என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பள்ளிக்கரணையில் சோகம்: மழை வெள்ளத்தில் குடும்பத்தை காப்பாற்றி தன்னுயிரை நீத்த மகன்
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
- 15 அடி வெள்ள நீரில் சிக்கிய தாய், தந்தை, தங்கையை காப்பாற்றிய மகன் அருண் நீரில் மூழ்கினார்.
சென்னை:
மிச்சாங் புயல் தமிழக வட மாவட்டங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் புயல் காரணமாக அதிகனமழை கொட்டி தீர்த்தது.
புயல் கரையை கடந்து மழை ஓய்ந்தபிறகும் வெள்ளம் வடியாததால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
இந்நிலையில் சென்னை பள்ளிக்கரணையில் மழை வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பள்ளிக்கரணையில் 15 அடி வெள்ள நீரில் சிக்கிய தாய், தந்தை, தங்கையை காப்பாற்றிய மகன் அருண் நீரில் மூழ்கினார். 3 நாட்களுக்கு பிறகு அவரது உடல் வெள்ள நீரில் மிதந்து வந்தது.
காணாமல் போன மகனை கண்டுபிடிக்க அதிகாரிகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று மகனை இழந்த வயதான பெற்றோர், தங்கை, உறவினர்கள் கண்ணீர் மல்க வேதனை தெரிவித்தனர்.
Next Story






