என் மலர்
கர்நாடகா
- பரமேஷ்வரா தொடர்புடைய 16 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை.
- ரன்யா ராவ் தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை.
கர்நாடக மாநில நடிகையான ரன்யா ராவ், தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இவர் வெளிநாட்டில் இருந்து பலமுறை தங்கம் கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது. தங்கம் கடத்தப்பட்ட வழக்கில் சட்ட விரோதமாக பண பரிவர்த்தனை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
கர்நாடக மாநில போலீஸ் துறை (Home Minister) அமைச்சரான பரமேஷ்வரா தொடர்புடைய கல்வி நிறுவனம், ரன்யா ராவின் 40 லட்சம் ரூபாய் கிரெடிட் கார்டு பில்லை செலுத்தியிருந்தது. இது அமலாக்கத்துறைக்கு சந்தேகத்தை எழுப்பியது. இது தொடர்பாக பரமேஷ்வரா தொடர்புடைய பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை கடந்த இரண்டு நாட்களாக 16 இடங்களில் சோதனை நடத்தியது.
இந்த சோதனை தொடர்பாக கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் கூறுகையில் "அரசியல்வாதிகளாகிய நாங்கள் திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிக்கு செல்கிறோம். சிலர் அறக்கட்டளை வைத்திருக்கிறார்கள். பரமேஷ்வரா 10 முதல் 15 லட்சம் வரை கொடுத்திருக்கலாம். அவர் தூய்மையானவர், நேர்மையானவர்" என ஆதரவு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பரமேஷ்வரா தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்த கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சிக்குள் உள்ள கோஷ்டி பிரிவுதான் காரணம் என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரகலாத் ஜோஷி கூறியதாவது:-
அவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என அமலாக்கத்துறைக்கு கடிதம் எழுதியது யார்?. காங்கிரஸ் கட்சியின் கோஷ்டி பிரிவினர் காரணமாக, அமலாக்கத்துறைக்கு அனைத்து தகவலும் அனுப்பப்பட்டுள்ளது. இப்போது அவர்கள் இங்கே ஒரு நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள்.
பரமேஸ்வராவை நான் மதிக்கிறேன் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அவர் ஒரு பண்பட்ட அரசியல்வாதி. விஷயம் என்னவென்றால், புகார்கள் வந்ததால் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சிக்குள் ஒரு பிரிவினர் அமலாக்கத்துறையிடம் புகார் அளித்தனர்.
- ரன்யா ராவுக்கு பரமேஷ்வரா 25 லட்சம் ரூபாய் வரை கொடுத்துள்ளார்.
- பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
கர்நாடகா நடிகை ரன்யா ராவ் வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தி வரும்போது, கர்நாடக மாநிலத்தில் உள்ள விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். இவர் தொடர்ந்து இந்த செயலில் ஈடுபட்டு வந்ததும், போலி பணவர்த்தனை மூலம் இவரது வங்கி கணக்கிற்கு பணம் வந்து சென்றதையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதனால் யாரெல்லாம் இவரது வங்கி கணக்கில் பணம் செலுத்தியுள்ளனர் என்பது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள், பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தி வருகிறார்.
கர்நாடக மாநில காவல்துறை அமைச்சர் (Home Minister) பரமேஷ்வராவுக்கு தொடர்புள்ள கல்வி நிறுவனத்தின அறக்கட்டளை ரன்யா ராவுக்கு 40 லட்சம் ரூபாய் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அமலாக்கத்துறை பரமேஷ்வரா தொடர்பான கல்வி அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், பரமேஷ்வராவுக்கு ஆதரவு தெரிவித்தள்ளார்.
இது தொடர்பாக டி.கே. சிவக்குமார் கூறியதாவது:-
குடும்ப நிகழ்ச்சி அல்லது திருமண நிகழ்ச்சியின்போது ரன்யா ராவுக்கு பரிசாக 15 முதல் 25 லட்சம் ரூபாய் வரை பரமேஷ்வரா கொடுத்திருக்கலாம்.
