காதலிகளுக்கு காஸ்ட்லி கிஃப்ட் வாங்க வங்கியை கொள்ளையடிக்க முயன்ற இளைஞர் கைது

ஷாஹித் கான் என்ற இளைஞர் கனடாவில் உள்ள ஒரு பெண்ணை இன்ஸ்டாகிராமில் பேசி பழகி காதலித்துள்ளார்.அக்டோபர் 31 அன்று இரவு பஞ்சாப் நேஷனல் வங்கிக்குள் நுழைந்து அவர் கொள்ளையடிக்க முயன்றுள்ளார்.
காதலிகளுக்கு காஸ்ட்லி கிஃப்ட் வாங்க வங்கியை கொள்ளையடிக்க முயன்ற இளைஞர் கைது
Published on

கனடாவில் உள்ள தனது காதலிக்கு விலை உயர்ந்த பரிசுகளை வங்கி அனுப்புவதற்காக பஞ்சாப் நேஷனல் வங்கியில் உள்ள பணத்தை கொள்ளையடிக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

உத்தரபிரதேசத்தில் உள்ள பாரபங்கியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அப்துல் சமத் கான் என்கிற ஷாஹித் கான் என்ற இளைஞர் கனடா நாட்டில் உள்ள ஒரு பெண்ணுடன் இன்ஸ்டாகிராமில் பேசி பழகி காதலித்துள்ளார். தனது காதலிக்கு விலை உயர்ந்த பரிசுகளை வாங்கி அனுப்ப வேண்டும் என்பதற்காக பஞ்சாப் நேஷனல் வங்கியில் உள்ள பணத்தை கொள்ளையடிக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

அக்டோபர் 31 அன்று இரவு பஞ்சாப் நேஷனல் வங்கிக்குள் நுழைந்து கொள்ளையடிக்க முயன்றுள்ளார். ஆனால் பணம் உள்ள லாக்கரை அவரால் உடைக்கமுடியவில்லை. பின்னர் நவம்பர் 4-ம் தேதி வங்கி மீண்டும் திறக்கப்பட்டபோது வங்கி கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட அதிகாரிகள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வங்கி பகுதியில் பொருத்தப்பட்டிருந்த 70க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். சிசிடிவி காட்சிகளின் மூலம் குற்றவாளி ஷாஹித் கானை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர் உத்தரபிரதேசம் மற்றும் கேரளாவில் உள்ள மேலும் 2 பெண்களுடன் இன்ஸ்டகிராமில் நட்பாக பேசி வந்துள்ளார். அவர்களுக்கும் விலை உயர்ந்த பொருட்களை பரிசாக கொடுத்து ஈர்க்க விரும்பியுள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com