என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெரும்பாலான தொழிலாளர்களுக்கு நிலமும் இல்லை, சொந்த வீடும் இல்லை.
    • எங்கள் பிள்ளைகளுக்கு இலவச கல்வி அளிக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும்.

    மதுரை:

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா மாஞ்சோலை எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த அமுதா, ஸ்டாலின் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    மாஞ்சோலை மலைப்பகுதியில் உள்ள 8,374 ஏக்கர் நிலத்தை 99 வருட குத்தகைக்கு சிங்கம்பட்டி ஜமீனிடம் இருந்து 1928-ம் ஆண்டு தனியார் நிறுவனம் பெற்றது. மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் 700 குடும்பத்தினர் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தோம். 2028-ம் ஆண்டில் குத்தகை முடிகிறது.

    ஆனால் 4 ஆண்டுகள் முன்னதாகவே தனியார் நிறுவன குத்தகை ஒப்பந்தத்தை முடித்துக்கொள்வதால் எங்களை அங்கிருந்து காலி செய்யுமாறு தெரிவித்தனர். பல தலைமுறைகளாக தேயிலை தோட்ட தொழிலாளர்களாக பணியாற்றிய எங்களை திடீரென காலி செய்யுறுமாறு கூறுவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. எங்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச தொகை வழங்கப்படுவதாக கூறப்பட்டு உள்ளது.

    பெரும்பாலான தொழிலாளர்களுக்கு நிலமும் இல்லை, சொந்த வீடும் இல்லை. மாஞ்சோலை எஸ்டேட் முகவரியில் மட்டுமே ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளதால், அடுத்த மாதம் முதல் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாத நிலை உள்ளது. இதனால் 700 குடும்பங்களை சேர்ந்த 2,150 பேர் வாழ்வாதாரம் இன்றி தவிக்கிறோம்.

    எனவே எங்களுக்கு தமிழக அரசின் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் வீடு வழங்கவும், கன்னியாகுமரி ரப்பர் தோட்ட கழகத்தில் வேலை வழங்கவும் வேண்டும். அதேபோல அங்கன்வாடி, பள்ளிகளில் சமையல் உதவியாளர், அலுவலக உதவியாளர் பணிகளை வழங்க வேண்டும். எங்கள் பிள்ளைகளுக்கு இலவச கல்வி அளிக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

    இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி மகா தேவன், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் லஜபதிராய், வக்கீல் பினேகாஸ் ஆஜராகி, ஊட்டியில் புலிகள் காப்பகத்துக்காக தேயிலை தோட்ட தொழிலாளர்களை காலி செய்யும் நடவடிக்கையின்போது வனத்துறை சார்பிலும் இழப்பீடு வழங்கப்பட்டது. அதுபோல மாஞ்சோலையையும் புலிகள் காப்பகத்துக்காக கையகப்படுத்தப்படுவதால், அங்குள்ள தொழிலாளர்களுக்கும் வனத்துறை இழப்பீடு வழங்க வேண்டும் என வாதாடினர்.

    மேலும், மனுதாரர்கள் உள்ளிட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அடிப்படை வசதிகளை மாநில அரசு செய்து தருவது அவசியம் எனவும் கோரினர். இதை பதிவு செய்து கொண்ட பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

    மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடு உள்ளிட்ட மறுவாழ்வு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரும் வரை மாஞ்சோலையில் இருந்து அவர்களை வெளியேற்ற தடை விதிக்கப்படுகிறது. இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும். இந்த வழக்கு நாளை மறுநாள் ஒத்திவைக்கப்படுகிறது.

    இவ்வாறு பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அனைத்து மாநில தலைநகரங்களிலும் போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சியினருக்கு கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.
    • போராட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    நாடு முழுவதும் கடந்த மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதால் மறுதேர்வை நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக வரும் 21-ந்தேதி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநில தலைநகரங்களிலும் போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சியினருக்கு கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.

