என் மலர்
உள்ளூர் செய்திகள்
- நாம் தமிழர் கட்சி மற்றும் த.வெ.க கட்சி நிர்வாகிகள் இடையே மோதலை உருவாக்கும் வகையில் பேசியதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
- தொடர்ந்து எங்களது கட்சித் தலைவரை அவமரியாதையாக பேசி வரும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேட்டுப்பாளையம்:
கோவையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாம் தமிழர் கட்சி சார்பில் நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார். அப்போது சீமான், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்து பேசினார். இதற்கு த.வெ.கவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் த.வெ.க தலைவர் விஜய் குறித்து அவதூறாக பேசிய நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் மேட்டுப்பாளையம் நகர செயலாளர் காஜா தலைமையில் நிர்வாகிகள் புகார் மனு அளித்தனர். அந்த புகார் மனுவில் அவர்கள் கூறியிருப்பதவாது:-
கோவையில் அண்மையில் நடந்த நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில், அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான், த.வெ.க கட்சி தலைவரான நடிகர் விஜய்யை தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியும், ஒருமையிலும் பேசியதாகவும், இதனால் நாம் தமிழர் கட்சி மற்றும் த.வெ.க கட்சி நிர்வாகிகள் இடையே மோதலை உருவாக்கும் வகையில் பேசியதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
தொடர்ந்து எங்களது கட்சித் தலைவரை அவமரியாதையாக பேசி வரும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மோதல் போக்கை உருவாக்கும் வகையில் பேசி வரும் அவர் மீது சட்டம் ஒழுங்கு சீர்குலைவு பிரச்சனை ஏற்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டிசம்பர் மாதம் 1-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அறங்காவலர்கள் முடிவு செய்து உள்ளனர்.
- 2 கொலுசுகளை டெல்லியை சேர்ந்த பெண் தொழிலதிபர் வழங்கினார்.
கும்பகோணம்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ஆதிகும்பேஸ்வரர் கோவில் உள்ளது.
இந்த கோவில் மகாமகத்துடன் தொடர்புடைய கோவில்களில் முதன்மையான கோவிலாக உள்ளது. இந்த கோவிலில் வருகிற டிசம்பர் மாதம் 1-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அறங்காவலர்கள் முடிவு செய்து உள்ளனர்.
இதைத்தொடர்ந்து தற்போது கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த கோவிலில் மங்களம் என்ற யானை உள்ளது. இந்த யானைக்கு ரூ.2 லட்சம் மதிப்பில் 1½ கிலோ எடையில் வெள்ளியில் செய்யப்பட்ட 2 கொலுசுகளை டெல்லியை சேர்ந்த பெண் தொழிலதிபர் வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து கோவில் சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்து, யானை மங்களத்தின் 2 முன்னங்கால்களில் புதிய வெள்ளிக்கொலுசுகளை அணிவித்தனர்.
அப்போது கோவில் செயல் அலுவலர் முருகன், மற்றும் யானைப்பாகன் அசோக் மற்றும் கோவில் பணியாளர்கள் உடனிருந்தனர். கால்களில் வெள்ளி கொலுசுகளை அணிந்தபடி நின்ற கோவில் யானை மங்களத்தை திரளான பக்தர்கள் பார்த்து ரசித்து சென்றனர்.
- கட்சி நிர்வாகிகளின் கருத்தை கேட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
- இ.பி.எஸ். கூறியிருப்பதற்கு நல்ல ஒரு விளக்கத்தை அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறி இருக்கிறார்.
சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:
* கட்சி நிர்வாகிகளின் கருத்தை கேட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
* விரைவில் தனது தரப்பு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்ட உள்ளேன்.
* அ.தி.மு.க. ஆட்சியை காப்பாற்றியதே பா.ஜ.க. தான் என்று இ.பி.எஸ். கூறியிருப்பதற்கு நல்ல ஒரு விளக்கத்தை அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறி இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பிரதமர் நரேந்திர மோடியின் 75-ஆம் பிறந்தநாளில் அவருக்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- பிரதமர் மோடி அனைத்து நலன்களுடன் நீண்ட காலம் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 75-ஆம் பிறந்தநாளில் அவருக்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரதமர் மோடி அனைத்து நலன்களுடன் நீண்ட காலம் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து பொதுவாழ்க்கையில் வெற்றி பெறவும், நாட்டிற்கு சேவையாற்றவும் வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சுயமரியாதையின் சின்னம் தந்தைப் பெரியாரின் 147-ஆம் பிறந்தநாள் இன்று.
