என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- தொகுதி வரையறை மறுசீரமைப்புக்கு எதிராக நாம் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம்.
- மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு.
பெண்கள் என்றாலே சாதனை தான், சாதனை என்றாலே பெண்கள் தான் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோவை கொடிசியா அரங்கத்தில் வள்ளி கும்மபி நடனம் மூலம் கின்னஸ் சாதனை படைத்தவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
வள்ளிக்கும்மி நிகழ்ச்சியில் பங்கேற்ற 16,000 பெண்களுக்கு வாழ்த்துகள். வள்ளிக்கும்மி விழாவில் 16,000 பெண்கள் பங்கேற்றது என்பது மிகப்பெரிய சாதனை.
பெண்கள் என்றாலே சாதனை தான், சாதனை என்றாலே பெண்கள் தான்.
2026 சட்டமன்ற தேர்தலி்ல திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. மேற்கு மண்டல வளர்ச்சிக்கு ஏராளமான திட்டங்களை திராவிட மாடல் அரசு செயல்படுத்தி உள்ளது.
தொகுதி வரையறை மறுசீரமைப்புக்கு எதிராக நாம் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம்.
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு.
தொகுதி மறுவரையறை மறுசீரமைப்பு தொடர்பாக பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறோம்.
40க்கு 40 வெற்றி என்பது மக்கள் நமது திராவிட மாடல் ஆட்சிக்கு கொடுத்த அங்கீகாரம்.
நமக்கு நிதியை முறையாக வழங்கும் மத்திய அரசு இருந்திருந்தால் இன்னும் பல சாதனைகளை படைப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.






