'குட் டச், பேட் டச்' அம்பலப்படுத்திய பாலியல் வன்கொடுமை- ஆசிரியர் கைது

போலீசார் நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
'குட் டச், பேட் டச்' அம்பலப்படுத்திய பாலியல் வன்கொடுமை- ஆசிரியர் கைது
Published on

1 முதல் 3-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளை தகாத முறையில் தொடுவதை மற்றொரு ஆசிரியர் கண்டுபிடித்ததையடுத்து பள்ளி ஆசிரியர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் லலித்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

'குட் டச், பேட் டச்' குறித்து தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களை ஆசிரியர் ஒருவர் சந்தித்து உரையாற்றினார். அப்போது மாணவர்களுக்கு 'குட் டச், பேட் டச்' குறித்து கற்பிக்கப்பட்டது. அப்போது 1 முதல் 3-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் அந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் தவறான முறையில் ஈடுபட்டதை ஆசிரியரிடம் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து அந்த ஆசிரியர் இச்சம்பவம் குறித்து புகார் தெரிவித்தார். இருப்பினும் போலீசார் நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com