என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தமிழகம் முழுவதும் மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு எதிர்ப்புகள் வலுத்து வருகிறது.
- அமித்ஷாவை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
அம்பேத்கரை அவமதித்ததை கண்டித்து மத்திய அமைச்சர் அமித் ஷாவிற்கு எதிராக இந்தியா கூட்டணி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல், தமிழகம் முழுவதும் மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு எதிர்ப்புகள் வலுத்து வருகிறது.
அம்பேத்கரை அவமதித்ததை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமித்ஷாவை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இதில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்றுள்ளார். ராமநாதபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும் திமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்போரூர் உள்ளிட்ட இடங்களில் விசிகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தின் ஒரு பகுதியாக, அமித்ஷாவின் உருவ பொம்மையை எரித்து தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
இதேபோல், திண்டுக்கல் ரெயில் நிலையம் வழியே மாநகர மாவட்ட செயலாளர் மைதீன்பாவா தலைமையில் திரண்ட அக்கட்சியினர் ஏற்கனவே தாங்கள் மறைத்து கொண்டு வந்திருந்த அமித்ஷாவின் உருவ பொம்மையை தீவைத்து எரித்தனர். அப்போது அவரை உடனடியாக மத்திய மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கோசமிட்டனர்.
இதனையடுத்து போலீசார் உருவ பொம்மையை பறித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 30 வி.சி.க.வினரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
- 8 கோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் அதிகாரம் கொண்டிருக்க வேண்டும்.
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும்.
திருச்சி:
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
மக்கள் பிரச்சனையை திசை திருப்பவே அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசி உள்ளார். உயிருடன் இருப்பவர்களுக்கு சாப்பாடு போடாத கடவுள் இறந்த பின் சொர்க்கம் தருவார் என்றால் அதை எப்படி நம்புவது.
அயோத்தியில் கடவுள் பெயரை கூறி தான் போட்டியிட்டீர்கள் ஆனால் அம்பேத்கர் பெயரை கூறியவர் தான் அங்கு வெற்றி பெற்றார். தமிழகத்திற்கு வெள்ள பாதிப்பிற்கான நிவாரணம் கேட்டால் அது குறித்து மத்திய அரசு கண்டு கொள்வதில்லை.
இஸ்லாமியர்களை எதிர்த்து பேசுவதை தவிர ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க விற்கு வேறு கொள்கை இல்லை. மக்களுக்கான திட்டங்களை பா.ஜ.க அரசு எதுவும் செய்வதில்லை. அவர்கள் கோவிலை விட்டு வெளியே வந்து குடிசைகளை பார்ப்பதில்லை.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும்.நடிகர் விஜய் மிகப்பெரிய திரைப்பட கதாநாயகர். அவர் பொது இடத்துக்கு வரும்போது அவரை பார்க்க மக்கள் கூடுவார்கள். அதனால் போக்குவரத்தை சரி செய்வதில் காவல்துறையினருக்கு சிக்கல் ஏற்படும். எனவே வெள்ள பாதிப்பு பகுதிகளுக்கு மக்களை அவர் நேரில் வந்து சந்திப்பதை தவிர்த்துக் கொண்டுள்ளார்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்ப்பது ஒரு சடங்கு என நடிகர் விஜய் கூறி இருக்கக் கூடாது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறுவது அவர்களது கடமை.
மக்களை நேரில் சென்று சந்திப்பதை சடங்கு என கூறும் நடிகர் விஜய், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் நேரில் அழைத்து சந்திக்காதது ஏன்?
பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழு அமைத்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் முடிவு சரியானது தான். தமிழ்நாடு அரசு நியமித்த துணைவேந்தர்கள் தேடுதல் குழுவை ரத்து செய்ய வேண்டும் என கவர்னர் கூறுவது தவறானது. தமிழ்நாடு அரசிடமிருந்து, அதிகாரத்தை கவர்னர் எடுத்துக்கொள்ள நினைக்கிறார்.
