என் மலர்
உள்ளூர் செய்திகள்
- இப்படியே பேசி கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக தொண்டர்களை ஏமாற்றி வந்துள்ளார்.
- அ.தி.மு.க. எப்போதுமே இரு கொள்கையை கடைபிடிக்கும் கட்சியாகும்.
சென்னை:
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் பதவியே இருக்காது. அந்த கட்சி எங்கள் கைக்கு வரும் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறி உள்ளாரே? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-
ஓ.பன்னீர்செல்வம் ஒரு கொசு. இது போன்ற கொசுக்களை பற்றியெல்லாம் பேசாதீர்கள். அதற்கான நேரமா இது. அவர் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார். ரகசியம் இருப்பதாக கூறுகிறார். யாருடன் யார் தொடர்பில் இருக்கிறார்கள் என்பது எல்லோருக்குமே தெரியும். நீட் ரகசியம் என்றால் உதயநிதி. இப்படி தி.மு.க.வுடன் தொடர்பில் இருந்து அந்த நோய் அவரை தொற்றிக் கொண்டுள்ளது. தங்கமலை ரகசியமா? இல்லை சிதம்பர ரகசியமா? என்பதை சொல்லி விட்டு போக வேண்டியது தானே?
இப்படியே பேசி கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக தொண்டர்களை ஏமாற்றி வந்துள்ளார். இது எடுபடாது. அ.தி.மு.க. எப்போதுமே இரு கொள்கையை கடைபிடிக்கும் கட்சியாகும். இதில் எந்தவித மாற்றமும் இல்லை.
இந்தியை விரும்பி படிப்பது வேறு. திணிப்பது வேறு. திணிப்பதுதான் தவறாகும். எனவே இந்தி தேவையில்லை என்பது எங்கள் கருத்தாகும். தமிழகத்தில் மொழிப் போரால் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- புதிதாக 172 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
- 90 வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது.
குமரி மாவட்டம் கொட்டாரம் பெருமாள் புரத்தில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம், ராஜாக்க மங்கலம் ஒன்றியத்தில் உள்ள இலங்கை தமிழர் முகாம் பகுதிகளில் ரூ.11 கோடியே 54 லட்சத்து 44 ஆயிரம் செலவில் புதிதாக 172 வீடுகள் கட்டப்பட்டு உள்ளன.
இதன் திறப்பு விழாவும், ரூ.7.5 கோடி மதிப்பீட்டில் புதிதாக 90 வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது.
விழாவுக்கு கலெக்டர் அழகுமீனா தலைமை தாங்கினார். அமைச்சர் தங்கம் தென்னரசு விழாவில் கலந்து கொண்டு முடிவுற்ற குடியிருப்புகளுக்கான சாவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். அமைச்சர் நாசர் விழாவில் பங்கேற்று, முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்கு திட்டப் பணிகளை வழங்கினார்.

பெருமாள்புரம் இலங்கை தமிழர் முகாம் மற்றும் ராஜாக்கமங்கலம் பழவிளை முகாமில் ரூ.10.20 கோடி மதிப்பீட்டில் 172 புதிய வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்த வீடுகளின் உட்கட்டமைப்பு பணிகளுக்கு ரூ.1.23 கோடி கூடுதலாக நிதி ஓதுக்கப்பட்டு அனைத்து பணிகளும் முடிவு பெற்றுள்ளன.
ரூ.7 கோடியே 55 லட்சத்து 37ஆயிரம் செலவில் புதிதாக கட்டப்பட உள்ள 90 வீடு களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
விழாவில் விஜய்வசந்த் எம்.பி., மேயர் மகேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் பாபு, ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., தி.மு.க. மாவட்ட அவைத் தலைவர் எப்.எம்.ராஜரத்தினம், அகஸ்தீசு வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தாமரை பாரதி, ஆர்.எஸ். பார்த்த சாரதி, கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், கொட்டாரம் பேரூ ராட்சி தலைவர் செல்வகனி, கொட்டாரம் பேரூர் தி.மு.க. செயலாளர் வைகுண்ட பெருமாள், தி.மு.க. நிர்வாகி கள் தாமரை பிரதாப் தமிழன் ஜானி, பொன்ஜா ன்சன், வினோத், இலங்கை தமிழர் முகாம் நிர்வாகி ஞானமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- இந்திய பெருங்கடல், வங்ககடல், அரபிக்கடல் ஆகிய 3 கடல்களும் கொந்தளிப்பாக காணப்பட்டது.
