்து அவர் சிறுமியை விட்டுவிட்டு ஓடினார் என்று தெரிவித்தனர்.

    அவர் வேறு கிராமத்தை சேர்ந்தவர் என போலீசார் தெரிவித்தனர். சிறுமி தனது வீட்டிற்கு வெளியே விளையாடுவதைக் கண்டதும், தன்னுடன் வரும்படி அவர் சிறுமியை வற்புறுத்தி அழைத்து சென்றுள்ளார்.

    பழைய கட்டிடத்திற்கு சிறுமியை அழைத்து சென்றுள்ளார். அந்த நபரின் பலாத்கார முயற்சியின்போது அந்த இடத்திற்கு கூட்டமாக வந்த குரங்குகள் தாக்குதல் நடத்தியது. குரங்குகளின் தாக்குதலுக்கு பயந்து அந்த நபர் சிறுமியை விட்டுவிட்டு ஓடி உள்ளார்.

    இதையடுத்து சிறுமி தனது வீட்டிற்கு ஓடிச்சென்று பெற்றோரிடம் நடந்த சம்பவம் குறித்து கூறி உள்ளார். இதைத்தொடர்ந்து அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளித்தனர்.

    சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது, எதிர்ப்பு தெரிவித்தால் சிறுமியின் குடும்பத்தினரை கொன்று விடுவதாக அந்த நபர் மிரட்டியதாகவும் சிறுமியின் பெற்றோர் கூறி உள்ளனர்.

    அந்த கிராமத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் குற்றவாளி, சிறுமியை தன்னுடன் அழைத்துச் செல்வது பதிவாகியுள்ளது. இந்த காட்சிகளை வைத்து குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    • போலீஸ் தேடி வந்ததால் சிறுவை ஒவ்வொரு நாளும் வெவ்வேறு இடங்களுக்கு கொள்ளையர்கள் இடம்மாற்றியுள்ளனர்.
    • தனது கடத்தல் வழக்கின் விசாரணைகளை நீதிமன்றத்தில் சென்று பார்த்து வந்த ஹர்ஸ் ராஜ் அதனால் கவரப்பட்டார்

    பிப்ரவரி 10, 2007 :

    உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள கேர்கர் [Kheragarh] நகரில் ஹர்ஸ் ராஜ் என்ற 7 வயது சிறுவன் தந்தை மற்றும் உறவினர் முன்னிலையிலேயே துப்பாக்கி முனையில் கொள்ளையர்களால் காரில் கடத்திச் செல்லப்படுகிறான். ஆக்ராவில் இருந்து சம்பல் பகுதிக்கு சிறுவனை கடத்திச் சென்ற கொள்ளயர்கள் அவனது பெற்றோர்களிடம் ரூ.55 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். போலீஸ் தேடி வந்ததால் சிறுவை ஒவ்வொரு நாளும் வெவ்வேறு இடங்களுக்கு கொள்ளையர்கள் இடம்மாற்றியுள்ளனர்.

    சுமார் ஒரு மாத காலத்துக்குள், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் என சிறுவனை அழைத்துக்கொண்டு கொள்ளையர்கள் சுற்றியுள்ளனர். கடைசியாக மே 2007 அன்று மத்தியப் பிரதேசத்தில் உள்ள சிவபுரி மாவட்டத்தில் பதுங்கியிருந்த கொள்ளையர்களை போலீசார் துப்பு துலக்கி கண்டறிந்து சிறுவனை மீட்டுப் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த கடத்தலில் தொடர்புடைய 14 பேரை அதற்கடுத்த ஒரு வருடத்துக்குள்ளாகவே போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் அவர்கள் மீது கடந்த 14 வருடமாக வழக்கு நடந்து வந்துள்ளது.

