என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கடந்த மாதம் 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • தேரோட்டத்தை முன்னிட்டு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.

    திருவாரூர்:

    சோழ சாம்ராஜ்யத்தின் தலைநகரமாக விளங்கிய திருவாரூரில் பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோவில் அமைந்துள்ளது.

    இக்கோவில் சைவ சமய தலங்களில் முதன்மை தலமாகவும், சர்வ தோஷ பரிகார தலமாகவும், தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் 87-வது தலமாகவும் விளங்குகிறது.

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா விமரிசை யாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா கடந்த மாதம் (மார்ச்) 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினர்.

    பின்னர், கொடிமரத்திற்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்று கொடி ஏற்றப்பட்டது.

    தொடர்ந்து, விழா நாட்களில் தினமும் சுவாமி-அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா காட்சிகள் நடைபெற்று வந்தது. விழாவின் சிகர நிகழ்வான ஆழித்தேரோட்டம் இன்று (திங்கட்கிழமை) கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு அஜபா நடனத்துடன் தியாகராஜர் கோவிலில் இருந்து புறப்பட்டு, தேரில் எழுந்தருளினார்.

    பின்னர், இன்று காலை பூஜைகள் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டு தேரோட்டம் தொடங்கியது. தேரோட்டத்தை மாவட்ட கலெக்டர் மோகனசந்திரன், போலீஸ் சூப்பிரண்டு கருண் கரட், பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    முன்னதாக அதிகாலை 5.30 மணிக்கு விநாயகர், முருகன் தேர்கள் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. ஆழித்தேரோட்டத்தை தொடர்ந்து அம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்களும் இழுக்கப்பட்டன.

    ஆழித்தேரில் சுமார் 425 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டு இருந்த 4 வடங்களை, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆரூரா.. தியாகேசா... பக்தி கோஷம் விண்ணதிர பிடித்து இழுத்து சென்றனர்.

    தேரின் முன்பாக சிவனடியார்கள் பஞ்ச வாத்தியங்களை இசைத்தவாறும், தேவார திருமுறைகள் ஓதியவாறும் வீதிஉலா சென்றனர். ஆழித்தேரானது கீழ வீதியில் இருந்து புறப்பட்டு, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக இழுத்து வரப்பட்டு மாலை நிலையை அடையும்.

    ஆழித்தேரோட்டதை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கருண் கரட் தலைமையில், 3 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 17 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 50 இன்ஸ்பெக்டர்கள் உள்பட சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு துறையினர், நடமாடும் மருத்துவ குழுவினர் உள்ளிட்டோரும் தயார் நிலையில் இருந்தனர்.

    மேலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பக்தர்களுக்கு செய்து கொடுக்கப்பட்டு இருந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று நடை பெறுவதால் மாணவர்கள் சிரமமின்றி பள்ளிக்கு செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு, அதுகுறித்து மாவட்ட போலீஸ் துறை சார்பில் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

    ஆழித்தேரோட்டதை யொட்டி மாவட்ட கலெக்டர் மோகனசந்திரன் இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டார். பங்குனி உத்திர விழாவின் சிகர நிகழ்வை காண டெல்டா மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் திருவாரூர் நகரமே விழாக்கோலம் பூண்டது.

    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.
    • ஒரு கிராம் வெள்ளி ரூ.103-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை தொடர்ந்து உச்சத்திலேயே இருக்கிறது. கடந்த மாதம் (மார்ச்) 25-ந்தேதியில் இருந்து தாறுமாறாக அதன் விலை எகிறி வருகிறது. கடந்த 25-ந்தேதி ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்து 480 ஆக இருந்த நிலையில், கடந்த மாதம் 28-ந்தேதி ஒரு சவரன் ரூ.66 ஆயிரத்தையும், 31-ந்தேதி ரூ.67 ஆயிரத்தையும் தாண்டியது.

    அதன் தொடர்ச்சியாக மேலும் விலை உயர்ந்து, கடந்த 1-ந்தேதி ஒரு சவரன் ரூ.68 ஆயிரம் என்ற புதிய உச்சத்தையும் கடந்தது. இதனை தொடர்ந்து கடந்த வாரம் 4-ந்தேதி தங்கம் சவரனுக்கு ரூ.1,280-க்கும் மறுநாளான 5-ந்தேதி சவரனுக்கு ரூ.720-க்கு குறைந்து ஒரு சவரன் ரூ.66,480-க்கு விற்பனையானது.

    இந்த நிலையில் வார தொடக்க நாளான இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,285-க்கும் சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.66,280-க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை மூன்று நாட்களில் சவரனுக்கு ரூ.2,200-க்கு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.103-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    06-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.66,480

    05-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.66,480

    04-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.67,200

    03-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.68,480

    02-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.68,080

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    06-04-2025- ஒரு கிராம் ரூ.103

    05-04-2025- ஒரு கிராம் ரூ.103

    04-04-2025- ஒரு கிராம் ரூ.108

    03-04-2025- ஒரு கிராம் ரூ.112

    02-04-2025- ஒரு கிராம் ரூ.114

    • நாளை இரவுக்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்.
    • காற்றழுத்த தாழ்வு பகுதியில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் மிதமான மழை தொடர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தெற்கு வங்கக்கடலில் அடுத்த 36 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தென்கிழக்கு வங்கக்கடலை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்க சுழற்சி நிலவுவதால் காற்றழுத்தம் உருவாக வாய்ப்பு. நாளை இரவுக்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் மிதமான மழை தொடர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • வாய்தகராறு முற்றி ஒருவரையொருவர் ஆபாசமான வார்த்தைகளால் திட்டிக்கொண்டு கொடூரமாக தாக்கிக்கொண்டனர்.
    • இவர்களது சண்டையை அங்கிருந்தவர்கள் தடுக்க முயன்றும் அவர்கள் தொடர்ந்து தாக்கிக் கொண்டனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பகுதியில் மாமியார்-மருமகள் ஆகியோர் சண்டையிட்ட வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    லாடவரம் மதுரா கொள்ளுமேடு பகுதியை சேர்ந்தவர்கள் சக்கரவர்த்தி- சின்னபாப்பா தம்பதி. இவர்களது 2 மகன்களுக்கும் திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சின்னபாப்பா தனது விளைநிலத்தில் அமர்ந்திருந்த நிலையில், மூத்த மருமகள் ராஜேஸ்வரியுடன் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வாய்தகராறு முற்றி ஒருவரையொருவர் ஆபாசமான வார்த்தைகளால் திட்டிக்கொண்டு கொடூரமாக தாக்கிக்கொண்டனர்.

    இவர்களது சண்டையை அங்கிருந்தவர்கள் தடுக்க முயன்றும் அவர்கள் தொடர்ந்து தாக்கிக் கொண்டனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். 

    • அமைச்சர் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனுக்கு தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
    • அடையாறு, தேனாம்பேட்டை, சிஐடி காலணி, எம்.ஆ.சி. நகர் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    சென்னையில் அமைச்சர் கே.என்.நேருவின் மகனும் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி எம்.பி.யுமான அருண்நேரு வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் அமைச்சர் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனுக்கு தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    அடையாறு, தேனாம்பேட்டை, சிஐடி காலணி, எம்.ஆ.சி. நகர் உள்ளிட்ட இடங்களிலும் TVH குரூப் கட்டுமான நிறுவனங்கள் தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • ‘பிரிஞ்சி' என்ற சைவ பிரியாணி கடைகள்தான் கைகொடுத்து வருகின்றன.
    • ‘பிரிஞ்சி' கடைகளில் ரூ.20, ரூ.30, ரூ.40 என வெவ்வேறு கட்டணங்களில் பிரியாணி பொட்டலம் போட்டு விற்கப்படுகிறது.