- ஆபத்தை அறியாமல் சிலர் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி கடலில் சுனாமிக்கு பிறகு அடிக்கடி பல இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இன்று காலை "திடீர்" என்று பயங்கர கடல் சீற்றம் ஏற்ப ட்டது.
இந்திய பெருங்கடல், வங்ககடல், அரபிக்கடல் ஆகிய 3 கடல்களும் கொந்தளிப்பாக காணப்பட்டது. சுமார் 10 முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசின. நடுக்கடலில் இருந்து பொங்கி எழுந்து வந்த ராட்சத அலைகள் கரையை தொட்டு சென்றன.
மேலும் அவை கரையில் உள்ள பாறைகளில் முட்டி மோதி சிதறிய காட்சி சுற்றுலா பயணிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியது. அவர்கள் அவசர அவசரமாக கடற்கரையில் இருந்து பாதுகாப்பான இடம் நோக்கி சென்றனர். ஆபத்தை அறியாமல் சிலர் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் அங்கிருந்து வெளியேற்றினர்.
இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் முக்கடல் சங்கமம் கடற்கரை பகுதி சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடி கிடந்தது. சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் கடற்கரை பகுதியில் ரோந்து சுற்றி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
- சட்டசபை தேர்தலுக்காக தேர்தல் வியூகம் வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.
- 2026 சட்டசபை தேர்தலில் த.வெ.க. கூட்டணியில் இடம் பெறுவது குறித்த தமிழ்நாடு முஸ்லிம் லீக் பேச்சுவார்த்தை நடத்தியது.
முன்னணி நடிகரான விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் கட்சி 2-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
மாவட்ட நிர்வாகிகளை நியமித்த விஜய், 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்காக தேர்தல் வியூகம் வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.
இந்நிலையில் 2026 தேர்தலுக்கான சட்டசபை தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையை தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி உள்ளது.
தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி தலைவர் முஸ்தபா, த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவை சந்தித்து பேசினார். 2026 சட்டசபை தேர்தலில் த.வெ.க. கூட்டணியில் இடம் பெறுவது குறித்த தமிழ்நாடு முஸ்லிம் லீக் பேச்சுவார்த்தை நடத்தியது.
2026 சட்டசபை தேர்தலுக்கான கட்சி பணிகளில் தமிழக வெற்றிக் கழகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
- ஆன்மீகத்திலும் உடற்பயிற்சி என்பது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
- உடற்பயிற்சி என்பது நம் வாழ்வியலோடு இணைந்திருந்தது.
நம் மரபில் உடல் மற்றும் உள்ளத்தின் சமநிலை எப்போதுமே முக்கியமாக கருதப்பட்டுள்ளது. இன்று உடற்பயிற்சி மற்றும் உடல் நலன் ஆகியவை நவீன கால வாழ்கை முறையாக மாறியிருக்கிறது.
ஆனால் கடந்த தலைமுறையில் உடற்பயிற்சி என்பது நம் வாழ்வியலோடு இணைந்திருந்தது. ஆரோக்கிய தளத்தில் மட்டுமின்றி ஆன்மீகத்திலும் உடற்பயிற்சி என்பது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
ஆன்மீகத்தில் உள்ள நான்கு மார்கங்களில் ஒரு மார்கத்தில், உடல் சார்ந்த பயிற்சிகள், சாதனாக்கள் இருக்கின்றன. விநாயகரை வணங்கும் போது கூட தோப்பு கரணமிட்டு வணங்கும் பண்பை குழந்தைகளுக்கு கூட சொல்லிக் கொடுக்கிறோம்.
