என் மலர்
உத்தரப் பிரதேசம்
- டெலிவரி பாய் செப். 23-ந்தேதி கஜனனுக்கு ஐபோனை டெலிவரி செய்யச் சென்றார்.
- அவரது உடலை ஒரு சாக்கு பையில் வைத்து இந்திரா கால்வாயில் வீசி உள்ளனர்.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த டெலிவரி மேன் (35) ஒருவர் ஐபோனை டெலிவரி செய்யச் சென்றபோது இருவரால் கொல்லப்பட்டார். ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள ஐபோனுக்காக அவரை கொலை செய்த அவர்கள், இந்திரா கால்வாயில் அவரது உடலை வீசி உள்ளனர்.
இது சம்பவம் தொடர்பாக துணை போலீஸ் கமிஷனர் ஷஷாங்க் சிங் கூறுகையில்,
சின்ஹாட்டைச் சேர்ந்த கஜனன், பிளிப்கார்ட்டில் இருந்து சுமார் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான ஐபோனை ஆர்டர் செய்துள்ளார். மேலும் கேஷ் ஆன் டெலிவரி (COD) கட்டண விருப்பத்தை அவர் தேர்வு செய்துள்ளார்.
பாரத் சாஹு என்ற அந்த டெலிவரி பாய் செப். 23-ந்தேதி கஜனனுக்கு ஐபோனை டெலிவரி செய்யச் சென்றார்.
அப்போது சாஹுவை கஜனனும் அவரது நண்பரும் கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர். அவரது உடலை ஒரு சாக்கு பையில் வைத்து இந்திரா கால்வாயில் வீசி உள்ளனர்.
சாஹு இரண்டு நாட்களாக வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் செப். 25 அன்று காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
சாஹுவின் செல்போன் அழைப்பு விவரங்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அவனது இருப்பிடத்தைக் கண்டறியும் முயற்சியில், போலீசார் கஜனனின் எண்ணை கண்டுபிடித்து, அவரது நண்பர் ஆகாஷை தொடர்பு கொண்டனர்.
போலீஸ் விசாரணையில், ஆகாஷ் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், உடலை தேடும் பணியில் மாநில பேரிடர் மீட்புப் படையின் குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
- 2-வது நாள் போட்டியும், நேற்றைய 3-வது நாள் ஆட்டமும் மழையால் கைவிடப்பட்டது.
- சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மொமினுல் சதம் விளாசி அசத்தினார்.
வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இந்தியா- வங்காளதேசம் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
முதலில் விளையாடிய வங்காளதேசம் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன் எடுத்து இருந்தது. மொமினுல் ஹக் 40 ரன்னும், முஷ்பிகுர் ரகீம் 6 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
மழையால் முதல் நாள் ஆட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. 90 ஓவர்களில் 35 ஓவர் மட்டுமே வீச முடிந்தது. 2-வது நாள் போட்டியும், நேற்றைய 3-வது நாள் ஆட்டமும் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.
மழை இல்லாததால் இன்றைய 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மொமினுல் ஹக் அரை சதம் விளாசினார். 11 ரன்கள் எடுத்த நிலையில் முஷ்பிகுர் ரகீமும் 13 ரன்னில் லிட்டன் தாஸும் ஆட்டமிழந்தனர். அதனை தொடர்ந்து வந்த சாஹிப் அல் ஹசன் 9 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மொமினுல் சதம் விளாசி அசத்தினார்.
அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற வங்கதேச அணி 74.2 ஓவரில் 233 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் பும்ரா 3 விக்கெட்டும் ஆகாஷ் தீப், அஸ்வின், சிராஜ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதைதொடர்ந்து முதல் இன்னிஸ்ங்ஸ் விளையாடி வரும் இந்திய அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வருகிறது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் 3 ஓவர்களில் 50 ரன்களை கடந்து சாதனை படைத்தனர். அப்போது, ரோகித் சர்மா 23 ரன்களில் அவுட்டானார்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் அரை சதம் கடந்த 72 ரன்களில் அவுட்டானார்.