இது மக்களாட்சி. 8 கோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் அதிகாரம் கொண்டிருக்க வேண்டும். அவர்கள் இயற்றிய சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க மாட்டேன் என கவர்னர் கூறக்கூடாது. ஒரு நியமன உறுப்பினருக்கு அதிகாரம் கூடாது.
மீனவர் பிரச்சனையை மனிதாபிமான அடிப்படையில் அணுகுவோம் என இலங்கை அதிபர் கூறுகிறார். கச்சத்தீவு என்பது தமிழர்களின் உரிமை. தமிழக மீனவர்களாக இருந்தால்தான் இலங்கை அரசு அவர்களை கைது செய்கிறது.
கேரள மீனவர்களையோ குஜராத் மீனவர்களையோ கைது செய்வதில்லை. அப்படி கைது செய்யப்பட்டாலும் உடனடி நடவடிக்கைகளில் அரசு அவர்களை மீட்கிறது. ஆனால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டால் மத்திய அரசு கண்டு கொள்வதில்லை.
இளையராஜா நகையும் சதையும் உள்ள மனிதன் அல்ல அவர் இசை தெய்வம். அவர் கருவறைக்குள் அனுமதிக்கப்படாதது கண்டிக்கத்தக்கது. மாபெரும் கலைஞன் தாழ்த்தப்பட்டவராகவே பார்க்கப்படுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வெள்ள பாதிப்பை மத்தியக்குழு ஆய்வு செய்துள்ளது.
- ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரத்தை தமிழக அரசு சொந்த நிதியில் வழங்க வேண்டும்.
திண்டிவனம்:
திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-
மழை,வெள்ள நிவாரணநிதி வேண்டி அனைத்துக்கட்சி குழுவை பிரதமரை சந்திக்க அனுப்பிவைக்க வேண்டும். வெள்ள பாதிப்பை மத்தியக்குழு ஆய்வு செய்துள்ளது. இக்குழு ஆய்வு செய்து 10 நாட்கள் கடந்தும் மத்திய அரசிடம் ஆய்வறிக்கையை அளிக்க வில்லை. எனவே மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. மத்தியக்குழு ஆய்வுக்கு பின்னும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மாநில பேரிடர் நிவாரண நிதி 946 கோடி ரூபாயில் செலவிடப்பட்டு வருகிறது. மத்திய அரசு நிதி ஒதுக்கும்வரை காத்திருக்க இயலாது. இன்னும் முழுமையான கணக்கெடுப்பை முடித்து விரிவான அறிக்கையுடன் முதலமைச்சர் தலைமையில் அனைத்துக்கட்சி குழு பிரதமர் மற்றும் உள்துறை மந்திரியை சந்தித்து நிதி வழங்க வலியுறுத்தவேண்டும்.
விவசாயிகள் மற்றும் கால்நடை உரிமையாளர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் செலவாகக்கூடிய நிலையில் ரூ.6800 என்பதை ஏற்கமுடியாது. ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரத்தை தமிழக அரசு சொந்த நிதியில் வழங்க வேண்டும். பின் மத்திய அரசு நிதியிலிருந்து எடுத்துக்கொள்ளலாம். அறிவிக்கப்பட்ட நிதியைக்கூட மாநில அரசு வழங்க மறுக்கிறது. விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் 6 லட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ 6 ஆயிரம் நிவாரணம் வழங்கவேண்டும்.
தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவதாக ஆட்சிக்கு வந்த தி.மு.க.கடன் வாங்குவதிலும், வட்டி கட்டுவதில் முதன்மை மாநிலமாக திக்ழ்கிறது. 8.34 லட்சம் கோடி கடனுடன் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. வட்டி கட்டுவதில் தற்போது ரூ. 54,676 கோடியுடன் முதலிடத்தை தக்கவைத்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் தமிழக அரசு திவாலாகிவிடும்.

தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கப்பட உள்ள நிலையில் தமிழ்கட்டாயப்பாடம் என சட்டம்நிறை வேற்றப்பட்டு 19 ஆண்டுகள் கடந்தும் அதை அமல்படுத்த முடியவில்லை. இச்சட்டத்தை எதிர்த்து தனியார் பள்ளிகள் உச்சநீதி மன்றம் சென்றும், இவ்வழக்கை விசாரணைக்கு எடுக்க தமிழக அரசு வலியிறுத்தவில்லை. இது தமிழுக்கு தி.மு.க.செய்யும் துரோகமாகும்.
தமிழகத்தில் 26 இடங்களில் மூடப்பட்ட மணல் குவாரிகளை திறக்க தமிழக அரசுமுடிவெடுத்து இருப்பதாக தெரிகிறது. இந்த மணல் குவாரிகளை திறக்கக்கூடாது. மணலுக்கு மாறாக செயற்கை மணல் மற்றும் இறக்குமதி மணலை கொண்டுவர முயற்சிக்க வேண்டும். தமிழகத்தில் கவுரவ பேராசிரியர்களுக்கு ரூ 25 ஆயிரம் போதுமான தல்ல. ரூ 50 ஆயிரம் வழங்க வேண்டும் என உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்காலிக ஆசிரியர்களுக்கு ரூ .6 ஆயிரம் வழங்குவது நியாயமல்ல.
ஒரேநாடு ஒரே தேர்தல் என நடத்தப்பட்டால் ஒரு மாநிலத்தில் ஆட்சி கவிழும்போது அந்த ஆட்சி சில மாதங்கள் மட்டுமே இருக்கும். இதை பா.ம.க. ஏற்காது. அம்பேத்கரை அமித்ஷா அவமதித்து விட்டதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. அனைத்து கட்சிகளும் அம்பேத்கரை போற்றித்தான் ஆகவேண்டும். அவரை கொச்சைபடுத்தியோ, அவமதிப்பதை ஏற்க முடியாது. ஒரே நாளில் 7 அம்பேத்கர் சிலையை நான் திறந்தேன். அம்பேத்கர் இல்லை என்றால்பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்திருக்காது. அம்பேத்கரை விமர்சிப்பதை யாராக இருந்தாலும் ஏற்க முடியாது. மது விலக்கு என்ற துறையை வைத்துக்கொண்டு மது விற்பனையை அதிகரிக்கிறார்கள். அந்த துறையை எடுத்துவிடலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்தில் பாம்பாறு ஆற்றில் ரூபாய் 4 கோடியே 32 லட்சத்து 20 ஆயிரம் செலவில் ஒரு பாலம்;
- தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டத்தில் பட்டுவனாச்சி ஓடையில் 4 கோடியே 10 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம்;
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசு மாநில நிதித்திட்டத்தின்கீழ் 2024-25-ம் ஆண்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் ரூ.177.85 கோடி மதிப்பீட்டில் 34 உயர்மட்ட பாலங்கள் அமைக்க உத்தரவிட்டுள்ளார். இதற்குரிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
2024-25-ம் ஆண்டில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள், முதலமைச்சர் அறிவிப்புகள் மற்றும் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் இணைப்பு வசதி இல்லாத குடியிருப்பு பகுதிகளில் தேவைப்படும் உயர்மட்ட பாலங்களை முன்னுரிமைப்படுத்தி, 18 மாவட்டங்களில் 1977.20 மீ நீளமுள்ள 34 உயர்மட்ட பாலங்கள் ரூபாய் 177.85 கோடி மதிப்பீட்டில் கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஆணையின்படி கோவை மாவட்டம் காரமடை வட்டத்தில் சிக்காரபாளையம்-கருப்பராயன் நகர் சாலை ஏலருமல்பள்ளம் ஆற்றில் ரூபாய் 2 கோடியே 83 லட்சம் செலவில் ஒரு பாலம்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டத்தில் மலட்டாறு ஆற்றில் திருவாமூர் ஊராட்சியில் ரூபாய் 8 கோடியே 13 லட்சத்து 44ஆயிரம் செலவில் ஒரு பாலம்
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டத்தில் குடகனாறு ஆற்றில் மணலூர் ஊராட்சியில் சித்தரேவு தாண்டிக்குடி சாலையில் ரூபாய் 8 கோடியே 52 லட்சத்து 69ஆயிரம் செலவில் ஒரு பாலம் தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி வட்டத்தில் நலுங்கு பாறை ஆற்றில் வாச்சாத்தி அரசநத்தம் இடையில் ரூபாய் 3 கோடியே 83 லட்சம் செலவில் ஒரு பாலம்
ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டத்தில் செல்லபூரம்மன் ஓடையில் ரூபாய் 5 கோடியே 12 லட்சத்து 20 ஆயிரம் செலவில் ஒரு பாலம் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்தில் கொரட்டி ஆற்றில் ரூபாய் 5 கோடியே 57 லட்சம் செலவில் ஒரு பாலம்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்தில் பாம்பாறு ஆற்றில் ரூபாய் 4 கோடியே 32 லட்சத்து 20 ஆயிரம் செலவில் ஒரு பாலம்;
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி வட்டத்தில் வேப்பனப்பள்ளி தீர்த்தம் சாலை கத்திரிபள்ளியில் ரூபாய் 7 கோடியே 1 லட்சத்து 40 ஆயிரம் செலவில் ஒரு பாலம் கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி வட்டத்தில் ஒட்டப்பள்ளி பட்டிபடுகு சாலையில் ரூபாய் 3 கோடியே 59 லட்சத்து 90 ஆயிரம் செலவில் ஒரு பாலம் மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்தில் பதினெட்டாம்குடி ஓடையில் 1 கோடியே 42 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம் ;
நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் வட்டத்தில் புதுபட்டி கெடமலை சாலையில் 3 கோடியே 12 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம் புதுப்பட்டி அதே சாலையில் 2 கோடியே 68 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவில் மற்றொரு பாலம் சேலம் மாவட்டம், பி.என்.பாளையம் வட்டத்தில் வில்வனூர் மாயவன் கோவில் சாலையில் வசிஸ்டர் ஆற்றில் 3 கோடியே 91 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம் ;
ஆத்தூர் வட்டத்தில் துலுக்கானூரில் வசிஸ்டர் ஆற்றில் 4 கோடியே 27 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம் கங்கவள்ளி வட்டத்தில் வேப்படி பாலக்காடு சாலையில் 1 கோடியே 74 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம் அயோத்தியாபட்டினம் வட்டத்தில் திருமணிமுத்தாரில் 1 கோடியே 99 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம் பி.என்.பாளையம் வட்டம் வைத்திய கவுண்டன் புதூர் ஏத்தாப்பூர் சாலையில் வசிஸ்டர் ஆற்றில் 5 கோடியே 89 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம் அதே பி.என்.பாளையம் வட்டம் இடையாப்பட்டி ஊராட்சியில் வசிஸ்டர் ஆற்றில் குறுக்கே 3 கோடியே 76 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம்
நீலகிரி மாவட்டம், உதகை வட்டத்தில் தாவணி-மல்லிக்கோரை சாலையில் 3 கோடியே 7 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம் திருப்பூர் மாவட்டம், குண்டடம் வட்டத்தில் தாராபுரம் வெள்ளக்கோவில்சாலை அமராவதி ஆற்றில் 14 கோடி ரூபாய் செலவில் ஒரு பாலம்;
தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டத்தில் பட்டுவனாச்சி ஓடையில் 4 கோடியே 10 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம்;
தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் வட்டத்தில் ஆறுமுக மங்களம் சாலையில் 3 கோடியே 36 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம்;
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டத்தில் டி.புதுபட்டி சின்னையபுரம் சாலையில் 3 கோடியே 97 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம் ;
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டத்தில் உப்பாறு ஆற்றில் குறுக்கே இரத்தினகுடிசாலை ஆர்.வளவனூர் ஊராட்சியில் 10 கோடியே 91 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம்;