    சென்னை:

    தற்போதைய காலகட்டத்தில் அதிகரித்து வரும் குடும்ப செலவுகளை சமாளிப்பதற்காக கணவன், மனைவி என 2 பேரும் வேலைக்கு செல்லவேண்டிய நிலை இருக்கிறது. இதனால் காலையில் வேலைக்கு புறப்படுவது முதல் அலுவலகம், கம்பெனிகளுக்கு சென்றடைவது வரை பெரும்பாலான தம்பதிகள் கடுமையான நேர நெருக்கடியை சந்திக்கிறார்கள். இதுஒருபுறம் இருக்க, பிள்ளைகளையும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கவேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறது.

    இத்தனை வேலைகளுக்கு இடையே சமையல் செய்வது என்பது குதிரை கொம்பாக இருக்கிறது. இதனால் பெரும்பாலான ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களை சேர்ந்த இல்லத்தரசிகள் வாரத்தில் குறிப்பிட்ட சில நாட்களில் காலை உணவு சமைத்துவிட்டு, மதிய உணவுக்கு விடுமுறை அளித்துவிடுகிறார்கள். இதுபோன்ற சமயத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பிரதான சாலைகளில் புதிது, புதிதாக முளைத்துள்ள 'பிரிஞ்சி' என்ற சைவ பிரியாணி கடைகள்தான் கைகொடுத்து வருகின்றன.

    'பிரிஞ்சி' கடைகளில் ரூ.20, ரூ.30, ரூ.40 என வெவ்வேறு கட்டணங்களில் பிரியாணி பொட்டலம் போட்டு விற்கப்படுகிறது. மிகவும் குறைந்த செலவில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பசியாறிவிடமுடியும் என்பதால் பெரும்பாலானவர்களின் பிரதான தேர்வாகவும் இவை இருக்கின்றன.

    இந்தநிலையில், 30 ரூபாய் பிரியாணி சமைப்பதற்காக பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கப்படுவதாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிப்பார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், "இது முற்றிலும் பொய்யான தகவல். சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வரும் வீடியோவில் இருப்பது பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கும் காட்சியல்ல. பழைய பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்யும்போது எடுக்கப்பட்ட வீடியோவின் ஒரு பகுதியை மட்டும் வெட்டி வதந்தி பரப்பி வருகிறார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் வரும் 12-ந்தேதி வரை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
    • தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

    சென்னை:

    தென் வங்கக்கடல் பகுதியில் நாளைக்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும் இதனால் தமிழகத்தில் வரும் 12-ந்தேதி வரை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    • சிஎஸ்கே-கேகேஆர் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் இன்று தொடங்குகிறது.
    • ஒரு நபருக்கு 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என சி.எஸ்.கே. நிர்வாகம் அறிவித்துள்ளது.

    சென்னை:

    நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதும் லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் வரும் 11-ம் தேதி இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.

    இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

    இன்று காலை 10.15 மணியில் இருந்து www.chennaisuperkings.com என்ற இணைய தளத்தின் வாயிலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். ரூ.1,700, ரூ.2,500, ரூ.3,500, ரூ.4,000, ரூ.7,500 ஆகிய விலைகளில் டிக்கெட் விற்கப்படுகிறது.

    ஒரு நபருக்கு 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்ற 4 போட்டிகளில் ஒரு வெற்றி, 3 தோல்வி பெற்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.

    • ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது.
    • தோனி இதுவரை ஆடிய 4 போட்டிகளிலும் அதிரடியாக விளையாடவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

    சென்னை:

    நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் ஒரு வெற்றி, 3 தோல்வி பெற்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.

    இதில் எம்.எஸ்.தோனி இதுவரை ஆடிய 4 போட்டிகளிலும் அணியின் வெற்றிக்காக அதிரடியாக விளையாடவில்லை என்ற விமர்சனம் உள்ளது. இதையடுத்து தோனி ஓய்வுபெற வேண்டும் என சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரவி வருகின்றன.

    இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான மேத்யூ ஹைடன் தோனி ஓய்வுபெற வேண்டும் என நேரடியாக தெரிவித்துள்ளார்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக சேஸிங் செய்ய வேண்டிய சூழ்நிலையில் தோனி மிகவும் நிதானமாக ஆடி வந்தார். அப்போது வர்ணனை செய்து கொண்டிருந்த மேத்யூ ஹைடன், "

    இதுதொடர்பாக மேத்யூ ஹைடன் கூறுகையில், இந்தப் போட்டிக்குப் பிறகு தோனி வர்ணனையாளர்கள் குழுவுடன் இணைய வேண்டும். அவர் கிரிக்கெட்டை தொலைத்து விட்டார். இனி அவ்வளவுதான். இந்த உண்மையை அவர் ஒப்புக்கொள்ள வேண்டும். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விலக வேண்டிய காலம் எப்போதோ வந்துவிட்டது என தெரிவித்தார்.

    ஹைடனின் இந்த விமர்சனம் தோனி ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • மாநில உரிமைகளைப் பற்றி பேச ஸ்டாலினுக்கோ, திமுகவுக்கோ கொஞ்சமாவது மனசாட்சி இருக்கிறதா?
    • இந்தியா கூட்டணியின் முதல் கூட்டத்திற்கு பாடனா சென்ற போது மாநில உரிமைகள் பற்றி ஏதாவது பேசினாரா?

    அதிமுக யாருடன் கூட்டணி செல்ல வேண்டும், என்ன கோரிக்கை வைக்க வேண்டும் னெ திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஏன் இவ்வளவு அக்கறை ? என அதிமுக தலைமை கேள்வி எழுப்பியுள்ளது.

    இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    அஇஅதிமுக யாருடன் கூட்டணி செல்லவேண்டும், என்ன கோரிக்கை வைக்க வேண்டும் என்பதில் திமுக தலைவராக இருக்கக் கூடிய ஸ்டாலினுக்கு என்ன இவ்வளவு அக்கறை? ஆடு நனைகிறதே என இந்த ஓநாய் அழுவது ஏன்?

    முதலில், மாநில உரிமைகளைப் பற்றி பேச ஸ்டாலினுக்கோ, திமுகவுக்கோ கொஞ்சமாவது மனசாட்சி இருக்கிறதா?

    இந்தியா கூட்டணியின் முதல் கூட்டத்திற்கு பாடனா சென்ற போது மாநில உரிமைகள் பற்றி ஏதாவது பேசினாரா?

    அல்லது, இரண்டாவது கூட்டத்திற்காக பெங்களுரு சென்றாரே- அப்போது காவிரி நீர் வராமல் இரண்டாம் போகம் விவசாயம் செய்யமுடியாமல் விவசாயிகள் அவதியுற்றதை கருத்திற்கொண்டு, தமிழ்நாட்டின் காவிரி நதிநீர் உரிமை குறித்து பேசிவிட்டு வந்தாரா?

    அவ்வளவு ஏன், தென் தமிழ்நாடே வெள்ளத்தில் தத்தளித்த போது, தனக்கு வாக்களித்த மக்களைக் காக்க வக்கில்லாமல், இந்தியாவைக் காக்கப் போகிறேன் என்று டெல்லியில் நடைப்பெற்ற இந்தியா கூட்டணியின் கூட்டத்திற்கு சென்றாரே- அப்போதாவது தமிழ்நாட்டின் மாநில உரிமைகள் பற்றி எதாவது பேசினாரா? கண்டுகொண்டாரா?

    இப்போது கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு தான் இருக்கிறது. "காவிரியில் தமிழ்நாட்டின் உரிமைகளை வழங்கினால் மட்டும் தான் காங்கிரஸ் உடன் கூட்டணி" என்று வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா மு.க.ஸ்டாலின் ?

