search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rain floods"

    • இதுவரை மத்திய அரசு வெள்ள பாதிப்புக்கு ஏற்றபடி நிவாரண தொகையை இன்னும் ஒதுக்கவில்லை.
    • வெள்ள நிவாரணம் தொடர்பாக போதுமான நிதி வழங்க வலியுறுத்தி முதலமைச்சர் மத்திய அரசிடம் வேண்டுகோள் வைத்திருந்தார்.

    சென்னை:

    மிச்சாங் புயல் காரணமாக கடந்த 3 மற்றும் 4 தேதிகளில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தது.

    இதில் பொதுமக்களின் உடமைகளுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு ரூ.6 ஆயிரம் நிவாரணத்தொகையை அறிவித்து வழங்கியது.

    இந்நிலையில் அதே டிசம்பர் 17 மற்றும் 18 தேதிகளில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்ததால் 2 மாவட்டங்களிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

    இரண்டு மாவட்டங்களிலும் பெரும் சேதம் ஏற்பட்டது. இதனால் அதிக பாதிப்புக்கு உள்ளான இடங்களுக்கு ரூ.6 ஆயிரம், குறைந்த பாதிப்புக்கு உள்ளான இடங்களுக்கு ரூ.1000 நிவாரண தொகையை தமிழக அரசு வழங்கியது.

    அந்த சமயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழக மழை வெள்ள பாதிப்பு பற்றி எடுத்துக்கூறினார்.

    தமிழகத்தில் ஒரே மாதத்தில் ஏற்பட்ட இயற்கை பேரிடர்களுக்கு மத்திய அரசிடம் இருந்து நிவாரணத் தொகையாக ரூ.37,907.19 கோடி வழங்குமாறு தமிழக அரசு கோரிக்கை வைத்தது.

    ஆனால் இதுவரை மத்திய அரசு வெள்ள பாதிப்புக்கு ஏற்றபடி நிவாரண தொகையை இன்னும் ஒதுக்கவில்லை.

    இதனால் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழக அரசு கோரிய வெள்ள நிவாரணத் தொகையை வழங்க வலியுறுத்து வதற்காக உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்திக்க தமிழக அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு முடிவு செய்தது.

    அமித் ஷாவை நேரில் சந்திக்க நேரம் ஒதுக்கி தருமாறும் குழு கேட்டுக் கொண்டனர்.

    அதன்படி டெல்லியில் தி.மு.க. பாராளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையிலான அனைத்துக் கட்சி எம்.பி.க்களின் குழுவை சந்திக்க உள்துறை மந்திரி அமித்ஷா நாளை (சனிக்கிழமை) பிற்பகல் 3.30 மணிக்கு நேரம் ஒதுக்கி கொடுத்து உள்ளார். அமித்ஷாவின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.

    அமித்ஷாவை சந்திக்கும் குழுவில் டி.ஆர்.பாலு (தி.மு.க.), ஜெயக்குமார் (காங்கிரஸ்), வைகோ (ம.தி.மு.க.), சுப்பராயன் (இந்திய கம்யூனிஸ்டு), பி.ஆர்.நடராஜன் (இந்திய மார்க்சிஸ்ட்), ரவிக்குமார் (வி.சி.க), நவாஸ்கனி (முஸ்லிம் லீக்), சின்ராஜ் (கொங்குநாடு மக்கள் கட்சி) ஆகிய 8 பேர் அமித்ஷாவை சந்திக்க செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து டி.ஆர்.பாலு எம்.பி. கூறுகையில், வெள்ள நிவாரணம் தொடர்பாக போதுமான நிதி வழங்க வலியுறுத்தி முதலமைச்சர் மத்திய அரசிடம் வேண்டுகோள் வைத்திருந்தார். அதை வலியுறுத்துவதற்காக உள்துறை மந்திரி அமித்ஷாவை நாளை அவரது வீட்டில் சந்திக்க உள்ளோம் என்றார்.

    • வெள்ளம் படிப்படியாக வடிந்ததையொட்டி சாலை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
    • 400-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இரவு, பகலாக சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் கனமழையால் பல்வேறு இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டது.

    கனமழையால் கரைபுரண்டு ஓடிய வெள்ளப்பெருக்கால் ஏரல் பஜார் பகுதி முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. மேலும் காட்டாற்று வெள்ளத்தால் ஏரல் தாமிரபரணி ஆற்றுப்பாலம் அடித்து செல்லப்பட்டது.

    இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. வெள்ளம் படிப்படியாக வடிந்ததையொட்டி சாலை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் போக்குவரத்தை தொடங்குவதற்காக ஏரல் தாமிரபரணி ஆற்றுப்பாலம் அருகே இருந்த தரைமட்ட பாலத்தை சீரமைக்கும் பணிகள் தொடங்கியது.

    இதற்காக 400-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இரவு, பகலாக சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து தற்காலி கமாக அந்த தரைமட்ட பாலம் சீரமைக்கப்பட்டது. இதனைதொடர்ந்து 7 நாட்களுக்கு பின்னர் ஏரல் தரைமட்ட பாலம் வழியாக போக்குவரத்து தொடங்கி உள்ளது.

    • தெருக்களில் 1000 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மழைநீருடன் கழிவு நீர் கலந்து குளம்போல் தேங்கியுள்ளது.
    • வேப்பம்பட்டு ராமகிருஷ்ணா நகர் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கி உள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் மிக்ஜம் புயல் காரணமாக கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் மாவட்டத்தில் பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழை நீர் இன்னும் வடியாமல் உள்ளது. பொது மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

    காக்களூர் ஊராட்சி ம.பொ.சி.நகர், வி.எம்.நகர், விவேகானந்தா ஆகிய பகுதி களில் 1000-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் காக்களூர் ஏரி நிரம்பி தண்ணீர் புகுந்தது. இன்னும் தண்ணீர் வடியாமல் தேங்கி உள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதற்கிடையே வெள்ளம் பாதித்த காக்களூர் பகுதியில் அமைச்சர் மூர்த்தி மற்றும் பூந்தமல்லி எம்.எல்.ஏ.கிருஷ்ண சாமி, கூடுதல் ஆட்சியர் சுகபுத்திரா ஆகியோர் ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகள் குறித்து கேட்டனர். அப்போது பொது மக்கள் தேங்கிய மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினர். உடனடியாக அந்த பகுதியில் தண்ணீரை வெளியேற்ற அமைச்சர் மூர்த்தி அதிகாரிக ளுக்கு உத்தரவிட்டார்.

    இதேபோல் திருமழிசை பேரூராட்சியில் 100க்கும் மேற்பட்ட தெருக்களில் 1000 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மழைநீருடன் கழிவு நீர் கலந்து குளம்போல் தேங்கியுள்ளது. அப்பகுதி மக்கள் நடந்து செல்ல கூட முடியாத அளவுக்கு கடும் அவதி அடைந்து உள்ளனர். மேலும் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. திருமழிசையில் ஆவின் பால் வழக்கத்தை விட ரூ.5 கூடுதலாகவும், குடிநீர் கேன்கள் ரூ.10 கூடுதலாகவும் விற்பனை செய்யப்பட்டது. வேப்பம்பட்டு ராமகிருஷ்ணா நகர் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கி உள்ளது. தண்ணீரை வெளியேற்ற அதிகாரிகள் உடன டியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
    • 15 அடி வெள்ள நீரில் சிக்கிய தாய், தந்தை, தங்கையை காப்பாற்றிய மகன் அருண் நீரில் மூழ்கினார்.

    சென்னை:

    மிச்சாங் புயல் தமிழக வட மாவட்டங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் புயல் காரணமாக அதிகனமழை கொட்டி தீர்த்தது.

    புயல் கரையை கடந்து மழை ஓய்ந்தபிறகும் வெள்ளம் வடியாததால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

    இந்நிலையில் சென்னை பள்ளிக்கரணையில் மழை வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

    பள்ளிக்கரணையில் 15 அடி வெள்ள நீரில் சிக்கிய தாய், தந்தை, தங்கையை காப்பாற்றிய மகன் அருண் நீரில் மூழ்கினார். 3 நாட்களுக்கு பிறகு அவரது உடல் வெள்ள நீரில் மிதந்து வந்தது.