மேலும் தெய்வீகத்துடன் நெருக்கமாக இருக்க பாத யாத்திரை, கோவிலை பிரதட்சணம் செய்தல் உள்ளிட்ட பல உடல் சார்ந்த சடங்குகளை நாம் பின்பற்றுவது உண்டு.
"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்" என்றார் திருமூலர். அந்த ஆலயத்தின் மேன்மையை இது போன்ற உடல் சார்ந்த சாதனாக்கள் மூலம் நாம் கூர்மைப்படுத்த முடியும். அவ்வாறு உடல் நலனை மேம்படுத்தும் போது உள்ளிருக்கும் தெய்வீகத்தை உணர முடியும்.
சூர்ய நமஸ்காரம், ஹட யோகா உள்ளிட்ட ஏராளமான உடல் சார்ந்த சாதனாக்களை ஆன்மீக சாதகர்கள் அன்றாடம் பயிற்சி செய்கின்றனர். அந்த வகையில் சிவனின் அங்கமாக மாறும் ஒரு வாய்ப்பாக சிவாங்கா சாதனா கருதப்படுகிறது. சிவாங்கா சாதனாவின் அடிப்படையாக இருப்பது சிவ நமஸ்காரம் என சொல்லப்படும் சாதனா.
இது சிவனை வணங்குவதற்கான ஒரு முறை. இது ஏழு சக்தி வாய்ந்த நிலைகளை கொண்டது. தெய்வீக அருளை முழுமையாக உள்வாங்க இந்த சாதனா உதவுகிறது. உடல் இயக்கம் மற்றும் ஆற்றலின் தீவிரத்திலும் சமநிலையை உருவாக்குகிறது.
குறிப்பிட்ட ஏழு நிலைகளையும் ஒருவர் செய்கிறபோது அது ஒரு சுற்று சிவ நமஸ்காரம் ஆகிறது. இவ்வாறாக, சிவாங்க சாதனா மேற்கொள்ளும் 42 நாட்களும், தினசரி 21 முறை சூரியோதயத்திற்கு முன்பு அல்லது சூரியோதயத்திற்கு பின்பு முழுமையான அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டும்.
சிவாங்கா சாதனா என்பதே இந்த சக்தி வாய்ந்த பயிற்சியின் தீட்சையை பெறுவதற்கான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
ஒருவருக்குள் இருக்கும் பக்தியை தீவிரப்படுத்தவும், படைப்பின் மூலத்துடன் தொடர்பில் இருக்கவும் இந்த சிவாங்கா சாதனா மேற்கொள்ளப்படுகிறது. 42-ம் நாளின் இறுதியில் வெள்ளியங்கிரி மலையேற்றத்துடன் இந்த சாதனா நிறைவடைந்தாலும், தெய்வீகத்தின் அருளை நாம் எப்போதும் உணர முடியும்.
அதுமட்டுமின்றி தெய்வீக அம்சத்தை நம்மை நோக்கி அழைத்து வரும் புனித ஆதியோகி ரத யாத்திரையிலும் சிவாங்கா சாதகர்கள் ஈடுபட்டுள்ளனர். ஈஷா யோக மையத்தில் அமைந்துள்ள ஆதியோகியை நேரில் தரிசிக்காதவர்களும், அவரின் தரிசனம் கிடைக்கும் விதமாக ஆதியோகி ரதம் தமிழகமெங்கும் வலம் வந்த வண்ணம் உள்ளது.

பல்லாயிரம் கிலோமீட்டர் தூரம் வலம் வரும் இந்த ரத யாத்திரை இம்மாதம் 26-ந் தேதி, மகாசிவராத்திரி அன்று கோவை ஈஷா யோக மையத்தை வந்தடைய இருப்பது குறிப்பிடத்தக்கது.
- கொள்கை மொழி தமிழ் என தெளிவாகவே குறிப்பிட்டுள்ளோம்.
- இந்தி எனக்கு எதற்காக தேவை என்பதை அண்ணாமலை தெளிவாக கூறுவாரா?