இந்நிலையில், அதிவேகமாக 10.1 ஓவர்களில் 100 ரன்களை கடந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி சாதனை படைத்துள்ளது.
- சிறுவனின் உடலில் உள்ள காயங்களை வைத்து பெற்றோர் உண்மையைக் கண்டறிந்துள்ளனர்
- இருவரின் வீட்டுக்கு சென்று நியாயம் கேட்ட சிறுவனின் பெற்றோரை அவர்கள் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்
உத்தரப் பிரதேசத்தில் 5 வயது சிறுவனை பண்ணையில் வைத்து இரண்டு நபர்கள் கூட்டுப் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதைவிட, சிறுவன் பலாத்காரம் செய்யப்பட்டபோது அவ்வழியே சென்றோர் காப்பாற்றாமல் நின்று வீடியோ எடுத்தது மனிதாபிமானத்தைக் கேள்விக்குள்ளாகியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாபூர் [Hapur] மாவட்டத்தில் சிறுவன் வசித்து வந்த வீட்டின் வருகே உள்ள பண்ணையில் வைத்து கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி அவ்வூரை சேர்ந்த இருவர் சிறுவனை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். அப்போது அவ்வழியே வந்த ஆடு மேய்ப்பர்கள் இருவர் சிறுவனை காப்பாற்றாமல் நின்று மனசாட்சியில்லாமல் வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.
இந்த சம்பவத்தின் பின்னர் சிறுவனின் உடல் நிலை திடீரென மோசமானதைத் தொடர்ந்து அவனின் உடலில் உள்ள காயங்களை வைத்து பெற்றோர் உண்மையைக் கண்டறிந்துள்ளனர். இதுதொடர்பாக தவறு செய்த இருவரின் வீட்டுக்கு சென்று பெற்றோர் நியாயம் கேட்டுள்ளனர்.அதற்கு சிறுவனின் பெற்றோரை அவர்கள் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி சிறுவனின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதன்மூலமே இந்த கொடூர சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனையடுத்து குற்றவாளிகள் இருவரும் தப்பியோடிய நிலையில் அவர்களை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைத்துள்ளது.
- 30 அடி உயரத்தில் உள்ள நெடுஞ்சாலை பெயர்ப்பலகையின் மீது ஏறி உடற்பயிற்சி செய்யும் ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரல்
- இந்த வைரல் வீடியோ தொடர்பாக போலீசார் விசாரணை
உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில் 30 அடி உயரத்தில் உள்ள நெடுஞ்சாலை பெயர்ப்பலகையின் மீது சட்டை இல்லாமல் ஒருவர் ஏறி உடற்பயிற்சி செய்யும் ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த ரீல்ஸ் வீடியோவின் பின்னணியில் மறைந்த பாடகர் சித்து மூஸ்வாலாவின் பாடல் ஒன்று ஒலிக்கிறது.
இந்த வைரல் வீடியோ தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமேதி போலீசார் தெரிவித்தனர்.
- சாலைகள் முழுவதும் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
- சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களா கனமழை பெய்து வருகிறது. இதனால் கோண்டா, லக்கிம்பூர் கெரி, சீதாபூர், பரூகாபாத், பஹ்ரைச், பாரபங்கி, புடான், பல்லியா, அசம்கர், கோரக்பூர், அயோத்தி, வாரணாசி, பிரயாக்ராஜ் உள்ளிட்ட மாவட்டங்களில் சில இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு நகர சாலைகள் முழுவதும் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இந்நிலையில் கோண்டா மாவட்டத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை டயாலிசிஸ் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதற்காக அவரது கணவர் முயற்சி செய்தார்.
ஆனால் இதற்காக கோண்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை அவர் நாடிய போது, அவரது மனைவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல ஸ்ட்ரெச்சர் அல்லது சக்கர நாற்காலி வசதி செய்து கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் அவர் தனது மனைவியை வெள்ளம் சூழ்ந்த சாலையில் கையில் ஏந்தியவாறு தூக்கி சென்றுள்ளார். பின்னர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண்ணை அவரது கணவர் ஆஸ்பத்திரிக்கு கையில் தூக்கி சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதைத்தொடர்ந்து சுகாதார அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டனர்.
