என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thiruvarur thyagaraja temple"

    • தலைமை பீடமாகவும் பெரிய கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.
    • நீண்ட வரிசையில் நின்று பாத தரிசனம் செய்து வருகின்றனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் தியாகராஜர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் பெரிய கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா நடந்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா கடந்த மாதம் 15 -ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவில் ஆழி தேரோட்டம் கடந்த 7-ம் தேதி நடைபெற்றது.

    இந்தநிலையில் பங்குனித் திருவிழாவின் அடுத்த முக்கிய நிகழ்வான தியாகராஜர் இடதுபாத தரிசனம் அருளும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் திருவாரூர் மாவட்டம் மட்டுமில்லாமல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் நின்று பாத தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு முசுகுந்த சகஸ்ரநாம அர்ச்சனை, மகாஅபிசேகம், நடராஜன் அபிசேகம் ஆகியவை நடைபெற்றது. பாத தரிசனத்தை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்: கருண் கரட் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • கடந்த மாதம் 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • தேரோட்டத்தை முன்னிட்டு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.

    திருவாரூர்:

    சோழ சாம்ராஜ்யத்தின் தலைநகரமாக விளங்கிய திருவாரூரில் பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோவில் அமைந்துள்ளது.

    இக்கோவில் சைவ சமய தலங்களில் முதன்மை தலமாகவும், சர்வ தோஷ பரிகார தலமாகவும், தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் 87-வது தலமாகவும் விளங்குகிறது.

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா விமரிசை யாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா கடந்த மாதம் (மார்ச்) 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினர்.

    பின்னர், கொடிமரத்திற்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்று கொடி ஏற்றப்பட்டது.

    தொடர்ந்து, விழா நாட்களில் தினமும் சுவாமி-அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா காட்சிகள் நடைபெற்று வந்தது. விழாவின் சிகர நிகழ்வான ஆழித்தேரோட்டம் இன்று (திங்கட்கிழமை) கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு அஜபா நடனத்துடன் தியாகராஜர் கோவிலில் இருந்து புறப்பட்டு, தேரில் எழுந்தருளினார்.

    பின்னர், இன்று காலை பூஜைகள் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டு தேரோட்டம் தொடங்கியது. தேரோட்டத்தை மாவட்ட கலெக்டர் மோகனசந்திரன், போலீஸ் சூப்பிரண்டு கருண் கரட், பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    முன்னதாக அதிகாலை 5.30 மணிக்கு விநாயகர், முருகன் தேர்கள் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. ஆழித்தேரோட்டத்தை தொடர்ந்து அம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்களும் இழுக்கப்பட்டன.

    ஆழித்தேரில் சுமார் 425 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டு இருந்த 4 வடங்களை, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆரூரா.. தியாகேசா... பக்தி கோஷம் விண்ணதிர பிடித்து இழுத்து சென்றனர்.

    தேரின் முன்பாக சிவனடியார்கள் பஞ்ச வாத்தியங்களை இசைத்தவாறும், தேவார திருமுறைகள் ஓதியவாறும் வீதிஉலா சென்றனர். ஆழித்தேரானது கீழ வீதியில் இருந்து புறப்பட்டு, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக இழுத்து வரப்பட்டு மாலை நிலையை அடையும்.

    ஆழித்தேரோட்டதை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கருண் கரட் தலைமையில், 3 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 17 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 50 இன்ஸ்பெக்டர்கள் உள்பட சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு துறையினர், நடமாடும் மருத்துவ குழுவினர் உள்ளிட்டோரும் தயார் நிலையில் இருந்தனர்.

    மேலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பக்தர்களுக்கு செய்து கொடுக்கப்பட்டு இருந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று நடை பெறுவதால் மாணவர்கள் சிரமமின்றி பள்ளிக்கு செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு, அதுகுறித்து மாவட்ட போலீஸ் துறை சார்பில் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

    ஆழித்தேரோட்டதை யொட்டி மாவட்ட கலெக்டர் மோகனசந்திரன் இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டார். பங்குனி உத்திர விழாவின் சிகர நிகழ்வை காண டெல்டா மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் திருவாரூர் நகரமே விழாக்கோலம் பூண்டது.

    • பங்குனி உத்திர திருவிழாவின் போது ஆழித்தேரோட்டம் நடைபெறுவதுண்டு.
    • பல ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் ஆழித்தே ரோட்டம் நடைபெறவில்லை.

