தண்டவாளத்தில் மண் குவியல்: லோகோ பைலட் துரித செயலால் விபத்து தவிர்ப்பு

சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்ததால் மணல் கொட்டப்பட்டிருக்கலாம் எனத் தகவல்.போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
தண்டவாளத்தில் மண் குவியல்: லோகோ பைலட் துரித செயலால் விபத்து தவிர்ப்பு
Published on: 

உத்தர பிரதேச மாநிலத்தில் தண்டவாளத்தில் மண்ணை கொட்டிய லாரி டிரைவர் தப்பி ஓடிய நிலையில், லோகோ பைலட் துரிதமாக செயல்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது.

உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்தில் உள்ள ரகுராஜ் சிங் ரெயில் நிலையே அருகே ரெயில் தண்டவாளத்தில் மண் குவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக லோகோ பைலட்டிற்கு தகவல் கிடைத்ததும், அவர் ரேபரேலியில் இருந்து ரகுராஜ் சிங் நிலையம் வரவிருந்த ரெயில்லை தகவல் கொடுத்து நிறுத்தினார்.

இதனால் பயணிகள் ரெயில் விபத்தில் இருந்து தப்பியது. பின்னர் தண்டவாளத்தில் கொட்டிய மணலை அகற்றியபின் ரெயில் சேவை தொடங்கியது.

அந்த பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்ததாகவும், அதற்கு மணல் கொண்டு வந்த லாரி டிரைவர் தண்டவாளத்தில் மணலை கொட்டிவிட்டு சென்றிக்கலாம் எனவும் உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

மணலை கொட்டிச் சென்ற டிரைவர் போலீசார் தேடிவருகின்றன. மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com