என் மலர்
நீங்கள் தேடியது "female constable"
- கங்கனா ரனாவத் 5,37,022 வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றார்.
- காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட விக்ரமாதித்யா சிங் 4,62,267 வாக்குகள் பெற்று தோல்வி.
இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் கங்கனா ரனாவத் 5,37,022 வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட விக்ரமாதித்யா சிங் 4,62,267 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்துள்ளார்.
இந்நிலையில், சண்டிகர் விமான நிலைய பெண் கான்ஸ்டபிள் நடிகை கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்ததாக எழுந்த புகாரால் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடிய விவசாயிகள், காலிஸ்தான் ஆதரவாளர்கள் என ஏற்கனவே கங்கனா ரனாவத் விமர்சித்திருந்தார்.
இதற்காக, கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் பெண் காவலர் குல்விந்தர் கவுர் என்பவர் அறைந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
- கங்கனா ரனாவத் 5,37,022 வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றார்.
- காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட விக்ரமாதித்யா சிங் 4,62,267 வாக்குகள் பெற்று தோல்வி.
சண்டிகர் விமான நிலையத்தில், பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படை பெண் காவலர் குல்விந்தர் கவுர் என்பவர் நடிகை கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடிய விவசாயிகள், காலிஸ்தான் ஆதரவாளர்கள் என ஏற்கனவே கங்கனா ரனாவத் விமர்சித்திருந்தார்.
இதனால், கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் பெண் காவலர் குல்விந்தர் கவுர் என்பவர் அறைந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சண்டிகர் விமான நிலையத்தில் பாஜக எம்.பி நடிகை கங்கனா ரனாவத் கன்னத்தில் அறைந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படை பெண் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
- ஸ்டாலின் மாடல் ஆட்சியில் பெண்களுக்கு எள்ளளவும் பாதுகாப்பு இல்லை.
- பாலியல் அத்துமீறலும், ஆயுதக் கலாச்சாரமும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'எக்ஸ்' வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் காவலர் ஒருவர் பழவந்தாங்கல் ரெயில் நிலையத்தில் பாலியல் தாக்குதலுக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
அதே பழவந்தாங்கல் ரெயில் நிலையத்தில் பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் வலம் வருவதாக செய்திகள் வருகின்றன. பெண் காவலருக்கே பொது இடத்தில் இப்படியொரு கொடுமை நடக்கிறது என்றால், ஸ்டாலின் மாடல் ஆட்சியில் பெண்களுக்கு எள்ளளவும் பாதுகாப்பு இல்லை என்பதே உண்மை.
பொது இடத்தில் நடைபெறும் பாலியல் அத்துமீறலும், ஆயுதக் கலாச்சாரமும் தனிப்பட்ட விஷயங்கள் என்று இந்த ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசு கடக்க முனைவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இவையெல்லாம் சட்டம் ஒழுங்கில் தான் வரும் என்பதாவது இன்றைக்கு முதல்-அமைச்சராக இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு தெரியுமா?
பெண் காவலர் மீது பாலியல் தாக்குதல் நடத்திய நபர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், தமிழ்நாடு முழுக்க தலை தூக்கி உள்ள ஆயுதக் கலாச்சாரத்தை ஒடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