- இரண்டு பணியாளர்கள் அந்தரத்தில் தொங்கும் காட்சிகள் வைரலாகி வருகிறது.
- வெளிப்புற கண்ணாடியை டிராலியில் நின்றபடி பணியாளர்கள் இருவர் சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் கட்டுமானத்தில் இருக்கும் அடுக்குமாடி கட்டடத்தில் பணியின்போது டிராலி அறுந்து இரண்டு பணியாளர்கள் அந்தரத்தில் தொங்கும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உ.பி. தலைநகர் நொய்டாவில் செக்டார் 62 பகுதியில் கடந்த புதன்கிழமை அன்று வானுயர காட்டம் ஒன்றில் உயரத்தில் வெளிப்புற கண்ணாடியை டிராலியில் நின்றபடி பணியாளர்கள் இருவர் சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது டிராலியின் கயிறு அறுந்துவிழுந்துள்ளது. எனினும் அதிர்ஷ்டவசமாக பாதுகாப்பு ரோப் மூலம் அவர்கள் கீழே விழாமல் உயிர்தப்பியுள்ளனர். அவர்களின் இடுப்புப் பகுதியில் பாதுகாப்பு ரோப் கட்டப்பட்ருந்த நிலையில் அதன் பேலன்சில் இருவரும் அந்தரத்தில் தூங்கிக்கொண்டிருந்தனர்.
அவர்கள் இருவரும் உதவி கேட்டு கத்தும் சத்தம் கேட்டு சக பயணிகள் அவர்களை மேலே இழுத்து காப்பாற்றியுள்ளனர். இதற்கிடையே இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- இரானி கோப்பைக்கான மும்பை அணியில் இடம் பிடித்திருந்தார்.
- கான்பூரில் இருந்து லக்னோவிற்கு காரில் செல்லும்போது விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருபவர் சர்பராஸ் கான். இவர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடினார். தற்போது கே.எல். ராகுல் அணிக்கு திரும்பியதால் அவருக்கு ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்கவில்லை.
இவரது சகோதரர் முஷீர் கான். 19 வயதேயான இவர் முதல்தர போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். சமீபத்தில் முடிவடைந்த துலீப் டிராபியில இந்தியா "சி" அணிக்காக விளையாடி 181 ரன்கள் விளாசினார். சுப்மன் கில், மயங்க் அகர்வால், ஆவேஷ் கான், குல்தீப் யாதவ், ஆகாஷ் தீப், கலீல் அகமது ஆகியோர் இடம் பிடித்திருந்த இந்தியா "ஏ" அணிக்கெதிராக சதம் விளாசினார்.
இரானி கோப்பையில் மும்பை- ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிகள் மோத இருக்கின்றன. மும்பை அணிக்காக முஷீர் கான் விளையாட இருக்கிறார்.
இவர் இரானி கோப்பையில் விளையாடுவதற்கான உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் இருந்து லக்னோ செல்லும்போது கார் விபத்தில் சிக்கியுள்ளார்.
இந்த விபத்தில் அவரது கழுத்துப் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் இரானி கோப்பையில் மும்பை அணிக்கெதிராக அவர் விளையாட முடியாது. மேலும், அக்டோபர் 11-ந்தேதி தொடங்கும் ரஞ்சி கோப்பையின் தொடக்க போட்டிகளில் விளையாட முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
அவருக்கு ஏற்பட்ட காயம் குணமடைய சுமார் 3 மாதங்கள் ஆகும் எனத் தெரிகிறது. இரானி கோப்பை போட்டி அக்டோபர் 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.
இரானி கோப்பைக்கான மும்பை அணியுடன் முஷீர் கான் லக்னோ செல்லவில்லை. அவரது தந்தையுடன் அசாம்காரில் இருந்து லக்னோவிற்கு தனியாக பயணம் செய்யும்போது விபத்து ஏற்பட்டுள்ளது.
