என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வெற்றி: தென் ஆப்பிரிக்கா சாதனையை முறியடித்த இந்தியா
- வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என இந்தியா முழுமையாக கைப்பற்றியது.
- ஆட்டநாயகனாக ஜெய்ஸ்வாலும், தொடர் நாயகனாக அஸ்வினும் தேர்வு செய்யப்பட்டனர்.
கான்பூர்:
வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. இந்த தொடரின் ஆட்டங்கள் சென்னை மற்றும் கான்பூரில் நடந்தன. சென்னையில் நடந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை பெற்றிருந்தது.
இரு அணிகளுக்கு இடையிலான 2வது போட்டி கடந்த 27-ம் தேதி கான்பூரில் தொடங்கியது. இந்த ஆட்டத்தின் கடைசி நாள் ஆட்டம் இன்று நடந்தது. இதில் 95 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 17.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 98 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என இந்தியா முழுமையாக கைப்பற்றியது.
ஆட்டநாயகனாக ஜெய்ஸ்வாலும், தொடர் நாயகனாக அஸ்வினும் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில், வங்கதேசத்திற்கு எதிரான 2-வது போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவின் சாதனையை இந்தியா முறியடித்துள்ளது.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பெற்ற அணிகள் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவை (179 வெற்றி) பின்னுக்குத் தள்ளி இந்தியா (180 வெற்றி) 4வது இடத்திற்கு முன்னேறியது.
இந்தப் பட்டியலில் முதல் 3 இடங்களில் ஆஸ்திரேலியா (414 வெற்றி), இங்கிலாந்து (397 வெற்றி), வெஸ்ட் இண்டீஸ் (183 வெற்றி) ஆகிய அணிகள் உள்ளன. தென் ஆப்பிரிக்கா 179 வெற்றியுடன் 5வது இடத்தில் உள்ளது.