    திருவாரூர் தியாராஜர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழாவின் போது முக்கிய நிகழ்வான ஆழித்தேரோட்டம் நடைபெறுவதுண்டு.


    இந்த விழாவிற்காக மாசி மாதத்தில் வரும் அஸ்த நட்சத்திரத்தில் கோவிலில் கொடியேற்றப்பட்டு, பங்குனி மாதத்தில் வரும் ஆயில்ய நட்சத்திரத்தில் ஆழித்தேரோட்டம் நடத்த வேண்டும் என்பது ஆகமவிதி.

    ஆனால், பல ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் ஆயில்ய நட்சத்திரத்தன்று ஆழித்தே ரோட்டம் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆகமவிதியை கடைபிடித்து ஆரூரானுக்கு ஆயில்யத்தன்று தான் தேரோட்டம் நடத்த வேண்டும் என்ற பக்தர்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது.


    30 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2021-ம் ஆண்டு ஆயில்ய நட்சத்திர தினத்தன்று ஆழித்தேரோட்டம் நடந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளிலும், முறையே, கடந்த ஆண்டு (2024) நடந்த பங்குனி திருவிழாவின் போது ஆயில்ய நட்சத்திர தினத்தன்று தான் தேரோட்டம் நடந்தது.

    அதே போல், இந்த ஆண்டும் தொடர்ந்து 5-வது முறையாக ஆயில்ய நட்சத்திரம் வரும் அதே நாளான வருகிற 7-ந்தேதி (திங்கட்கிழமை) ஆழித்தேர் திருவிழா நடைபெற உள்ளது. இது சிவபக்தர்கள் மற்றும் ஆன்மீக அன்பர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • வன்மீகநாதரை உச்சிகால நேரத்தில் தரிசனம் செய்தால் தோஷம் நீங்கும்.
    • நவக்கிரகங்கள் இங்கு தீப வடிவில் சிவபெருமானை வழிபடுவதாக ஐதீகம்.

    திருவாரூர் தியாகராஜர் கோவிலின் சிறப்புகள் எண்ணில் அடங்காதவை. அது குறித்து அறிய, அறிய நம்மிடம் பல ஆச்சரியத்தை ஏற்படுத்துபவை. அவற்றுள் சில குறிப்பிடத்தக்க சிறப்புகளை இங்கு சுருக்கமாய் காண்போம்.

    ராஜேந்திர சோழன் சிலை

    தென்கிழக்கு ஆசியாவை கட்டியாண்டவரும், உலகின் மிகப்பெரிய படைக்கு சொந்தக்காரருமாகவும் விளங்கிய ராஜேந்திர சோழனின் உருவச்சிலை திருவாரூர் தியாகராஜர் கோவில் அமைந்துள்ளது. இது இக்கோவிலுக்கு கிடைக்கப்பெற்ற மற்றுமொரு சிறப்பாகும்.


    பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்

    மகாலட்சுமி, தவம் செய்து மகாவிஷ்ணுவை திருமணம் செய்ததும், குழந்தைப்பேறு வேண்டி தவம் செய்து குழந்தைப்பேறு பெற்றதும், இந்த தியாகராஜர் தலமாகும்.

    எனவே, குழந்தைப்பேறு இல்லாதவர்கள் தியாகராஜரை வழிபாடு செய்தால் குழந்தைப்பேறு கிட்டும், காதலுக்கு தூது போனவர் தியாகராஜர் என்பதால், காதல் கைகூடவும் எவ்வித சிக்கலும் இன்றி திருமணம் நடந்தேறவும் தியாகராஜரை வழிபடலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கொடுமையான பாவங்கள் செய்தால் உண்டாகும் பிரம்மஹத்தி தோஷம் நீங்க, வன்மீகநாதரை உச்சிகால நேரத்தில் தரிசனம் செய்தால் தோஷம் நீங்க பெறலாம்.


    தோல் நோய் குணமாகும்

    உடலில் தோன்றும் தோல் நோய், மரு போன்றவை மறைய ஆழித்தேரோட்டத்தின் போது மிளகு, உப்பு, பச்சரிசி, மஞ்சள் பொடி தூவி பக்தர்கள் வழிபடுகின்றனர். இதன் மூலம் பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ள நோய் குணமாகும் என்பது நம்பிக்கை.

    தீப வடிவில் நவகிரகங்கள்

    இத்தலம் நளனும், சனியும் வழிபட்ட தலம். தியாகேசர் சன்னதியின் மேல் வரிசையில் 9 விளக்குகள் உள்ளன. நவக்கிரகங்கள் இங்கு தீப வடிவில் சிவபெருமானை வழிபடுவதாக ஐதீகம். பெருமானுக்கு முன் 6 மற்றும் 5 அடுக்குகள் கொண்ட இரு விளக்குகள் உள்ளன. இவை ஏகாதச ருத்திரர்களை குறிக்கும்.