நான் பரமேஷ்வரா உடன் பேசினேன். அவரை இன்று காலை சந்தித்தேன். அவர் 15 முதல் 25 லட்சம் வரை கொடுத்துள்ளார். நாங்கள் பொது வாழ்க்கையில் உள்ளோம். பலர் அறக்கட்டளை நடத்துகிறார்கள். குடும்ப நிகழ்ச்சி அல்லது திருமணத்தில், பரிசுப்பொருட்கள் கொடுத்திருக்கலாம். இவ்வாறு கொடுப்பதால் ரன்யா ராவை கடத்தல் போன்ற சட்டவிரோத விசயத்தில் ஈடுபட பரமேஷ்வரா ஊக்குவிக்கிறாரா?. ரன்யா ராவ் ஏதாவது தவறு செய்திருந்தால், சட்டப்படி அவள் தண்டிக்கப்படட்டும்.
பரமேஸ்வராவைப் பொறுத்தவரை, அவர் ஒரு சட்டத்தை மதிக்கும் குடிமகன், அவர் மாநிலத்தின் உள்துறை அமைச்சர், நாங்கள் அவரைப் பற்றி பெருமைப்படுகிறோம், அவர் ஒரு பெரிய தலைவர்.
அவர் எட்டு வருடங்கள் கட்சித் தலைவராக இருந்தார். மாநிலத்திற்கு நிறைய சேவை செய்துள்ளார். 1989 முதல் என்னுடன் எம்.எல்.ஏ.வாகவும், அமைச்சராகவும் இருந்து வருகிறார். அவர் ஒரு சுத்தமான, நேர்மையான மனிதர்... திருமணத்திற்கு ஏதாவது பரிசு கொடுத்திருக்கலாம், அவ்வளவுதான். அவர் பதில் சொல்வார்.
இவ்வாறு டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
- ஓடும் ரயிலில் இருந்து வெளியே வீசப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
- விவரங்களைக் கண்டறிய முயற்சித்து வருகிறோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ரயில் பாலம் அருகே சூட்கேசில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூருவின் புறநகரில் உள்ள பழைய சந்தாபுரா ரயில்வே பாலம் அருகே உள்ளூர்வாசிகளால் சூட்கேஸ் கண்டெடுக்கப்பட்டது. அது ஓடும் ரயிலில் இருந்து வெளியே வீசப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
உடலுடன் எந்த அடையாள ஆவணமும் கிடைக்கவில்லை. அவரின் பெயர், வயது மற்றும் அவர் எங்கிருந்து வந்தார் போன்ற விவரங்களைக் கண்டறிய முயற்சித்து வருகிறோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் பெங்களூரு போலீசார் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்தனர்.
மார்ச் மாதத்தில் இதேபோன்ற ஒரு வழக்கில், பெங்களூருவின் ஹுலிமாவுவில் உள்ள ஒரு வீட்டில், 32 வயதுடைய கௌரி அனில் சம்பேகர் என்ற பெண்ணின் உடல் ஒரு சூட்கேஸில் அடைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அவரை கொலை செய்த கணவர் ராகேஷ் சம்பேகர் புனேவில் கைது செய்யப்பட்டார்.
- இது தனியுரிமை மற்றும் கண்ணியத்தை அப்பட்டமாக மீறும் செயல்.