மும்மொழி கொள்கை தொடர்பாக நா.த.க. வரைவு அறிக்கையை சுட்டிக்காட்டிய பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கு கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அண்ணாமலை நாம் தமிழர் வரைவு அறிக்கையை ஒழுங்காக படிக்க வேண்டும்.
* கொள்கை மொழி தமிழ் என தெளிவாகவே குறிப்பிட்டுள்ளோம். பயன்பாட்டு மொழி ஆங்கிலம் தெளிவாக எழுதி இருக்கிறேன்.
* உலகின் எல்லா மொழிகளும் விருப்ப மொழிகள். இந்தி உட்பட விரும்பினால் கற்போம் என்று போட்டுள்ளேன்.
* இந்தி எனக்கு எதற்காக தேவை என்பதை அண்ணாமலை தெளிவாக கூறுவாரா?
* தெற்காசியா முழுவதும் பரவி வாழ்ந்தோர் தமிழ் பேசும் நாகர்கள் என்றார் அம்பேத்கர்.
* தேவை என்றால் இந்தி படிக்கிறோம். உணவு, மொழி, உடை எல்லாம் அங்கங்கு வாழுகின்ற கால சூழல் தான் தீர்மானிக்கும் என்று கூறினார்.
- நீங்கள் விரக்தியின் விளிம்பிலே இருந்து கேட்ட கேள்விக்கு, நான் வேதனையின் உச்சியில் இருந்து கேட்கிறேன்.
- இரட்டை இலை என்பது வாழ்வுக்கு சமம், அதை எதிர்த்து நிற்பது இறப்புக்கு சமம்.
மதுரை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதய குமார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் இன்று வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, தனக்கு நற்சான்று கொடுத்தார் என்று அடிக்கடி தனக்குத்தானே தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்.
அம்மா நம்மோடு இருந்த போது இதே தேனி மாவட்டத்தில் இவர் தான் அதிகாரம் மையம் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது, 2010 ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு உரிமை போராட்டத்திற்கு இவரை தள்ளி வைத்துவிட்டு அம்மா இந்த சாமானிய தொண்டரான உதயகுமாரை தான் தேனி மாவட்டத்தில் தலைமை தாங்க உத்தரவிட்டார்.
அதே 2010-ம் ஆண்டு இன்றைய எம்.பி. தங்க தமிழ்ச்செல்வன் தலைமையிலே செயல் வீரர்கள் கூட்டம் நடத்துகிற போது ஓ.பன்னீர் செல்வத்தை தள்ளி வைத்துவிட்டு அம்மா என்னை அந்த செயல்வீரர் கூட்டத்தில் கலந்து கொள்ளவும், தேனி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக ஆலோசனை வழங்குவதற்கு இந்த சாமானிய தொண்டன் உதயகுமாருக்கு ஆணையிட்டார் என்பதும் அந்த ஓ.பன்னீர் செல்வத்துக்கு நினைவு படுத்த கடமைப்பட்டிருக்கிறேன்.
கடந்த 2019-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றிக்காக எனக்கு பணியாற்றுகிற வாய்ப்பு கிடைத்தபோது தலைமைக்கும், இரட்டை இலைக்கும் விசுவாசமாக நான் பணியாற்றி, தமிழகம் முழுவதும் வெற்றி வாய்ப்பு நழுவி போகிற போது தேனி தொகுதியில் இரட்டை இலை மலர்ந்தது.
அதற்கு இந்த சாமானிய தொண்டனின் விசுவாசமான உழைப்பு எப்படி என்பதை நீங்கள் வேண்டுமானால் உங்கள் வசதிக்காக மறந்து இருக்கலாம். நான் விசுவாசத்தோடு இரட்டை இலை சின்னத்திற்காக எப்படி உழைத்தேன் என்பதையும், எப்படி பாடுபட்டேன் என்பதையும் அ.தி.மு.க. தொண்டர்கள் அறிவார்கள்.
அம்மா தங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கை குறைபாட்டில் தான் சாமானிய தொண்டனான என்னிடம் பகிர்ந்து கொண்டார் என்பதை நான் வெளியே சொன்னால் அது அரசியல் நாகரிகமாக இருக்காது.