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டத்தில் களத்தில் வென்றார்பேட்டை சாலையில் நந்தியூர் கால்வாயில் 10 கோடியே 19 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம்
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டத்தில் புல்லம்பாடி வைக்கல் புரந்தகுடி-ரெத்மாங்குடி சாலையில் குறுக்கே 2 கோடியே 81 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம் திருநெல்வேலி மாவட்டம், மானூர் வட்டத்தில் வெங்கடாசலபுரம் பிரான்சேரி சாலையில் சித்தாறு ஆற்றில் 10 கோடியே 63 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம் வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஒன்றியம் பெருமாள்கோவில் அருகே பேயாற்றின் குறுக்கே 2 கோடியே 28 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம்
வேலூர் மாவட்டம், அதே அணைக்கட்டு ஒன்றியத்தில் பெருமாள்கோவில் அருகே பேயாற்றின் குறுக்கே 2 கோடியே 36 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம் வேலூர் மாவட்டம், அதே அணைக்கட்டு ஒன்றியத்தில் பொய்கை கிராமத்தில் சதுப்பேரி கால்வாய் குறுக்கே 1 கோடியே 65 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம் விழுப்புரம் மாவட்டம், மரக்கானம் வட்டம், அன்னம்புதூர்-ஓமந்தூர் சாலையில் நரசிம்மனாறு ஓடையின் குறுக்கே 5 கோடியே 51 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம் விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டம், சிறுவாடியில் செஞ்சி ஆற்றில் குறுக்கே 6 கோடியே 24 லட்சம் ரூபாய் செலவில் ஒரு பாலம்; வள்ளம் வட்டத்தில் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே கொங்கராபட்டு-மணியம்பட்டு இடையே 9 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் ஒரு பாலம்
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், கணக்கநேந்தல்-ஜோகில்பட்டி இடையே குண்டாறு ஆற்றின் குறுக்கே 9 கோடியே 89 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம் என மொத்தம் 34 பாலங்களை 177 கோடியே 84 லட்சத்து 60 ரூபாய் செலவில் 18 மாவட்டங்களில் கட்டுவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். இதற்குரிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாலங்களின் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பலத்த மழை இல்லாததால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது.
- உபரி நீர் திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
திருவள்ளூர்:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கன மழையால் பூண்டி ஏரி முழு கொள்ளளவான 35 அடியை எட்டியது. இதையடுத்து ஏரியின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடந்த 12-ந் தேதி உபரி நீர் திறக்கப்பட்டது. ஆரம்பத்தில் 1000 கன அடி உபரிநீர் திறக்கப்பட்ட நிலையில் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் 16, 500 கன அடிவரை உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
தற்போது பலத்த மழை இல்லாததால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது. இதையடுத்து பூண்டி ஏரியில் இருந்து வெளியேற்றப்பட்டு வரும் உபரிநீர் கடந்த 2 நாட்களாக படிப்படியாக ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. நேற்று மாலை முதல் பூண்டி ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
பூண்டி ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 1810 கனஅடியாக உள்ளது. மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கனஅடியில் 2749 மில்லியன் கன அடியாக உள்ளது. மொத்த உயரமான 35 அடியில் 33.76 அடி உயரத்திற்கு தண்ணீர் நிரம்பி உள்ளது.