- பெங்களூரு மெட்ரோ கிளிக்ஸ் என்று பெயர் கொண்ட அந்த பக்கத்தில் 5000 க்கும் அதிகமாக பாலோயர்கள் உள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இயங்கும் நம்ம மெட்டோ ரெயில்களில் பெண்கள் ரகசியமாக படம்பிடிக்கப்பட்டு வீடியோக்கள் இன்ஸ்டாகிராமில் பதிவிடப்படுவதாக பாஜக எம்.பி குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய பெங்களூரு எம்.பி. மோகன் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது,திவில், " இது தனியுரிமை மற்றும் கண்ணியத்தை அப்பட்டமாக மீறும் செயல். இவை கடுமையான குற்றம். பெங்களூரு நகர காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் சம்பந்தப்பட்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் அவர் பகிர்ந்தார். பெங்களூரு மெட்ரோ கிளிக்ஸ் என்று பெயர் கொண்ட அந்த பக்கத்தில் 5000 க்கும் அதிகமாக பாலோயர்கள் உள்ளனர். சம்மந்தபட்டவர்கள் மீது கால்வளத்துறை வழகுபதவு செய்து விசாரித்து வருகிறது.
- மாணவர்களின் கல்விக்காக சுமார் ரூ.14 லட்சம் செலவிட்டேன்.
- திருடப்பட்ட தங்கத்தை விற்று சுமார் ரூ.22 லட்சம் சம்பாதித்தேன்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பேகூர் பகுதியை சேர்ந்தவர் ஷிவு என்கிற சிவராப்பன். பிரபல கொள்ளையன். இவர் சமீபத்தில் பைதரஹள்ளி போலீசாரால் கூட்டாளிகள் அனில் மற்றும் விவேக் ஆகியோருடன் கைது செய்யப்பட்டார். இந்த 3 பேரும் நகரில் தொடர்ச்சியாக வீடு புகுந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.
ஷிவு மீது மட்டும் குறைந்தது 11 வழக்குகள் உள்ளன. 3 பேரும் திருடிய சுமார் 260 கிராம் தங்கத்தை போலீசார் மீட்டனர். அதில் ஒரு பகுதி தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
ஷிவுவிடம் விசாரணை நடத்தியபோது போலீசாருக்கு திடுக்கிடும் தகவல் கிடைத்தது.
அவர் போலீசாரிடம் கூறுகையில், தனது குற்றவியல் வாழ்க்கை முறையின் அவமானம் மற்றும் சுமை காரணமாக தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன். இருப்பினும் எதையாவது செய்ய வேண்டும் என கருதி கூட்டாளிகளுடன் சேர்ந்து தொடர் திருட்டில் ஈடுபட்டேன்.
அப்போது தனது பகுதியில் உள்ள குடும்பங்களின் அவலநிலையை கண்டு மனம் நெகிழ்ந்து, திருடப்பட்ட பணத்தை கல்வி கட்டணம் செலுத்தப் பயன்படுத்த முடிவு செய்தேன். பல மாணவர்கள் கட்டணம் செலுத்த சிரமப்படுவதை கண்டபோது, எனக்கு ஒரு புதிய நோக்கம் கிடைத்தது. சட்டத்தை மீறுவதாக இருந்தாலும் அவர்களுக்கு உதவ முடிவு செய்தேன். பிரபல கொள்ளையன் 'ராபின் ஹூட் பாணியில்' தான் திருடிய நகை, பணத்தை கொண்டு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் 20 ஏழை மாணவர்களின் கட்டணத்தை செலுத்த பயன்படுத்தினேன். மாணவர்களின் கல்விக்காக சுமார் ரூ.14 லட்சம் செலவிட்டேன்.
திருடப்பட்ட தங்கத்தை விற்று சுமார் ரூ.22 லட்சம் சம்பாதித்தேன். மாணவர்களுக்கு நிதியுதவி செய்ததை தவிர, தனது 2 உதவியாளர்களுக்காக ரூ.4 லட்சம் மதிப்புள்ள 2 ஆட்டோரிக்ஷாக்களை வாங்கியதாக கூறினார்.