அம்மாவின் மறு வடிவமாக இருக்கிற எடப்பாடியார் ஆணையிட்டால், இந்த நிமிடமே தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர், அம்மா பேரவை பொறுப்பு, மாவட்ட செயலாளர், ஏன் சட்டமன்ற உறுப்பினர் என்கிற பொறுப்பணியில் கூட அ.தி.மு.க.வின் வளர்ச்சிக்காக, கட்சியின் வெற்றிக்காக, என்னை தியாகம் செய்ய ஒரு நாளும் தயங்கவில்லை. இந்த நிமிடமே அனைத்து பொறுப்புகளில் இருந்தும் என்னை விடுவித்துக் கொள்வதற்கும் நான் தயங்குபவன் அல்ல?
நான் பதவிக்காகவோ, அதிகாரத்திற்காகவோ ஒரு நாளும் ஒருபோதும் ஆசைப்பட்டவன் அல்ல. நான் வகிக்கின்ற இந்த பொறுப்புகள் எல்லாம் விசுவாசத்தோடு நான் பணியாற்றியதற்காக தலைமை என்னை தேடிக் கொடுத்த பதவிகள் தானே தவிர, நான் தேடிப்போய் பெற்ற பதவிகள் அல்ல.
அன்றைக்கு அம்மா இருந்த சமயத்தில், டாக்டர் வெங்கடேஷ் சோபாவில் அமர்ந்திருந்த போது இந்த உதயகுமார் எந்த இடத்தில் அமர்ந்திருந்தார் என்று சொன்னால் அரசியல் நாகரீகமாக இருக்காது என்று நீங்கள் சொல்லி உள்ளீர்கள். தயவு செய்து அதை சொல்லுங்கள். நீங்கள் உட்கார்ந்து இருந்த இடத்திலே தான் நானும் உட்கார்ந்திருந்தேன்.
ஆகவே தயவு செய்து நீங்கள் ஏதோ ஒரு மூடு மந்திரம் போல என்மீது ஒரு தவறான அபிப்பிராயத்தை என் கழகப்பணி மீதும், நான் கொண்டுள்ள விசுவாசத்தின் மீதும் நீங்கள் களங்கம் கற்பிக்க முயற்சிப்பதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை,
நீங்கள் விரக்தியின் விளிம்பிலே இருந்து கேட்ட கேள்விக்கு, நான் வேதனையின் உச்சியில் இருந்து கேட்கிறேன். எங்களை ஒற்றுமைக்கு எதிரானவர்கள் என்று பிரச்சனையை திசை திருப்பும் பாணியில் நீங்கள் பேசி வருவது ஆண்டவனுக்கே பொருந்தாது. இந்த கோடான கோடி அப்பாவி தொண்டர்களையும், தமிழக மக்களையும் இனியும் நீங்கள் ஏமாற்றக்கூடாது என்பதற்காகத்தான் இந்த பதிலை சொல்கிறேன்.
உங்களுக்கு அதிகாரம் வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் நீங்கள் போவீர்கள் என்பது தான் சமீபகால நடவடிக்கை. உங்களுக்கு அதிகாரம் இல்லை என்று சொன்னால் பிரச்சனை. இப்போது பிரச்சனை நீங்கள் அதிகாரத்திற்கு வரவேண்டும் என்பதுதான்.
ஏனென்றால் எங்களைப் போன்றவர்கள் அதை நன்றாக அறிவோம். அப்பாவி சாமானிய ஏழை, எளிய தொண்டர்களுக்கும், மக்களுக்கும் இந்த உண்மை புரிய வேண்டும். இதை நான் சத்தியமாக தெய்வ சாட்சியாக சொல்கிறேன், அத்தனையும் உண்மை.
வெளியில் இருந்து யாரும் எந்த சோதனையும் ஏற்படுத்தவில்லை. இத்தனை பிரச்சனைகளுக்கும் நீங்கள்தான் காரணம். பா.ஜ.க. கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் பலாப்பழம் சின்னத்தில் நீங்கள் நிற்பதற்கு யார் காரணம்? நீங்கள் பதவி ஆசையினாலே மத்திய அமைச்சராகி விடவேண்டும் என்ற ஆசைதானே காரணம்.