    நீட் தேர்வில் நடைபெற்றுள்ள ஊழல் முறைகேடுகள், தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் தொடர் மௌனத்தை கண்டித்து நீதி கேட்டு போராட்டம் நடைபெறுகிறது. போராட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    • பல்வேறு இடங்களில் விதிமுறைகள் மீறி பிரமாண்ட பேனர்களை வைத்து உள்ளனர்.
    • விளம்பர பேனர்கள் நெடுஞ்சாலை ஓரம் ஆபத்தான நிலையில் காட்சி அளிக்கிறது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் பொது இடங்களில் விதிமுறைகள் மீறி விளம்பர பேனர்கள் வைக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. விளம்பர பேனர் வைக்க வேண்டும் என்றால் அந்தந்த நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி கோரி குறிப்பிட்ட தொகை செலுத்தி போலீசாரிடம் அனுமதி பெற்று வைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    எனினும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விதிமுறைகள் மீறி பிரமாண்ட பேனர்களை வைத்து உள்ளனர்.

    இவ்வாறு வைக்கப்படும் விளம்பர பேனர்கள் நெடுஞ்சாலை ஓரம் ஆபத்தான நிலையில் காட்சி அளிக்கிறது. கடந்த சிலநாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக திருவள்ளூர் - செங்குன்றம் நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர் ஒன்று காற்றில் சரிந்தது. அந்த பேனர் எப்போது வேண்டுமானாலும் சாலையில் நடந்து செல்பவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது விழும் அபாய நிலையில் காட்சி அளித்தது. இதனால் அவ்வழியே செல்பவர்கள் அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டது.

    எனவே ஆபத்தான நிலையில் இருக்கும் இந்த விளம்பர பேனர்களை அகற்றி, விதிமுறைகள் மீறி விளம்பர பேனர்கள் வைப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. போட்டியிடுகின்றது.
    • கடந்த தேர்தலில் இந்த தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் புகழேந்தி வெற்றி பெற்றார்.

    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் ஜூலை 10-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கள் கடந்த 14-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. பா.ம.க. சார்பில் சி. அண்புமணி போட்டியிடுவதாகவும் அறிவிப்பு வெளியானது. இத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதாக அக்கட்சி தலைமை அறிவித்தது.

    இந்நிலையில் தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அன்னியூர் சிவா இன்று காலை 11 மணிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது, அமைச்சர் பொன்முடி, ஜெகத்ரட்சகன் எம்.பி. மாவட்ட பொறுப்பாளர் கவுதமசிகாமணி. விழுப்புரம் பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    வேட்பு மனு தாக்கல் செய்து விட்டு வெளியில் வந்த பின்னர் அமைச்சர் பொன்முடி கூறுகையில், கடந்த தேர்தலில் இந்த தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் புகழேந்தி வெற்றி பெற்றார். அப்போது, அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க. போன்ற கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடது. அந்த நேரத்திலேயே 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வெற்றி பெற்றது.

    தற்போது, பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. போட்டியிடுகின்றது. இவர்களுடன் அ.தி.மு.க. இல்லை. எனவே, தி.மு.க. வேட்பாளர் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கமலாலயத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று அக்கட்சியின் மையக்குழு கூட்டம் நடைபெற்றது.
    • தமிழக பா.ஜ.க.வின் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

    சென்னை:

    சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று அக்கட்சியின் மையக்குழு கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் தமிழக பாஜகவின் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி மற்றும் மாநில நிர்வாகிகள், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரசாரம் தொடர்பாகவும், தமிழக பா.ஜ.க.வின் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

    மேலும் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ.க. தோல்வி அடைந்த நிலையில், தோல்விக்கான காரணம் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • உழைப்புச் சுரண்டலை ஊக்குவிக்கும் என்று உயர் நீதிமன்றத்தால் விமர்சிக்கப்பட்ட முறையை அரசு பின்பற்றுவது கண்டிக்கத்தக்கது.
    • 12 மணி நேர வேலை விவகாரத்தில் எதிர்கொண்டது போன்ற கடுமையான போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய மண்டலங்களில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை தனியார் மனிதவள நிறுவனங்களிடமிருந்து குத்தகை முறையில் பெறுவதற்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.

