என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சிறப்பு சிகிச்சை வழங்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டுமென்றும் அறிவுறுத்தியுள்ளேன்.
    • சம்பவம் குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை ஒன்றினை இரண்டு தினங்களில் வழங்குவார்கள்.

    சென்னை:

    கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது.

    சட்டசபை கூட்டம் இன்று முடிந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலகத்தில் உள்துறை செயலாளர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார். அதன்பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:-

    கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம், கருணாபுரம் காலனியில் மெத்தனால் கலந்த சாராயம் அருந்தியதால் 34 நபர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியைக் கேட்டு மிகவும் வேதனையும் அதிர்ச்சியும் அடைந்தேன்.

    இச்சம்பவத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளித்திட அறிவுறுத்தியுள்ளதோடு, பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து, ஆறுதல் தெரிவிக்க நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, மீண்டும் இன்று அவர்களுடன் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் கள்ளக்குறிச்சிக்குச் சென்று உள்ளார்.

    இதுவரை இச்சம்பவத்தில் விஷச்சாராய விற்பனையில் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும், இதில் தீவிர விசாரணை மேற்கொண்டு, குறிப்பாக விஷச்சாராயம் தயாரிக்க மெத்தனாலை வழங்கியவர்களையும் கண்டறிந்து, அவர்கள் மீதும் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இச்சம்பவம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட காவல்துறை அலுவலர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, மாவட்ட ஆட்சித் தலைவரும் பணியிட மாறுதல் செய்யப்பட்டு உள்ளார்.

    மேலும் இது குறித்துத் தீர விசாரிக்கவும், உரிய மேல்நடவடிக்கை எடுக்கும் பொருட்டும், இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    இந்தச் சூழ்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாயும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தலா 50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டு உள்ளேன்.

    இச்சம்பவம் தொடர்பாக, இன்று, அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், காவல் துறை இயக்குநர், கூடுதல் காவல்துறை இயக்குநர் (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு), மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அலுவலர்கள், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அலுவலர்களுடன் கலந்தாலோசித்து, கீழ்க்கண்ட நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டுமென்று நான் அவர்களுக்கு உத்தரவிட்டு உள்ளேன்.

    மெத்தனால் கலந்த விஷச்சாராய உற்பத்தியிலும், விற்பனையிலும் ஈடுபட்ட அனைவரும் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டுமென்றும், சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டு உள்ள மெத்தனால் இருப்பை முழுமையாகக் கண்டறிந்து, அவற்றைக் கைப்பற்றி அழித்திடவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும் அறிவுறுத்தியுள்ளேன். மேலும், விஷச்சாராய உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்ட மெத்தனால் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பதற்கான மூலகாரணத்தையும் காவல்துறையினர் கண்டுபிடிக்க அறிவுறுத்தியுள்ளேன்.

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையைப் பொறுத்தவரையில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, சேலம் மற்றும் விழுப்புரம் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டுமென்றும், அங்கு அவர்களுக்குத் தேவையான சிறப்பு சிகிச்சை வழங்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டுமென்றும் அறிவுறுத்தியுள்ளேன்.

    உள்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் காவல் துறை இயக்குநர் ஆகியோர் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உடனடியாகச் சென்று, சம்பவம் குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை ஒன்றினை இரண்டு தினங்களில் வழங்குவார்கள்.

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள இந்தச் சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொண்டு, இது நிகழ்ந்ததற்கான அனைத்துக் காரணிகளைக் கண்டறியவும், எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் மீண்டும் நடைபெறாமல் இருக்க, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிடவும், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி.கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்திட உத்தரவிட்டுள்ளேன். இந்த ஆணையம், சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்து தனது பரிந்துரைகளை மூன்று மாதங்களுக்குள் வழங்கும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    விசாரணை ஆணைய நீதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ள பி.கோகுல்தாஸ், காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள கீழுர் கிராமத்தை சேர்ந்தவர். ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி வரதராஜுலு நாயுடுவிடம் ஜூனியராக பணியாற்றியவர். 1984-ம் ஆண்டு மாஜிஸ்திரேட்டாக பணியில் சேர்ந்து கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் ஓய்வு பெற்றவர்.

    • சின்னத்துரை என்பவர் கள்ளச்சாராய மொத்த வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
    • 20-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கள்ளச்சாராயத்தை விற்று வந்துள்ளனர்.

    கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி விசாரணை தொடங்கி உள்ள நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் அதனைச்சுற்றி உள்ள மாவட்டங்களிலும் கள்ளச்சாராய விற்பனை கொடி கட்டி பறந்து கொண்டிருந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    கள்ளச்சாராயம் காய்ச்சுவதை காட்டுப்பகுதியில் வைத்து தொழில் போலவே பலர் செய்து வந்திருப்பதும், போலீசார் அதனை கண்டு கொள்ளாமல் அலட்சியமாக இருந்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

    அப்பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை என்பவர் கள்ளச்சாராய மொத்த வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரிடம் இருந்து பாக்கெட்டில் அடைக்கப்பட்ட சாராயத்தை சில்லரை விற்பனைக்கு வாங்கி சென்று பலரும் குடித்து வந்துள்ளனர். 70 வழக்குகளில் தொடர்புடைய இவர் தற்போது தலைமறை வாகியுள்ளார்.

    அவரை பிடிப்பதற்கு போலீசார் அதிரடி வேட்டை யில் ஈடுபட்டுள்ளனர். அவருடன் கள்ளச்சாராய மொத்த விற்பனைக்கு துணையாக இருந்த 10 பேரும் தப்பி ஓடி தலைமறைவாக உள்ளனர்.

    அவர்களை பிடிப்பதற்கு போலீசார் வலை விரித்துள்ளனர். வியாபாரி சின்னத்துரையிடம் இருந்து சாராய பாக்கெட்டுகளை வாங்கி கருணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் மறைத்து வைத்து 20-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கள்ளச்சாராயத்தை விற்று வந்துள்ளனர். அவர்கள் யார்-யார்? என்கிற பட்டியலையும் போலீசார் சேகரித்துள்ளனர்.

    கள்ளச்சாராய கும்பலை பிடிக்க ஏற்கனவே 5 தனிப்படைகள் அமைக்கப் பட்டிருந்தன. தற்போது கூடுதலாக 5 தனிப்படைகளும் ஏற்படுத்தப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காவல் நிலையத்திற்கு பின்புறமே கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்றுள்ளது.
    • தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயம் ஆறுபோல் ஓடிக்கொண்டிருக்கிறது.

    கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த விஷச்சாராயம் குடித்து இதுவரை 36பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 125-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதையடுத்து, விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று கள்ளக்குறிச்சிக்கு விரைந்தார்.

    மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து நலம் விசாரித்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * கள்ளச்சாராயம் பருகி உயிரிழந்தவர்கள் அனைவரும் ஏழைகள்.

    * கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விற்பனை கொடிகட்டி பறந்துள்ளது. கள்ளக்குறிச்சி நகரின் மையப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    * காவல் நிலையத்திற்கு பின்புறமே கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்றுள்ளது.

    * கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விற்பனையில் ஆளும்கட்சி பிரமுகர்களுக்கு தொடர்பு உள்ளது. ஆளுங்கட்சி தொடர்பு இருப்பதால் தான் காவல்நிலையம் அருகே கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்றுள்ளது.

    * செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் கடந்த வருடம் கள்ளச்சாராய மரணம் ஏற்பட்டது. கடந்த ஆண்டு கள்ளச்சாராய மரணம் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    * கள்ளச்சாராயம் குறித்து எஸ்.பி.யிடம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில்குமார் நேரடியாக புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.

    கள்ளக்குறிச்சி எஸ்.பி.யிடம் செல்போன் மூலம் அதிமுக எம்எல்ஏ புகார் அளித்தார்.

    * தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயம் ஆறுபோல் ஓடிக்கொண்டிருக்கிறது.

    * தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருள் புழக்கம் மிக அதிகமாக உள்ளது.

    * திமுக ஆட்சியில் மக்கள் உயிருக்கு மதிப்பு இல்லாத சூழல் உள்ளது.

    * கள்ளச்சாராயம் விவகாரத்தில் தார்மீக பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது எடப்பாடி பழனிசாமியுடன் மாநிலங்களவை எம்.பி. சி.வி.சண்முகம், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • நீட் தேர்வை தமிழகம் தொடர்ந்து எதிர்த்து வருகிறது.
    • தமிழகத்தில் தோன்றிய எதிர்ப்பு நாடு முழுவதும் இன்றைக்கு கடும் எதிர்ப்பாக மாறியிருக்கிறது.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் அளித்ததில் முறைகேடுகள் என நாடு முழுவதும் உருவாகியிருக்கிற எதிர்ப்பை வீதி முதல் பாராளுமன்றம் வரை நீட் தேர்வு ஊழலை எழுப்புவோம் என்று ராகுல்காந்தி கூறியிருக்கிறார்.