    நீட் தேர்வை நாட்டிற்கே அறிமுகப்படுத்திவிட்டு, அதை உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடியது எந்தக் கூட்டணி? அந்தக் கூட்டணியில் தானே இன்று வரை இவர்கள் அங்கம் வகித்துக் கொண்டு இருக்கிறார்கள்? இதை விட ஸ்டாலினும் திமுகவும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு செய்யக் கூடிய மாபெரும் துரோகம் என்று ஏதாவது உள்ளதா?

    மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பற்றியோ, அதிமுக

    பற்றியோ பேச என்ன அருகதை இருக்கிறது இவருக்கு?

    "ரகசியம் இருக்கிறது" என்று பொய் சொல்லி ஆட்சிக்கு வந்துவிட்டு, இப்போது என்ன செய்வது என்றுத் தெரியாதவர் அரங்கேற்றும் இந்த "ஊட்டி நாடகத்தை" மக்கள் யாரும் நம்பப் போவது இல்லை.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழர்கள் மீதான மோடி அரசின் பாரபட்சத்தை, அலட்சியத்தை காட்டுகிறது.
    • தமிழகத்திற்கு மிக அதிக நிதி ஒதுக்கீடு செய்தும், சிலர் அழுது கொண்டே உள்ளதாக, கூசாமல் ஒரு பச்சைப் பொய்யை பேசியுள்ளார்.

    கச்சத்தீவு மீட்பு குறித்து இலங்கை அதிபரிடம் ஒரு வார்த்தைக்கூட பிரதமர் மோடி பேசவில்லை என தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    இலங்கை சென்று பல்வேறு திட்டங்கள் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, தமிழக மீனவர்கள் பிரச்சனை மற்றும் கச்சத்தீவு மீட்பு பற்றி ஒரு வார்த்தை கூட இலங்கை அதிபரிடம் பேசவில்லை.

    இது தமிழகத்திற்கு செய்யும் துரோகம். தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கும், பாதுகாப்பிற்கும் மிக முக்கிய தேவையான கச்சத்தீவை இந்திய அரசு மீட்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    இது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு சமீபத்தில் கடிதம் எழுதியுள்ளார். ஆனால் இதை அலட்சியம் செய்துள்ள பிரதமர் மோடி, இந்த முக்கிய பிரச்சனை பற்றி இலங்கை அதிபரிடம் எதுவும் பேசாமல் திரும்பியுள்ளார்.

    இலங்கை பொருளாதாரம் கடும் பாதிப்பிற்குள்ளான பின், இந்தியாவின் நிதி உதவிகள், இதர உதவிகளை நம்பியுள்ள நிலையில், தமிழக மீனவர்களின் நலன்கள் மற்றும் கச்ச தீவு மீட்பு குறித்து இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க கடந்த 4 ஆண்டுகளாக இந்திய அரசுக்கு பெரும் வாய்ப்புகள் உருவாகின.

    ஆனால் மோடி அரசு இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ள இன்று வரை மறுத்து வருகிறது. இது தமிழர்கள் மீதான மோடி அரசின் பாரபட்சத்தை, அலட்சியத்தை காட்டுகிறது.

    தமிழகம் இருக்கும் இடத்தில் குஜராத்தும், குஜராத்திகளும் இருந்து, குஜராத் மீனவர்கள் இதே போல பாதிக்கப்பட்டிருந்தால், மோடி இப்படி நடந்து கொள்வாரா என்ற கேள்வி எழுகிறது.

    இன்று ராமேஸ்வரத்தில் நடந்த நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு மிக அதிக நிதி ஒதுக்கீடு செய்தும், சிலர் அழுது கொண்டே உள்ளதாக, கூசாமல் ஒரு பச்சைப் பொய்யை பேசியுள்ளார்.