    உழைப்புச் சுரண்டலை ஊக்குவிக்கும் என்று உயர் நீதிமன்றத்தால் விமர்சிக்கப்பட்ட முறையை அரசு பின்பற்றுவது கண்டிக்கத்தக்கது.

    சமூகநீதிக்கும், தொழிலாளர் உரிமைக்கும் எதிரான குத்தகை முறை நியமனத்தை அரசு கைவிடவில்லை என்றால், 12 மணி நேர வேலை விவகாரத்தில் எதிர்கொண்டது போன்ற கடுமையான போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.

    எனவே, தமிழக அரசு அதன் தவறுகளைத் திருத்திக் கொண்டு, குத்தகை முறையில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை நியமிப்பதை கைவிட வேண்டும். போக்கு வரத்துத்துறை பணியாளர்களை அனைத்து உரிமைகளுடன் தமிழக அரசே நேரடியாக நியமிக்க முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வெளி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் ஒரு முருங்கைக்காய் ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனை ஆகிறது.
    • வரத்து குறைவால் பீன்ஸ், அவரைக்காய் விலையும் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.

    போரூர்:

    சென்னை கோயம்பேடு, காய்கறி மார்க்கெட்டுக்கு தேனி, அரியலூர், ஜெயங்கொண்டம், திருநெல்வேலி, மும்பை, ஐதராபாத், அகமதாபாத் ஆகிய இடங்களில் இருந்து முருங்கைக்காய் விற்பனைக்கு வருவது வழக்கம்.

    கடந்த சில நாட்களாக பரவலாக பெய்து வரும் மழையால் தமிழகம் உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்று வரும் முருங்கைக்காய் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் கோயம்பேடு சந்தைக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து மட்டுமே முருங்கைக் காய் விற்பனைக்கு வருகிறது.

    தினசரி 1500 மூட்டைகள் வரை விற்பனைக்கு குவிந்து வரும் முருங்கைக்காய் இன்று 400 மூட்டைகளாக குறைந்தது. இதனால் முருங்கைக்காய் விலை உயர்ந்து உள்ளது.

    கடந்த வாரம் மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.70-க்கு விற்கப்பட்ட முருங்கைக்காய் தற்போது 2 மடங்காக விலை அதிகரித்து ஒரு கிலோ ரூ.150-க்கு விற்கப்படுகிறது.வெளி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் ஒரு முருங்கைக்காய் ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனை ஆகிறது.

    இதேபோல் வரத்து குறைவால் பீன்ஸ், அவரைக்காய் விலையும் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. இன்று மொத்த விற்பனையில் பீன்ஸ் ஒரு கிலோ ரூ.150-க்கும், அவரைக்காய் ஒரு கிலோ ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    • ராகுல் காந்தியின் முயற்சி, விடா முயற்சி, காங்கிரசை கட்டிக் காக்க நினைக்கிறார்.
    • கடந்த சில நாட்களுக்கு முன் ராகுல் காந்தியை புகழ்ந்து வீடியோ பதிவிட்ட செல்லூர் ராஜூ அதனை நீக்கியிருந்தார்.

    மதுரை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, செய்தியாளர் ஒருவர் உங்களுக்கு பிடித்த இளம் தலைவரோடு பிறந்தநாள்... என்று கூறியதற்கு செல்லூர் ராஜூ கூறியதாவது:-

    மாற்றத்தான் தோட்டத்துக்கு மல்லிக்கைக்கும் மணம் உண்டு. ஆக, எதிரி தோட்டத்தில் பூத்த மல்லிகைக்கு வாசம் இல்லை என்று சொல்ல முடியுமா? சொல்ல முடியாது. ராகுல் காந்தியின் முயற்சி, விடா முயற்சி, காங்கிரசை கட்டிக் காக்க நினைக்கிறார். அவருக்கு இந்த நேரத்தில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

    கடந்த சில நாட்களுக்கு முன் ராகுல் காந்தியை புகழ்ந்து வீடியோ பதிவிட்ட செல்லூர் ராஜூ அதனை நீக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 2022-23ம் கல்வி ஆண்டில் 8 மாணவர்கள் படித்தனர்.
    • உதவி ஆசிரியர் தனக்கு பணி மாறுதல் கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்.