தேனி மாவட்டத்தில் அதிகாரம் தங்கள் பிள்ளைக்கு வேண்டும் என்று தான் நினைத்தீர்களே தவிர, வேறு யாரையாவது உருவாக்கி உள்ளீர்களா? இரட்டை இலை என்பது வாழ்வுக்கு சமம், அதை எதிர்த்து நிற்பது இறப்புக்கு சமம்.
உங்களுடைய சுயநலத்திற்காக, அதிகாரத்திற்காக நீங்கள் உண்மையை மறைத்து செயல்பட்டீர்கள். அது தங்க தமிழ்ச்செல்வன் தொடங்கி, நயினார் நாகேந்திரன் வரை உங்களைப் பற்றி அனைவருக்கும் தெரியும். இதுதான் நீங்கள் கடைபிடித்த பாதை, தர்மம்.
ஆகவே எனக்கு எச்சரிக்கை விடுகிற தகுதி உங்களுக்கு இல்லை. நான் எந்த எச்சரிக்கையையும் எதிர்கொள்வதற்கு தயாராகத்தான் இருக்கிறேன். இன்னும் விவாதிக்க வேண்டும் என்று நீங்கள் விருப்பப்பட்டால் நான் தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- போலீசார் மற்றும் தி.மு.க.வினர் வக்கீலை தாக்கியுள்ளனர்.
- திண்டுக்கல் அண்ணா சிலை ரவுண்டான பகுதியில் மறியலில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லை சேர்ந்தவர் வக்கீல் உதயகுமார். இவர் மாவட்ட தி.மு.க. கட்சி அலுவலகம் அருகேயுள்ள தனியார் பள்ளியில் இருந்து மாலை தனது குழந்தையை அழைத்து வரச்சென்றார். கடந்த சில தினங்களாக இப்பகுதியில் வெட்டப்பட்ட மரக்கிளைகள் அகற்றப்படாமல் சாலையோரம் கிடந்தது. இதனால் பள்ளிக்கு வந்து செல்லும் பெற்றோர்களின் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதில் இடையூறு ஏற்பட்டு வந்தது.
பள்ளி முன்பு சாலையோரம் கிடக்கும் மரக்கிளைகளை அகற்றக்கோரி கட்சி அலுவலகத்தில் இருந்த அமைச்சர் ஐ.பெரியசாமியை சந்திக்க உதயகுமார் சென்றார். அப்போது அவரை வழிமறித்த அமைச்சரின் பாதுகாப்பு போலீசார் இதுகுறித்து நாங்களே மாநகராட்சியிடம் கூறி நடவடிக்கை எடுக்கச் சொல்கிறோம் என்று சொல்லி திருப்பி அனுப்பியுள்ளனர்.
ஆனால் நான் அமைச்சரை சந்தித்து புகார் செய்துவிட்டு தான் செல்வேன் என கூறி கட்சி அலுவலகத்திற்குள் செல்ல முயன்றுள்ளார். இதை தடுத்ததில் பாதுகாப்பு போலீசாருக்கும் வக்கீலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் போலீசார் மற்றும் தி.மு.க.வினர் வக்கீலை தாக்கியுள்ளனர்.
இதனால் உதயகுமார் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து சக வக்கீல்களுக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து ஏராளமான வக்கீல்கள் அங்கு திரண்டு தி.மு.க. கட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வக்கீல்கள் போராட்டத்தை தொடங்குவதற்கு முன்பு அமைச்சர் இ.பெரியசாமி கட்சி அலுவலகத்தில் இருந்து காரில் சென்றுவிட்டார்.