    செப்டம்பர் 17, 2024 :

    கடத்தப்பட்ட அந்த சிறுவன் ஹர்ஸ் ராஜ் தற்போது 24 வயது இளைஞன். அதுமட்டுமின்றி பட்டம் பெற்ற வழக்கறிஞர். தனது கடத்தல் வழக்கில் இறுதி விசாரணையில் நீதிமன்றத்தில் தன் சார்பாக ஆஜரான ஹர்ஸ் ராஜ் இறுதி வாதத்தை முன்வைத்துள்ளார். நீதிபதியின் அனுமதி பெற்று சரியாக 55 நிமிடங்களில் தனது இறுதி வாதத்தை ஹன்ராஜ் சொல்லி முடித்துள்ளார். இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி குற்றம்சாட்டப்பட்ட 14 பேரில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

     

    14 பேரில் இருவர் வழக்கு நடக்கும்போதே இடையில் உயிரிழந்துள்ளனர். மேலும் நால்வர் தகுந்த ஆதரங்கில்லாமல் விடுவிக்கப்பட்டிருந்தனர். கடந்த 2015 முதல் தனது கடத்தல் வழக்கின் விசாரணைகளை நீதிமன்றத்தில் சென்று பார்த்து வந்த ஹர்ஸ் ராஜ் அதனால் கவரப்பட்டுக் கடந்த 2022 இல் ஆக்ரா சட்டக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்று தனது கடத்தல் வழக்கை வாதாடி வந்த அரசாங்க வக்கீலுக்கு உதவியாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

     

    • கேஸ் சிலிண்டர் இருப்பதைக் கவனித்த ஓட்டுநர், உடனடியாக பிரேக் போட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
    • உத்தரபிரதேசத்தில் இதுபோன்ற சம்பவம் நடப்பது ஒன்றும் புதிதல்ல.

    உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் இருந்து பிரயாக்ராஜ் நோக்கி லூப் லைன் வழியாக சரக்கு ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தில் 5 கிலோ எடையுள்ள கேஸ் சிலிண்டர் இருப்பதைக் கவனித்த ஓட்டுநர், உடனடியாக பிரேக் போட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    உத்தரபிரதேசத்தில் இதுபோன்ற சம்பவம் நடப்பது ஒன்றும் புதிதல்ல.

    செப்டம்பர் 9ம் தேதி கான்பூர்-காஸ்கஞ்ச் வழித்தடத்தில் பயணித்த காளிந்தி எக்ஸ்பிரஸ் தண்டவாளத்தில் இருந்து கேஸ் சிலிண்டருடன் மோதியது. இதைத் தொடர்ந்து பலத்த வெடிப்புச் சத்தம் கேட்டதால், ரெயிலின் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தினார்.

    இதனையடுத்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது தண்டவாளம் அருகே எல்பிஜி சிலிண்டர், பெட்ரோல் பாட்டில் மற்றும் தீப்பெட்டி ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.

    • கடந்த செப்டம்பர் 17 பிரதமர் மோடியின் பிறந்தநாளை பாஜகவினர் விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தனர்
    • வீடியோ லீக் ஆகியுள்ள நிலையில் இணையத்தில் பாஜக மேயர் கேலி செய்யப்பட்டு வருகிறார்

    கடந்த செப்டம்பர் 17 பிரதமர் மோடியின் பிறந்தநாளை பாஜகவினர் விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தனர். அந்த வகையில் உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பாஜக அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்ட்டிருந்தது.

    ரத்த தான நிகழ்வில் பங்கேற்ற பாஜக மேயர் வினோத் அகர்வால் ரத்த தானம் கொடுப்பதுபோல் படுக்கையில் படுத்து கேமராவுக்கு போஸ் கொடுத்துவிட்டு ரத்தம் கொடுக்காமலேயே அங்கிருந்து வெளியேறிய வீடியோ லீக் ஆகியுள்ள நிலையில் இணையாயத்தில்  பாஜக மேயர் கேலி செய்யப்பட்டு வருகிறார்.