- 1994-ம் ஆண்டு ஊர்மிளாதேவிக்கு அதே பகுதியை சேர்ந்த செல்வந்தரான ராஜ்வீர்சிங் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
- போலீசார் ஹத்ராசில் உள்ள வீட்டிற்கு சென்று புத்தசிங் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் சுமார் 8 அடி ஆழம் தோண்டினர்.
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ரஸ் மாவட்டத்தை சேர்ந்த பஞ்சாபி சிங் (வயது 39). என்பவர் தனது தாய், சகோரர்கள் 2 பேர் சேர்ந்து 30 வருடங்களுக்கு பிறகு தனது தந்தையை கொலை செய்ததாக போலீசில் அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாபி சிங்கிற்கு பிரதீப்குமார், முகேஷ்குமார் என்ற சகோரர்கள் உள்ளனர். கடந்த ஜூலை 1-ந் தேதி சகோதரர்களிடையே பணத்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பிரதீப்குமார், முகேஷ்குமார் ஆகிய இருவரும் பஞ்சாபி சிங்கை மிரட்டியுள்ளனர். அப்போது 1994-ம் ஆண்டு தந்தையை கொலை செய்தது போலேவே உன்னையும் கொன்று தந்தையிடம் அனுப்புவோம் என மிரட்டியுள்ளனர்.
இதைக்கேட்டதும் பஞ்சாபி சிங்கிற்கு தான் சிறுவனாக இருந்த போது தன் கண் முன்பு தனது தந்தை புத்தசிங்கை தனது தாய் ஊர்மிளாதேவி, சகோரர்கள் பிரதீப்குமார், முகேஷ்குமார் ஆகியோர் கொலை செய்தது ஞாபகத்திற்கு வந்துள்ளது. அதாவது 1994-ம் ஆண்டு ஊர்மிளாதேவிக்கு அதே பகுதியை சேர்ந்த செல்வந்தரான ராஜ்வீர்சிங் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் அடிக்கடி ஊர்மிளாதேவியை பார்க்க வீட்டிற்கு வந்துள்ளார்.
இதுதொடர்பாக புத்தசிங் தனது மனைவியை கண்டித்த போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று இரவு பஞ்சாபிசிங்கையும், அவரது இளையசகோதரரையும் ஊர்மிளாதேவி பக்கத்து வீட்டிற்கு சென்று தூங்குமாறு அனுப்பி உள்ளார். நள்ளிரவில் தூக்கம் வராமல் பஞ்சாபிசிங் தனது வீட்டிற்கு திரும்பி உள்ளார். அப்போது ஊர்மிளாதேவியும், அவரது மகன்களான பிரதீப்குமார், முகேஷ்குமார் ஆகியோர் சேர்ந்து புத்தசிங்கை கொலை செய்து வீட்டு முற்றத்தில் புதைத்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதைக்கண்ட ஊர்மிளா தேவி, முகேஷ்குமார், பிரதீப்குமார் ஆகியோர் இதுபற்றி வெளியே சொல்லக்கூடாது என பஞ்சாபிசிங்கை மிரட்டி உள்ளனர்.