    நீட் தேர்வை தமிழகம் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. தொடர்ந்து நீட் தேர்வு திணிப்பை ஒன்றிய பா.ஜ.க. அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் தோன்றிய எதிர்ப்பு நாடு முழுவதும் இன்றைக்கு கடும் எதிர்ப்பாக மாறியிருக்கிறது. எனவே, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மருத்துவ கல்லூரிக்கான நுழைவு தேர்வு நடத்தும் அதிகாரத்தை அந்தந்த மாநில அரசுகளுக்கே வழங்க வேண்டுமென்ற ராகுல்காந்தியின் வாக்குறுதியை நிறைவேற்றுகிற வகையில் நமது கண்டனக் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாக பங்கேற்க வேண்டுமென அன்போடு அழைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • போஸ்டர் திண்டுக்கல் நகரின் பல்வேறு இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளது.
    • பேனர் வடிவிலும் வைக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் பிறந்தநாள் விழா நாளை மறுநாள் (22-ந் தேதி) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அவரது ரசிகர்கள் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

    கோவில்களில் அன்னதானம், ஏழைகளுக்கு மருத்துவ உதவி, ஆடைகள் வழங்குதல், நோட்டு புத்தகங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

    இந்நிலையில் திண்டுக்கல்லில் விஜய் ரசிகர்கள் சார்பில் நூதன முறையில் மாலை மலர் போஸ்டர் போன்று சுவரொட்டி ஒட்டியுள்ளனர்.

    அதில், த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆணைக்கிணங்க திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் தேவா தலைமையில் ஆலோசனைக் கூட்டம்.

    தனது பொன் விழாவை முன்னிட்டு த.வெ.க. தலைவர் விஜய் பத்திரிகையாளர்கள் சந்திப்பு.

    ஆகஸ்ட்டு 15-ந் தேதி திண்டுக்கல்லில் முதல் அரசியல் மாநாடு.

    2020 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் அமோக வெற்றி பெற்று விஜய் ஆட்சியை பிடிப்பார் என்று தொண்டர்கள் பேட்டி என்பது உள்ளிட்ட வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

    இந்த போஸ்டர் திண்டுக்கல் நகரின் பல்வேறு இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் பேனர் வடிவிலும் வைக்கப்பட்டுள்ளது.

    • கடந்த 2016-ம் ஆண்டு பெருமாள் கோவில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
    • பக்தர்கள் ஏராளமானோர் திரண்டு நெகழ்ச்சியுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

    தாடிக்கொம்பு:

    திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு பேரூராட்சிக்குட்பட்ட டி.அய்யம்பாளையத்தில் விநாயகர், காளியம்மன், பகவதியம்மன் கோவில்கள் உள்ளது. இந்த கோவில்களின் நகைப்பெட்டி ஒரு தரப்பினருக்கு சொந்தமான பெருமாள் கோவிலில் வைத்து வந்தனர்.

    இந்த பெருமாள் கோவில் உரிமை சம்மந்தமாக கடந்த 2012-ம் ஆண்டு இரு தரப்பினருக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் ஆர்.டி.ஓ. தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் கடந்த 2016-ம் ஆண்டு பெருமாள் கோவில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

    கடந்த 8 ஆண்டுகளாக கோவில் திறக்கப்படாததால் பக்தர்கள் வேதனையடைந்தனர். தற்போது திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் தலைமையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் பெருமாள் கோவில் குறிப்பிட்ட சமுதாயத்துக்கு பாத்தியப்பட்டது என்றும் நகைபெட்டியை வைத்து பாதுகாக்கவும், பராமரிக்கவும் திருவிழா காலங்களில் எடுத்து சென்று வழிபடவும் அவர்களுக்கு மட்டும் உரிமை உண்டு என முடிவானது. இதனை அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொண்டனர்.

    இதனால் கடந்த 8 ஆண்டுகளாக திறக்கப்படாத கோவிலை திறப்பது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி தாசில்தார் வில்சன் தேவதாஸ் முன்னிலையில் சீல் அகற்றப்பட்டது. அதன் பின்னர் கோவில் திறக்கப்பட்டதால் பக்தர்கள் ஏராளமானோர் திரண்டு நெகழ்ச்சியுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

    • கள்ளச்சாராயம் குடித்து மரணம் என்பது தொடர்கதையாகி வரும்நிலையில், இதனால் ஏற்படும் மனித உயிரிழப்புகளுக்கு யார் காரணம்? யார் பொறுப்பேற்பது?
    • சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் தயாரிப்பதில் ஈடுபட்ட கயவர்களை கண்காணிக்க தவறிய அரசு அதிகாரிகளா, காவல்துறையினரா, அல்லது தமிழக அரசா?

    சென்னை:

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியான சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து சரத்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 29-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி தமிழ்நாட்டு மக்களிடையே பதட்டத்தையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    கள்ளச்சாராயம் குடித்து மரணம் என்பது தொடர்கதையாகி வரும்நிலையில், இதனால் ஏற்படும் மனித உயிரிழப்புகளுக்கு யார் காரணம்? யார் பொறுப்பேற்பது? சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் தயாரிப்பதில் ஈடுபட்ட கயவர்களை கண்காணிக்க தவறிய அரசு அதிகாரிகளா, காவல்துறையினரா, அல்லது தமிழக அரசா? 29 உயிரிழப்புகள் என்பது 29 குடும்பங்களுக்கான பேரிழப்பு என்பதை அரசு உணர வேண்டும்

