காஷ்மீர் சென்றடைந்த சரக்கு ரெயில்: குறிப்பிடத்தக்க மைல்கல் என மத்திய ரெயில்வே அமைச்சர் பெருமிதம்

21 பெட்டிகள் அடங்கிய ரெயில் பஞ்சாபில் இருந்து அனந்த்நாக் சென்றடைந்துள்ளது.சுமார் 600 கி.மீ. தூரத்தை 18 மணி நேரத்தில் சென்றடைந்துள்ளது.
காஷ்மீர் சென்றடைந்த சரக்கு ரெயில்: குறிப்பிடத்தக்க மைல்கல் என மத்திய ரெயில்வே அமைச்சர் பெருமிதம்
Published on

வடக்கு ரெயில்வே முதன்முறையாக பஞ்சாப் மாநிலம் ரூப்நகரில் இருந்து காஷ்மீரில் உள்ள அனந்த்நாக்கிற்கு சிமெண்ட் ஏற்றிக் கொண்டு சரக்கு ரெயில் சென்றது. இது குறிப்பிடத்தக்க மைல்கல் என மத்திய ரெயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள அனந்த்நாக் சரக்கு ஷெட்டிற்கு முதன்முறையாக சரக்கு ரெயில் இன்று சென்றடையந்துள்ளது. காஷ்மீர் பிராந்தியத்தை தேசிய சரக்கு நெட்வொர்க் உடன் இணைப்பதற்கான குறிப்பிடத்தக்க மைல். இந்த ரெயில் நெட்வொர்க் போக்குவரத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழும் நம்முடைய மக்களின் செலவு குறையும் என அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

21 BCN பெட்டிகள் சிமெண்ட் உடன் சரக்கு ரெயில் சென்றடைந்தது வடக்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. 18 மணி நேரத்திற்கும் குறைவான பயணத்துடன் ஏறக்குறைய 600 கி.மீ. தூரத்தை இந்த ரெயில் கடந்து சென்றுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com