இது குறித்து விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், கல்விக்கு நிதியளிக்கவும், வாகனங்கள் வாங்கவும் ஷிவு பயன்படுத்தியதாக கூறப்படும் 14 லட்சம் ரூபாய் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. கைது செய்யப்பட்ட திருடர்களிடமிருந்து நாங்கள் எல்லா வகையான கதைகளையும் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இது அசாதாரணமானது. அவர் உண்மையை சொல்கிறாரா? அல்லது அனுதாபத்தை பெற முயற்சிக்கிறாரா? என்பது எங்களுக்கு தெரியவில்லை. பெரும்பாலும், திருடர்கள் பிடிபட்டவுடன் உணர்ச்சிகரமான கதைகளை கொண்டு வருவார்கள். உண்மைகளை கண்டறிய நாங்கள் ஆழமாக ஆராய்வோம். அவரது நோக்கம் எதுவாக இருந்தாலும் ஒரு குற்றம் நடந்துள்ளது. அவரது கூற்றுகளை நாங்கள் சரிபார்த்து வருகிறோம் என்றார்.
- அனைவரும் மக்களை கண்ணியத்துடன் அணுக வேண்டும்.
- வங்கி ஊழியர்கள் மாநில மொழியில் பேச முயற்சிக்க வேண்டும்.
கர்நாடகாவில் கன்னடம், ஆங்கிலத்தில் பேச மறுத்து இந்தியில் மட்டுமே தான் பேசுவேன் என வாடிக்கையாளர்களிடம் முறையிட்ட எஸ்.பி.ஐ. வங்கி மேலாளருக்கு அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "கன்னடம், ஆங்கிலத்தில் பேச மறுத்து மக்களை அலட்சியப்படுத்திய எஸ்.பி.ஐ. வங்கி மேனேஜரின் செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது. இத்தகைய சம்பவங்கள் இனி நடக்கக் கூடாது. வங்கி ஊழியர்கள் அனைவரும் மக்களை கண்ணியத்துடன் அணுக வேண்டும், மாநில மொழியில் பேச முயற்சிக்க வேண்டும்.
இந்தியில் பேசிய ஊழியரை பணி இடமாற்றம் செய்த எஸ்.பி.ஐ. வங்கி நிர்வாகத்தின் விரைவான நடவடிக்கையை பாராட்டுகிறேன்.
வங்கி ஊழியர்களுக்கு மாநில கலாசார, மொழியை மதிப்பதற்கான விழிப்புணர்வு வகுப்புகளை மத்திய நிதியமைச்சகம் நடத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.
- அரசுப் பேருந்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
- பேருந்து விபத்தில் 7 பேர் காயமடைந்தனர்.
கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூருவில் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதிய அரசு பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அரசுப் பேருந்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 7 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து நிகழ்ந்ததாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தால், 26 அப்பாவி உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கலாம்.
- மோடி தேசிய நலனை புறக்கணித்து பீகாரில் தேர்தல் பிரச்சாரதிற்கு சென்றார்.
ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் பிரதமர் எச்சரிக்கை விடுத்திருந்தால் இந்தத் தாக்குதல் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் அரசின் இரண்டு ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் விஜயநகர மாவட்டம் ஹோசபேட்டையில் நடந்த பேரணியில் ராகுல் காந்தியுடன் கார்கே கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், மத்திய அரசின் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து குற்றம் சாட்டினார். உளவுத்துறை எச்சரிக்கைக்குப் பிறகு ஏப்ரல் 17 ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த தனது காஷ்மீர் பயணத்தை மோடி ரத்து செய்ததாகவும், ஆனால் சுற்றுலாப் பயணிகளுக்கு எந்த எச்சரிக்கையும் வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
அவர் கூறியதாவது, "சுற்றுலாப் பயணிகளுக்கு ஏன் போலீஸ் அல்லது ராணுவ பாதுகாப்பு வழங்கப்படவில்லை? அவர்களுக்கு ஏன் எச்சரிக்கை விடுக்கப்படவில்லை? அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தால், 26 அப்பாவி உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கலாம்" என்று தெரிவித்தார்.
தாக்குதலுக்குப் பிறகு நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மோடி புறக்கணித்ததற்காக கார்கே மேலும் விமர்சித்தார். "நாட்டிற்கு ஒற்றுமை தேவைப்பட்டபோது, மோடி தேசிய நலனை புறக்கணித்து பீகாரில் தேர்தல் பிரச்சாரதிற்கு சென்றார். இரண்டு முறை அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டினார், ஆனால் அதில் கலந்து கொள்ளவில்லை.
நாங்கள் அதைத் தவிர்த்திருந்தால், நாங்கள் தேச விரோதிகள் என்று முத்திரை குத்தப்பட்டிருப்போம், ஆனால் அவர் அதைத் தவிர்த்துவிட்டு 'தேசபக்தர்' ஆகவே இருக்கிறார். காங்கிரஸ் தேசத்திற்காகப் போராடியுள்ளது. தேசபக்தி உங்களுக்கு சொந்தம் அல்ல. உண்மையான தேசபக்தி என்பது வெற்றுப் பேச்சுகளில் அல்ல, ஒற்றுமையில் உள்ளது" என்றார்.
கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக அவமதிக்கும் கருத்துக்களைத் தெரிவித்ததாக மத்தியப் பிரதேச பாஜக அமைச்சர் விஜய் ஷாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கார்கே கோரினார். "தேசியவாதத்தைப் போதிக்கும் முன் அத்தகையவர்களை முதலில் அமைச்சரவையில் இருந்து நீக்குங்கள்" என்று அவர் வலியுறுத்தினார்.
- ரன்யா ராவ் ஜாமின் பெற்றபோதிலும் அவர் விடுவிக்கப்பட மாட்டார்.
- ரன்யா மீதான COFEPOSA வழக்கை எதிர்த்து அவரது தாய் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
தங்கக் கடத்தல் வழக்கில் கன்னட நடிகை ரன்யா ராவுக்கு ஆகியோருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. ரன்யா ராவ் மற்றும் இணைக் குற்றவாளியான தருண் கொண்டராஜுஆகியோருக்கு ரூ.2 லட்சம் பிணையுடன் பல்வேறு நிபந்தனைகளை விதித்து குற்றவியல் நீதிமன்றம் இன்று ஜாமின் வழங்கியுள்ளது.
விசாரணைக்குத் தவறாமல் ஆஜராக வேண்டும், சாட்சிகளை கலைக்க முயற்சிக்கக் கூடாது, நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடாது என இருவருக்கும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.
ரன்யா ராவ் ஜாமின் பெற்றபோதிலும் அவர் விடுவிக்கப்பட மாட்டார். அந்நிய செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், 1974 (COFEPOSA) இன் கீழ் பதியப்பட்ட வழக்கால் அவர் சிறையிலேயே இருக்கும் சூழல் உருவாகி உள்ளது. ரன்யா மீதான COFEPOSA வழக்கை எதிர்த்து அவரது தாய் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் வழியாக துபாயில் இருந்து 14.2 கிலோகிராம் வெளிநாட்டு தங்கத்தை கொண்டு வந்ததாக மார்ச் 3 ஆம் தேதி வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) ரன்யா ராவை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
- பாஜகவும் மோடியும் காங்கிரஸ் கொடுத்த வாக்கை காப்பாற்றாது என்று கூறினர்.
- வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.3000 உதவித்தொகை ஆகிய 5 முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கர்நாடக மாநிலம் விஜயநகராவில் இன்று காங்கிரஸ் சார்பில் பேரணி நடைபெற்றது. இதில் கட்சியின் முக்கிய தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பேரணியில் பேசிய ராகுல் காந்தி, "கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு ஆட்சியமைத்து 2 வருடங்கள் ஆகிறது. 5 முக்கிய வாக்குறுதியை நாங்கள் கொடுத்தோம். பாஜகவும் மோடியும் காங்கிரஸ் கொடுத்த வாக்கை காப்பாற்றாது என்று கூறினர்.
