நீதிபதியுடன் வாக்குவாதம்.. வழக்கறிஞர்களை தடியடி நடத்தி கலைத்த போலீசார் - வீடியோ

போலீசார் தாக்கியதில் பல வழக்கறிஞர்கள் காயம் அடைந்தனர். போலீசார் தாக்கியதற்கு எதிராக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீதிபதியுடன் வாக்குவாதம்.. வழக்கறிஞர்களை தடியடி நடத்தி கலைத்த போலீசார் - வீடியோ
Published on

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் கூடியிருந்த வழக்கறிஞர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்றத்தில் உள்ள வழக்கறிஞர்களை போலீசார் தாக்கும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

வழக்கறிஞர்களை எதற்காக போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர் என்பதற்கான முழு விவரங்கள் தெரியவில்லை.

முதற்கட்ட தகவலின்படி ஜாமின் மனு தொடர்பாக நீதிபதிக்கும் வழக்கறிஞர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து வழக்கறிஞர்கள் பலர் நீதிமன்றத்திற்குள் கூடியுள்ளனர். இதனால் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நீதிபதி போலீசாரை அழைத்துள்ளார். இதனையடுத்து நீதிமன்ற வளாகத்தில் இருந்த வழக்கறிஞர்களை தடியடி நடத்தி போலீசார் கலைத்தனர் என்று சொல்லப்படுகிறது.

போலீசார் தாக்கியதில் பல வழக்கறிஞர்கள் காயம் அடைந்தனர். போலீசார் தாக்கியதற்கு எதிராக வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com