    காணாமல் போன மகனை கண்டுபிடிக்க அதிகாரிகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று மகனை இழந்த வயதான பெற்றோர், தங்கை, உறவினர்கள் கண்ணீர் மல்க வேதனை தெரிவித்தனர்.

    • கடந்த 2 நாட்களாக மழை வெள்ளம் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து முடங்கியது.
    • நீண்ட தூரம் சுற்றிச் செல்லும் சிரமம் குறைந்ததால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    திருப்பதி:

    மிச்சாங் புயல் காரணமாக ஆந்திராவில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ததால் கடும் பாதிப்பு ஏற்பட்டது.

    திருப்பதி அருகே உள்ள நாயுடு பேட்டை தடா இடையே காலங்கி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சென்னை-நெல்லூர் தேசிய நெடுஞ்சாலையில் 4 அடி உயரத்திற்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    இதனால் சூலூர்பேட்டை சுங்க சாவடி அருகே உள்ள தனியார் என்ஜினியரிங் கல்லூரி அருகே சாலை சேதம் அடைந்தது.

    அந்த வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் மாற்று பாதையில் திருப்பி அனுப்பப்பட்டன.

    கடந்த 2 நாட்களாக மழை வெள்ளம் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து முடங்கியது.

    நேற்று காலங்கி ஆற்றில் மழை வெள்ளம் குறைந்தது. இதையடுத்து நாயுடு பேட்டை டிஎஸ்பி ராஜகோபால் தலைமையிலான போலீசார் சேதமடைந்த சாலைகளில் மணல் மூட்டைகளை அடுக்கி தற்காலிகமாக சீரமைத்தனர்.

    மேலும் அப்பகுதியில் போலீசார் நிற்கவைக்கப்பட்டு அந்த வழியாக வரும் வாகனங்கள் சாலை சேதம் அடைந்த இடத்தில் மெதுவாக செல்லுமாறு அறிவுறுத்தினர்.

    இதனால் சென்னை-நெல்லூர் சாலையில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. நீண்ட தூரம் சுற்றிச் செல்லும் சிரமம் குறைந்ததால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

    • மழை நீரினால் வடிகால்களில் அடைப்பு ஏற்படும் நிலை உள்ளது.
    • வெள்ளக்காலங்களில் மழைநீர் கிராமங்களுக்குள் புகும் அபாயம் உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை அருகே கீழ்வேளூர் ஒன்றியம் இலுப்பூர் ஊராட்சி கடுவையாற்றில் ஆகாயத்தாமரை செடிகள் அதிக அளவில் வளர்ந்து புதர் மண்டி கிடந்தது.

    இந்த ஆகாயத்தாமரையினால் வடகிழக்கு பருவமழையையொட்டி மழை நீரினால் வடிகால்களில் அடைப்பு ஏற்படும் நிலை உள்ளது.

    மேலும் வெள்ளக்காலங்களில் மழைநீர் கிராமங்களுக்குள்புகும் அபாயம் உள்ளது.

    எனவே ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    இதை தொடர்ந்து கடுவையாற்றில் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும் பணியில் பொதுத்துறையினர் ஈடுப்பட்டனர்.

    இந்த பணியை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது ஆகாயத்தாமரை செடிகளை விரைவில் அகற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின் போது நாகை மாலி. எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, பொதுப்ப ணித்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் விழுந்து எழுந்து செல்லும் காட்சி பரிதாபமாக உள்ளது.
    • பண்ருட்டில் உள்ள அனைத்து திருமண நிலையங்களிலும் திருமணம் நடந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி மற்றும் சுற்றுப்புற வட்டார கிராமங்களில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர் ஹெட்லைட்களை எரியவிட்டபடி ஊர்ந்து சென்றனர். பண்ருட்டி - கடலூர் ரோடு, சென்னை ரோடு, கும்பகோணம் ரோடு, காந்தி ரோடு, ராஜாஜி ரோடு ஆகிய ரோடுகளில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. பண்ருட்டி-சென்னை ரோட்டில் கண்டரக்கோட்டை வரையிலும், பண்ருட்டி-கும்பகோணம் ரோட்டில் கொள்ளுக்காரன் குட்டை வரையிலும் குண்டும் குழியுமான சாலையில் மழை நீர் தேங்கி சேறும் சகதியுமாகி உள்ளது.