    குஜிலியம்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள வடுகம்பாடி ஊராட்சி பண்ணைப்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி கடந்த 1962ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் அதிக மாணவர்கள் எண்ணிக்கையுடன் செயல்பட்டு வந்த இந்த பள்ளி பின்னர் படிப்படியாக தரம் குறையத் தொடங்கியது.

    கடந்த 2022-23ம் கல்வி ஆண்டில் 8 மாணவர்கள் படித்தனர். கடந்த ஆண்டு இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக இந்திரா என்பவர் பொறுப்பேற்றார். இவர் 8 ஆண்டுகளாக இடை நிலை ஆசிரியர் பணியில் உள்ளார். கிராமத்தில் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் மக்கள் சார்பில் எல்.இ.டி. டி.வி. ஒன்று இந்த பள்ளியில் வாங்கி வைக்கப்பட்டது. மேலும் முன்னாள் மாணவர்கள் சார்பில் டேபிள், சேர், பீரோ, கரும்பலகை மற்றும் பள்ளிக்கு தேவையான பொருட்கள் போன்றவையும் வாங்கி கொடுக்கப்பட்டன.

    தலைமை ஆசிரியர் இந்திரா வருகைக்கு பின் அவரது நடவடிக்கை மற்றும் செயல்பாடுகள் பிடிக்காததால் மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் புகார் தெரிவிக்க ஆரம்பித்தனர்.

    மாணவர்களை தரக்குறைவாக பேசியதால் தலைமை ஆசிரியரை மாற்ற வேண்டும் என பெற்றோர்கள் கல்வி அதிகாரியிடம் புகார் அளித்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கடந்த ஆண்டு படித்த 5 மாணவர்களையும் பெற்றோர்கள் வேறு பள்ளியில் சேர்த்து விட்டனர்.

    நடப்பு கல்வியாண்டில் இந்த பள்ளியில் ஒருமாணவர் கூட இல்லை. ஆனால் தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர் என 2 பேர் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். உதவி ஆசிரியர் தனக்கு பணி மாறுதல் கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார். இந்நிலையில் மாணவர்களே இல்லாத பள்ளிக்கு 2 ஆசிரியர்கள் எதற்கு? என்றும், தலைமை ஆசிரியரை உடனடியாக இடமாற்றம் செய்யக்கோரி பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து வட்டார கல்வி அலுவலர் தெரிவிக்கையில், தலைமை ஆசிரியரை மாற்ற வலியுறுத்தி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள்தான் முடிவு எடுக்க வேண்டும் என்றார்.

    பண்ணைப்பட்டி ஊர் முக்கிய நிர்வாகி தெரிவிக்கையில், கிராமப்புற மாணவர்களுக்காக தொடங்கப்பட்ட இந்த பள்ளி தற்போது தலைமை ஆசிரியரின் அடாவடியால் முற்றிலும் அதன் நோக்கம் செயல்படாமல் முடங்கிப் போய் உள்ளது. எனவே அவரை மாற்றினால் குழந்தைகள் பள்ளியில் சேர்வார்கள். இல்லையெனில் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்றார். இச்சம்பவத்தால் பண்ணைப்பட்டி கிராமத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

    • அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியான தே.மு.க.தி.க. போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ளது.
    • திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு வருகிற 10-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    தி.மு.க. கூட்டணி சார்பில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். பா.ஜனதா கூட்டணி சார்பில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா போட்டியிடுகிறார்கள்.

    இந்த தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியான தே.மு.தி.க. போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ளது.

    விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14-ந்தேதி தொடங்கிய நிலையில் வரும் 21-ந் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறுகிறது.

    இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

    முக்கிய வீதிகள் வழியாக வாகனத்தில் ஊர்வலமாகச் சென்ற திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வேட்பு மனுவை தாக்கல் செய்தார். விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அன்னியூர் சிவா வேட்புமனுவை தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின்போது அமைச்சர் பொன்முடி, எம்.பி., ஜெகத்ரட்சகன், கௌதம சிகாமணி ஆகியோர் உடனிருந்தனர்.

    அ.தி.மு.க., தே.மு.தி.க. போட்டியிடாததால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது.

    • 22-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை சட்டசபைக் கூட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்கும்.
    • மொத்தம் 16 அமர்வுகளாக சட்டசபை கூட்டத்தை நடத்த உள்ளனர்.

    சென்னை:

    தமிழக சட்டசபை நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது.

    தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 12-ந்தேதி கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் அந்த மாதம் 15-ந்தேதி வரை நடைபெற்றது.

    நிறைவு நாள் விவாதத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசினார்.

    இதையடுத்து 2024-25 நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் 19, 20-ந்தேதிகளில் தாக்கல் செய்யப்பட்டன.

    பட்ஜெட்டுகள் மீதான விவாதம் 22-ந்தேதி வரை நடைபெற்றது. நிறைவாக விவாதத்துக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதில் அளித்தனர்.

    இதையத்து பாராளுமன்ற தேர்தல் காரணமாக மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதம் நடத்தப்படாமல் சட்டசபை கூட்டம் தள்ளி வைக்கப்பட்டிருந்தது.

    இப்போது பாராளுமன்ற தேர்தல் அனைத்தும் முடிந்து மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியும் மீண்டும் அமைந்துள்ளது.

    இந்த நிலையில் தமிழக அரசின் துறை வாரியான செலவினங்களுக்கு ஒப்புதல் அளிக்கவும், மானிய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காகவும் சட்டசபை கூட்டத்தொடர் ஜூன் 24-ந்தேதி தொடங்கும் என்று சபாநாயகர் அப்பாவு முதலில் அறிவித்திருந்தார்.

    இதற்கிடையே விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால் சட்டசபை கூட்டம் ஜூன் 24-ந்தேதிக்கு பதிலாக, முன்கூட்டியே 20-ந்தேதி தொடங்கும் என்று அப்பாவு அறிவித்தார்.

    அதன்படி சட்டசபைக் கூட்டம் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்குகிறது. நாளைய கூட்டத்தில் மறைந்த விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. புகழேந்தி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படுகிறது. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் நாளைய கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது.

    அதன் பிறகு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) சட்டசபை காலை 10 மணிக்கு கூடும். வழக்கமாக காலை 10 மணிக்கு தொடங்கும் சட்டசபை நிகழ்வுகளை காலை 9.30 மணிக்கு தொடங்குவதற்காக விதிகள் குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 21-ந்தேதி சட்டசபை கூடும் போது இந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் பெறப்படும்.

    அதன் பிறகு 22-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை சட்டசபைக் கூட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்கும். 29-ந்தேதி வரை மற்ற நாட்களில் காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலும், மாலையில் 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் சட்டசபை கூட்டம் நடைபெறும்.

    அதாவது மொத்தம் 16 அமர்வுகளாக சட்டசபை கூட்டத்தை நடத்த உள்ளனர்.

    தமிழகம், புதுச்சேரியில் 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டி அமைச்சர்களும், ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களும் புகழ்ந்து பேசுவார்கள்.

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் தோல்வி அடைந்துள்ளதால் அது பற்றியும் ஆளும் கட்சியினர் விமர்சிப்பார்கள். இது மட்டுமின்றி விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து சவால்கள் விட்டும் பேசுவார்கள்.

