search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மேற்கு வங்காளத்தில் இரண்டு ரெயில்கள் மோதி விபத்து
    X

    மேற்கு வங்காளத்தில் இரண்டு ரெயில்கள் மோதி விபத்து

    • ஒரு ரெயில் மீது பின்னால் வந்த மற்றொரு ரெயில் மோதி விபத்து
    • அந்த வழித்தடத்தில் 14 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    மேற்கு வங்காள மாநிலம் பங்குராவில் உள்ள ஒண்டா ரெயில் நிலையத்தில் இரண்டு ரெயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 12 பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. ஒரு ரெயில் மீது பின்னால் வந்த ரெயில் பயங்கரமாக மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சரக்கு ரெயில்கள் என்பதால் உயிரிழப்பு ஏதும் இல்லை. டிரைவர் ஒருவருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் கராக்புர்- பங்குரா- அத்ரா ரெயில் பாதையில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 14 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 3 ரெயில்கள் மாற்றிவிடப்பட்டுள்ளன என முதற்கட்ட தகவல் வெளியாகின.

    இதுகுறித்து தென்கிழக்கு ரெயில்வே ''ரெயில்வே பராமரிப்பு ரெயில் ஒண்டகிராம் ரெயில் நிலையத்தில் இருந்து மெதுவாக சென்று கொண்டிருந்தது. அப்போது, சிகப்பு விளக்கு போடப்பட்டிருந்த நிலையில், சரக்கு ரெயில் அதை கவனிக்காமல் வந்தது. பிரேக் பிடிக்க முயன்றும் முடியாமல் மோதிவிட்டது. இதில் 8 பெட்டிகள் தடம் புரண்டன'' எனத் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×