என் மலர்
இந்தியா
ஓட்டுப் போட்டேன்ல.. கல்யாணத்துக்கு பெண் பாருங்க.. கோரிக்கையால் எம்.எல்.ஏ. அதிர்ச்சி
- பெட்ரோல் பங்க் வந்த எம்.எல்.ஏ. ஊழியரின் கோரிக்கையால் அதிர்ச்சி.
- இருவரின் உரையாடல் வீடியோவை எம்.எல்.ஏ. முகநூலில் பதிவேற்றம் செய்தார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் பெட்ரோல் போட வந்த உள்ளூர் சட்டமன்ற உறுப்பினரிடம், பெட்ரோல் பங்க் ஊழியர் விடுத்த கோரிக்கை அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
44 வயதான அகிலேந்திர கரே என்ற பெட்ரோல் பங்க் உதவியாளர், தனக்கு மணப்பெண் கண்டுபிடிக்க உதவுமாறு சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத சரகாரி தொகுதி எம்.எல்.ஏ. பிரிஜ்பூஷன் ராஜ்புத் அதிர்ச்சியடைந்தார்.
சமீபத்திய தேர்தல்களில் ராஜ்புத்துக்கு வாக்களித்ததாகக் கூறிய காரே, எம்.எல்.ஏ.வின் வெற்றியில் தனது பங்கு இருந்ததாக தெரிவித்தார். இதற்கு கைமாறு செய்யும் வகையில், எம்.எல்.ஏ. தனக்கு தனிப்பட்ட வாழ்க்கையிலும் உதவ வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார்.
எம்.எல்.ஏ. மற்றும் பெட்ரோல் பங்க் ஊழியர் இடையிலான இந்த உரையாடல் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இதனை அந்த எம்.எல்.ஏ. தனது முகநூல் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.