    எல்.என்.புரம், கும்பகோணம் ரோடு ரவுண்டானா பகுதியில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் விழுந்து எழுந்து செல்லும் காட்சி பரிதாபமாக உள்ளது. மேலும், இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால் பண்ருட்டில் உள்ள அனைத்து திருமண நிலையங்களிலும் திருமணம் நடந்தது. இதில் கலந்து கொள்ள வெளியூரில் டூவீலரில் வந்த உறவினர்கள் கடும் அவதிக்குள்ளாயினர். நகரில் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில் கொட்டும் மழையி லும் அதிகாரிகள் ஊழிய ர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    • கோவிலை சுற்றி வர பக்தர்கள் மிகவும் சிரமம்
    • சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் பகுதியில் ஊரிண் நடுவே லட்சுமி நாராயணன் பெருமாள் கோயில் உள்ளது. இதன் கும்பாபிஷேகம் முடிந்து பல வருடங்களாகிறது.மீண்டும் கும்பாபிஷேகம் செய்ய இந்து சமய அறநிலையத்துறை கோயில் என்பதால் யாரும் முயற்சி செய்யவில்லை. இங்கு கோபுரங்கள் மீது செடி கொடிகள் வளர்ந்து வருகிறது.

    இதனுள்ளே ஆஞ்சநேயர், ஐயப்பன், விநாயகர், ஆண்டாள், நவக்கிரகங்கள், துர்க்கை அம்மன் சன்னதி தனித்தனியே உள்ளது. வெள்ளி, செவ்வாய், ஞாயிற்றுக்கிழமைகளில் பெண்கள் ராகுகால பூஜை வழிபாடு செய்வர். ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் குருசாமிகளை அழைத்து வந்து மாலை அணிந்து செல்வர்.

    ஐயப்ப பக்தர்களின் பொது பூஜை செய்து இருமுடி கட்டி செல்வது வழக்கம். இவ்வளவு வசதிகள் இருந்தும் இக்கோயிலில் போதிய பராமரிப்பு இல்லாத நிலையில் தெருவை விட கோயில் உயரம் சற்று குறைவாக உள்ளது.

    இந்த நிலையில் கண்ணமங்கலம் பகுதியில் பெய்த மழையால் வெள்ளம் கோவிலுக்குள் புகுந்தது.

    இதனால் மழைநீர் வெளியேற வழியில்லை என்பதால் அங்கு குட்டை போல தேங்கி நிற்கிறது. இங்கு வழிபாடு செய்ய வரும் பக்தர்கள் கோவிலை சுற்றி வர மிகவும் சிரமப்படும் நிலை உள்ளது.

    இதனை சீரமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வாடிப்பட்டி பகுதியில் கொட்டி தீர்த்த மழையால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
    • இதனால் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம் முழுவதும் தண்ணீர் தேங்கியது.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் நேற்று இரவு 9 மணி முதல் 10 மணி வரை பலத்த மழை கொட்டி தீர்த்தது. அதன்பின் விடிய, விடிய தூறல் மழை பெய்து கொண்டே இருந்தது.

    இந்த மழையின் போது குலசேகரன் கோட்டை மூப்பர் தெருவை சேர்ந்த மருதான் மகன் சின்னகாளை (60) விவசாயக் கூலி. அவரது மனைவி சின்னம்மாள் (55) ஆகியோர் ஓட்டு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர்.திடீரென்று வீட்டில் ஒரு பகுதியில் இருந்த கரம்பை மண்ணால் கட்டப்பட்டிருந்த சுவர் சட, சட என்ற சத்தத்துடன் இடிந்து விழுந்தது.

