ரீல்ஸ் மோகம்.. 3 ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞர் உயிரிழப்பு

ஆசிப் என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஒரு ரீல் படம்பிடித்துக் கொண்டிருந்தார். வீடியோ எடுக்கும்போது தவறுதலாக மூன்றாவது மாடியில் இருந்து ஆசீப் கீழே விழுந்துள்ளார்.
ரீல்ஸ் மோகம்.. 3 ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞர் உயிரிழப்பு
Published on

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் ஸ்லோ மோஷனில் ரீல்ஸ் எடுக்க முயன்ற 20 வயது இளைஞர் 3 ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிப் என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஒரு ரீல்ஸ் வீடியோ படம்பிடித்து கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் பாதுகாப்புக்காக நிறுவப்பட்ட கதவை திறக்கும் போது தவறுதலாக மூன்றாவது மாடியில் இருந்து அவர் கீழே விழுந்துள்ளார்.

3 ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்ததால் ஆசிஃப்பிறகு தலை மற்றும் கழுத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. உடனடியாக ஆசிப்பை அவரது நண்பர்கள் பக்கத்தில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் பலத்த காயம் மற்றும் அதிக ரத்தம் வெளியேறியதினால் ஆசீப் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com