    சந்தனத்தின் மீது குங்கும பூவையும் பச்சை கற்பூரத்தையும் சேர்த்து, உத்ஸவ வீதிகளில் ஆடிய அசதி தீர, தியாகேசருக்கு மருந்து நிவேதிக்கப்படுகிறது. இது சுக்கு, மிளகு, திப்பிலி, வெல்லம் ஆகியவற்றால் தயாரிக்கப்படுகிறது.

    • மழையில் தேர் நனைவதால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர்.
    • 2019-ம் ஆண்டு ஆழித்தேருக்கு ரூ.40 லட்சம் மதிப்பில் கண்ணாடி கூண்டு அமைக்கப்பட்டது.

    திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் ஆழித்தேரோட்டம் உலக புகழ் பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

    அலங்கரிக்கரிக்கப்பட்ட ஆழித்தேரின் உயரம் 96 அடியாகும். இதன் மொத்த எடை 300 டன். திருச்சி பெல் நிறுவனம் மூலம் 4 இரும்பு சக்கரங்களிலும் 'ஹைட்ராலிக் பிரேக்' பொருத்தப்பட்டுள்ளது.

    ஆழித்தேரை இரும்பு தகட்டினால் ஆன மேற்கூரை கொண்டு மூடுவது வழக்கம். இதனால் பிரம்மாண்டான ஆழித்தேரின் அழகிய தோற்றம், மர சிற்பங்கள் என அனைத்தும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் பார்க்க முடியாமல் இருந்து வந்தது.

    ஆழித்தேரை எல்லா நேரத்திலும் எல்லோரும் காணும் வகையில் கண்ணாடி கூண்டு அமைத்திட இந்து சமய அறநிலைத்துறை திட்டமிட்டது, அதன்படி கடந்த 2019-ம் ஆண்டு ஆழித்தேருக்கு ரூ.40 லட்சம் மதிப்பில் கண்ணாடி கூண்டு அமைக்கப்பட்டது.

    ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தேரோட்ட விழாவையொட்டி கடந்த பிப்ரவரி மாதம் 10-ந் தேதி ஆழித்தேரின் கூரைகள் பிரிக்கப்பட்டு தேர் அலங்கரிக்கும் பணிகள் தொடங்கி, தேரோட்டமானது மார்ச் 15-ந் தேதி நடந்தது.

    இதனையடுத்து ஆடிப்பூர விழாவையொட்டி அம்பாள் தேரோட்டம் நடைபெறும். ஆழித்தேருக்கு பின்னால் நிறுத்தப்பட்டு உள்ள அம்பாள் தேர், ஆழித்தேரை கடந்து செல்ல வேண்டும். இதனால் ஆழித்தேருக்கு கண்ணாடி கூண்டு அமைக்கப்பட்டால் அம்பாள் தேர் வடம் பிடித்து செல்லும்போது இடையூறாக இருக்கும். மேலும் கண்ணாடி கூண்டு என்பதால் ஏதேனும் லேசாக உரசினால் கூட ஆழித்தேரின் கண்ணாடி கூண்டு சேதமடைந்து விடும்.

    இதனால் அம்பாள் தேரோட்டத்திற்கு வசதியாக ஆழித்தேருக்கு தற்காலிக இரும்பு தகடுகளை கொண்டு மூடப்பட்டது. இந்த நிலையில் ஜூலை 31-ந் தேதி அம்பாள் தேரோட்டமும் நடந்தது.

    இதனையடுத்து கடந்த ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி தற்காலிக கூரை பிரிக்கப்பட்டு மீண்டும் கண்ணாடி கூண்டு அமைக்கும் பணி தொடங்கியது. பணிகள் தொடங்கி சுமார் 2 மாதங்கள் ஆன நிலையில் இந்த பணிகள் மிகவும் மந்தமாக நடந்து வருகிறது.

    இதில் மேற்பகுதி கூரை மட்டும் போடப்பட்ட நிலையில் நான்கு புறங்களிலும் கண்ணாடி கூண்டு அமைக்கும் பணி நிறைவு பெறாமல் உள்ளது.