- வன்னிய மக்களுக்கு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான தொடர்சாலை மறியல் போராட்டம் இன்று தான் தொடங்கியது.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
சுயமரியாதையின் சின்னம் தந்தைப் பெரியாரின் 147-ஆம் பிறந்தநாள் இன்று. தமிழ்நாட்டின் சமூகநீதி வரலாற்றில் இந்த நாள் மிகவும் முக்கியமான நாள். வன்னிய மக்களுக்கு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான தொடர்சாலை மறியல் போராட்டம் இன்று தான் தொடங்கியது. தமிழ்நாட்டின் சமூகநீதி நாளும் இன்று தான். தமிழ்நாட்டில் அனைத்து மக்களுக்குமான சமூகநீதியை வென்றெடுப்பதற்காக தந்தைப் பெரியார் வகுத்துக் கொடுத்த சமூகநீதிப் பாதையில் பயணிக்கவும், போராடவும் இந்த நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விண்ணப்பத்தை பாரபட்சமின்றி பரிசீலித்து உத்தரவிட கோரிக்கை.
- தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் நிர்மல்குமார் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மேற்கொள்ள உள்ள பிரசாரத்துக்கு அனுமதி கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.
விஜய் தரப்பில் தாக்கல் செய்த மனுவில், அனுமதிகோரிய விண்ணப்பத்தை பாரபட்சமின்றி பரிசீலித்து உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழக டிஜிபிக்கு உத்தரவிடக் கோரி தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் நிர்மல்குமார் வழக்கு தொடர்ந்துள்ளார்.
- ஒவ்வொருவரும் ஒவ்வொரு கலரில் பஸ் எடுத்து செல்கின்றனர்.
- ஒருவர் பச்சை கலர் பஸ்சிலும், ஒருவர் மஞ்சள் கலர் பஸ்சிலும் செல்கின்றனர்.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் மாநிலத்தில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களின் வங்கி கடன் இணைப்பு மற்றும் அடையாள அட்டைகள் வழங்கும் விழா சேலம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், எம்.பி.க்கள் டி.எம்.செல்வகணபதி, பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் தலைமை செயலாளர் ககன்தீப் சிங் பேடி வரவேற்றார்.
விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3,500 கோடி வங்கிக் கடன் இணைப்புகளையும், மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளையும் வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
நாம் தொலைக்காட்சிகளை பார்க்கிறோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கலரில் பஸ் எடுத்து செல்கின்றனர். ஒருவர் பச்சை கலர் பஸ்சிலும், ஒருவர் மஞ்சள் கலர் பஸ்சிலும் செல்கின்றனர். நான் கூறுகிறேன், கடைசியாக எல்லாத்தையும் 'ஓவர்டேக்' செய்து வெற்றி பெறுவது பிங்க் கலர் பஸ்தான். இது மகளிர்களான நீங்கள் பயன்படுத்தும் முதலமைச்சரின் அந்த 'பிங்க் கலர்' பஸ் தான் மற்ற எல்லா பஸ்களையும் ஓரம் கட்டிவிட்டு வெற்றி பெறும் என்றார்.
- தந்தை, மகனுக்கு இடையே ஏற்பட்ட கருத்து மோதலால் இரு அணிகளாக சென்று இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
- தைலாபுரம் தோட்டம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திண்டிவனம்:
வன்னியர்களுக்காக தொடங்கப்பட்ட பா.ம.க.வில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 தியாகிகளுக்கு அவரது நினைவிடங்களில் ஆண்டுதோறும் செப்டம்பர் 17-ந் தேதி டாக்டர் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் ஒன்றாக சேர்ந்து அஞ்சலி செலுத்துவது வழக்கம்.
தற்போது தந்தை, மகனுக்கு இடையே ஏற்பட்ட கருத்து மோதலால் இரு அணிகளாக சென்று இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
இதன் ஒரு பகுதியாக தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் தலைவர் டாக்டர் ராமதாஸ் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21 தியாகிகளுக்கு அங்குள்ள அரசியல் பயிலரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள 21 பேரின் உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.
