search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Goods Train"

    • டெல்லியில் இன்று ஜாகிரா மேம்பாலம் அருகே சரக்கு ரயில் சென்று கொண்டிருந்த போது தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
    • ரயில் விபத்துக்குள்ளான பகுதியில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

    டெல்லியில் சரக்கு ரயிலின் 10-க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டு விபத்துகுள்ளானது. ஜாகிரா மேம்பாலம் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. மீட்பு பணியில் ரயில்வே போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    டெல்லியில் இன்று ஜாகிரா மேம்பாலம் அருகே சரக்கு ரயில் சென்று கொண்டிருந்த போது தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. சரக்கு ரயில் என்பதால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் ரயில்வே போலீசார் மீட்பு பணிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    ரயில் விபத்துக்குள்ளான பகுதியில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் சில ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது. மேலும் ஒரு சில ரயில்கள் வேறு பாதையில் திசை திருப்பி அனுப்பப்படுகிறது.

    மேலும் இன்று, டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் திருமண விழாவிற்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பந்தல் இடிந்து விழுந்ததில் 8 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • தடுப்பு கட்டைகள் உடைந்து விழுந்ததில் அருகே நின்றிருந்த இருசக்கர வாகனங்கள் நசுங்கியது.
    • சரக்கு ரெயில் விபத்து குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இருந்து காயில் ஏற்றி வந்த சரக்கு ரெயில் காஞ்சிபுரம் பழைய ரெயில் நிலைத்தில் விபத்தில் சிக்கியது. தண்டவாளத்தில் இருந்த தடுப்புகளை உடைத்து கொண்டு அருகில் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதியது.

    வாகனங்கள் மீது ரெயில் மோதியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்ட நிலையில், ரெயில் தண்டவாளத்தில் இருந்து வெளியேறி சாலைக்கு வந்து நின்றது. சரக்கு ரெயில் தடம்புரண்டு விபத்தில் சிக்கிய சம்பவம் குறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • ஒரு ரெயில் மீது பின்னால் வந்த மற்றொரு ரெயில் மோதி விபத்து
    • அந்த வழித்தடத்தில் 14 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    மேற்கு வங்காள மாநிலம் பங்குராவில் உள்ள ஒண்டா ரெயில் நிலையத்தில் இரண்டு  ரெயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 12 பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. ஒரு ரெயில் மீது பின்னால் வந்த ரெயில் பயங்கரமாக மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சரக்கு ரெயில்கள் என்பதால் உயிரிழப்பு ஏதும் இல்லை. டிரைவர் ஒருவருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் கராக்புர்- பங்குரா- அத்ரா ரெயில் பாதையில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 14 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 3 ரெயில்கள் மாற்றிவிடப்பட்டுள்ளன என முதற்கட்ட தகவல் வெளியாகின.

    இதுகுறித்து தென்கிழக்கு ரெயில்வே ''ரெயில்வே பராமரிப்பு ரெயில் ஒண்டகிராம் ரெயில் நிலையத்தில் இருந்து மெதுவாக சென்று கொண்டிருந்தது. அப்போது, சிகப்பு விளக்கு போடப்பட்டிருந்த நிலையில், சரக்கு ரெயில் அதை கவனிக்காமல் வந்தது. பிரேக் பிடிக்க முயன்றும் முடியாமல் மோதிவிட்டது. இதில் 8 பெட்டிகள் தடம் புரண்டன'' எனத் தெரிவித்துள்ளது.

    • தூத்துக்குடி கதிர்வேல் நகர் அருகே உள்ள புஷ்பாநகரை சேர்ந்தவர் அருண்குமார், கட்டிடத்தொழிலாளி.
    • மீளவிட்டான்- மடத்தூர் இடையே உள்ள ரெயில்வே தண்டாவாளத்தில் பிணமாக கிடந்தார்

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கதிர்வேல் நகர் அருகே உள்ள புஷ்பாநகரை சேர்ந்தவர் அருண்குமார் ( வயது 28). கட்டிடத்தொழிலாளி.

    இவர் இன்று அதிகாலை மீளவிட்டான்- மடத்தூர் இடையே உள்ள ரெயில்வே தண்டாவாளத்தில் பிணமாக கிடந்தார். சம்பவ இடத்திற்கு ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் மகா கிருஷ்ணன் தலைமையில் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் அருண்குமார் இன்று அதிகாலை அவ்வழியாக சென்ற சரக்கு ரெயிலில் அடிப்பட்டு இறந்தது தெரியவந்தது. அவர் தண்டவாளத்தை கடந்தபோது ரெயிலில் அடிபட்டு இறந்திரு க்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.

    சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா பகுதியில் உள்ள ரெயில்வே பாதையை நக்சல்கள் சேதப்படுத்தியதால் அந்த தடத்தில் வந்த சரக்கு ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. #Chhattisgarh
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து இரும்புத் தாது ஏற்றிக் கொண்டு விசாகப்பட்டினம் சென்ற சரக்கு ரயில் தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய பாலத்தை கடக்கும்போது இஞ்சின் உட்பட 8 பெட்டிகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.



    இந்த விபத்து நள்ளிரவு 1 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல் அதிகாரி கம்லோசன் காஷியப் கூறுகையில், சிறிய ஓடையின் மீது அமைக்கப்பட்டிருந்த ரெயில் பாலத்தை நக்சலைட்டுகள் நாசப்படுத்தியதாகவும், அதனால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து, விபத்து ஏற்பட்ட சுற்றுவட்டாரங்களில் நக்சலைட்டுகளை பிடிக்கும் முயற்சியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். #Chhattisgarh
    ×