    மேலும், இந்த சம்பவத்திற்கு தமிழக அரசு தார்மீக பொறுப்பேற்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தின் வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பும், நிவாரணமும் வழங்கிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தலைமை செயலகத்தில் கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.
    • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

    சென்னை:

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 36-ஆக அதிகரித்துள்ளது. மேலும் கள்ளச்சாராயம் குடித்ததில் பாதிக்கப்பட்ட 125-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணை ஆணையம் அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

    கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் அவசர ஆலோசனையில் ஈடுபட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

    • கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோமதி அதிரடி விசாரணையை தொடங்கி உள்ளார்.
    • தீவிரமாக ரோந்து சுற்றி வந்து சாராய வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்துக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனையை வாங்கி கொடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ள நிலையில் சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோமதி அதிரடி விசாரணையை தொடங்கி உள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதுமே போலீசார் தீவிரமாக ரோந்து சுற்றி வந்து சாராய வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    1000 போலீசார் கிராமம் கிராமமாக சென்று சல்லடை போட்டு சாராய கும்பலை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு காரணமான கண்ணுக்குட்டி என்ற கோவிந்தசாமி, தாமோதரன் மற்றும் விஜயா என்ற பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இதன் பின்னணி யில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

    இதைத் தொடர்ந்து கள்ளச்சாராய கும்பலை கூண்டோடு கைது செய்ய அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    இதுதொடர்பாக மேலும் 10 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணையை தொடங்கி இருப்பதால் கள்ளச்சாராய கும்பலை சேர்ந்த அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று, உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரையும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களையும் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளோம்.
    • அவர்கள் குடும்பத்தினருக்கு தமிழக பா.ஜ.க. எப்போதும் உறுதுணையாக இருக்கும்.

    சென்னை:

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 36பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 125-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தை தொடர்ந்து கண்டனத்தை தெரிவித்து வரும் அரசியல் கட்சி தலைவர்கள் தி.மு.க. அரசை கடுமையாக சாடியுள்ளனர்.

    இந்நிலையில், வரும் 22-ந்தேதி பா.ஜ.க. மாநில தழுவி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயத்தினால் 35க்கும் அதிகமான உயிர்கள் பறிபோயிருக்கின்றன என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று, உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரையும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களையும் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளோம். அவர்கள் குடும்பத்தினருக்கு தமிழக பா.ஜ.க. எப்போதும் உறுதுணையாக இருக்கும்.

    திமுக ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற்றுள்ள கள்ளச்சாராய உயிரிழப்புகள், 1980 காலகட்டத்தில் ஏற்பட்டதைப் போல, தமிழகம் நாற்பது ஆண்டுகள் பின்னோக்கிச் செல்கிறதா என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

    நேற்றைய தினம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சரை பதவி விலக்கம் செய்ய, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேட்டுக் கொண்டிருந்தோம். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 60 உயிர்கள் கள்ளச்சாராயத்தினால் பறிபோனதற்குப் பின்னரும், முதலமைச்சராகத் தொடர தனக்குத் தார்மீக உரிமை உள்ளதா என்பதை, அவர் எண்ணிப் பார்க்க வேண்டும்.

    தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்காமல், பல உயிர்கள் பலியாகும் வண்ணம், தொடர்ந்து மெத்தனப் போக்கில் செயல்பட்டு வரும் திமுக அரசின் கையாலாகாத்தனத்தைக் கண்டித்து, வரும் ஜூன் 22 அன்று, தமிழக பா.ஜ.க. சார்பாக, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்பதை அறிவித்துக் கொள்கிறேன்.

    • தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று கள்ளக்குறிச்சி செல்ல உள்ளார்.
    • உயிருக்கு ஆபத்தான நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 127 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 36 பேர் பலியான நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று கள்ளக்குறிச்சி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறவும், மருத்துவமனையில் இருப்பவர்களை சந்திக்கவும் பிரேமலதா கள்ளக்குறிச்சி செல்கிறார்.

    கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 127 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தொடர்ச்சியாக உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரிசையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் என அரசியல் தலைவர்கள் கள்ளக்குறிச்சி செல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • கள்ளச்சாராய சாவுக்கு முக்கிய காரணமே அரசு செயலிழந்துள்ளது தான்.

    திண்டிவனம்:

    பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் இன்று தைலாபுர தோட்டத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்து 35 பேருக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதில் பலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. விஷச்சாராயத்தால் பலியான அனைவரும் ஏழை கூலி தொழிலாளர்கள். அவர்களின் குடும்பத்தினர் அல்லாடி தவித்து வருகின்றனர். கள்ளச்சாராய சாவுக்கு முக்கிய காரணமே அரசு செயலிழந்துள்ளது தான்.

    எனவே இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பாளரான அமைச்சர் எ.வ. வேலு ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×