என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலூர் ஆஸ்பத்திரி"

    • துரை தயாநிதிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
    • மேல் சிகிச்சைக்காக துரை தயாநிதி வேலூரில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    வேலூர்:

    தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி. இவர் முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தார். இவரது மகன் துரை தயாநிதி. இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து துரை தயாநிதி சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக துரை தயாநிதியை வேலூரில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் இன்று சேர்த்தனர். அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

    • பாபு ஷேக் காட்பாடியில் நடந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றார்.
    • சித்தேரி ரெயில்வே தண்டவாளம் அருகே உள்ள செங்கல் சூளை புதரில் பதுங்கி இருந்த பாபு ஷேக்கை போலீசார் கைது செய்தனர்.

    வேலூர்:

    கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் பாபு ஷேக். இவர் காட்பாடியில் நடந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றார். கடந்த 2023-ம் ஆண்டு முதல் வேலூர் ஜெயிலில் தண்டனை அனுபவித்து வந்தார்.

    அவருக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை செய்வதற்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அதிகாலை 5 மணி அளவில் பாபுஷேக் ஆஸ்பத்திரியிலிருந்து தப்பிச் ஓடி விட்டார். தப்பிச்சென்ற பாபு ஷேக்கை போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை வேலூர் அடுத்த சித்தேரி ரெயில்வே தண்டவாளம் அருகே உள்ள செங்கல் சூளை புதரில் பதுங்கி இருந்த பாபு ஷேக்கை போலீசார் கைது செய்தனர்.

    ஆஸ்பத்திரியில் இருந்து கைதி தப்பிச் சென்ற சம்பவத்தில் பணியில் கவனக் குறைவாக இருந்ததாக 4 ஆயுதப்படை போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு மதிவாணன் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    ×