    சத்தம் கேட்டு கணவன்- மனைவி அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். அந்த சுவர் வீட்டின் உள்பகுதியில் விழாமல் தெருவில் விழுந்ததால் உயிர் சேதம் ஏற்படவில்லை. அந்த சந்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 சைக்கிள்கள் சேதம் அடைந்தன.

    அதேபோல் சிறுமலை காட்டாற்று வெள்ளம் ஆதான் ஒடை வழியாக சென்றது. இதனால் அரசுஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம் முழுவதும் தண்ணீர் தேங்கியது.

    தாதம்பட்டி மந்தையில் உள்ள ஒட்டான் குளம் நிரம்பி வழிந்தது. நீரேத்தான் நவநீத பெருமாள் கோவில், வருவாய் ஆய்வாளர் அலுவலக பகுதி மற்றும் தாழ்வாக உள்ள வீடுகளுக்குள்ளும் மழை நீர் புகுந்தது. மின்வாரிய அலுவலகம் நுழைவாயில் பகுதியில் இருந்த பள்ளத்தில் தண்ணீர் தேங்கியது.

    தற்போது விவசாயம் செய்யப்பட்ட வயல்களில் நெற்பயிர்கள் பால் பிடிக்கும் பருவத்தில் உள்ளதால் தேங்கிய மழைநீர் வெட்டிவிடப்பட்டும், இந்த பகுதியில் உள்ள மழை நீர் எல்லாம் துருத்தி ஓடை வழியாக வடகரை கண்மாய் சென்றது.

    பல இடங்களில் மர கொப்புகள் முறிந்து விழுந்து மின்தடை ஏற்பட்டது. தகவல் அறிந்த மின்வாரிய பணியாளர்கள் உடனடியாக கொப்புகளை அகற்றி மின்சாரத்தை சீரமைத்தனர்.

    • விடிய விடிய பரவலாக பெய்தது
    • விவசாயம் பாதிப்பு

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி காவேரிப்பாக்கம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் திடீரென பலத்த மழை பெய்தது.

    இரவு முழுவதும் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது இந்நிலையில் தொடர்ந்து காலை முதலே மழை பெய்து வருவதால் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    ஆடி மாதத்தில் பெய்துவரும் கனமழையால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.

    இதனால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் திணறி வருகின்றனர்.

    கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பாக மழையால் சிரமபட்டனர்.

    குடகு மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பு குறித்து குமாரசாமி தலைமையில் இன்று(சனிக்கிழமை) உயர்மட்ட ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நடக்கிறது. #KarnatakaRains
    பெங்களூரு :

    குடகு மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மக்கள் மழை வெள்ளத்தில் சிக்கி தவிக்கிறார்கள். அவர்களை மீட்கும் பணியில் இயற்கை பேரிடர் குழு மற்றும் ராணுவ வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தலைமை செயலாளர் விஜயபாஸ்கருடன் முதல்-மந்திரி குமாரசாமி நேற்று பெங்களூருவில் ஆலோசனை நடத்தினார். இதுபற்றி குமாரசாமி ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    குடகு மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவ அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளன. வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க ராணுவத்தினர், இயற்கை பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதுபற்றி தலைமை செயலாளருடன் ஆலோசனை நடத்தி விவரங்களை கேட்டு பெற்றேன். மைசூரு, மண்டியா, ராமநகர், ஹாசன் மாவட்டங்களை சேர்ந்த வருவாய்த்துறை மற்றும் வனத்துறை ஊழியர்கள் குடகிற்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

    நிவாரண முகாம்களில் தேவையான உணவு பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. 200 தன்னார்வ தொண்டர்கள் குடகு மாவட்டத்திற்கு மைசூருவில் இருந்து செல்கிறார்கள். மந்திரிகள் ஆர்.வி.தேஷ்பாண்டே, எச்.டி.ரேவண்ணா, சா.ரா.மகேஷ் ஆகியோர் குடகிலேயே தங்கி நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். குடகு மாவட்ட மழை வெள்ள பாதிப்பு குறித்து எனது தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நாளை(அதாவது இன்று) காலை 11.30 மணிக்கு பெங்களூருவில் நடக்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #KarnatakaRains
    ×