ஆனால் 1 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.2000, ஒரு கோடி குடும்பங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், 4 கோடி பேருக்கு 10 கிலோ இலவச உணவு தானியங்கள், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.3000 உதவித்தொகை ஆகிய 5 முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கர்நாடகாவில் நிறைய சமூக மக்கள் சொந்த நிலம் இருந்தும் அதற்கான பத்திர உரிமம் இல்லாமல் இருப்பதாய் நான் அறிந்தேன். இதுகுறித்து கட்சி மூத்த நிர்வாகிகளிடம் பேசினேன். இன்று கர்நாடக அரசு 1 லட்சம் குடும்பங்களுக்கு அவர்களின் நிலத்துக்கான உரிமத்தை வழங்க உள்ளது.
அடுத்த 6 மாதங்களில் இது நடந்து முடியும். மேலும், கர்நாடகாவில் 2000 வருவாய் கிராமங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 500 வருவாய் கிராமங்கள் அறிவிக்கப்பட உள்ளது. கர்நாடகாவில் எல்லோருக்கும் அவரவர் நிலத்துக்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும்" என்றார்.
- மாநிலத்தின் முக்கிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.
- பெங்களூரு மாநகராட்சிக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு கேட்டு 43 வயதான நபர் ஒருவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
கர்நாடகாவில் கடந்த சிலநாட்களாக இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி நிற்கிறது. மழைநீர் தேங்கியதால் சாக்கடை கால்வாய்கள் நிரம்பி வழிந்தன. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. தலைநகர் பெங்களூரு மட்டுமின்றி மைசூரு, கோலார், தும்கூரு, ஹாசன் உள்ளிட்ட மாநிலத்தின் முக்கிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.
இந்த நிலையில், பெங்களூரு சாலைகளில் ஏற்பட்ட சேதத்தினால் வாகனம் ஓட்ட முடியாமல் உடல் மற்றும் மனா ரீதியாக பாதிப்பு அடைந்ததாக கூறி பெங்களூரு மாநகராட்சிக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு கேட்டு 43 வயதான நபர் ஒருவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அந்த நோட்டீஸில் "நான் வரி செலுத்தும் ஒரு குடிமகன். பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் நகரின் அடிப்படை உள்கட்டமைப்பை பராமரிக்க தவறியுள்ளது. பெங்களூரு நகரின் இந்த மோசமான சாலைகளில் பயணிக்கும்போது உடல் ரீதியான துன்பங்களையும் மன வேதனையையும் எதிர்கொண்டேன். இதனால் ஏற்பட்ட கடுமையான கழுத்து மற்றும் முதுகு வலி காரணமாக, எலும்பியல் மருத்துவமனைக்கு ஐந்து முறை சென்றேன். எனக்கு 4 முறை அவசர சிகிச்சை அளித்தனர்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த நோட்டீஸுக்கு பெங்களூரு மாநகராட்சி நிர்வாகத்திடமிருந்து எந்த பதிலும் எதுவும் வரவில்லை.
- 21ஆம் தேதி நானும், துணை முதல்வரும் பெங்களூரு நகர் முழுவதும் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்ய இருக்கிறோம்.
- இன்று சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று கனமழை பெய்தது. இதனால் பெங்களூரு முழுவதும் மழை வெள்ளத்தில் தத்தளித்தது. எதிர்க்கட்சியின் கட்டமைப்புகள் குறித்து கேள்வி எழுப்பினர். கட்டமைப்புகளை மேம்படுத்த கோடிக்கணக்கில் பணம் செலவழிக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த பயனும் இல்லை. மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கிறார்கள் என விமர்சனம் செய்தனர்.
இந்த நிலையில் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் "பெங்களூருவில் நேற்று மழை பெய்தது. எதிர்பார்த்ததை விட அதிக மழை பெய்தது. 104 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. 21ஆம் தேதி நானும், துணை முதல்வரும் பெங்களூரு நகர் முழுவதும் பாதிக்கப்பட்ட இடங்களை எம்.எல்.ஏ.க்களும் சென்று ஆய்வு செய்ய இருக்கிறோம். இன்று சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்" என்றார்.