முன்னதாக பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு தைலாபுரம் தோட்டம் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையொட்டி தைலாபுரம் தோட்டம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே. மணி, ராமதாஸ் மூத்த மகள் ஸ்ரீகாந்தி, பேராசிரியர் தீரன், பு.தா அருள்மொழி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.
அதனைத் தொடர்ந்து சித்தணி, பாப்பம்பட்டு, பனையபுரம் , கோலியனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவு தூண்களில் டாக்டர் ராமதாஸ் அஞ்சலி செலுத்துகிறார்.
- தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நேற்று நீர்வரத்து 9,500 கன அடி வந்தது.
- சுற்றுலா பயணிகள் மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
தருமபுரி:
கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நேற்று நீர்வரத்து 9,500 கன அடி வந்தது.
இதையடுத்து காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்துள்ளது. இதன் காரணமாக இன்று காைல 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 8,000 கனஅடியாக தண்ணீர் குறைந்து வந்தது.
இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
மேலும் அவர்கள் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர். பின்னர் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகள் மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- வெள்ளி விலையும் குறைந்துள்ளது.
- பார் வெள்ளி ஒரு லட்சத்து 42 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.
சென்னை:
சென்னையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
கடந்த வாரம் முழுவதும் உயர்ந்த தங்கம் விலை வார தொடக்க நாளான திங்கட்கிழமை சற்று குறைந்தது. இதனை தொடர்ந்து நேற்று சவரனுக்கு 580 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.82,240-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,270-க்கும் சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ. 82,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு இரண்டு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 142 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 42 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
16-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.82,240
15-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.81,680
14-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.81,760
13-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.81,760
12-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 81,920
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
16-09-2025- ஒரு கிராம் ரூ.144
15-09-2025- ஒரு கிராம் ரூ.143
14-09-2025- ஒரு கிராம் ரூ.143
13-09-2025- ஒரு கிராம் ரூ.143
12-09-2025- ஒரு கிராம் ரூ.142
- தமிழ்நாடு காவல்துறையை குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகிறது.
- தமிழ்நாட்டில் உள்ள கல்லூரியில் நடந்ததைப் போன்று குறிப்பிட்டு வதந்தி பரப்பி வருகிறார்கள்.
சென்னை:
பள்ளி மாணவர் தாக்கப்படுவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் 'டேக்' செய்யப்பட்டு தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிலர் பதிவிட்டு வருகின்றனர். இதற்கு தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்து இருக்கிறது.
அதில், "அரசு இளநிலை கல்லூரியில் ராகிங் என்ற பெயரில் மாணவன் அடித்துக் கொல்லப்படுவதாக தமிழ்நாடு காவல்துறையை குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் தமிழ்நாட்டில் நடந்தது இல்லை. ஆந்திர மாநிலம் பாலநாடு மாவட்டத்தில் உள்ள பள்ளியில் கடந்த ஆகஸ்டு மாதம் பிளஸ்-2 வகுப்பு மாணவர்கள் பிளஸ்-1 வகுப்பு மாணவரை தாக்கியுள்ளனர். அந்த காணொளியை தமிழ்நாட்டில் உள்ள கல்லூரியில் நடந்ததைப் போன்று குறிப்பிட்டு வதந்தி பரப்பி வருகிறார்கள். வதந்திகளை நம்பாதீர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அயராத அர்ப்பணிப்பு மற்றும் தேசத்திற்கான உறுதிபாடு தொடர்ந்து மில்லியன் கணக்கானவர்களுக்கு ஊக்கமளிக்கிறது.
- நமது மகத்தான தேசத்தை வழிநடத்த தொடர்ந்து பலம் கிடைக்க வாழ்த்துகிறேன்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
நமது மாண்புமிகு பிரதமருக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் தொலைநோக்கு பார்வையுடைய தலைமை பண்பு, அயராத அர்ப்பணிப்பு மற்றும் தேசத்திற்கான உறுதிபாடு தொடர்ந்து மில்லியன் கணக்கானவர்களுக்கு ஊக்கமளிக்கிறது.
உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள், மற்றும் நமது மகத்தான தேசத்தை வழிநடத்த தொடர்ந்து பலம் கிடைக்க வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.






