உ.பி இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் சைக்கிள் சின்னத்தில் போட்டி: அகிலேஷ் யாதவ்

உத்தர பிரதேசத்தில் 9 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நவம்பர் 13-ல் நடைபெறுகிறது.இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து சமாஜ்வாதி களம் காண்கிறது.
உ.பி இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் சைக்கிள் சின்னத்தில் போட்டி: அகிலேஷ் யாதவ்
Published on

லக்னோ:

உத்தர பிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள 9 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நவம்பர் 13-ல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து சமாஜ்வாதி களம் காண்கிறது.

இங்கு 7 தொகுதிகளில் சமாஜ்வாதியும், 2 தொகுதிகளில் காங்கிரசும் போட்டியிடும் என தகவல் வெளியானது.

இந்நிலையில், நடைபெற உள்ள இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி 43 இடங்களைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com