    புயல், வெள்ளம் பாதித்த தமிழ்நாட்டின் மாவட்டங்களுக்கு பேரிடர் நிதி ஒதுக்காதது, தமிழ்நாட்டிற்கு பள்ளிக் கல்விக்காக ஒதுக்கிய நிதியை வழங்காமல் இருப்பது, மாநில திட்டங்களுக்கு மத்திய நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டுவது, தமிழ்நாட்டிலிருந்து அதிகமான ஜி.எஸ்.டி வரி வருவாய் கிடைத்த போதும் நியாயமாக கிடைக்க வேண்டிய நிதியை வழங்காமல் இருப்பது ஆகியவற்றை மறைத்து விட்டு, தமிழக மக்களை ஏமாற்ற நினைக்கிறார்.

    பண வீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி காரணமாக, ஆண்டுக்கு ஆண்டு மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு அதிகரிப்பது இயல்பு.

    ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) அடிப்படையில் தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு விகிதம், மொத்த நிதி ஒதுக்கீட்டில் தமிழத்திற்கு அளிக்கப்படும் விகிதம் போன்ற விகிதங்களை ஒப்பிட்டால் உண்மை விளங்கும்.

    புயல், வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட போது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மொத்தம் ரூபாய் ரூ.36,000 கோடி நிதி கேட்டு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி வலியுறுத்தினார்.

    ஆனால், ஒன்றிய பா.ஜ.க. அரசு வழங்கியதோ ரூபாய் ரூ.226 கோடி. கடுமையான நிதி நெருக்கடியில் இருந்தாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மக்களுக்கு நிவாரண நடவடிக்கைகளுக்காக தமிழ்நாடு அரசு தனது சொந்த நிதியிலிருந்து ரூ.2028 கோடி செலவு செய்திருக்கிறது.

    ஒன்றிய பா.ஜ.க. அரசின் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்ததாலும், பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை தொடங்க நடவடிக்கை எடுக்காததாலும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ், தமிழ்நாடு அரசுக்கு ஒதுக்க வேண்டிய ரூ.2159 கோடி கடந்த பல மாதங்களாக ஒதுக்கப்படாமல் இருக்கிறது.

    இந்த உண்மைகளை பிரமர் மோடி ஏன் பேசவில்லை ? இந்த ஏமாற்று வேலைகள், பொய்கள், துரோகங்களுக்காக பாஜகவிற்கும், மோடிக்கும் தமிழக மக்கள் 2026 சட்டமன்ற தேர்தலில் தகுந்த பாடம் கற்பிப்பார்கள்'.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தொகுதி வரையறை மறுசீரமைப்புக்கு எதிராக நாம் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம்.
    • மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு.

    பெண்கள் என்றாலே சாதனை தான், சாதனை என்றாலே பெண்கள் தான் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    கோவை கொடிசியா அரங்கத்தில் வள்ளி கும்மபி நடனம் மூலம் கின்னஸ் சாதனை படைத்தவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    வள்ளிக்கும்மி நிகழ்ச்சியில் பங்கேற்ற 16,000 பெண்களுக்கு வாழ்த்துகள். வள்ளிக்கும்மி விழாவில் 16,000 பெண்கள் பங்கேற்றது என்பது மிகப்பெரிய சாதனை.

    பெண்கள் என்றாலே சாதனை தான், சாதனை என்றாலே பெண்கள் தான்.

    2026 சட்டமன்ற தேர்தலி்ல திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. மேற்கு மண்டல வளர்ச்சிக்கு ஏராளமான திட்டங்களை திராவிட மாடல் அரசு செயல்படுத்தி உள்ளது.

    தொகுதி வரையறை மறுசீரமைப்புக்கு எதிராக நாம் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம்.

    மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு.

    தொகுதி மறுவரையறை மறுசீரமைப்பு தொடர்பாக பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறோம்.

    40க்கு 40 வெற்றி என்பது மக்கள் நமது திராவிட மாடல் ஆட்சிக்கு கொடுத்த அங்கீகாரம்.

    நமக்கு நிதியை முறையாக வழங்கும் மத்திய அரசு இருந்திருந்தால் இன்னும் பல சாதனைகளை படைப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×