போலீஸ் கண் முன்னே பா.ஜ.க. எம்.எல்.ஏ.-வை ஓங்கி அறைந்த வழக்கறிஞர் - வீடியோ வைரல்

பாஜக எம்எல்ஏ யோகேஷ் வர்மாவை பொதுவெளியில் வழக்கறிஞர் ஒருவர் அறைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த சம்பவத்தின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
போலீஸ் கண் முன்னே பா.ஜ.க. எம்.எல்.ஏ.-வை ஓங்கி அறைந்த வழக்கறிஞர் - வீடியோ வைரல்
Published on

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் பாஜக எம்எல்ஏ யோகேஷ் வர்மாவை பொதுவெளியில் வழக்கறிஞர் ஒருவர் அறைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் வழக்கறிஞரை கடுமையாக தாக்கினர். பின்னர் போலீசார் இதில் தலையிட்டு சமாதானப்படுத்த முற்பட்டனர்.

இந்த சம்பவத்தின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

எம்எல்ஏவை அறைந்த வழக்கறிஞர் உள்ளூர் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் அவதேஷ் சிங் என தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம் அப்பகுதியில் நகர கூட்டுறவு வங்கி நிர்வாகக் குழு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

நகர கூட்டுறவு வங்கி நிர்வாகக் குழு தேர்தல் நடைமுறையில் மோசடி நடந்துள்ளது ஆகவே தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று எம்எல்ஏ யோகேஷ் வர்மா கடிதம் எழுதியிருந்தார். ஆனால், திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும் என்று கூடுதல் மாவட்ட நீதிபதி சஞ்சய் சிங் தெளிவுபடுத்தியுள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com