    மானியக் கோரிக்கைகளுக்கு மத்தியில் இந்த விவாதங்கள் அனல் பறக்கும். பதிலுக்கு எதிர்க்கட்சியான அ.தி.மு.க. சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை கிளப்புவார்கள். தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் கொலை-கொள்ளைகளை பட்டியலிட்டு பேச முடிவு செய்துள்ளனர்.

    அது மட்டுமின்றி மேகதாது விவகாரம், விவசாயிகள் பிரச்சனை, நெல் கொள்முதல் நிலையங்களில் தார்பாய் போதிய அளவு இல்லாததால் மழையில் நனையும் நெல் மூட்டைகள் பற்றியும் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இது தவிர குடிநீர், மின்வெட்டு, சாலை வசதி, பஸ் வசதி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் எம்.எல்.ஏ.க்கள் பேசுவார்கள். துறை சார்ந்த பிரச்சனைகளையும் எடுத்துக் கூற உள்ளனர்.

    ஒவ்வொரு துறை வாரியான விவாதத்துக்கும் அந்தந்த அமைச்சர்கள் பதில் அளித்து பேசுவார்கள். சட்டசபை கூட்டம் முடியும் இறுதி நாளான 29-ந்தேதி அன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு விரிவாக பதில் அளித்து பேசுவார்.

    நாளை முதல் 29-ந்தேதி வரை நடைபெறும் சட்டசபை கூட்டத்தில் அனல் பறக்கும் விவாதங்கள் கடுமையாக இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

    அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜனதா கட்சிகளின் கூட்டணி நிலைப்பாடுகள் மாறி உள்ளதால் அதுபற்றி ஆளும் கட்சியினர் விமர்சிப்பார்கள் என்பதால் அதற்கு தக்க பதிலடி கொடுக்கவும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் தயாராக இருப்பதாக தெரிகிறது.

    எனவே இந்த சட்டசபை கூட்டத்தொடரில் அரசியல் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்றே தெரிகிறது.

    • இரு குடும்பத்தினருக்கும் இடையே தெரு குழாயில் குடிநீர் பிடிப்பது தொடர்பாக தகராறு இருந்து வந்தது.
    • பலியான ஜெகதீஷ் உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

    இரணியல்:

    இரணியல் அருகே உள்ள நெய்யூர் செட்டியார் மடம் ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 38). இவரது மனைவி சோபிகா (37). இவர்களது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் நவநீதன் (45), அவரது மனைவி அமுதா (32). இவர்கள் இரு குடும்பத்தினருக்கும் இடையே தெரு குழாயில் குடிநீர் பிடிப்பது தொடர்பாக தகராறு இருந்து வந்தது.

    சம்பவத்தன்று சோபிகா வீட்டின் குப்பைகளை அந்த பகுதியில் தீ வைத்து எரித்த போது, நவநீதன் மற்றும் அவரது மனைவி அமுதா இருவரும் தகாத வார்த்தையால் பேசி தகராறில் ஈடுபட்டனர். அப்போது சோபிகாவின் மாமனார் மணி அதை தட்டி கேட்டார். இதில் அவர்களுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த நவநீதன் இரும்பு கம்பியால் மணியை அடிக்க வந்தார். இதை பார்த்த சோபிகாவின் கணவர் ஜெகதீஷ் தடுத்த போது அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் ஜெகதீஷை, அமுதாவும் சரமாரியாக தாக்கினார்.

    இதை தடுக்க வந்த ராஜாக்கமங்கலம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (18) என்பவரும் காயம் அடைந்தார். காயமடைந்த ஜெகதீஷ், மணிகண்டன் இருவரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து சோபிகா இரணியல் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் நவநீதன் மற்றும் அவரது மனைவி அமுதா மீது கொலை மிரட்டல் உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த ஜெகதீஷ் இன்று காலை பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. போலீசார் நவநீதனை பிடித்துள்ளனர். கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அமுதாவை பிடிக்க தனிப்படை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    பலியான ஜெகதீஷ் உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. அவரது உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு உள்ளனர்.

    ×