இதனால் பஞ்சாபிசிங் அமைதியாக இருந்து விட்டார். காலங்கள் கடந்த நிலையில் தற்போது சகோதரர்களுக்கிடையே பணத்தகராறு ஏற்பட்ட நிலையில், 30 வருடங்களுக்கு முன்பு தாயும், 2 சகோதரர்களும் சேர்ந்து தனது தந்தையை கொலை செய்ததை பஞ்சாபிசிங் போலீசில் புகார் அளித்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் ஹத்ராசில் உள்ள வீட்டிற்கு சென்று புத்தசிங் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் சுமார் 8 அடி ஆழம் தோண்டினர். அப்போது அங்கிருந்து ஒரு மனித எலும்பு கூட்டை கண்டெடுத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டைகர் ராபி அங்கிருந்து செக்கியூரிட்டிகளால் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
- முதுகிலும் அடிவயிற்றிலும் அவர்கள் அடித்ததாகவும் பால்கனியில் ஏறி தப்பித்ததாகவும் டைகர் ராபி தெரிவித்தார்
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கான்பூர் மைதானத்தில் இன்றைய தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
போட்டியின்போது பார்வையாளராக வந்திருந்த வங்கதேச அணியின் தீவிர ரசிகராக அறியப்படும் டைகர் ராபி என்பவரை இந்திய அணி ரசிகர்கள் தாக்கியுள்ளதாகத் தெரிகிறது. இதனால் படுகாயமடைந்துள்ள டைகர் ராபி அங்கிருந்து செக்கியூரிட்டிகளால் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
தனது முதுகிலும் அடிவயிற்றிலும் அவர்கள் அடித்ததாகவும் அவர்களிடம் இருந்து தப்பிக்க பால்கனியில் ஏறிக்கொண்டதாகவும் தன்னால் மூச்சுவிட முடியவில்லை என்றும் ராபி கடுமையான வலியில் பேச முடியாமல் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. ஆனால் இந்திய அணி ரசிகர்கள் ராபியை தாக்கினர் என்பதை மைதானத்தில் காவலுக்கு நின்ற உள்ளூர் போலீஸ் மறுத்துள்ளது.
- சிறுவனை பலிகொடுத்தால் தங்களின் பள்ளியின் பிஸ்னஸ் வளர்ச்சி அடையும் என்றும் புகழ் கிடைக்கும் நம்பியுள்ளனர்.
- பள்ளியின் இயக்குநர், பிரின்சிபல் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட ஐவர் பிளாக் மேஜிக் உள்ளிட்ட மூட நம்பிக்கை சடங்குகளில் தீவிரமாக நம்பிக்கை கொண்டவர்கள் ஆவர்
தங்கள் பள்ளியின் வளர்ச்சி மற்றும் புகழுக்காக 2 ஆம் வகுப்பு மாணவனை நிர்வாகமே நரபலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. DL பப்ளிக் ஸ்கூல் என்ற தனியார் பள்ளியின் இயக்குநர், பிரின்சிபல் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட ஐவர் பிளாக் மேஜிக் உள்ளிட்ட மூட நம்பிக்கை சடங்குகளில் தீவிரமாக நம்பிக்கை கொண்டவர்கள் என்று கூறப்படுகிறது. சிறுவனை நரபலிகொடுத்தால் தங்களின் பள்ளியின் பிஸ்னஸ் வளர்ச்சி அடையும் என்றும் புகழ் கிடைக்கும் நம்பியுள்ளனர்.

எனவே பள்ளியின் விடுதியில் தங்கி பயின்று வந்த 11 வயதாகும் இரண்டாம் வகுப்பு மாணவனை கடவுளுக்கு நரபலிகொடுக்கத் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே ஒரு முறை அதற்கு முயன்று தோற்ற நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பலி கொடுக்க தேர்ந்தெடுத்த சிறுவனை ஐவரும் சேர்ந்து கொலை செய்துள்ளனர். சிறுவனின் உடலை பள்ளி இயக்குநர் தனது காரில் மறைத்து வைத்துள்ளார். கடந்த திங்கள்கிழமை முதல் சிறுவனை காணவில்லை என பாடம் எடுக்கும் ஆசியரியர் தேடிய நிலையில் விவகாரம் போலீசுக்கு சென்றுள்ளது.
போலீசார் நடத்திய சோதனையில் பள்ளி இயக்குநரின் காரில் கழுத்தில் காயங்களுடன் சிறுவனின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு விசாரணை நடத்தியதில் சிறுவன் பலி கொடுக்கப்பட்ட உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து பள்ளி இயக்குநர் உள்ளிட்ட ஐவரும் கைது செய்யப்பட்டனர்.