இதையடுத்து கட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்திய வக்கீல்கள் நகர் வடக்கு போலீஸ் நிலையம் முன்பு தரையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேரம் செல்லச் செல்ல வக்கீல்கள் அதிகம் பேர் வரத்தொடங்கி போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வாகனங்களை மாற்றுப்பாதையில் செல்வதை கண்ட வக்கீல்கள் திண்டுக்கல் அண்ணா சிலை ரவுண்டான பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஏ.டி.எஸ்.பி. தெய்வம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
வக்கீலை தாக்கிய அமைச்சரின் பாதுகாப்பு அலுவலர் மீது நடவடிக்கை எடுத்தால் தான் இங்கிருந்து கலைந்து செல்வோம் என கூறி இரவு 11 மணி வரை அவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனையடுத்து காலையில் பேசிக்கொள்ளலாம் என்றும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட எஸ்.பி. உறுதி அளித்தார்.
இன்று காலையிலும் நகர் வடக்கு போலீஸ் நிலையம் முன்பு வக்கீல்கள் ஏராளமானோர் குவிந்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோஷம் எழுப்பியபடி இருந்தனர். இதனையடுத்து 7வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சுபாஷ் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இருந்தபோதும் அதில் சமாதானம் அடையாத வக்கீல்கள் அவர்களை கைது செய்ய வேண்டும். அதுவரை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதுடன் திண்டுக்கல்லில் தொடர் போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
- பாபு ஷேக் காட்பாடியில் நடந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றார்.
- சித்தேரி ரெயில்வே தண்டவாளம் அருகே உள்ள செங்கல் சூளை புதரில் பதுங்கி இருந்த பாபு ஷேக்கை போலீசார் கைது செய்தனர்.
வேலூர்:
கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் பாபு ஷேக். இவர் காட்பாடியில் நடந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றார். கடந்த 2023-ம் ஆண்டு முதல் வேலூர் ஜெயிலில் தண்டனை அனுபவித்து வந்தார்.
அவருக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை செய்வதற்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அதிகாலை 5 மணி அளவில் பாபுஷேக் ஆஸ்பத்திரியிலிருந்து தப்பிச் ஓடி விட்டார். தப்பிச்சென்ற பாபு ஷேக்கை போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை வேலூர் அடுத்த சித்தேரி ரெயில்வே தண்டவாளம் அருகே உள்ள செங்கல் சூளை புதரில் பதுங்கி இருந்த பாபு ஷேக்கை போலீசார் கைது செய்தனர்.
ஆஸ்பத்திரியில் இருந்து கைதி தப்பிச் சென்ற சம்பவத்தில் பணியில் கவனக் குறைவாக இருந்ததாக 4 ஆயுதப்படை போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு மதிவாணன் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.
- ஸ்டாலின் மாடல் ஆட்சியில் பெண்களுக்கு எள்ளளவும் பாதுகாப்பு இல்லை.
- பாலியல் அத்துமீறலும், ஆயுதக் கலாச்சாரமும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'எக்ஸ்' வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் காவலர் ஒருவர் பழவந்தாங்கல் ரெயில் நிலையத்தில் பாலியல் தாக்குதலுக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
அதே பழவந்தாங்கல் ரெயில் நிலையத்தில் பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் வலம் வருவதாக செய்திகள் வருகின்றன. பெண் காவலருக்கே பொது இடத்தில் இப்படியொரு கொடுமை நடக்கிறது என்றால், ஸ்டாலின் மாடல் ஆட்சியில் பெண்களுக்கு எள்ளளவும் பாதுகாப்பு இல்லை என்பதே உண்மை.
பொது இடத்தில் நடைபெறும் பாலியல் அத்துமீறலும், ஆயுதக் கலாச்சாரமும் தனிப்பட்ட விஷயங்கள் என்று இந்த ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசு கடக்க முனைவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இவையெல்லாம் சட்டம் ஒழுங்கில் தான் வரும் என்பதாவது இன்றைக்கு முதல்-அமைச்சராக இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு தெரியுமா?
பெண் காவலர் மீது பாலியல் தாக்குதல் நடத்திய நபர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், தமிழ்நாடு முழுக்க தலை தூக்கி உள்ள ஆயுதக் கலாச்சாரத்தை ஒடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் நிதி தருவேன் என்பது திமிர்தனமாக தான் தெரிகிறது.
- உலகம் முழுவதும் மொழி வழியே தான் தேசிய இனங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.
