search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெஸ்ட் டிரைவ்"

    • அந்த வழியே வந்த மற்றொரு வாகனம் மீதும் கார் மோதியது.
    • டெஸ்ட் டிரைவுக்கு எடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கேரளா மாநிலம் கொச்சியில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவன கார் மாடல்கள் விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விலிங்டன் ஐலேண்ட் சாலையில் உள்ள கேந்திரிய வித்யாலயா மைதானத்திற்கு முன் இந்த விபத்து அரங்கேறியது.

    விபத்தில் சிக்கிய இரு கார்களும் மெர்சிடிஸ் பென்ஸ் பிரான்டின் விலை உயர்ந்த AMG மாடல்கள் ஆகும். அதிவேகத்தில் சீறிப்பாயும் திறன் கொண்ட இந்த மாடல்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கின. இந்த விபத்தின் போது, அந்த வழியே வந்த மற்றொரு வாகனம் மீதும் கார் மோதியுள்ளது.

    சம்பவத்தின் போது மெர்சிடிஸ் பென்ஸ் AMG GT 63 S E காரை பெண் ஒருவர் அருகாமையில் உள்ள ரெயில்வே கேட் பகுதியில் இருந்து வந்து கொண்டிருந்தது. சற்று வேகமாக வந்து கொண்டிருந்த கார் அங்கிருந்த பழைய ரெயில்வே தண்டாவள பகுதியின் மீது ஏறி தரையில் இருந்து மேலெழுந்து பிறகு கீழே இறங்கியது.

    காரை ஓட்டி வந்த பெண், அதனை கட்டுப்படுத்த தவறியதை அடுத்து அந்த வழியே வந்து கொண்டிருந்த வாகனம் ஒன்றின் மீது மோதியது. பிறகு அந்த பெண் காரை திருப்ப முயன்றார். அப்போது கார் திடீரென வலதுபுறம் திரும்பிய போது, எதிரே வந்த மற்றொரு மெர்சிடிஸ் பென்ஸ் கார் மாடலான SL55 மீது மோதியது. இந்த SL55 காரை, ஓட்டி வந்த நபர் அதனை டெஸ்ட் டிரைவுக்கு எடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    விபத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் GT 63 S E முன்பகுதி முழுமையாக சேதமடைந்தது. எதிரே வந்த SL55 முன்புற சக்கரம் மிக மோசமாக சேதமடைந்தது. விபத்தை ஏற்படுத்திய பெண் ஓட்டுநர் பலத்த காயங்களோடு அருகாமையில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், விபத்தில் சிக்கிய இரண்டு கார்களையும் கைப்பற்றி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

    விபத்தில் சிக்கிய மெர்சிடிஸி பென்ஸ் GT 63 S E விலை இந்தியாவில் ரூ. 3 கோடியே 30 லட்சம் ஆகும். இதே போன்று SL55 மாடலின் விலை ரூ. 2 கோடியே 44 லட்சம் ஆகும். இரு கார்களும் ஆடம்பர வசதிகள் நிறைந்த பெர்ஃபார்மன்ஸ் ரக மாடல்கள் ஆகும்.

    ×