மேலும் இது குறித்து பள்ளியில் ஆசிரியர்கள் உள்ளிட்ட வேறு யாரும் முன்னரே தெரிந்து வைத்திருந்தனரா என்றும் விசாரித்து வருகின்றனர். அடிப்படை உரிமையான கல்வி லாபம் கொழிக்கும் வியாபாரமாக மாறி வருவதன் உச்சமே இந்த கொலை என சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

- நாடு முழுவதும் வேலை இடங்களில் உள்ள அசாதாரண பணிச்சூழலை குறிப்பிட்டு அகிலேஷ் யாதவ் வருந்தினார்
- பாஜக தலைவர்கள் மக்களை மன ரீதியாக தைரியமிழக்க செய்யும் கருத்துக்களைக் கூறி வருகின்றனர்.
பணியிட அழுத்தத்தால் கடந்த வாரம் புனேவில் எர்னஸ்ட் அண்ட் எங் நிறுவனத்தில் சிஏ வேலை பார்த்து வந்த கேரளாவை சேர்ந்த 26 வயது இளம்பெண் அன்னா செபாஸ்டின் தற்கொலை செய்து உயிரிழந்தார். தொடர்ந்து நேற்றைய தினம் லக்னோவில் தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்த 45 வயது பெண் ஊழியர் பாத்திமா வேலைசெய்து கொண்டிருந்தபோதே நாற்காலியிலிருந்து சரிந்து விழுந்து உயிரிழந்தார்.
இதற்கிடையில் அன்னாவின் மரணம் குறித்து பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவது பற்றி பேசாமல். பணிச்சுமையைச் சமாளிக்கக் கடவுள் நம்பிக்கை வேண்டும் என்று ஒரு தலை பட்சமாகப் பேசியதாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்த விவகாரம் அரசியல் ரீதியாகவும் கவனம் பெற்று வரும் நிலையில் தொடரும் பணிச்சுமை மரணங்கள் குறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவரும் மக்களவை எம்.பியான அகிலேஷ் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் வேலை இடங்களில் உள்ள அசாதாரண பணிச்சூழலை குறிப்பிட்ட அகிலேஷ் யாதவ், பாஜகவின் தோல்வியடைந்த பொருளாதார கொள்கைகளால் நிறுவனங்கள் தங்களின் தொழிலைக் காப்பாற்றிக்கொள்ள ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்து அவர்களை அதிக நேரம் வேலை செய்ய நிர்ப்பந்திக்கின்றன.

இதுபோன்ற திடீர் மரணங்களுக்கு பாஜக அரசு தான் பொறுப்பு. இந்த மரணங்கள் குறித்து பாஜக தலைவர்கள் மக்களை மன ரீதியாக தைரியமிழக்க செய்யும் கருத்துக்களைக் கூறி வருகின்றனர். இதுபோன்ற மரணங்களைத் தடுக்க உடனடி நடவடிக்கை தேவை என்று வலியுறுத்தியுள்ளார்.
- வேலையில் இருக்கும்போதே நாற்காலியிலிருந்து சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
- மிகுந்த அழுத்தத்தில் இருந்ததாக அவரது சக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
பணியிடத்தில் சூழலால் ஏற்படும் அழுத்தங்களால் ஏற்படும் மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் அளவுக்கு அதிகமான பணிச்சுமையால் கேரளாவைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் அன்னா செபாஸ்டின் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் தற்போது லக்னோவில் தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்த பெண் பணிச்சுமையால் உயிரிழந்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இயங்கிய தனியார் வங்கியில் பணியாற்றி வந்த சதப் பாத்திமா என்ற 45 வயது பெண்மணி நேற்றைய தினம் வேலையில் இருக்கும்போதே நாற்காலியிலிருந்து சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார். அதிக பணிச்சுமையினால் பாத்திமா மிகுந்த அழுத்தத்தில் இருந்ததாக அவரது சக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
பாத்திமாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே இதுகுறித்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியும் என்று காவல் உதவி ஆணையர் ரதராமன் சிங் தெரிவித்துள்ளார்.