அவதூறு வழக்கு விசாரணைக்காக விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் ஆஜரான நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் நிதி தருவேன் என்பது திமிர்தனமாக தான் தெரிகிறது.
* ஒரே மொழி என்பது நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிரானது.
* இந்தி கற்றே ஆக வேண்டும் என வலிந்து திணிப்பது ஏன்?
* உலகம் முழுவதும் மொழி வழியே தான் தேசிய இனங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.
* மற்ற மொழிகளை கற்பது என் விருப்பம். கட்டாயம் பிற மொழிகளை கற்க வேண்டும் என வற்புறுத்துவது ஏன்?
* எங்களின் அடையாளமாக உள்ள எங்கள் தாய் மொழியை அழித்து நாடோடி கூட்டமாக அலையவிடப் போகிறீர்களா? என்று கூறினார்.
- பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
- மார்ச் 15-ந்தேதி வேளாண் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
சென்னை:
தமிழக சட்டசபையில் அடுத்த மாதம் மார்ச் 14-ந்தேதி (வெள்ளிக்கிழமை) பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் 7-ந்தேதி பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை 3 முழு பட்ஜெட்டுகளை (நிதி நிலை அறிக்கை) தாக்கல் செய்து உள்ளது.
இதைத் தொடர்ந்து இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை தயாரித்து இறுதி செய்யும் பணியில் அரசு மும்முரம் காட்டி வருகிறது.
கடந்த டிசம்பர் மாதம் முதல் இதற்கான பணிகள் தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக தலைமைச் செயலாளர் முருகானந்தம், நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசித்து என்னென்ன துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்க வேண்டும். எந்தெந்த திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்பது பற்றி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
அதைத் தொடர்ந்து நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஒவ்வொரு துறை அதிகாரிகளுடனும் ஆலோசித்து பட்ஜெட் தயாரித்து வருகிறார்.
ஏற்கனவே நிதிச்சுமை உள்ள நிலையில் மத்திய அரசிடம் எதிர்பார்த்த நிதி தமிழகத்துக்கு முழுமையாக கிடைக்காத சூழ்நிலையிலும் இந்த ஆண்டுக்கான 'பட்ஜெட்' தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் இன்னும் 15 நாட்களில் முழுமை பெறும் என தெரிகிறது.
இதைத் தொடர்ந்து அடுத்த (மார்ச்) மாதம் 14-ந்தேதி சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து சபாநாயகர் அப்பாவு தலைமைச் செயலகத்தில் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு சட்டசபை பேரவை விதி 26 (1)-ன்கீழ் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் அடுத்த கூட்டத்தினை சென்னை தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள சட்டமன்ற பேரவை மண்டபத்தில் வைத்து 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் 14-ந்தேதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு கூட்டி உள்ளேன். அன்றைய தினமே நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நிதி நிலை அறிக்கையினை (பட்ஜெட்) தாக்கல் செய்வார்.
மேலும் பேரவை விதி 193 (1)-ன்கீழ் 2025-26-ம் ஆண்டுக்கான முன்பண மானியக் கோரிக்கைகள், பேரவை விதி 189 (1)-ன் கீழ் 2024-2025-ம் ஆண்டுக்கான கூடுதல் செலவினங்களுக்கான மானியக் கோரிக்கைகளையும் மார்ச் மாதம் 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 4 ஆண்டுகளாக பெண்களுக்கான பல்வேறு திட்டங்களை தி.மு.க. அரசு நிறைவேற்றி மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது. அதை மேலும் உறுதி செய்ய, பெண்களுக்கான கூடுதல் திட்டங்கள் அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட உள்ளது.
2026-ம் ஆண்டில் சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளதால் அடுத்த ஆண்டு இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே அரசால் தாக்கல் செய்ய முடியும் என்பதால் மக்களைக் கவரும் திட்டங்கள் இந்த பட்ஜெட்டில்தான் முழுமையாக வெளியிட முடியும்.
எனவே இந்த பட்ஜெட்டை பற்றிய எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.