    திருவாரூரில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஆழித்தேருக்கு சரிவர கண்ணாடி கூண்டுகள் பொருத்தாததால் தேர் நனைந்து வருகிறது. இதனால் பக்தர்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

    ஆழித்தேரை பாதுகாக்கும் நடவடிக்கையாக மந்த கதியில் நடைபெறும் கூண்டு அமைக்கும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். விரைந்து பணிகளை முடித்து மழையில் தேர் நனையாமல் பாதுகாக்க வேண்டும் என்று இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேருக்கு கண்ணாடி கூண்டு அமைக்கும் பணி விரைவில் முடிவடையுமா? என்று பக்தர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
    பஞ்சபூத தலங்களில் பூமிக்குரிய தலமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குவது திருவாரூர் தியாகராஜர் கோவிலாகும். சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் இக்கோவில் திகழ்கிறது. இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் நடைபெறும் ஆழித்தேரோட்டம் உலக புகழ் பெற்றது.

    ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமைமிக்கது இந்த தேர். ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அலங்கரிக்கரிக்கப்பட்ட ஆழித்தேரின் உயரம் 96 அடியாகும். இதன் மொத்த எடை 300 டன். திருச்சி பெல் நிறுவனம் மூலம் 4 இரும்பு சக்கரங்களிலும் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.

    இந்த தேரின் மேல் பகுதி 4 அடுக்குகளாக மூங்கில் மற்றும் சவுக்கு மரங்களை கொண்டு கட்டப்பட்டு கீற்று வேய்ந்து, 7 ஆயிரத்து 500 சதுர அடி கொண்ட தேர் சீலைகளால் அலங்கரிக்கப்படுகிறது. மிக பிரமாண்டமான ஆழித்தேரில் வீற்றிருந்து நான்கு வீதிகளில் உலா வரும் தியாகராஜரை பயபக்தியுடன் பக்தர்கள் வணங்குவார்கள்.

    ஆழித்தேரோட்டம் முடிவடைந்த நிலையில் இரும்பு தகட்டினால் ஆன மேற்கூரை கொண்டு தேரை மூடுவது வழக்கம். இதனால் பிரமாண்டான ஆழித்தேரின் அழகிய தோற்றம், மர சிற்பங்கள் என அனைத்தும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் பார்க்க முடியாமல் இருந்து வந்தது. இதனால் ஆழித்தேரை எந்த நேரத்திலும் அனைவரும் காணும் வகையில் கண்ணாடி கூண்டு அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து தேருக்கு கண்ணாடி கூண்டு அமைக்க இந்துசமய அறநிலைத்துறை திட்டமிட்டது. கடந்த மே மாதம் 27-ந் தேதி ஆழித்தேரோட்டம் முடிவடைந்த நிலையில் இரும்பு கூரையால் மூடப்படாமல் தேர் திறந்து இருந்தது.

    இந்த நிலையில் தற்போது பெய்து வரும் பருவ மழையில் தேர் நனைந்து வீணாகுவதை கண்டு பக்தர்கள் வேதனையடைந்தனர். இதனையடுத்து கோவில் நிர்வாகம் இரும்பு தகட்டினால் மேற்கூரை அமைத்து, தார்பாய் கொண்டு தேரினை மூடியது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் ஆழித்தேருக்கு ரூ.40 லட்சம் மதிப்பில் கண்ணாடி கூண்டு அமைக்க பூமி பூஜையுடன் பணிகள் தொடங்கப்பட்டது. கண்ணாடி கூண்டிற்காக ஆழித்தேரை சுற்றி சிமெண்டு கான்கிரீட் சாலையில் பள்ளங்கள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெறுவதால் தேரை சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் பிரதான கீழவீதி சாலையில் வாகனங்கள் செல்வதற்கு போதிய இடவசதி இல்லாமல் போக்குவரத்து அடிக்கடி பாதிக்கப்பட்டு வருகிறது. கண்ணாடி கூண்டு அமைக்கும் பணிகள் துரிதமாக தொடங்கிய நிலையில் நாளடைவில் பணிகள் தேக்க நிலை ஏற்பட்டு தற்போது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

    கடந்த முறை ஆழித்தேர் மழையில் நனைந்து சேதம் அடைந்ததால் ரூ.2 கோடியே 15 லட்சம் செலவில் தேர் புதுப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை கனமாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த கன மழையில் இருந்து தேரை பாதுகாத்திட தற்காலிக கூரை போதுமானதல்ல.

    எனவே ஆழித்தேருக்கு கண்ணாடி கூண்டு அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து வரலாற்று சிறப்புமிக்க ஆழித்தேரை பாதுகாக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ×