என் மலர்tooltip icon

    உத்தரப் பிரதேசம்

    • சாமி சிலைகளை மர்ம நபர் திருடி சென்றுவிட்டார்.
    • முறையான சடங்குகளுடன் கோவிலில் சிலை மீண்டும் நிறுவப்பட்டு வருகிறது.

    உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலில் இருந்து சிலையைத் திருடிய திருடன் செவ்வாயன்று (அக்டோபர் 1, 2024) அதை அவனிடம் திருப்பிக் கொடுத்தான். திருடன் சிலையுடன் மன்னிப்புக் கடிதத்தையும் விட்டுச் சென்றுள்ளார். இதில் கோவிலில் நடந்த திருட்டு சம்பவத்தை தொடர்ந்து தனக்கு நடக்கும் அசம்பாவிதங்கள் குறித்து பேசியுள்ளார். முறையான சடங்குகளுடன் கோவிலில் சிலை மீண்டும் நிறுவப்பட்டு வருகிறது. ஒப்இந்தியாவிடம் பேசிய மஹந்த் ஜெய்ராம் தாஸ், திருடன் சிலையை ஆசிரமத்தின் வாயில் அருகே சணல் சாக்கில் வைத்து விட்டு சென்றதாக கூறினார்.

    உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டம் பிரயாக்ராஜ் பகுதியில் புகழ்பெற்ற கவுகாட் கஸ்லா ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்தில் கட்டப்பட்ட கோவிலின் கருவறையில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான ராதா-கிருஷ்ணரின் அஷ்டதாது சிலை நிறுவப்பட்டுள்ளது.

    நேற்று முந்தினம் இந்த சாமி சிலைகளை மர்ம நபர் திருடி சென்றுவிட்டார். இது குறித்து கோவில் நிர்வாகி மஹந்த் ஜெய்ராம் தாஸ் நவாப்கஞ்ச் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வந்தனர்.

    சிலை திருட்டு போனதால் கோவில் நிர்வாகி மஹந்த் ஜெய்ராம் தாஸ் சாப்பிடாமல் கவலையில் மூழ்கினார். ஆசிரமத்தில் இருந்த மற்ற சீடர்களும் சோகத்தில் ஆழ்ந்தனர். இந்த சூழலில் திருட்டு நடைபெற்ற மறுநாளான நேற்று கோவிலுக்கு அருகே ஒரு சாக்கு மூட்டை கிடந்தது. அப்பகுதியினர் அது என்னவாக இருக்கும் என்று அதை பிரித்து பார்த்தனர்.

    அந்த மூட்டைக்குள் கோவிலில் திருடப்பட்ட ராதை-கிருஷ்ணரின் அஷ்ட தாது சிலைகள் இருப்பதைக் கண்டு வியப்படைந்தனர். மேலும் அந்த மூட்டையில் இந்தியில் எழுதப்பட்ட ஒரு கடிதமும் இருந்தது. அந்த கடிதத்தில் எழுதப்பட்ட வாசங்களை அங்கிருந்தவர்கள் வாசித்தபோது மேலும் அதிர்ச்சி அடைந்தனர். கோவில் நிர்வாகிக்கு எழுதப்பட்டிருந்த அந்த கடிதத்தில், "நான் பாவம் செய்து விட்டேன். எனது அறியாமையால் கிருஷ்ணர், ராதை சிலைகளை திருடினேன். சிலை திருடிய நாளில் தொடங்கி கெட்ட கெட்ட கனவுகளால் அவதிப்பட்டு வருகிறேன்.

    மேலும் என்னால் தூங்கவோ சாப்பிடவோ நிம்மதியாக வாழவும் முடியவில்லை.

    பணத்துக்காக திருடியதால் என் மகனும் மனைவியும் கடுமையாக நோய்வாய் பட்டுள்ளனர். நான் சிலையை விற்கும் நோக்கத்தில் அதை கொள்ளையடித்தேன். என் தவறுக்கு மன்னிப்பு கேட்டு சிலையை விட்டு செல்கிறேன். என் தவறை மன்னித்து, சிலைகளை மீண்டும் கோவிலில் வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். எங்கள் குழந்தைகளை மன்னித்து சாமி சிலைகளை ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று எழுதப்பட்டிருந்தது.

    இதை தொடர்ந்து அந்த பகுதியினர் நவாப்கஞ்ச் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து சிலையையும், கடிதத்தையும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் அந்த சிலைகள் கோவில் நிர்வாகியிடம் ஒப்படைக்கப்பட்டது. சிலை திரும்ப வந்ததால் ஆசிரமத்தில் இருந்தனா இவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அதைத் தொடர்ந்து சிலைகளுக்கு ஜலாபிஷேகம் செய்து பூஜைகள் செய்து மீண்டும் பிரதிஷ்டை செய்தனர்.

    • டாஸ் வென்ற ரெஸ்ட் ஆப் இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய மும்பை அணியின் சர்பராஸ் இரட்டை சதமடித்தார்.

    லக்னோ:

    இரானி கோப்பை தொடருக்கான டெஸ்ட் போட்டி உத்தர பிரதேசத்தின் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை மற்றும் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ரெஸ்ட் ஆப் இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, மும்பை அணி முதலில் பேட் செய்தது. நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 68 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 237 ரன்கள் எடுத்திருந்தது. ரகானே 86 ரன்னும், சர்பராஸ் கான் 54 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்நிலையில், 2வது நாள் ஆட்டம் இன்று நடந்தது. சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரகானே 97 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய தனுஷ் கோட்யான் சர்பராஸ் கானுடன் ஜோடி சேர்ந்தார்.

    இருவரும் இணைந்து 7-வது விக்கெட்டுக்கு 183 ரன்கள் சேர்த்தனர். அரைசதம் அடித்த நிலையில் தனுஷ் கோட்யான் 64 ரன்னில் அவுட் ஆனார். ஷர்துல் தாக்கூர் 36 ரன்னிலும் அவுட் ஆகினர்.

    பொறுப்புடன் ஆடிய சர்பராஸ் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.

    இறுதியில், இரண்டாம் நாள் முடிவில் மும்பை அணி 138 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 536 ரன்கள் எடுத்துள்ளது. சர்பராஸ் கான் 221 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.

    ரெஸ்ட் ஆப் இந்தியா தரப்பில் முகேஷ் குமார் 4 விக்கெட்டும், யாஷ் தயாள், பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 

    • அவர் என்னை கொன்று விடுவதாகவும் மிரட்டினார்.
    • இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுவிட்டான்.

    உத்தர பிரதேச மாநிலத்தின் முசாபர்நகரில் உள்ள தனியார் வங்கியில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியை காட்டி ரூ. 40 லட்சம் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த சம்பவம் குறித்து கொள்ளையடிக்கப்பட்ட தனியார் வங்கி மேலாளர் காவல் அதிகாரிகளிடம் கூறும் போது, "முகமூடி அணிந்த மர்ம நபர் எனது அறைக்கு வந்து துப்பாக்கியை என் கழுத்தில் வைத்து, ரூ. 40 லட்சத்தை கொடுக்குமாறு மிரட்டல் விடுத்தார். பணத்தை கொடுக்காத பட்சத்தில் அவர் என்னை கொன்று விடுவதாகவும் மிரட்டினார்."

    "நான் காசாளர் ரோகித்-ஐ அழைத்து ரூ. 40 லட்சத்தை கொண்டுவரச் சொன்னேன். பணத்தை பெற்றுக் கொண்ட மர்ம நபர் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டி, இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுவிட்டான்," என கூறினார்.

     


    இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை பெற்று இருப்பதாகவும், அதில் உள்ள வீடியோக்களை கொண்டு குற்றவாளியை விரிவில் பிடிப்போம் என்று காவல் துறை துணை கண்காணிப்பாளர் கௌதம் ராம்சேவாக் தெரிவித்தார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

    பட்டப் பகலில் வங்கியில் நடைபெற்ற கொள்ளை சம்பம் குறித்து சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளையும் அவர் தனது பதிவில் இணைத்துள்ளார்.

    அதில், "உ.பி. குற்ற செய்தி: வங்கி பாதுகாவலரின் துப்பாக்கி கொள்ளையரின் துப்பாக்கியை கண்டு அஞ்சியது. ரூ. 40 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வீடியோவும் உண்மை, பாஜக ஆளும் உ.பி.-யில் சட்டம் ஒழுங்கு நிலைமையின் உண்மையும் இதுதான்," என்று குறிப்பிட்டுள்ளார். 

    • உள்ளூரில் உள்ள இந்து அமைப்புகள் தனது குடும்பத்துக்கு மிரட்டல் விடுத்தால்தான் கடந்த முறை பொய்யாகச் சாட்சி சொன்னேன்
    • லவ் ஜிகாத், மத மாற்றம் உள்ளிட்டவற்றை மேற்கோள்காட்டி அந்த முஸ்லிம் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்

    உத்தரப் பிரதேச மாநிலத்தில் லவ் ஜிகாத்தை சுட்டிக்காட்டி பெண்ணின் சாட்சியையும் மீறி இளைஞருக்கு நீதிபதி ஆயுள் தண்டனை கொடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பரைலியில் கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் 22 வயது இந்து பெண்ணை காதலித்த திருணம் செய்த நபர் முஸ்லீம் என்று பின்னரே தெரியவந்தது என்றும் அவர் ஏமாற்றப்பட்டதாகவும் வழக்குத் தொடரப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணையில் தோன்றிய அந்த பெண் புகாரில் கூறப்பட்டது உண்மைதான் என்று கடந்த ஜூலை 31 ஆம் தேதி சாட்சி சொல்லியிருந்தார். இதுதொடர்பான வழக்கு விசாரணையிலிருந்த நிலையில் தற்போது மீண்டும் நீதிமன்றத்தில் தோன்றிய அந்த பெண், தஉள்ளூரில் உள்ள இந்து அமைப்புகள் தனது குடும்பத்துக்கு மிரட்டல் விடுத்தால்தான் கடந்த முறை பொய்யாகச் சாட்சி சொன்னேன் பிறழ் சாட்சியம் வழங்கியுள்ளார்.

    ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிபதி ரவிக்குமார் திவாகர் லவ் ஜிகாத், மத மாற்றம் உள்ளிட்டவற்றை மேற்கோள்காட்டி அந்த முஸ்லிம் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளார். நீதிபதி ரவிக்குமார் கடந்த 2022 இல் ஞானவாபி மசூதியில் இந்து கோவில் இருபதுகுறித்து ஆய்வு நடந்த தீர்ப்பளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 50 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பள்ளியின் கதவுக்கு அருகில் வெயிலில் கூனிக் குறுகி முகத்தை மூடி அமர்ந்துள்ளனர்
    • பிரின்சிபல் எடுத்த அந்த 2 நிமிட வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

    உ.பியில் ஸ்கூல் ஃபீஸ் கட்டாத 50 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளை கொளுத்தும் வெயிலில் அமர வைத்து பிரின்சிபல் வீடியோ எடுத்துள்ளார். ஃபீஸ் கட்டவில்லை என்றால் இதுதான் நிலைமை என்று உணர்த்தும் வகையில் அந்த வீடியோவை அம்மாணவர்களின் பெற்றோர்களுக்கு அனுப்பிவைத்து மிரட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தரப் பிரதேச மாநிலம் சித்தாரத்நகரில் இயங்கி வரும் சியாம்ராஜி தனியார் பள்ளியில் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. 50 க்கும் மேற்பட்ட  மாணவ மாணவிகள் பள்ளியின் கதவுக்கு அருகில் வெயிலில் கூனிக் குறுகி தங்களது முகத்தை மூடி அமர்ந்திருக்கும்போது பிரின்சிபல் எடுத்த அந்த 2 நிமிட வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது

    மேலும் கல்விக் கட்டணம் செலுத்தாதவர்களை இந்த முறை மன்னிப்பேன் என்றும் ஆனால் இனிமேலும் கட்டவில்லை என்றால் அவர்கள் நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் வீடியோ மூலம் பெற்றோர்களுக்கு அந்த பிரின்சிபல் மிரட்டல் விடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக மாவட்ட கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.

    • இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்க்காக நாய்க்குட்டிக்கு ஒருவர் பீர் ஊட்டும் வீடியோ இணையத்தில் வைரலானது.
    • இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரப்பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது.

    உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்க்காக நாய்க்குட்டிக்கு ஒருவர் பீர் ஊட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    சிக்கந்தாரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாஸ்திரிபுரம் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதையடுத்து சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரப்பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது.

    • வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என இந்தியா முழுமையாக கைப்பற்றியது.
    • ஆட்டநாயகனாக ஜெய்ஸ்வாலும், தொடர் நாயகனாக அஸ்வினும் தேர்வு செய்யப்பட்டனர்.

    கான்பூர்:

    வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. இந்த தொடரின் ஆட்டங்கள் சென்னை மற்றும் கான்பூரில் நடந்தன. சென்னையில் நடந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை பெற்றிருந்தது.

    இரு அணிகளுக்கு இடையிலான 2வது போட்டி கடந்த 27-ம் தேதி கான்பூரில் தொடங்கியது. இந்த ஆட்டத்தின் கடைசி நாள் ஆட்டம் இன்று நடந்தது. இதில் 95 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 17.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 98 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என இந்தியா முழுமையாக கைப்பற்றியது.

    ஆட்டநாயகனாக ஜெய்ஸ்வாலும், தொடர் நாயகனாக அஸ்வினும் தேர்வு செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், வங்கதேசத்திற்கு எதிரான 2-வது போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவின் சாதனையை இந்தியா முறியடித்துள்ளது.

    சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பெற்ற அணிகள் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவை (179 வெற்றி) பின்னுக்குத் தள்ளி இந்தியா (180 வெற்றி) 4வது இடத்திற்கு முன்னேறியது.

    இந்தப் பட்டியலில் முதல் 3 இடங்களில் ஆஸ்திரேலியா (414 வெற்றி), இங்கிலாந்து (397 வெற்றி), வெஸ்ட் இண்டீஸ் (183 வெற்றி) ஆகிய அணிகள் உள்ளன. தென் ஆப்பிரிக்கா 179 வெற்றியுடன் 5வது இடத்தில் உள்ளது.

    • வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என கைப்பற்றியது.
    • வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசன் விரைவில் ஓய்வுபெற உள்ளார்.

    கான்பூர்:

    வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடி வருகிறது.

    இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரில் 1-0 என முன்னிலை வகித்தது.

    வங்கதேச அணியில் இடம்பிடித்து விளையாடி வரும் சீனியர் சுழற்பந்து வீச்சாளரான ஷகிப் அல் ஹசன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அடுத்த மாதம் வங்கதேசத்தில் நடைபெறும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடருடன் அவர் ஓய்வு பெறுவதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே, இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் நடந்தது. முதலில் ஆடிய வங்கதேசம் முதல் இன்னிங்சில் 233 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து அதிரடியாக ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 285 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. 2வது இன்னிங்சில் வங்கதேசம் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து ஆடிய இந்தியா 98 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன் தொடரை 2-0 என கைப்பற்றியது.

    இந்நிலையில், வெற்றி பெற்ற பிறகு இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோலி வங்கதேச வீரரான ஷகிப் அல் ஹசனைச் சந்தித்து, தான் கையெழுத்திட்ட பேட் ஒன்றை பரிசாக அளித்தார்.

    ஷகிப் அல் ஹசன் விரைவில் ஓய்வுபெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இலங்கையின் முத்தையா முரளிதரன் 11 முறை தொடர் நாயகன் விருது வென்றுள்ளார்.
    • இந்தியாவின் அஸ்வின் தற்போது முரளிதரனின் சாதனையை சமன் செய்துள்ளார்.

    கான்பூர்:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள வங்கதேசம் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

    இதற்கிடையே, வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என இந்தியா முழுமையாகக் கைப்பற்றி அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் சொந்த மண்ணில் இந்தியா தொடர்ச்சியாக கைப்பற்றிய 18-வது டெஸ்ட் தொடர் இதுவாகும்.

    2012-ம் ஆண்டில் இந்தியா 1-2 என்ற கணக்கில் இங்கிலாந்திடம் தொடரை பறிகொடுத்தது. அதில் இருந்து எழுச்சி பெற்று தொடர்ந்து வீறுநடை போட்டு வருகிறது.

    இரு டெஸ்டிலும் சேர்த்து 114 ரன்கள் மற்றும் 11 விக்கெட் வீழ்த்திய அஸ்வின் தொடர் நாயகன் விருது வென்றார்.

    இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை தொடர் நாயகன் விருது வென்ற முத்தையா முரளிதரனின் சாதனை அஸ்வின் சமன் செய்துள்ளார். இருவரும் 11 முறை தொடர் நாயகன் விருது வென்றுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2வது டெஸ்டின் முதல், இரண்டாம் இன்னிங்சில் அரை சதம் விளாசிய ஜெய்ஸ்வால் ஆட்டநாயகன் விருது வென்றார்.
    • இரு டெஸ்டிலும் சேர்த்து மொத்தம் 11 விக்கெட் வீழ்த்திய அஸ்வின் தொடர் நாயகன் விருது வென்றார்.

    கான்பூர்:

    வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என இந்தியா முழுமையாகக் கைப்பற்றியது.

    இந்த வெற்றியின் மூலம் சொந்த மண்ணில் இந்தியா தொடர்ச்சியாக கைப்பற்றிய 18-வது டெஸ்ட் தொடர் இதுவாகும்.

    2012-ம் ஆண்டில் இந்தியா 1-2 என்ற கணக்கில் இங்கிலாந்திடம் தொடரை பறிகொடுத்தது. அதில் இருந்து எழுச்சி பெற்று தொடர்ந்து வீறுநடை போட்டு வருகிறது. இந்த 12 ஆண்டு காலகட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 தடவை தொடரை வசப்படுத்தியதும் அடங்கும்.

    இந்த தொடரில் முதல் மற்றும் இரண்டாம் இன்னிங்சில் அரை சதம் விளாசிய இந்திய பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் ஆட்டநாயகன் விருது வென்றார்.

    இரு டெஸ்டிலும் சேர்த்து 114 ரன்கள் மற்றும் 11 விக்கெட் வீழ்த்திய அஸ்வின் தொடர் நாயகன் விருது வென்றார்.

    • இந்திய அணிக்கு 95 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
    • இந்தியா 17.2 ஒவரில் 3 விக்கெட்டுக்கு 98 ரன்கள் எடுத்து வென்றது.

    கான்பூர்:

    இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கடந்த 27-ம் தேதி தொடங்கியது.

    முதலில் பேட் செய்த வங்கதேசம் அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 107 ரன் எடுத்து இருந்தது. மழையால் முதல் நாள் ஆட்டம் பாதிக்கப்பட்டது. 2-வது நாள் மற்றும் 3-வது நாள் ஆட்டமும் மழையால் ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

    நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தில் வங்கதேசம் 233 ரன்னில் ஆல் அவுட் ஆனது. மொமினுல் ஹக் சதம் (107)அடித்தார்.

    இந்தியா சார்பில் பும்ரா 3 விக்கெட்டும், முகமது சிராஜ், அஸ்வின், ஆகாஷ் தீப் தலா 2 விக்கெட்டும், ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, களமிறங்கிய இந்தியா தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது.

    இறுதியில், இந்திய் அணி முதல் இன்னிங்சில் 34.4 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 285 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. இது வங்காளதேச அணியின் ஸ்கோரைவிட 52 ரன் கூடுதலாகும்.

    தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம் அணி அஸ்வின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 2 விக்கெட்டுக்கு 26 ரன் எடுத்திருந்தது.

    இந்நிலையில், 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. சிறப்பாக விளையாடிய ஷத்மான் அரை சதமடித்து ஆட்டம் இழந்தார். தனி ஆளாகப் போராடிய ரஹிம் 37 ரன்னில் வெளியேறினார். இதனால் வங்கதேச அணி 2வது இன்னிங்சில் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    இந்திய அணி சார்பில் ஜடேஜா, அஸ்வின், பும்ரா ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 95 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ரோகித் சர்மா 8 ரன்னிலும், சுப்மன் கில் 6 ரன்னிலும் அவுட்டாகினர்.

    ஜெய்ஸ்வால், விராட் கோலி ஜோடி பொறுப்புடன் ஆடியது. ஜெய்ஸ்வால் அரை சதம் கடந்து 51 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில் இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 98 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், தொடரை 2-0 என முழுமையாகக் கைப்பற்றி அசத்தியது.

    மழை காரணமாக டிராவில் முடியும் என நினைத்த இந்தப் போட்டியை இந்தியா வெற்றியுடன் முடித்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    • டார்கெட்டை நான் முடிக்கவில்லை என்றால் என்னை பணிநீக்கம் செய்துவிடுவதாக உயர் அதிகாரிகள் மிரட்டுகின்றனர்
    • மனைவி மற்றும் 2 குழந்தைகளை மற்றொரு அறையில் பூட்டி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார்

    பைனான்ஸ் நிறுவனம் 

    உத்தரப் பிரதேசத்தில் பைனான்ஸ் நிறுவன ஊழியர் பணிச்சுமையினால் கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பணிச்சூழல் மீதான கேள்விகளை அதிகரித்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில்  தனியார் பைனான்ஸ் கடன் நிறுவனத்தில் ஏரியா மேனேஜராக பணியாற்றி வந்த 42 வயது ஊழியர் தருண் சக்சேனா நேற்று அதிகாலை தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் கிடந்தார்.

    தற்கொலை கடிதம் 

    மனைவி மற்றும் 2 குழந்தைகளை மற்றொரு அறையில் பூட்டி வைத்துவிட்டு அவர் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிகிறது. வீட்டில் கண்டெடுக்கப்பட்ட அவரது தற்கொலை கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது, கடந்த 45 நாட்களாக நான் தூங்கவில்லை. சரியாக சாப்பிடவும் இல்லை. நான் கடுமையான மன உளைச்சலில் இருக்கிறேன். வேலையில் கொடுக்கப்பட்ட டார்கெட்டை நான் முடிக்கவில்லை என்றால் என்னை பணிநீக்கம் செய்துவிடுவதாக உயர் அதிகாரிகள் மிரட்டுகின்றனர் என்று எழுதிவைத்துள்ளார்.

    டார்கெட் மீட்டிங் 

    உயிரிழந்தவரின் உறவினரும் அவருடன் வேலை செய்பவருமான தருண் இதுகுறித்து பேசுகையில், அவர் மேல் அதிகாரிகள் அவருக்கு மன ரீதியான அழுத்தத்தை கொடுத்துவந்தனர். நேற்று காலை கூட அவர் இறப்பதற்கு முன்பு அதிகாலை 6 மணிக்கு நடந்த வீடியோ மீட்டிங்கில், சரியான ஃபெர்பார்மன்ஸ் காட்டவில்லை என்றால் டிஸ்மிஸ் செய்துவிடுவோம் என்று மிரட்டினர். இதனாலேயே அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீஸ் பேசுகையில், அவரின்  குடும்பத்தினர் நிறுவனத்தில் மீது புகார் அளித்தால் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்துள்ளனர்.

    அதிகரிக்கும் பணிச்சுமை மரணங்கள் 

    இந்தியாவில் இதுபோன்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பணிச்சுமை மரணங்கள் கவலையளிப்பதாக மாறி வருகிறது. சமீபத்தில் புனேவில் எர்னஸ்ட் எங் நிறுவனத்தில் வேலை செய்து வந்த கேரளாவை சேர்ந்த 26 வயது இளம்பெண் பணிச்சுமையினால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டார். உத்தரப் பிரதேசத்தில் தனியார் வங்கி பெண் ஊழியர் பணியில் இருக்கும்போதே சேரில் இருந்து சரிந்து விழுந்து உயிரிழந்தார். நிர்வாகம் அளித்த அதிக பணிச்சுமையினால் அவர் மன அழுத்தத்தில் இருந்ததாக சக ஊழியர்கள் குற்றம்சாட்டினர்.

    ×