என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜவகர்லால் நேரு ஸ்டேடியம்"

    • 1984, 1991-ம் ஆண்டுகளில் இங்கு இரண்டு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நடந்தது.
    • 102 ஏக்கர் கொண்ட இந்த இடத்தில் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு நகரத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் கடந்த 1982-ம் ஆண்டு கட்டப்பட்டது. சுமார் 60 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்ட இந்த ஸ்டேடியம் கட்டப்பட்ட ஆண்டிலேயே அங்கு ஆசிய விளையாட்டு போட்டி அரங்கேறியது. சர்வதேச தடகள போட்டி நடத்துவதற்கு அனைத்து வசதிகளும் கொண்ட இந்த ஸ்டேடியத்தில் கால்பந்து மைதானமும் உள்ளது.

    1984, 1991-ம் ஆண்டுகளில் இங்கு இரண்டு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நடந்தது நினைவிருக்கலாம். அதன் பிறகு இந்த மைதானம் கிரிக்கெட் போட்டிக்கு பொருத்தமானதாக இல்லை என கூறி வேறு இடத்தில் போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டது. 2010-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்காக ரூ.900 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டது. இங்கு சமீபத்தில் உலக பாரா தடகள போட்டி நடந்தது.

    இந்த நிலையில் நேரு ஸ்டேடியத்தை இடிக்க மத்திய விளையாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. 102 ஏக்கர் கொண்ட இந்த இடத்தில் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு நகரத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தடகளம் உள்பட பல்வேறு சர்வதேச போட்டிகளை நடத்துவதற்கான எல்லா வசதிகளும் இருக்கும் வகையில் விளையாட்டு நகரத்தை வடிவமைப்பதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறது.

    • ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் தற்காலிக பந்தல் இன்று இடிந்து விழுந்தது.
    • இந்த விபத்தில் சுமார் 10-12 பேர் சிக்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் திருமண விழாவிற்காக தற்காலிக பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், இந்த தற்காலிக பந்தல் இன்று காலை 11 மணியளவில் திடீரென இடிந்துவிழுந்தது. இந்த விபத்தில் உயிர் சேதம் இல்லை. ஆனாலும் 8 பேர் காயமடைந்தனர்.

    விபத்து குறித்து தகலவறிந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் அங்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    இந்த விபத்தில் மேலும் 10-12 பேர் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

    • டெல்லியில் இன்று ஜாகிரா மேம்பாலம் அருகே சரக்கு ரயில் சென்று கொண்டிருந்த போது தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
    • ரயில் விபத்துக்குள்ளான பகுதியில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

    டெல்லியில் சரக்கு ரயிலின் 10-க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டு விபத்துகுள்ளானது. ஜாகிரா மேம்பாலம் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. மீட்பு பணியில் ரயில்வே போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    டெல்லியில் இன்று ஜாகிரா மேம்பாலம் அருகே சரக்கு ரயில் சென்று கொண்டிருந்த போது தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. சரக்கு ரயில் என்பதால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் ரயில்வே போலீசார் மீட்பு பணிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    ரயில் விபத்துக்குள்ளான பகுதியில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் சில ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது. மேலும் ஒரு சில ரயில்கள் வேறு பாதையில் திசை திருப்பி அனுப்பப்படுகிறது.

    மேலும் இன்று, டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் திருமண விழாவிற்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பந்தல் இடிந்து விழுந்ததில் 8 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ×