என் மலர்
நீங்கள் தேடியது "Jawaharlal Nehru stadium"
- 1984, 1991-ம் ஆண்டுகளில் இங்கு இரண்டு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நடந்தது.
- 102 ஏக்கர் கொண்ட இந்த இடத்தில் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு நகரத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் கடந்த 1982-ம் ஆண்டு கட்டப்பட்டது. சுமார் 60 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்ட இந்த ஸ்டேடியம் கட்டப்பட்ட ஆண்டிலேயே அங்கு ஆசிய விளையாட்டு போட்டி அரங்கேறியது. சர்வதேச தடகள போட்டி நடத்துவதற்கு அனைத்து வசதிகளும் கொண்ட இந்த ஸ்டேடியத்தில் கால்பந்து மைதானமும் உள்ளது.
1984, 1991-ம் ஆண்டுகளில் இங்கு இரண்டு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நடந்தது நினைவிருக்கலாம். அதன் பிறகு இந்த மைதானம் கிரிக்கெட் போட்டிக்கு பொருத்தமானதாக இல்லை என கூறி வேறு இடத்தில் போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டது. 2010-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்காக ரூ.900 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டது. இங்கு சமீபத்தில் உலக பாரா தடகள போட்டி நடந்தது.
இந்த நிலையில் நேரு ஸ்டேடியத்தை இடிக்க மத்திய விளையாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. 102 ஏக்கர் கொண்ட இந்த இடத்தில் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு நகரத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தடகளம் உள்பட பல்வேறு சர்வதேச போட்டிகளை நடத்துவதற்கான எல்லா வசதிகளும் இருக்கும் வகையில் விளையாட்டு நகரத்தை வடிவமைப்பதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறது.
- ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் தற்காலிக பந்தல் இன்று இடிந்து விழுந்தது.
- இந்த விபத்தில் சுமார் 10-12 பேர் சிக்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் திருமண விழாவிற்காக தற்காலிக பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த தற்காலிக பந்தல் இன்று காலை 11 மணியளவில் திடீரென இடிந்துவிழுந்தது. இந்த விபத்தில் உயிர் சேதம் இல்லை. ஆனாலும் 8 பேர் காயமடைந்தனர்.
விபத்து குறித்து தகலவறிந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் அங்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த விபத்தில் மேலும் 10-12 பேர் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
Delhi | More than 8 people injured after a temporary structure installed near Gate number 2 of Jawaharlal Nehru stadium collapses, say Police. Details awaited. pic.twitter.com/AeO7pLQq9I
— ANI (@ANI) February 17, 2024
உத்தர பிரதேச மாநிலம் அலிகர் நகரைச் சேர்ந்தவர் பர்வீந்தர் சவுத்ரி (வயது 18). தேசிய தடகள வீரரான இவர் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் பெற்றுள்ளார். டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு விளையாட்டரங்க வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி பயிற்சி பெற்று வந்தார்.
இந்நிலையில் பர்வீந்தர் சவுத்ரி நேற்று மாலை தனது விடுதி அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். அவரது சகோதரியின் கண் முன்னே நடந்த இந்த சம்பவம் குறித்து துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய செயலாளர் ஸ்வான் சிங் சாப்ரா தலைமையில் விசாரணை நடத்தப்பட உள்ளது. ஒரு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி விசாரணைக் குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுபற்றி இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமை இயக்குனர் நீலம் கபூர் கூறியதாவது:-
குடும்பத்தின் பணப் பிரச்சினை காரணமாக பர்வீந்தர் சவுத்ரி இந்த முடிவை எடுத்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. நேற்று காலை தன் தந்தையுடன் தொலைபேசியில் வாக்குவாதம் செய்துள்ளார். அதன்பின்னர் மாலையில் அவரது சகோதரி விடுதிக்கு வந்து அவரை சந்தித்துள்ளார்.
அப்போது தற்கொலை செய்யப்போவதாக சகோதரியிடம் கூறிவிட்டு திடீரென மின்விசிறியில் தூக்கு மாட்டியுள்ளார். சகோதரி வெளியே வந்து கூச்சலிடவும், ஊழியர்கள் உள்ளே சென்று தூக்கில் தொங்கிய பர்வீந்தர் சவுத்ரியை மீட்டு மருத்துவமனைக்கு கொணடு சென்றனர். ஆனால் அவர் உயிர்பிழைக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
விளையாட்டு வீரர் தற்கொலை செய்தது பற்றி கேள்விப்பட்ட விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். #ParvinderChaudhary