ஏரி நீர் பிடிப்பு பகுதியில் மீண்டும் பலத்த மழை பெய்தால் பூண்டி ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- பழைய குற்றாலம் அருவியில் மட்டும் 8-வது நாளாக குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- குற்றாலம் பகுதி வியாபாரிகள் தற்பொழுது அருவியில் குளிக்க அனுமதி வழங்கியதை அடுத்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலாத்தளங்களில் ஒன்றான குற்றாலத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் வெள்ளம் கொட்டியது. இதனால் அருவிக்கரைகள் மிகப்பெரிய அளவில் சேதங்களை சந்தித்தது.
இந்த சேதங்களானது சீர் செய்யப்பட்டு தற்போது குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க 6 நாட்களுக்கு பிறகு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பழைய குற்றாலம் அருவியில் இதுவரை பராமரிப்பு பணி மேற்கொள்ளாத காரணத்தால் பழைய குற்றாலம் அருவியில் மட்டும் 8-வது நாளாக குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, குற்றாலம் மெயின் அருவியில் சீரமைப்பு பணிகள் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது சீரமைப்பு பணி ஓரளவு நிறைவு பெற்றதால், நேற்று இரவு தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.
அதனைத்தொடர்ந்து, நேற்று இரவு முதல் சுற்றுலா பயணிகள் குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
தற்போது ஐயப்ப பக்தர்கள் சீசன் நடைபெற்று வருவதால் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் காலை முதலே குற்றாலம் மெயின் அருவியில் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடி சபரிமலை நோக்கி சென்று வருகின்றனர்.
மேலும் குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களை குளிக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்த குற்றாலம் பகுதி வியாபாரிகள் தற்பொழுது அருவியில் குளிக்க அனுமதி வழங்கியதை அடுத்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- மின் நிலையத்தில் வருகிற (சனிக்கிழமை) அன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
- செவிலி மேடு, பாலாறு தலைமை நீரேற்றம், சங்குசாபேட்டை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் தடை ஏற்படும்.
காஞ்சிபுரம்:
ஓரிக்கை துணை மின் நிலையத்தில் வருகிற 21-ந் தேதி (சனிக்கிழமை) அன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
அந்த நேரத்தில் காஞ்சிபுரம் நகரில் சில பகுதிகளான, வள்ளல் பச்சையப்பன் தெரு, கீரை மண்டபம், ரங்கசாமி குளம் பகுதிகள், காமராஜர் வீதி, மேட்டுத்தெரு, சின்ன காஞ்சிபுரம், பெரியார் நகர், தேனம்பாக்கம், முத்தியால்பேட்டை, களக்காட்டூர் பகுதி, திருக்காலிமேடு, சேக்குப்பேட்டை வடக்கு, தெற்கு மற்றும் நடுத்தெரு, எண்ணைக்கார தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், டோல்கேட், விஷார், மாமல்லன் நகர், காந்திரோடு, ஐயம்பேட்டை, வேளிங்கப்பட்டரை, டி.கே.நம்பி தெரு, டெம்பிள் சிட்டி, வர்தமான் நகர், நாகலுத்து மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி விளக்கொளி பெருமாள் தெரு, ஓரிக்கை, ஓரிக்கை தொழிற்பேட்டை, அண்ணா குடியிருப்பு, சதாவரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் சுற்றியுள்ள பகுதிகள், செவிலி மேடு, பாலாறு தலைமை நீரேற்றம், சங்குசாபேட்டை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் தடை ஏற்படும். இந்த தகவலை காஞ்சிபுரம், வடக்கு கோட்ட செயற்பொ றியாளர் தெரிவித்து உள்ளார்.
- தொல்லியல்துறை விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டிடம் கட்ட அத்துறை அங்கீகார குழுவிடம் அனுமதி பெறவேண்டும்.
- மரகத பூங்காவை ஒட்டி தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் பழைய அர்ச்சுனன் தபசு உள்ளது
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களான கடற்கரை கோயில், அர்ச்சுனன் தபசு, ஐந்துரதம், வெண்ணெய் உருண்டைக்கல், புலிக்குகை ஆகிய பகுதிகளில் இருந்து 100 மீட்டர் சுற்றளவிற்குள் கட்டுமானங்களுக்கு தொல்லியல்துறை தடை விதித்துள்ளது. 100 மீட்டர் தாண்டி, தொல்லியல்துறை விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டிடம் கட்ட அத்துறை அங்கீகார குழுவிடம் அனுமதி பெறவேண்டும்.
தற்போது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு சொந்தமான 2.47 ஏக்கரில் உள்ள மரகதபூங்காவில் சுற்றுலாத்துறை, தனியார் முதலீட்டில்,ரூ. 6கோடி மதிப்பில் லேசர் ஒளியுடன் கூடிய "ஒளிரும் தோட்டம்" அமைக்க திட்டமிட்டு உள்ளது.
இதற்கான முதல்கட்ட பணிகள் தொடங்கி உள்ளது. மரகத பூங்காவை ஒட்டி தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் பழைய அர்ச்சுனன் தபசு உள்ளது. அதன் அருகே ஆழமான பள்ளம் தோண்டுவதால் நிலச்சரிவு ஏற்படலாம் என்பதால் தற்போது பணிகளை நிறுத்தக்கூறி தொல்லியல்துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது.
- அமித் ஷாவின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
- தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அரசியலமைப்பு மீதான விவாதம் நேற்று மாநிலங்களவையில் நடைபெற்றது. அப்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும்போது 'அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்' என முழக்கமிடுவது இப்போது பேஷன் ஆகிவிட்டது.
இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால் சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் என்று பேசினார்.
அமித் ஷாவின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும், பிற மாநில முதலமைச்சர்களும் அமித்ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இதைதொடர்ந்து, அம்பேத்கர் குறித்த மத்திய அமைச்சர் அமித்ஷாவின் பேச்சை கண்டித்து, திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைமைக் கழகம் அறிவித்தது.
அதன்படி, இன்று காலை 11.30 மணியளவில் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமித்ஷாவை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இதில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்றுள்ளார்.
இதேபோல், அம்பேத்கரை அவமதித்த மத்திய அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து ராமநாதபுரம் திமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- நகராட்சி அலுவலகத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
- பல்வேறு கோணத்தில் அதிகாரிகள் மற்றும் நெல்லிக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
நெல்லிக்குப்பம் அடுத்த வாழப்பாட்டில் நகராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த வளாகத்தில் தேக்கு மரங்கள் இருந்து வந்த நிலையில் மர்ம நபர்கள் வெட்டி திருடி சென்றனர். இத்தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் நகராட்சி கமிஷனர் கிருஷ்ணராஜன் நெல்லிக் குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிப்பதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் நகராட்சி பொறியாளர் வெங்கடாசலத்திடம், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
இந்த நிலையில் இன்று காலை நகராட்சி அலுவலகத்தில் வெட்டப்பட்ட தேக்கு மரங்கள் இருந்தது. இதனை பார்த்த நகராட்சி ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக நெல்லிக்குப்பம் நகராட்சி கமிஷனர் கிருஷ்ணராஜனுக்கு தகவல் அளித்தனர். மேலும் இரவு நேரத்தில் நகராட்சி அலுவலகம் பூட்டப்பட்டு இருக்கும் நிலையில் யார் திருடி சென்ற மரத்தை வைத்தார்கள்? என விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
மேலும் நகராட்சி அலுவலகத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இதுமட்டும் இன்றி வெட்டப்பட்ட தேக்கு மரத்தை நகராட்சி அலுவலர் மற்றும் ஊழியரின் உடைந்தையுடன் வைத்தார்களா? என பல்வேறு கோணத்தில் அதிகாரிகள் மற்றும் நெல்லிக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லிக்குப்பம் நகராட்சி அலுவலகத்தில் இன்று காலை மர்ம நபர்களால் வெட்டி திருடப்பட்ட தேக்கு மரத்தை மீண்டும் நகராட்சி அலுவலகத்தில் வைத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நெற்பயிர்களில் நுனிக் கருகல் நோய் பரவி உள்ளது.
- கிராமங்களில் பாதிக்கப்பட்டு உள்ள நெற்பயிர்களை ஆய்வு செய்தனர்.
பொன்னேரி:
மீஞ்சூர், பொன்னேரி பகுதியில் சுமார் 33 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நடப்பு சம்பா பருவத்தில் நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலும் பிபிடி-5204 ரகத்தை விவசாயிகள் நடவு செய்து உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக பெய்த கன மழையால் பொன்னேரி, மீஞ்சூர் பகுதியில் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. கோளூர், தேவம்பட்டு, கள்ளுர், மெதுர், திருப்பாலைவனம், தத்தைமஞ்சி, உள்ளிட்ட கிராமங்களில் உள்ள வயலில் 1000 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கி உள்ளன.
இன்னும் தண்ணீர் வடியாமல் உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்
இதற்கிடையே சுமார் 200 ஏக்கரில் பயிரிடப்பட்டு உள்ள நெற்பயிர்களில் நுனிக் கருகல் நோய் பரவி உள்ளது. இது குறித்து விவசாயிகள் வேளாண்மை துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கலா தேவி, வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) ரமேஷ், வேளாண் அறிவியல் நிலையம் திரூர் முனைவர். சுதாசா, மீஞ்சூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் டில்லி குமார் மற்றும் வட்டார வேளாண்மை அலுவலர்கள் கோளூர், மெதூர் ஆகிய கிராமங்களில் பாதிக்கப்பட்டு உள்ள நெற்பயிர்களை ஆய்வு செய்தனர்.
அப்போது, நெல் பயிரில் அதிகமாக தண்ணீர் தேங்கி உள்ளதால் துத்தநாக சத்து குறைபாடு காரணமாக நுனிகருகல் இருப்பது கண்டறியப்பட்டது. இதனை கட்டுப்படுத்த 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ யூரியா மற்றும் ஒரு கிலோ ஜிங்க் சல்பேட்டை விசைத்தெளிப்பான் மூலம் தெளிக்குமாறு விவசாயிகளிடம் பரிந்துரை செய்து உள்ளனர்.
- மனுவை பரிசீலித்து நான்கு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு இந்த ஐகோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
- இந்த வழக்கு விளம்பரத்துக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை ஐகோர்ட்டில், அ.தி.மு.க.வைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் மற்றும் கே.சி.சுரேன் பழனிசாமி ஆகியோர் தொடர்ந்துள்ள வழக்கில், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. தொண்டர்கள், கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதை தடுக்கும் வகையில், கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த பொதுக்குழுவில், கட்சியின் சட்ட விதிகள் திருத்தப்பட்டது.
இதை எதிர்த்து வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் வழக்கின் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்ற நிபந்தனையுடன், கட்சியின் திருத்தப்பட்ட விதிகளுக்கும், பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும் அங்கீகாரம் அளித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கட்சியின் எதிர்காலம் மற்றும் தொண்டர்களின் உரிமையை பாதுகாக்கும் வகையில், திருத்தப்பட்ட கட்சி விதிகளையும், எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராகவும் அங்கீகரித்ததை மறுபரிசீலனை செய்ய கோரி தேர்தல் ஆணையத்திடம் மனுக்கள் அளித்துள்ளோம்.
அந்த மனுக்களின் அடிப்படையில் நேரில் விளக்கம் அளிக்கவும், வழக்கு ஆவணங்களை அளிக்கவும் வாய்ப்பளித்து, அவற்றை பரிசீலிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் சி.குமரப்பன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, நிலுவை வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது என்ற கோரிக்கையுடன் அளித்த மனுவை பரிசீலித்து நான்கு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு இந்த ஐகோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கு விளம்பரத்துக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனால் தள்ளுபடி செய்கிறோம் என்று உத்தரவிட்டனர்.