    கேமராவுக்கு போஸ் கொடுத்த பின்னர் அதற்கு மேல் எதுவும் செய்ய வேண்டாம் என்று டாக்ட்ரிடம் சைகை காட்டிவிட்டு சிரித்தபடி படுக்கையில் இருந்து எழுந்து பாஜக மேயர் வெளியேறுவது வீடியோவில் பதிவாகியுள்ளது.

    • ஜாமீன் வாங்கிக்கொண்டு ரிங்கு சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளான்
    • தனது தாய் மற்றும் சகோதரனின் கண்முன்னையே சிறுமி குண்டடிபட்டு உயிரிழந்தாள்.

    சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் ஜாமீனில் வெளியே வந்து அந்த சிறுமியை சுட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் வசித்து வந்த ரிங்கு[Rinku] என்ற நபர் அப்பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக போக்ஸோ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.

    இந்நிலையில் ஜாமீன் வாங்கிக்கொண்டு ரிங்கு சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளான். கடந்த செப்டம்பர் 18 ஆம் தேதி அன்று இரவு சம்பல் பகுதியில் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி தனது தாய் மற்றும் சகோதரனுடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது தனது நண்பனுடன் அவர்களை வழிமறித்த ரிங்கு சிறுமியை துப்பாக்கியால் சுட்டுள்ளான். தனது தாய் மற்றும் சகோதரனின் கண்முன்னையே சிறுமி குண்டடிபட்டு உயிரிழந்தாள். இதனையடுத்து தலைமறைவாகிய ரிங்குவை போலீசார் தேடி வருகின்றனர்.

    • ஸ்கூட்டரில் இருந்து தவறி பாலத்திலிருந்து கீழே விழுந்த பெண் பாலத்தின் தூணில் உள்ள பகுதியில் விழுந்தார்
    • தூணில் இருந்து டிராலி மூலம் பெண் மீட்கப்படும் வீடியோ வைரலாகி வருகிறது.

    பாலத்தில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த பெண் மீது வாகனம் மோதியதில் அவர் கீழே தூண் மீது விழுந்து உயிர் தப்பிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. உத்தரப் பிரதேச தலைநகர் நொய்டாவில் இன்று மதியம் செக்டார் 25 பகுதியில் உள்ள பாலத்தின் மீது தனது இரு சக்கர வாகனமான ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்த பெண் மீது அடையாளம் காணப்படாத வாகனம் ஒன்று மோதியுள்ளது.

    இதனால் ஸ்கூட்டரில் இருந்து தவறி பாலத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட பெண் பாலத்தின் தூணில் உள்ள பகுதியில் விழுந்ததால் உயிர்தப்பியுள்ளார். அங்கு அவர் சிக்கித் தவித்த நிலையில் சம்பவ இடத்துக்குப் போலீசும் ஆம்புலன்சும் விரைந்தது. இதனைத்தொடர்ந்து தூணிலிருந்து அப்பெண் காயங்களின்றி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.  தூணில் இருந்து டிராலி மூலம் பெண் மீட்கப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ரூ.1800 கோடி செலவில் மத்தியில் ஆளும் பாஜக அரசின் முன்னெடுப்பினால் ராமர் கோவில் கட்டப்பட்டது
    • கும்பாபிஷேகத்தில் நாட்டில் உள்ள திரைத்துறை, அரசியல் மற்றும் வியாபார பெரும் புள்ளிகள் திரளாக கலந்துகொண்டனர்.

    திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் விநியோகிக்கப்படும் உலகப் புகழ் பெற்ற பிரசாதமான லட்டு மாட்டிறைச்சி கொழுப்பு மற்றும் பன்றி கொழுப்பு கலந்த நெய்யினால் தயாரிக்கப்படுகிறது என்ற சர்ச்சை பூதாகரமாக வெடித்துள்ளது. இந்த சர்ச்சை அரசியல் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    ஆந்திர பிரதேசத்தில் கடந்த 5 ஆண்டுகளாக நடந்த ஜெகன் மோகன் ஆட்சியில் இந்த முறைகேடு நடந்ததாக தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டி வருகிறார். இந்நிலையில் அயோத்தி ராமர் கோவில் பிரான பிரதிஷ்டை கும்பாபிஷேகத்தின்போது கலந்துகொண்ட விருந்தினர்களுக்கு 300 கிலோ அளவிலான 1 லட்சம் திருப்பதி லட்டுக்கள் விநியோகிக்கப்பட்டதாக கோவிலின் தலைமை அர்ச்சகர் தெரிவித்துள்ளார்.

    உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ரூ.1800 கோடி செலவில் மத்தியில் ஆளும் பாஜக அரசின் முன்னெடுப்பினால் கட்டப்பட்ட ராமர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஜனவரி மாதம் நடந்தது. பிரமாண்டமாக நடந்த இந்த விழாவில் நாட்டில் உள்ள திரைத்துறை, அரசியல் மற்றும் வியாபார பெரும் புள்ளிகள் திரளாக கலந்துகொண்டனர்.

     

    இந்த விழாவில் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் இருந்து வரவழைக்கப்பட்ட 300 கிலோ லட்டுகளை விருந்தினர்களுக்கு விநியோகித்தோம் என்று அயோத்தி ராமர் கோவில் தலைமை பூசாரி ஆசார்ய சத்யேந்திர தாஸ் தெரிவித்துள்ளார். மேலும் திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டிருந்தால் அது மன்னிக்க முடியாத குற்றம். இதில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • தாஜ்மஹாலில் நீர் கசிவு ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • தாஜ்மஹால் ஒழுங்காக பராமரிக்கப்படவில்லை என்று நெட்டிசன்கள் விமர்சனம்

    உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள உலக அதிசயமான தாஜ்மஹாலை பார்ப்பதற்கு உலகம் முழுவதிலும் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் ஆண்டுதோறும் வருகை தருகின்றனர்.

    ஆக்ராவில் நமையில் பெய்த கனமழையால் தாஜ்மஹாலில் நீர் கசிவு ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் தாஜ்மகாலின் மேற்கூரையில் செடி வளர்ந்திருக்கும் புகைப்படத்தை சுற்றுலா பயனை ஒருவர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார்.

    இதனையடுத்து, உலக அதிசயமான தாஜ்மஹால் ஒழுங்காக பராமரிக்கப்படவில்லை என்று நெட்டிசன்கள் விமர்சனம் செய்தனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்த தொல்லியல்துறை கண்காணிப்பாளர் ராஜ்குமார் படேல், "கடந்த ஆகஸ்ட் மாதமே தூணில் வளர்ந்திருந்த செடிகள் அகற்றப்பட்டது. இந்த செடி 15 நாட்களுக்கு முன்பு உருவாகியுள்ளது. இது விரைவில் நீக்கப்படும்" என்று தெரிவித்தார்.

    • மதுராவில் சரக்கு ரெயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டு விபத்தில் சிக்கின.
    • இதனால் டெல்லி நோக்கிச் செல்லும் ரெயில் சேவை பாதிப்பு அடைந்துள்ளது.

    லக்னோ:

    உத்தர பிரதேசம் மாநிலம் மதுராவில் உள்ள பிருந்தாவன் ரோடு என்ற இடத்தில் சரக்கு ரெயிலின் 15 பெட்டிகள் தடம் புரண்டு விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதையடுத்து, டெல்லி நோக்கிச் செல்லும் ரெயில் சேவை பாதிப்பு அடைந்துள்ளது. மேலும் அப்பகுதி வழியாக செல்லும் 15 ரெயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

    தகவல் அறிந்து ரெயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல், நேற்று மாலை பீகாரின் நாராயண்பூரில் சரக்கு ரெயிலின் 4 பெட்டிகள் தடம்புரண்டு விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.


    ×